Tag: Ticket

  • Thirupathy free dharshan ticket

    திருப்பதி ழுமலையானை தரிசிக்க இன்று முதல் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதுவரை இணையம் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. அதிலும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்குபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஒரு மாதத்துக்கான டிக்கெட்களின் விற்பனை தொடங்கிய பத்தே நிமிடங்களில் அவை முடிந்துவிடும் நிலை இருந்தது. 

    இன்று முதல் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட உள்ளன. அவற்றை பக்தர்கள் நேரிலேயே சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்காக திருப்பதி ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய மூன்று இடங்களில் இன்று காலை 9 மணி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன. இதைப் பெற்றுக்கொள்ள ஆதார் அட்டை அவசியம். மேலும் இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்.

    இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் நாளை காலை முதல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தற்போது நாள் தோறும் முப்பதாயிரம் பேருக்கு மேல் தரிசனம் செய்துவரும் நிலையில் படிப்படியா தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தேவஸ்தான அலுவலர் தெரிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பு ஏழுமலையானின் பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • Thirupathy vip break dharshan ticket booking

    நாளை 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடர்பான  தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு.

     அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களுக்கான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடர்பான விஐபி பிரேக் தரிசனம் டிக்கட்டுகளை தேவஸ்தானம் நாளை 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிட உள்ளது.

     திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிதாக துவங்கிய ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன டிக்கட்டுகள் வழங்கப்படுகிறது.

     ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பக்தர்கள் வழங்கும் நன்கொடையை பயன்படுத்தி தேவஸ்தான நிர்வாகம் நாடு முழுவதும் ஏழுமலையான் கோவில்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

    இந்த நிலையில்
     ஜனவரி முதல் தேதி அன்று ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் 1000 ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடர்பான விஐபி தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் நாளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது. 

    டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் ஆன்லைன் மூலம் ஒவ்வொரு டிக்கெடிற்க்கும் தலா 10,000 ரூபாய் நன்கொடையும்,டிக்கட் கட்டணமாக தலா 500 ரூபாயும் செலுத்தி  முன்பதிவு செய்யலாம்.

    வைகுண்ட ஏகாதசி தினமான 13ஆம் அடுத்த மாதம் தேதி அன்று பக்தர்கள் ஏழுமலையானை வழிபடும் வகையில் 300 ரூபாய் டிக்கெட்டுகளை ஆயிரம் எண்ணிக்கையில் நாளை மாலை ஆன்-லைனில் வெளியிடப்பட உள்ளது.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் 13ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும்.

     எனவே பக்தர்கள் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்வதற்கு வசதியாக 14ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நாள் ஒன்றுக்கு 2000 என்ற எண்ணிக்கையில் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

     டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை மற்றும் டிக்கெட் கட்டணம் 500 ஆகியவற்றை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

     அதேபோல் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் ஸ்ரீவாணி அறக்கட்டளை திட்டத்தின்கீழ் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 200 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளையும்,சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 300 விஐபி பிரேக் தரிசன டிக்கெட் களையும் தேவஸ்தானம் நாளை மாலை ஆன்-லைனில் வெளியிட உள்ளது அவற்றையும் பக்தர்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடையாக 10,000 ரூபாயும் டிக்கெட் கட்டணம் 500 ரூபாயும் செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

  • Thirupathy bakthargal dharisana ticket

    ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் பஸ், ரெயில், தனியார் வாகனங்கள் மூலம் திருமலையை வந்தடைகின்றனர்.

     
    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் நீடித்து வருவதால் பக்தர்களின் வருகையை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன் ஒருபகுதியாக 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம் முறை மட்டும் அமலில் இருந்து வந்தது.

    கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பின்னர் இலவச தரிசனம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு பஸ் டிக்கெட்டுடன் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.

    கொரோனா நெருக்கடி காரணமாக இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதையொட்டி பஸ் டிக்கெட் உடன் தரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்க உள்ளனர். அதன்படி, நாள்தோறும் ஆயிரம் டிக்கெட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, பெங்களூரு, சென்னை, வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து புறப்படும் ஆந்திர அரசு பஸ்களில் சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஏசி பஸ்களில் திருப்பதிக்கு செல்ல முன்பதிவு செய்யும் போது கூடுதலாக ரூ 300 கட்டணம் செலுத்தினால் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டும் வழங்கப்படும். விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. 

  • Thirupathy free dharshan ticket

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதத்தில் ரூ. 300 கட்டணத்தில் தரிசனம் செய்யவதற்கான டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதத்தில் ரூ. 300 கட்டணத்தில் தரிசனம் செய்யவதற்கான டிக்கெட்டுகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

    நவம்பர் மாதத்திற்கான இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நாளை மறுதினம் காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    டிக்கெட் பெற்று வரும் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் வருகிற 25ந் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது எனவே பக்தர்கள் http:// Tirupati Balaji. AP. gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரூ.300 கட்டணத்தில் ஏற்கனவே 8 ஆயிரம் டிக்கெட் வெளியிடப்பட்டது. தற்போது அது 10 ஆயிரம் டிக்கெட்டாகவும் இலவச தரிசனத்தில் வெளியிடப்பட்ட 8 ஆயிரம் டோக்கன் தற்போது 12 ஆயிரம் டோக்கனாகவும் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

  • Thirupathy ezhumalayan dharshan ticket

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 1ம்தேதி முதல் 30ம்தேதி வரை சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300க்கான டிக்கெட் ஆன்லைனில் நாளை (இன்று) வெளியிடப்படுகிறது. ஒரு நாளைக்கு 8 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் நாளை (இன்று) காலை 9 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகர்பத்தி விற்பனை திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் செயல் அதிகாரி ஜவகர், கோசாலை மற்றும் ஆயுர்வேத கல்லூரி அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர் பேசியதாவது:ஏழுமலையான் கோயில் உள்பட இதர தேவஸ்தான கோயில்களில் சுவாமிக்கு பயன்படுத்திய பூக்களை கொண்டு பெங்களூரை சேர்ந்த தர்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஏழு விதமான நறுமணங்கள் கொண்ட அகர்பத்திகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை செப்டம்பர் முதல் வாரத்தில் பக்தர்களுக்காக விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். 

    திருமலையில் உள்ள லட்டு கவுன்டர், தேங்காய் கவுன்டர், கோசாலை, திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயில், திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில், விஷ்ணு நிவாசம் மற்றும் சீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை ஆகிய இடங்களில் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். எஸ்.வி. ஆயுர்வேத மருந்தகம், கோவையைச் சேர்ந்த ஆசிர்வாத் நிறுவனத்துடன் இணைந்து, 15 வகையான பஞ்சகவ்ய பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

  • Thirupathy November online ticket

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட்  நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.  

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலான ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் நாளை முதல் ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தினந்தோறும் 16 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. 

    இந்த டிக்கெட்களை நாளை காலை 11.00 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/ என்ற தேவஸ்தான இணையத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே திருப்பதியில் இருந்து திருமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் பக்தர்கள் இந்த வாய்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy dharshan ticket

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தினந்தோறும் மேலும்  3 ஆயிரம் டிக்கெட்டுகள் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள டிக்கெட் வெளியீடு

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவல்  காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பக்தர்களுக்கான தரிசனம் ஊரடங்கு  தளர்வுக்கு பிறகு கடந்த ஜுன் 11ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 

    தற்போது ரூ 300 டிக்கெட் மூலம் தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்கள் என 30 தேதி வரைக்கான டிக்கெட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் தினந்தோறும் மூன்று ஆயிரம் டிக்கெட்டுகள் என வழங்கப்பட்டு வந்ததை 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    இந்த ரத்து செய்யப்பட்ட டிக்கெட்ட்டிற்கு பதிலாக ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டில் ஒரு நாளைக்கு கூடுதலாக 3000 டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டு இன்று கோட்டா வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக தினந்தோறும் ரூபாய் 300 சிறப்பு தரிசனத்தில் 13,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் விதமாகவும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  • Tirupathy bramorchava ticket veliyidu

    திருப்பதியில் ஏழுமலையான் கோவில் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவத்தின் போது சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்  வெளியீடப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 19ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 15 ம் தேதி கோவிலை சுத்தம் செய்யும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கட் இதுவரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 

    இந்த டிக்கெட்டுகளை இன்று மாலை 4 மணிக்கு பக்தர்கள் தேவஸ்தான இணையதள முகவரியான https://tirupatibalaji.ap.gov.in/#/login செய்து டிக்கெட் முன்பதிவு செய்யும் விதமாக டிக்கெட் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெற கூடிய நாட்களில் சுவாமி வீதிஉலா நடைபெறுவது வரலாற்றில் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    இருப்பினும் கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் பிரம்மோற்சவத்தின் போது சுவாமி தாயார் எந்தெந்த வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்களோ அந்த வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட உள்ளனர். இந்நிலையில் பிரம்மோற்சவம் நடைபெற கூடிய நாட்களில்  ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • Thirupathy Dharshan ticket cancel

    கொரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட் இந்த மாதம் முப்பதாம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக  தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதியில் தினந்தோறும் மூன்றாயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து திருப்பதி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 50 வார்டுகளிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததால்  இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. 

    பின்னர் 45 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் சனிக்கிழமை மீண்டும் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுவது தொடங்கப்பட்டது.  இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்த மாதம் 30ம் தேதி வரை மீண்டும் தற்காலிகமாக இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக தேவஸ்தான அறிவித்துள்ளது. 

    தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு செய்தபிறகு இலவச தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்காக அதிக அளவு தமிழக பக்தர்கள் ஒருநாள் முன்னதாகவே திருப்பதிக்கு வந்து இரவு முழுவதும்  காத்திருப்பதாகவும் இதுவே கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக  அமையும் என்பதாலும் புரட்டாசி மாதம் 17-ஆம் தேதி முதல் தொடங்க படுவதால் தமிழக பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால்  முப்பதாம் தேதி வரை தற்காலிகமாக இலவச தரிசன டிக்கெட் நிறுத்தப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
     

  • Thirupathy July Dharshan Ticket

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒதுக்கீடு அடிப்படையில் ரூ.300 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. 
       
    திருப்பதியில் இந்த மாதத்துக்கு ஒடுக்கீடு அடிப்படையில் ரூ.300 டிக்கெட் தினமும் 9 ஆயிரம் வழங்கப்பட உள்ளன. அதற்காக நேற்று ரூ.300 டிக்கெட் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுள்ளன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் எட்டாம் தேதி முதல்  பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் தினமும் 6 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 9 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

    அதேபோல் நாளொன்றுக்கு 1000 விஐபி தரிசன டிக்கெட்டுகள் வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஜூலை மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் தேவஸ்தனம் நேற்று வெளியிட்டுள்ளது. 

    அதேபோல் ஜூலை 1ஆம் தேதிக்கான இலவச தரிசன டிக்கெட் இன்று முதல் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களில்  வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

    இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு தினமும் 3 ஆயிரம் டைம் ஸ்லாட் டோக்கன்கள் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், சீனிவாசம், மாதவம் ஆகிய விடுதிகளிலும், அலிபிரியில் உள்ள ஸ்ரீதேவி காம்ப்ளக்சிலும் வழங்கப்பட உள்ளன. அதில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் ஒருநாள் முன்கூட்டியே வந்து டைம் ஸ்லாட் டோக்கனை பெற வேண்டும். இந்தத் தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.