Blog

  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – தடங்கல் 
    ரிஷபம் – தாமதம் 
    மிதுனம் – களிப்பு
    கடனம் – அன்பு 
    சிம்மம் – உயர்வு
    கன்னி –  சுகம் 
    துலாம் –  லாபம் 
    விருச்சிகம் – புகழ் 
    தனுசு – அமைதி
    மகரம் –   வெற்றி
    கும்பம் – தனம்   
    மீனம் – நற்செயல்
    சந்திராஷ்டமம்    – சதயம்

  • August 4 Naga Chadurthi

    ஆகஸ்ட் 4 – நாக சதுர்த்தி
    விகாரி வருடம் – ஆடி 19
    ஆடிப்பூரம், நாக சதுர்த்தி
    04-ஆக-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    சதுர்த்தி    இ    11.49
    நட்சத்திரம்    :    பூரம்    கா    8.50
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சதயம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Dhanvanthri Peedathil Naga Dhosha Homam

    வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாக பஞ்சமி – கருட பஞ்சமியை முன்னிட்டு நாக தோஷம் போக்கும் நாகர் ஹோமத்துடன் பக்ஷி தோஷம் போக்கும் கருட ஹோமம் நடைபெற உள்ளது. 

    விபத்து நோய் நீக்கும் மருத்துவராகவும், பஞ்ச பக்ஷியின் ராஜாவாகவும் திகழும் ஸ்ரீ கருட பகவானுக்கு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், நாக சதுர்த்தி, ஸ்ரீ கருட ஜயந்தி, கருட பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ கருட ஹோமமும், ஸ்ரீ அஷ்டநாக கருடனுக்கு தேன் அபிஷேகமும், நடைபெறுகிறது.

    ஆடி அமாவாசைக்குப் பிறகு வளர்பிறை பஞ்சமி திதி அன்று கடைபிடிக்கப்படும் முக்கியமான விரதம் கருடபஞ்சமி விரதமாகும். இந்நாளில் குழந்தை வரம் வேண்டியும், ஆண் பெண் திருமணம் வேண்டியும் பிரார்த்தனை செய்தால் நற்பலன்கள் பெறலாம். நாகரையும், கருடனையும் வேண்டி நடைபெறும் மேற்கண்ட யாகத்தில் பங்கு பெற்று பிரார்த்தனை செய்தால் நாக தோஷம் நீங்குவதோடு, கருடனைப் போல புத்திமானாகவும், வீரனாகவும் பிள்ளைகள் பிறப்பார்கள், பக்ஷி தோஷங்கள் நீங்கும்.. மற்றவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள். எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும்.

    கருட பகவானின் பல்வேறு நாமங்கள் :

    மங்களாலயன், பக்ஷிராஜன், சுபர்ணன், புஷ்பப்பிரியன், வினதைச் சிறுவன், வேதஸ்வரூபன், வைனதேயன் என்ற பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கப்படும் கருட பகவான் கச்யப்பர், விநதை தம்பதிக்கு இரண்டாவது மகனாக ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். இவருக்கு ருத்ரை மற்றும் சுகீர்த்தி என்னும் இரண்டு மனைவியர் உள்ளனர்.

    பெரிய திருவடி கருடாழ்வார்

    கருடன், மகா பலம் உடையவர். அழகான முகம், உறுதியான நகங்களை உடையவர். கூர்மையான கண்கள், பருத்த கழுத்து, குட்டையான கால்கள் மற்றும் பெரிய தலையையும் பெற்றவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் ஸ்தலங்களில் 'பெரிய திருவடி" என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.

    கருடன் தரிசன சிறப்பு :

    கருடன்! மங்கள வடிவமானவன். பறவைகளின் அரசன். கருடனைத் தரிசிப்பது சுபசகுனம். ஆகாயத்தில் கருடன் வட்டமிடுவதோ, குரலெழுப்புவதோ நல்லதொரு அறிகுறி. இன்றளவும் கும்பாபிஷேகத்தின்போது எத்தனை விதமான பூஜைகள், யாகங்கள் நடந்தாலும் பூஜையின்போது கருடன் வந்து தரிசனம் தந்தால்தான் கும்பாபிஷேகமே முழுமை பெறுகிறது. கருடனைத் தரிசிக்கும்போது நம் மனம் நிறைவடைகிறது. ஸ்ரீமந் நாராயணன் எத்தனை விதமான வாகனத்தில் தரிசனம் தந்தாலும் கருட வாகனத்தில் தரிசனம் தருவதே தனிச்சிறப்பு ஆகும்.

    தன்வந்திரி பீடத்தில் அஷ்டநாக கருடன் :

    பெரிய திருவடி என்று போற்றபடும் ஸ்ரீகருடாழ்வர். ஸ்ரீதன்வந்திரி பகவானை தரிசித்தபடி, 4அடி உயரத்தில் நின்ற கோலத்தில், தம் உடலில் அஷ்ட நாகங்களை தரித்து அவருக்கே உரிய அழகுடன் சிறப்பாக காட்சி தருகிறார். இவர் விஷ ஜந்துக்களால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்கும் வகையிலும், பஞ்சபக்ஷி தோஷங்கள், சர்ப்ப தோஷங்கள் போன்றவைகளால் ஏற்படும் தடைகளை விலக்கும் விதமாக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அஷ்ட நாக கருட பகவானாக அருள்பாலிக்கின்றார். இவருக்கு சுவாதி நட்சத்திரத்தில் கருட ஹோமம் செய்து அபிஷேகம் செய்த தேனை பக்ஷி தோஷங்கள் நீங்கவும், வாகன விபத்துகள் ஏற்பட்டவர்கள் விரைவில் குணமாகவும் பிரசாதமாக வழங்கி வருகின்றனர்.

    நாகர் ஹோமத்துடன் ஏகரூப ராகு கேதுவிற்கு சிறப்பு பூஜை :

    அனந்தன், வாசுகி, ஆதிசேஷன், பத்மனாபன், கம்பலன், சங்கபாலன், தித்ராஷ்டிரன், தக்ஷகன், காளியன், முதலான ஒன்பது நாக ராஜாக்களை போற்றி வணங்கும் விதத்திலும், ராகு கேது கிரங்கள் மற்றும் பிற நாக தோஷங்கள் விலக வேண்டியும், திருமணம், குழந்தைப்பேறு கிடைக்க வேண்டியும் தன்வந்திரி பீடத்தில் நாக பஞ்சமி தினத்தையொட்டி நாகர் ஹோமம் நடைபெறுகிறது.

    கருட ஹோமம்

    விபத்து நோய் நீக்கும் மருத்துவராகவும், பஞ்ச பக்ஷியின் ராஜாவாகவும் திகழும் ஸ்ரீ கருட பகவானுக்கு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், வருகிற 05.08.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நாக பஞ்சமி, ஸ்ரீ கருட ஜயந்தி, கருட பஞ்சமி, முன்னிட்டு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நாகர் ஹோமம், ஸ்ரீ கருட ஹோமமும், ஸ்ரீ அஷ்டநாக கருடனுக்கு தேன் அபிஷேகமும், சிறப்பு அர்ச்சனையும் நடைபெறுகிறது.

    புற்று நோய் தீர்க்கும் கருட ஹோமம்

    கருட யாகமும் தேன் அபிஷேகமும் பாவங்கள், நோய்கள் அகலவும், குடும்ப நலம், தைரியம் ஏற்படவும், எதிரிகள் தொல்லை அகலவும், நீண்ட ஆயுள், பணவரவு ஏற்படவும், ஸர்ப்ப தோஷம், ராகு கேது திசா புக்திகளால், ஏற்படும் துன்பங்கள், விபத்து, மரண பயங்கள், புத்தி பேதலிப்புகள் சர்ம வியாதிகள்- ஆறாத புண்கள்- கட்டிகள் விலகவும், துர் ஆவிகள் பாதிப்புக்களில் இருந்து விலகும், இரத்த புற்று நோய், எலும்பு புற்று நோய், போன்ற பலவிதமான புற்று நோய்கள், பித்ரு, பிரம்ம ஹத்தி தோஷங்கள், பரம்பரை பரம்பரையாக வரும் பூர்வ தோஷங்கள், கால சர்ப தோஷங்கள், பில்லி, சூன்யம், ஏவல், சத்ரு தொல்லைகள், தீராதநோய் நீங்கவும், மறுபிறவியற்ற நிலையை அடையவும், குடும்பத்தில் சுபிட்சம் உருவாகவும், பிறக்கும் குழந்தைகள் அறிவும் வீரமும் உடையவர்களாக விளங்கவும், ஆரோக்யத்தில் முன்னேற்றம் ஏற்படவும் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் நவக்கிரக சமித்துக்கள், சீந்தில் கொடி, மிளகு, மருதாணிவிதை, அருகம்புல், ஓமம், வலம்புரி, வசம்பு, கருடகொடி, நல்லெண்ணெய், தேன், நெய், வெண்பட்டு, மோதகம், சேர்க்கப்பட உள்ளது.

    இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி பங்கேற்கலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை, தொலைபேசி : 04172 – 230033

  • Mangadu Kamatchi Amman Kalasa Abishegam

    சென்னை மாங்காடு, காமாட்சி அம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு,அம்மனுக்கு 1,008 கலச அபிஷேகப் பூஜை வெகுவிமரிசையாக நடந்தது.

    சென்னை அடுத்த மாங்காட்டில், பிரசித்தி பெற்ற, காமாட்சி அம்மன் கோவில் உள்ளது.அம்மனின் திரு நட்சத்திரமான பூரம் நட்சத்திர தினமான  ஆடிப்பூரத்தை முன்னிட்டு, இக்கோவிலில், 1,008 கலச அபிஷேகம் கடந்த மூன்று நாட்களாக  நடைபெற்று வருகிறது.

    இதனால்  காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் , பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். மூன்றாம் நாளான இன்று நான்காம் கால  யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.இதில் வேதவிற்பனர்கள் மத்திரங்கள் முழங்க மஹாபூர்ணாதி நடத்தினர்.

    பின்னர்  அம்மனுக்கு 1008 கலச அபிஷேகம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றன.

    இதில்  பல்வேறு பகுதி களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மன் அருளை பெற்றனர். பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள், அம்மனுக்கு மாலையாக சாத்தப் பட்டது.நிகழ்ச்சியில் ஆலய பரம்பரை தர்மகர்த்தா மருத்துவர் சீனிவாசன்,அறநிலைத் துறை துணை ஆணையர் கவிதா பிரியதர்சினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • Atthi Varadhar Dharisanam

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்தி வரதர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற பட்டாடையில் காட்சியளிக்கின்றார். 34 ஆம் நாளில் இன்று பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிற பட்டாடையில், செண்பக பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். 

    சனிக்கிழமை இன்று விடுமுறை தினம் மற்றும் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர்  பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பொது தரிசனத்தில் 5 மணி நேரத்திற்க்கும் மேலாக காத்திருந்து அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். 33 நாட்களில் 50 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்

    ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றதால் மதியம் 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு கோவில் உள்ளே வந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். 
     

  • Aadi Pooram Thiruthani murugan Palabishegam

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால் காவடி  புஷ்ப காவடி மயில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர் . பக்தர்கள் முன்னிலையில் பாலபிஷேகம் நடைபெற்றது.

    ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஒவ்வொரு வருடமும் ஆடிப்பூரத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

     சென்னை வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, ராயபுரம், கல்மண்டபம் என பல்வேறு பகுதியிலிருந்து ஒரு நாள் முன்னதாகவே திருத்தணி முருகன் கோயிலின்  அடிவாரத்தில் தங்கி இன்று அதிகாலை 500 க்கும் மேற்பட்டோர் பால் குடங்களுடன் மலைக்கோயில் வழியாக முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்ய பால்குடங்கள் எடுத்து வந்தனர்.

    காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  பக்தர்கள் எடுத்து வந்த பால் குடங்கள் பக்தர்கள் முன்னிலையில் பால் அபிஷேகம் செய்யப்பட்டது  மேலும் இன்று அதிகாலை மூலவர் முருகப்பெருமானுக்கு பால் பழம் பஞ்சாமிர்தம் தேன் இளநீர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தங்க கவச அலங்காரம் முருகப்பெருமானுக்கு செய்யப்பட்டது . 

    இதில் சென்னையை சேர்ந்த பக்தர்கள் மயில் காவடி பால் காவடி புஷ்ப காவடி உடல் முழுவதும் அலகு குத்திக்கொண்டு ஆணி செருப்பு என்று சொல்லப்படும் பாதரட்சை அணிந்துகொண்டு மலைக் கோயிலை வலம் வந்தனர் .
     

  • Aandal Avadharitha Aadi Pooram

     “ஆடிபூரம் மஹாலக்ஷ்மி அம்சமான ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினம். ”அரங்கனுக்கே ஆளாவேன்” என்று பிறந்த ஆண்டாள் நாச்சியார் பிறந்த தினமானது, பார்வதி தேவி ருதுவான நாள். சரஸ்வதி தேவி வீணை பெற்ற தினம். இதனால் இந்த ஆடிப்பூரம் ஆனது முப்பெரும் தேவியருக்கும் மிகப்பெரிய ஒரு முக்கியமான நாளாக அமைந்திருக்கிறது” .

    ” இந்த நாளில் நம்மை காக்கும் அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் செய்வது நாம் நமது அம்மைக்கு ஒரு நன்றிக் கடன்  செலுத்துவது ஒரு ஐதீகம். நம்மை காக்கும் தாய்க்கு இந்த நாளிலே சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனைகள் செய்து மஞ்சளால் செய்த மாலை சாற்றி அம்பாளுடைய கைகளுக்கு வளையல்கள் அணிவித்து வணங்குவது மிகப்பெரிய ஒரு பரிகாரம்”.

    ஆடிபூரத்தில் அம்ம்பளை வணங்கினால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்ற கேள்விக்கு,”  குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அம்பாளுக்கு சாத்த்ப்படும் அந்த வளையல்களை பெற்றுக் கொள்வதன் மூலமாக குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் அம்பாளுக்கு அம்பாளுடைய வயிற்றிலே பச்சை பயிறு, முளை கட்டிய பச்சைப் பயிறு வைத்து பூஜை செய்திருப்பார்கள். அதனை நாட்டு சர்க்கரையுடன் கலந்து சாப்பிடுவதன் மூலமாகவும் நமக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்” .

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
     

  • Aadi Perukku Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – உதவி
    ரிஷபம் – சினம் 
    மிதுனம் – சோதனை
    கடனம் – யோகம் 
    சிம்மம் – ஆர்வம் 
    கன்னி –  பரிசு
    துலாம் –  கவனம் 
    விருச்சிகம் – உறுதி  
    தனுசு – போட்டி 
    மகரம் –   இரக்கம்  
    கும்பம் – ஊக்கம்  
    மீனம் – தனம்  
    சந்திராஷ்டமம்    – அவிட்டம்
     

  • August 3 Aadi Perukku

    ஆகஸ்ட் 3 – ஆடிப்பெருக்கு
    விகாரி வருடம் – ஆடி 18
    ஆடிப்பெருக்கு
    03-ஆக-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    இ    2.16
    நட்சத்திரம்    :    மகம்    கா    10.28
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அவிட்டம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Atthi Varadhar Dharisam Illai

    40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 48 நாட்கள் நடைபெறும் அத்தி வரதர் உற்சவத்தின் 33 நாளான இன்று நின்ற  கோலத்தின் 2ம்  நாள்.

    நின்ற கோலத்தின் 2  நாளான இன்று அத்திவரதர் கரும் பச்சை  பட்டு உடுத்தி  மல்லிகை பூ, சம்பங்கி பூ, செண்பகப் பூ மலர் மாலைகள் அணிவித்து காலை 5 மணி முதல் மக்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

    நாளை ஆடிப்பூரம் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுவதை ஒட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் அத்தி வரதர் உற்சவம் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசனம் நடைபெறும்.

    5 மணிக்குப் பிறகு தரிசனம் நிறுத்தப்பட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் முடிவடைந்தவுடன் இரவு 8 மணிக்குப் பிறகு மீண்டும் தரிசனம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.