Blog

  • Saneeswara Gayathri Mandiram

    கிரகங்களில் வலிமையானவர், தர்மாதிகாரி, எம தர்மராஜனின் சகோதரர் இப்படி எல்லாச் சிறப்புகளையும் பெற்றவர் சனீஸ்வர பகவான். அவருக்கு  பயப்படாதவர்கள் கிடையாது. காரணம், நீதிமானுக்கு பயப்பட்டுத்தானே ஆகவேண்டும்.

    கிரகங்களில் மெதுவாக நகரும் சனி, இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதனால் அவரை  மந்தன் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
     
    மந்த கதியில் சென்றாலும், மெதுவாக நகர்ந்தாலும், இந்த புவியில் உள்ள மனிதர்களின் வாழ்வில் பலன்களை தமக்கே உரிய பாணியில் தந்தே தீருவார்.  முக்கியமாக சனிப் பெயர்ச்சியால் நாம் நலன்களைப் பெற வேண்டுமானால், சனீஸ்வர காயத்ரி மந்திரங்களை சொல்லி, அருகில் உள்ள சிவன் கோயில்களில்  உள்ள சனீஸ்வரர் சந்நிதியை வணங்குவது பலன் தரும்.

    காய்த்ரி மந்திரம்:
    சனி காயத்ரி மந்திரம்:
    காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
    தந்நோ மந்த: ப்ரசோதயாத்||
     
    சனி ஸ்தோத்திரம்:
    நீலாஞ்ஜன ஸமாபாஸம் 
    ரவிபுத்ரம் யமாக்ரஜம்! 
    ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் 
    தம் நமாமி சனைச்சரம்!!
     
    சனி மூல மந்திர ஜபம்:
    "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ", – 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.
     

  • Atthi Varadhar Dharisanam

    ஆகஸ்டு மாதம் 16 மற்றம் 17 ஆகிய தேதிகளில் அத்திவரதரை காண்பதற்கான வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல வரும் 16 ஆம் தேதி காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 17 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு கிழக்கு கோபுரம் மூடப்படும் மாலை 5 மணிக்கு வசந்த மண்டபம் மூடப்பட்டு அத்தி வரதர் தரிசனம் முழுமையாக நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 36 நாட்களில் 50 லட்சத்துதத்தம் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். கூட்டம் அதிகம் காணப்படுவதால் கடைசி 2 நாட்களில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது 7000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் 10 ஆம் தேதியில் இருந்து 12 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த படவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

     அத்தி வரதரை தரிசிக்க 24 மணி நேரம் வாய்ப்பு இல்லை என்பதால் தற்போது 18 மணி நேரம் தரிசனம் நடைபெற்று வருகின்றது விரைவில் 21 மணி நேரம் தரிசிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

  • Kottai Maari Amman koiyilil Aadi Thiruvizha

    ஆடிப்பெருவிழாவையொட்டி சேலம் பிரசித்திப்பெற்ற  கோட்டை மாரியம்மன் கோயிலில் விடிய விடிய பொங்கல் வைத்தல் மற்றும் உருளு தண்டம் போடுதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தும் வைபவம் விமரசையாக  நடைபெற்றது.
      
     சேலம் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற  அம்மன் கோயிலான சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பெருவிழாவையொட்டி  கடந்த 15 தினங்களுக்கு முன்பு கோட்டை மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்வுடன் விழா தொடங்கி, கம்பம் நடுதல், சக்தி அழைத்தல் வைபவங்கள்  முடிந்து இன்று அம்மனுக்கு பொங்கல் வைபவம் நடைப்பெற்றது. சேலம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்த.தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோட்டை மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

    இதனால்  களைகட்டியுள்ள திருவிழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான  மக்கள் குடும்பத்துடன்  வந்த   வண்ணம் உள்ளனர். குறிப்பாக திருவிழாவின் முக்கிய நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை தரிசித்தனர். விடிய விடிய ஆயிரக்கணக்கான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர்.

    தொடர்ந்து கரகம் எடுத்தல், உருள் தண்டம் என தங்களின்  நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதேபோன்று அம்மாப்பேட்டை, குகை, செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் மாரியம்மன் கோயில்களில் ஆடிப்பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
     

  • August 7 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சோர்வு
    ரிஷபம் – நன்மை 
    மிதுனம் – பாசம் 
    கடனம் – நட்பு
    சிம்மம் – களிப்பு
    கன்னி –  சிரமம்
    துலாம் –  பக்தி
    விருச்சிகம் – கவலை
    தனுசு – சுகம் 
    மகரம் –   பணிவு
    கும்பம் – நிம்மதி 
    மீனம் – சுபம்  
    சந்திராஷ்டமம்    – ரேவதி

  • August 7 Garuda Jayanthi

    ஆகஸ்ட் 7 – கருட ஜெயந்தி
    விகாரி வருடம் – ஆடி 22
    கருட ஜெயந்தி
    07-ஆக-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    மா    5.37
    நட்சத்திரம்    :    சுவாதி    இ    3.39
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Sasti viradham

    அம்மாவாசை பின் வரும் ஆறாம் நாள் சஷ்டி என்பதாகும். தீபாவளிக்கு பின் வரும் அம்மாவாசையின் ஆறாம் நாள் கந்த சஷ்டி ஆகும். அம்மாவாசைக்கு பின் வரும் ஆறாம் நாள் அரை நிலவு, வசீகரிக்கும் உருவத்துடன் காணப்படுவது இயல்பு. அது சரி முருகன் என்றால் அழகுதானே. இதில் இன்னொரு தத்துவமும் ஒழிந்திருக்கிறது. அரை நிலவு நாளன்று இவ்வுலகில் அனைத்துமே மிக எதார்த்தமாக இருக்கும். பொதுவாக அரைநிலவு நாளன்று நிலவில் இருந்து வெளிப்படும் ஈர்பு விசையானது அளவோடு இருக்கும். அதனால் இயற்கையும் சீற்றமில்லாமல் அழகாக இருக்கும்.

    கந்தன் …. கந்து + அன் = கந்தன்; கந்து என்றால் யானையை பிணைக்கும் கோல் அல்லது தூண். அதாவது அடங்காமல் தான், நான் என்ற மமதையில் தரிகட்டுத் திரியும் மனதை அடக்கி இறையோடு கட்டுதல் என்று பொருள். அதனாலேயே ஆறுமுகனுக்கு கந்தன் என்று பொருள்,மற்றொறு பொருள் கந்து என்றால் பகவனுடைய வலிமையை வற்றசெய்பவன்என்றுபொருள். 

    வரம் இருக்கிறது என்ற மமதையில் தான் என்ற எண்ணம் மேலோங்க தரிகட்டுத் திரிந்து சூரபத்மனை வதம் செய்து தன்னோடு இனைத்துக் கொண்டதால் இந்த நாள் கந்த சஷ்டி திருநாள் ஆனது. சூரபத்மனுடன் 6 நாள் யுத்தம் நடந்தது. ஆதலால் 6 நாள் விரத பேணப்பட்டு 6 வது நாளின் விரதம் முடித்துக் கொள்ளப்படுகிறது.

    சம்ஹாரம் …. சம் + ஹாரம் = சம்ஹாரம்; சம் என்றால் அழகு, அன்பு, சுத்தம், நன்மை, பிறப்பு, வெற்றி ஆகும். அதாவது இத்தனையையும் நல்குவதே சம்ஹாரம் எனப்படுவதாகும். தீவை அழியும் போது தான் இத்தனையும் நமக்கு கிடைக்கும். தீயவை என்றால் என்ன “நான்” என்ற அகந்தைதான்.

    ஆக இத்திருநாளில் நாம் இறைவனிடம் இருந்து அழகு, அன்பு, சுத்தம், நன்மை, பிறப்பு, வெற்றி என்று சகலத்தையும் வேண்டிப் பெருகிறோம். அதுமட்டுமல்லாமல் ஈசனின் ஆறு முகத்தையும் (தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம், அதோமுகம்) ஒருசேர முருகப் பெருமான் வடிவில் கான்கிறோம்..
     

  • Garuda Jayanthi

    தமிழகத்தில் இருக்கும் பல்வேறு வைஷ்ணவ ஸ்தலங்களிலும் கருட ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் பில்லி, சூன்யம், நாக தோஷம் மற்றும் அனைத்து தோஷங்களும் நீங்கும். 

    யாரெல்லாம் கருடனை வணங்கவேண்டும்? 

    ராகுவின் சாரம் பெற்ற திருவாதிரை, ஸ்வாதி, சதயம் நக்ஷத்திரங்களிலும் கேதுவின் சாரம் பெற்ற அஸ்வினி, மகம், மூலம் நக்ஷத்திரங்களிலும் ராசி அல்லது லக்னம் அமைய பெற்றவர்கள். 

    புதனின் நக்ஷத்திரங்களான ஆயில்யம், கேட்டை ரேவதியில் பிறந்தவர்கள் கருடபகவானை வணங்கிவர சகல பயமும் நீங்கி தைரியம் ஏற்படும். முக்கியமாக நாகர்கள் எனப்படும் ஸர்பங்களை அதிதேவதையாக கொண்ட ஆயில்ய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் கருடனை வணங்கி வர ஆயில்ய நக்ஷத்திரத்தின் தீய குணங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து சகல நன்மைகளும் ஏற்படும்.

    ஜெனன ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவை திரிகோணங்களான லக்னம், பூர்வ புன்னியம், பாக்கியம் மற்றும் பித்ரு ஸ்தானங்களில் ராகு/ கேது அமைய பெற்றவர்கள். 

    ராகுவை ஆத்மகாரகனாக கொண்டவர்கள். 

    சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகு/கேது சேர்க்கை பெற்றவர்கள். 6. கால ஸர்ப தோஷத்தில் பிறந்தவர்கள். 

    பெண் ஜாதகங்களில் கணவனை குறிக்கும் செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்றவர்கள். 

    கோசார ராகு/கேதுவினால் பில்லி சூனியம் போன்ற அபிசார தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய் ஏற்பட்டவர்கள். 

    ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோசாரத்திலோ புதன்-கேது சேர்க்கை பெற்று தைரிய குறைவினால் பகைவர்களிடம் பயந்து நடுங்குபவர்கள். 

    கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர். 

    கருடனைத் தரிக்கும் கிழமைகளைப் பொறுத்து நாம் அடையும் பலன்கள்
    ஞாயிறு கருட தரிசனம் – நோய் அகலும் நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும். 
    திங்கள் கருட தரிசனம் – குடும்ப நலம் பெருகும். 
    செவ்வாய் கருட தரிசனம் – தைரியம் கூடும். 
    புதன் கருட தரிசனம் – எதிரிகள் இல்லா நிலை உருவாகும். 
    வெள்ளி கருட தரிசனம் – பணவரவு கிட்டும் 
    சனி கருட தரிசனம் – நற்கதி அடையலாம். 

    கருடாழ்வாரை தரிசிக்கும்போது குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச ! விஷ்ணு வாஹ ! நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம: என கூறி வணங்க வேண்டும். 

  • Atthi Varadhar aug 6

    காஞ்சி அத்தி வரதர் 37 வது நாளில் வெள்ளை மற்றும் நீல நிற பட்டாடையில் காட்சியளிக்கிறார்.

    காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவ திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது 

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்தி வரதர் இன்று 37 வது வெள்ளை மற்றும் நீல நிறப்பட்டாடையில் காட்சியளித்து வருகின்றார்.

    36 நாட்களில் 55 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர் நேற்றைய தினத்தை விட இன்று பக்தர்கள் கூட்டம் குறைவு

    நேற்று 6 மணி அல்லது 8 மணி நேரம் காத்திருந்து தரிசிக்க வேண்டிய நிலையில் இன்று இலவச தரிசனத்தில் 3 மணி நேரத்தில் அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர்
     

  • Adhigaram Alikkum Gajakesari yogam

    ஜோதிடம் குறிப்பிடும் சிறப்பான யோகங்களில் குரு மற்றும் சந்திரன் ஆகிய இரு கிரகங்கள் சம்பந்தப்படும் கஜகேசரி யோகமும் ஒன்று. ‘கஜம்’ என்றால் ‘யானை’, ‘கேசரி’ என்றால் ‘சிங்கம்’. பெருந்தன்மை, புத்திசாலித்தனம், கவுரவம், பெயர், புகழ், செல்வாக்கு ஆகியவற்றை இந்த யோகம் மூலம் ஒருவர் அடைகிறார். 

    யானைகள் சூழ, சிங்கம் நடந்து வருவது போன்ற நிலையை இந்த யோகம் குறிப்பிடுவதாக சொல்லலாம். இந்த யோகத்தில், குரு மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் மட்டுமே சம்பந்தப்படுவதன் அடிப்படையில், குரு பகவானின் வாகனமான யானை மற்றும் கடக ராசி அதிபதியான சந்திரனின் அதிதேவதை அம்பிகையின் வாகனமான சிங்கத்தையும் இந்த யோகத்துடன் ஒப்பீடு செய்து கொள்ளலாம். 

    யானைக்கூட்டத்தை எதிர்கொண்டு, ஒரு சிங்கம் வெற்றி கொள்வதுபோல, கஜகேசரி யோகம் கொண்டவர் களுக்கும் அந்த திறன் இருக்கிறது. அதனால், ஜாதகத்தில் சிரமமான தசை – புத்திகள் நடந்தாலும், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி ஆகிய கால கட்டங்களில் கஜகேசரி யோகம் அமைந்தவர்களுக்கு பெரிய கெடுதல்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதை ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன.

    சந்திரன் குருவுடன் சேர்ந்து இருப்பது, சந்திரன், குருவுக்கு 4,7,10 போன்ற கேந்திர ஸ்தானங்களில் இருப்பது, சந்திரனை குரு பார்ப்பது ஆகிய நிலைகளில் கஜ கேசரி யோகம் அமைகிறது. இந்த யோகம் நல்ல பலன்களை அளிக்க வேண்டுமானால் குரு அல்லது சந்திரன் ஆகியவை ஆட்சி, உச்சம் பெற்றோ அல்லது நீச்சம் பெறாமலோ இருக்கவேண்டும். குரு அல்லது சந்திரன் வர்க்கோத்தமம் பெற்றிருப்பதும் சிறப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இந்த நிலையில், குரு மற்றும் சந்திர தசை – புத்திகளில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஒருவரது ஜனன கால ஜாதகத்தில் குரு அல்லது சந்திரன் 6, 8, 12 ஆகிய வீடுகளில் இருப்பது, சந்திரன் அல்லது குரு நீச்சம் அடைந்திருப்பது, இதர கிரக சம்பந்தத்தால் பாதிப்பு அடைந்திருப்பது, தேய்பிறை சந்திரனாக இருப்பது அல்லது நவாம்சத்தில் குரு அல்லது சந்திரன் நீச்சம் பெற்றிருப்பது ஆகிய காரணங்களால் யோக பலன்களை எதிர்பார்க்க இயலாது என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும்.

  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – தனம் 
    ரிஷபம் – பரிசு
    மிதுனம் – நலம் 
    கடனம் – நட்பு
    சிம்மம் – வெற்றி
    கன்னி –  லாபம் 
    துலாம் –  சுகம்  
    விருச்சிகம் – அமைதி 
    தனுசு – அனுகூலம் 
    மகரம் –   பாசம் 
    கும்பம் – ஆதரவு 
    மீனம் – நற்செய்தி 
    சந்திராஷ்டமம்    – உத்திரட்டாதி