Blog

  • Thirupathy July month Hundiyal

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  ஜூலை மாதம் 109.60 கோடி பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர். 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கையாக ரூபாய் நோட்டுகள், சில்லரை நாணயங்கள், தங்கம் , வெள்ளி என காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். 

    அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் தினந்தோறும்  எண்ணப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஒருநாளைக்கு 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் வரை  காணிக்கையாக தேவஸ்தானத்துக்கு வருவாய் வருகிறது. கடந்த  2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 லட்சத்து 5 ஆயிரத்து 323 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 843 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

    கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 77 ஆயிரத்து 520 பக்தர்கள் கூடுதலாக சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 99 லட்சத்து 81 ஆயிரத்து 611 லட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு கோடியே 14 லட்சத்து 46 ஆயிரத்து 36 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  

    சாமி தரிசனம் செய்த பக்தர்களில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 739 பக்தர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்திய நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் 10 லட்சத்து 69 ஆயிரத்து 748 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 

    உண்டியலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 102.88 கோடி பக்தர்கள் காணிக்கை செலுத்தி நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ 109.60 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இந்த ஆண்டில் மார்ச் மாதம் 105.8 கோடியும் , ஜூன் மாதம் 100 கோடி, ஜூலை மாதத்தில் 109.60 கோடி உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர். 

    2019 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக ஒரே மாதத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல்  காணிக்கை செலுத்தி பக்தர்கள் தங்கள் பக்தியை வெளிப்படுத்தி உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடப்பு நிதியாண்டில் உண்டியல் மூலமாக 1234 கோடி ரூபாய் பக்தர்கள்  உண்டியலில் செலுத்தும் காணிக்கையின் மூலமாக வரும் என தேவஸ்தானம் எதிர்பார்க்கப்படுகிறது.
     

  • Aadi perukku Gold Purchase

    ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போட வேண்டும். நிறைகுடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்து விடும். 

    திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் எங்களை மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டது போல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள். 

    காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

    அட்சய திரிதியை விட, ஆடிப்பெருக்கு நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்குவதில்லை என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்காகும்.
     

  • Puttril Irundhu Velye vandha Periypalayathu Amman

    பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே. சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா? ஒரு வளையல் வியாபாரி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். 

    ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார். பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார். 

    இதனால், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே தூங்கிவிட்டார். நல்ல தூக்கம். சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை. 

    கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். அன்றிரவு, அந்த வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். “நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்.” என்றாள் அம்பாள். 

    தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார்.

    இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள். அம்மனுக்கும் கைநிறைய வளையல் அணியவேண்டும் என்று ஆசை ஏற்பட்டதால்தான் அந்த வளையல் வியாபாரி வைத்திருந்த வளையல்களை எடுத்துக்கொண்டார் அம்பாள். 

    வளையல் அணிய வேண்டும் என்ற ஆசையால்தான் புற்றில் இருந்தும் வெளிப்பட்டாள். அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிக்ஷங்கள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும். அதேபோல ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம். இந்த நன்னாளில் ஆண்டாளை தரிசித்து பூமாலை, வளையல்களை கொடுத்து வணங்கி ஆண்டாளின் ஆசியை பெற்ற வளையல்களில் இரண்டு வளையல்களை அணியலாம். அதேபோல ஆண்கள் ஆண்டாளுக்கு அணிவித்த மலர்களை சிறிது வாங்கி தங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டாலும் நல்ல முயற்சிகள் வெற்றி பெறும். மங்களங்கள் யாவும் கைக்கூடும்.

  • Thirupathy Online Ticket Booking

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு கோட்டா வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட்  மாதத்திற்கான  கட்டண  சேவைகளுக்கான முன்பதிவு செய்வதற்கான 69,254 டிக்கெட் கோட்டா வெளியிடப்பட்டுள்ளது. 

    டிக்கெட் விபரம்…
    ஆன்லைன் குலுக்கல் முறையில் 10,904 டிக்கெட்
    சுப்ரபாதம்  – 7549
    தோமாளை – 120
    அர்ச்சனை – 120
    அஷ்டதள பாதபத்ம ஆராதனை – 240
    நிஜபாத தரிசனம் – 2875
    பொது கோட்டா  ( GENERAL CATEGORY ) 58,350  நேரடியாக முன்பதிவு செய்யும் விதமாக வைக்கப்பட்டுள்ளது.
    கல்யாண உற்சவம் – 13,300
    ஊஞ்சல் சேவை – 4,200
    விசேஷ பூஜை – 1,500
    ஆர்ஜித பிரம்மோற்சவம் –  7,700
    வசந்த உற்சவம் -14,850
    சகஸ்கர தீப அலங்கார சேவை – 16,800

    இதில் பொது கோட்டா டிக்கெட் டிக்கெட் இன்று காலை 10 மணி முதல் www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதல் முறையில் வெளியிடப்பட்டுள்ள 10 ஆயிரத்து 904 டிக்கெட்டுகள் பெறுவதற்கு  5 ஆம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். 

    பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் 5 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12மணி கிடையே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் 8 ம் தேதி மதியம் 12 மணிக்குள் ஆன்லைன் மூலமாக  பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

  • Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – துன்பம் 
    ரிஷபம் – களிப்பு 
    மிதுனம் – பிரிவு
    கடனம் – தனம்  
    சிம்மம் – உறுதி  
    கன்னி –  உதவி
    துலாம் –  சினம்   
    விருச்சிகம் – பகை 
    தனுசு – ஆக்கம் 
    மகரம் –   தோல்வி 
    கும்பம் – பெருமை 
    மீனம் – உற்சாகம் 
    சந்திராஷ்டமம்    – திருவோணம், அவிட்டம்
     

  • August 2 Indraya Naal Eppadi

    ஆகஸ்ட் 2 – இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – ஆடி 17
    ராமேஸ்வரம், திருவாடானை, நயினார்கோவிலில் தேர்
    02-ஆக-2019 வெள்ளி 
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    பிரதமை    கா    7.04
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    ம    12.05
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்,அவிட்டம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Dhanvantri Peedathil Aadi Kozh varthal

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்” அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், மழை வேண்டியும், இயற்கை வளம் பெறவும், சகல விதமான ஜீவராசிகளின் நலனுக்காகவும், விவசாய பெருமக்களின் நலனுக்காகவும், ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வருகிற 02.08.2019 காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு ஹோமத்துடன் கூழ்வார்த்தல் விழா நடைபெற உள்ளது.

    ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக் காலமாக இதனைக் கருதுவர். ஆடி மாதத்தை "சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது. ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்ஜுனரின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம்  தாங்கமுடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரைவிட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார். அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க  அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்.

    ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை  உணவாக கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார்.

    அப்போது சிவபெருமான், தோன்றி ரேணுகா தேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த  உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ்  வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள்.

    மேலும் இவ்வைபவங்களில் பங்கேற்பதின் மூலம் விரைவில் திருமணம் நடைபெறும், மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும், நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும், கணவருக்கு தீர்க்காயுள் ஏற்படும், அளவற்ற நன்மைகளைத் தரும், எதிரிகள் தொல்லை விலகும், வேலை வாய்பு கிடைக்கும், நோய்கள் அகலும், போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்ப்படும். பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் : 04172 – 230033

  • Iswaryangalai Alli Tharum Aadi Perukku

    ஆடிப்பெருக்கன்று திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் திருமண வரம் வேண்டி, காவிரியைப் பிரார்த்திப்பார்கள். புதுமணம் ஆன பெண்கள் தாலி பிரித்து, புதுத் தாலி முடிந்து கொள்வார்கள். வயது முதிர்ந்த சுமங்கலி, புதுத் தாலி எடுத்துத் தருவார். 

    அதோடு, திருமணம் ஆன தினத்தன்று அணிந்து கொண்ட மலர் மாலைகளை வீட்டில் பத்திரமாக பாதுகாத்து வைத்து, ஆடிப்பெருக்கன்று ஆற்றில் விடுவர். ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த பெண்கள் தலைமையில் இவை அனைத்தும் காவிரிக் கரையில் நடைபெறும். சிறுவர்கள் ‘சப்பரத் தட்டி’ எனப்படும் சிறு மரத் தேர்களை உருட்டிக் கொண்டு ஆற்றங்கரையில் விளையாடுவர்.

    விவசாயத்தையும், தங்கள் குடும்பத்தையும் வாழ வைக்கிற காவிரிக்கு மங்களப் பொருட்களை அர்ப்பணித்து, பெண்கள் தங்கள் கழுத்திலும், உடன் வந்திருக்கிற ஆண்கள் தங்கள் கைகளிலும் மஞ்சள் கயிறுகளைக் கட்டிக் கொள்வார்கள்.அன்றைய தினம் பெண்கள் நீராடி விட்டு, புத்தாடை அணிந்து கொள்வர். ஆற்றங்கரையில் ஓரிடத்தை சுத்தம் செய்து விட்டு தீபம் ஏற்றி வைப்பர். 

    அங்கு வாழையிலைகளைப் பரத்துவார்கள். பசுஞ்சாணத்திலோ அல்லது மஞ்சளிலோ பிள்ளையார் பிடித்து வைத்து வாழையிலையில் மங்களப் பொருட்களை வைப்பார்கள். மஞ்சள், குங்குமம், தாம்பூலம், தாலிப்பொட்டு, தேங்காய், கண்ணாடி வளையல்கள், பனையோலையால் ஆன காதோலை, கருகமணி, அரிசி, வெல்லம், ரவிக்கைத் துணி, காப்பரிசி, அவல் போன்றவற்றை வைப்பதுண்டு. 

    சர்க்கரைப் பொங்கல், தேங்காய்ச் சாதம், புளிசாதம், தயிர் சாதம் போன்ற சித்ரான்னங்களை வீட்டில் இருந்தே எடுத்து வந்து வைப்பார்கள். குடும்பத்தில் இருக்கிற அனைவரும் கூடி இருக்கும்போது காவிரித் தாயைப் போற்றி அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவார்கள். பிறகு, தேங்காய் உடைத்து வைத்து, நிவேதனம் செய்து விட்டுக் கற்பூரம் காண்பிப்பார்கள். இதே தீபத்தை காவிரிக்கும் காண்பித்து வணங்குவார்கள். 

    அதன்பின் தாலிப்பொட்டு, மஞ்சள், குங்குமம், காதோலை, கருகமணி, புஷ்பம் போன்றவற்றை காவிரித் தாய்க்கு அர்ப்பணிப்பர். வாழைமட்டையில் தீபமும் ஏற்றி நீரில் மிதக்க விடுவர்.காவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தைப் பேறு, திருமணப் பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யமும் தேடி வரும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
     

  • Sri Kalahasti Sivan koil Hundiyal Kanikkai

    ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோவிலில் 32 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை 1.55 கோடி ரூபாய் வசூலாகி இருக்கிறது.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள புகழ் பெற்ற சைவத் ஸ்தலமான ஸ்ரீ காளகதீஸ்வரர் ஞானாம்பிகை கோவிலில் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை  சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் இன்று எண்ணப்பட்டது. 

    இதில் 32 நாட்களுக்கு ஒரு கோடியே 55 லட்சத்து 72 ஆயிரத்து தொள்ளாயிரத்து 39 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 60 கிராம் தங்கம், 660 கிலோ. 150 கிராம் வெள்ளி, வெளிநாட்டு டாலர்கள் 176 காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 

    இதில் அமெரிக்க டாலர்கள் 75, மலேசியா 59 , குவைத் 9 , சிங்கப்பூர் 7, இதர நாடுகளை சேர்ந்த டாலர்கள் 26 என 176 வெளிநாட்டு டாலர்கள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

  • Atthi Varadhar Nindra kolam….

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி அளிக்க கூடிய அத்திவரதர் கடந்த ஜூலை 1 முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் அருள்பாலித்தார்.

     ஆகஸ்ட் 1-ம் நாளான இன்று அத்திவரதர்  நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். நின்ற கோலத்தில் இருக்கும் அத்தி வரதரை காண காலை 4 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.


     5.30 மணி அளவில் நடைதிறக்கப்பட்டு அத்திவரதர் ஊதா  நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்…..