திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு கோட்டா வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கான கட்டண சேவைகளுக்கான முன்பதிவு செய்வதற்கான 69,254 டிக்கெட் கோட்டா வெளியிடப்பட்டுள்ளது.
டிக்கெட் விபரம்…
ஆன்லைன் குலுக்கல் முறையில் 10,904 டிக்கெட்
சுப்ரபாதம் – 7549
தோமாளை – 120
அர்ச்சனை – 120
அஷ்டதள பாதபத்ம ஆராதனை – 240
நிஜபாத தரிசனம் – 2875
பொது கோட்டா ( GENERAL CATEGORY ) 58,350 நேரடியாக முன்பதிவு செய்யும் விதமாக வைக்கப்பட்டுள்ளது.
கல்யாண உற்சவம் – 13,300
ஊஞ்சல் சேவை – 4,200
விசேஷ பூஜை – 1,500
ஆர்ஜித பிரம்மோற்சவம் – 7,700
வசந்த உற்சவம் -14,850
சகஸ்கர தீப அலங்கார சேவை – 16,800
இதில் பொது கோட்டா டிக்கெட் டிக்கெட் இன்று காலை 10 மணி முதல் www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதல் முறையில் வெளியிடப்பட்டுள்ள 10 ஆயிரத்து 904 டிக்கெட்டுகள் பெறுவதற்கு 5 ஆம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் 5 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12மணி கிடையே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் 8 ம் தேதி மதியம் 12 மணிக்குள் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply