Tag: Ticket

  • Thirupathy Online Ticket Booking

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு கோட்டா வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட்  மாதத்திற்கான  கட்டண  சேவைகளுக்கான முன்பதிவு செய்வதற்கான 69,254 டிக்கெட் கோட்டா வெளியிடப்பட்டுள்ளது. 

    டிக்கெட் விபரம்…
    ஆன்லைன் குலுக்கல் முறையில் 10,904 டிக்கெட்
    சுப்ரபாதம்  – 7549
    தோமாளை – 120
    அர்ச்சனை – 120
    அஷ்டதள பாதபத்ம ஆராதனை – 240
    நிஜபாத தரிசனம் – 2875
    பொது கோட்டா  ( GENERAL CATEGORY ) 58,350  நேரடியாக முன்பதிவு செய்யும் விதமாக வைக்கப்பட்டுள்ளது.
    கல்யாண உற்சவம் – 13,300
    ஊஞ்சல் சேவை – 4,200
    விசேஷ பூஜை – 1,500
    ஆர்ஜித பிரம்மோற்சவம் –  7,700
    வசந்த உற்சவம் -14,850
    சகஸ்கர தீப அலங்கார சேவை – 16,800

    இதில் பொது கோட்டா டிக்கெட் டிக்கெட் இன்று காலை 10 மணி முதல் www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதல் முறையில் வெளியிடப்பட்டுள்ள 10 ஆயிரத்து 904 டிக்கெட்டுகள் பெறுவதற்கு  5 ஆம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். 

    பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் 5 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12மணி கிடையே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் 8 ம் தேதி மதியம் 12 மணிக்குள் ஆன்லைன் மூலமாக  பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

  • Thirupathy ticket timing changed

    திருப்பதியில்  ஏப்ரல் 10-ஆம் தேதி முதல்  நேர ஒதுக்கீடு டிக்கெட் வழங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட்டுகளை பக்தர்களின் ஆதார் கார்டுகளை வைத்து நள்ளிரவு 12 மணி முதல் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. 

    பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் தினந்தோறும் அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் விதமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. 

    எனவே பக்தர்கள் திருப்பதியில் உள்ள அரசு பேருந்து நிலையம், ஸ்ரீனிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வு அறை, திருப்பதி  ரயில் நிலையம் பின்புறம் உள்ள இரண்டாவது சத்திரம், அலிபிரியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை மாற்றம் செய்யப்பட்ட நேரத்தில் இனி பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • Thirupathy Dharshan Ticket

    திருப்பதியில் திருமலையில் ஆர்ஜித சேவையில் ஏழுமலையானை தரிக்க மார்ச் மாதத்துக்கு குலுக்கல் முறையில் நிலுவையில்  டிக்கெட்டுகளின் பட்டியலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

    திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் இணையதள மூலம் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த
    ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் சில தவிர்க்க முடியாத காரணங்களால் டிக்கெட்டுகளை ரத்து செய்து விடுகின்றனர். அவ்வாறு ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளை தேவஸ்தானம் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு அளிக்கிறது.  

    இந்த டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் சேவை நாளின் முன்தினம் திருமலை மத்திய விசாரணை அலுவலகத்தில் உள்ள விஜயா வங்கியில் தங்கள் பெயர், ஆதார் எண், பெருவிரல் ரேகை, கைபேசி எண் உள்ளிட்டவற்றை அளித்து சேவா டிக்கெட்டுகளை பெற விண்ணப்பிக்க வேண்டும்.

    கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களை மாலை 5 மணிக்கு குலுக்கல் நடத்தி அதில்  தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அதிகாரிகள் குறுந்தகவல் அனுப்புவர். தகவல் பெற்ற பக்தர்கள் மத்திய விசாரணை அலுவலகத்தில் தங்கள் டிக்கெட்டுகளை பெற்று மறுநாள் அதில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு சென்று ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம். 

    அதன்படி மார்ச் மாதம் நிலுவையில் உள்ள ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.