Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • அருணகிரிநாதர் விழா ஆகஸ்டு ஐந்தாம் தேதி தொடக்கம்

    விராலிமலையில் அறுபத்தி ஆறாம் ஆண்டு அருணகிரிநாதர் விழா ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது. 

    விராலிமலையில் அருணகிரிநாதருக்கு கோயில் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் 66 ஆண்டுகளாக தொடர்ந்து விழா எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வரும் ஆகஸ்டு 5-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.
    மாலை 5 மணிக்கு விழா பேருரையுடன் தொடங்கும் முதல் நாள் நாள் நிகழ்வில் திருபுகழ் எனும் தலைப்பில் சுந்தரம் ஆன்மீக சொற்பொழிவாற்றுகிறார், அதனைத் தொடர்ந்து ஆர். காஷ்யாப் குழுவினரின் பக்திபாடல் கச்சேரியும், திருப்பதி தேவஸ்தான இசைக்கல்லூரி ஆசிரியர் காளகஸ்தி முனிக்குமார் நாதஸ்வரம், விராலிமலை ஆர்எம்ஜெ. கார்த்திக் சிறப்புதவுல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    2-ஆம் நாள் மாலை 7 மணிக்கு விராலிமலை வேந்தன் என்றத் தலைப்பில் மனம் சேர சந்திரகாசனின் சமய சொற்பொழிவும், எம். ஜெயகுமாரின் சாக்ஸ போன் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது

    3-ஆம நாள், மங்கள இசையுடன் தொடங்கும் விழாவில் கந்தன் கருணை எனும் தலைப்பில் ம. எழிலரசியின் ஆன்மீகச் சொற்பொழிவும், கோவிந்தராஜன் குழுவினரின் லயநாத இன்ப இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    4-ஆம் நாள், விடையாத்தியுடன் விழா நிறைவடைகிறது.3 நாள்களும் விழா மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 12 மணிவரை நடைபெறும். விழா நாள்களில் மலை மீது உள்ள முருகனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
    விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் மலைக்கோயிலில் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி(கூடுவிட்டுகூடுபாயும் வித்தை) தந்தருளிய சிறப்பு பெற்றத்தலமாகும், அதோடு இங்கோயிலில் நாரத மாமுனிக்கு சாபவிமோச்சனம் தந்தருளியதாகவும் கூறப்படும் இத்தலம் 207 படிகள் கொண்டதாகும் முருகன் ஆறுமுகங்களுடன் வள்ளி,தெய்வானை சமேதகராக மலைமீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

  • ஆண்டாள் கோயில் தேரோட்டம்… விழாக்கோலம் பூண்ட திருவில்லிபுத்தூர்

    திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வெள்ளி கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவில்லிபுத்தூரில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திரம் தினத்தன்று ஆண்டாள் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டம் ஆகஸ்டு 5 ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெறுகிறது. தேரோட்டத்திற்கான நிகழ்ச்சிகள் கடந்த 28ம் தேதி துவங்கின. ஆண்டாள், ரெங்கமன்னார் தினமும் பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளித்தனர்.
    வெள்ளி கிழமை காலை 8.05 மணி அளவில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழக அமைச்சர்கள், அறநிலைதுறை உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி, விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    தேரோட்டத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தேர் சக்கரம் பதியாமல் இருக்க பல லட்சம் மதிப்புள்ள இரும்பு பிளேட்டுகளை ராம்கோ நிறுவனத்தினர் வழங்கியுள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாகி அதிகாரி ராமராஜா ஆகியோர் செய்துள்ளனர்.

  • அருணகிரிநாதர் விழா ஆகஸ்டு 5ல் தொடக்கம்

    விராலிமலையில் அறுபத்தி ஆறாம் ஆண்டு அருணகிரிநாதர் விழா ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.
    விராலிமலையில் அருணகிரிநாதருக்கு கோயில் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் 66 ஆண்டுகளாக தொடர்ந்து விழா எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வரும் ஆகஸ்டு 5-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.
    மாலை 5 மணிக்கு விழா பேருரையுடன் தொடங்கும் முதல் நாள் நாள் நிகழ்வில் திருபுகழ் எனும் தலைப்பில் சுந்தரம் ஆன்மீக சொற்பொழிவாற்றுகிறார், அதனைத் தொடர்ந்து ஆர். காஷ்யாப் குழுவினரின் பக்திபாடல் கச்சேரியும், திருப்பதி தேவஸ்தான இசைக்கல்லூரி ஆசிரியர் காளகஸ்தி முனிக்குமார் நாதஸ்வரம், விராலிமலை ஆர்எம்ஜெ. கார்த்திக் சிறப்புதவுல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    2-ஆம் நாள் மாலை 7 மணிக்கு விராலிமலை வேந்தன் என்றத் தலைப்பில் மனம் சேர சந்திரகாசனின் சமய சொற்பொழிவும், எம். ஜெயகுமாரின் சாக்ஸ போன் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது

    3-ஆம நாள், மங்கள இசையுடன் தொடங்கும் விழாவில் கந்தன் கருணை எனும் தலைப்பில் ம. எழிலரசியின் ஆன்மீகச் சொற்பொழிவும், கோவிந்தராஜன் குழுவினரின் லயநாத இன்ப இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    4-ஆம் நாள், விடையாத்தியுடன் விழா நிறைவடைகிறது.3 நாள்களும் விழா மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 12 மணிவரை நடைபெறும். விழா நாள்களில் மலை மீது உள்ள முருகனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
    விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் மலைக்கோயிலில் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி(கூடுவிட்டுகூடுபாயும் வித்தை) தந்தருளிய சிறப்பு பெற்றத்தலமாகும், அதோடு இங்கோயிலில் நாரத மாமுனிக்கு சாபவிமோச்சனம் தந்தருளியதாகவும் கூறப்படும் இத்தலம் 207 படிகள் கொண்டதாகும் முருகன் ஆறுமுகங்களுடன் வள்ளி,தெய்வானை சமேதகராக மலைமீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

  • திருப்பதியில் அபூர்வ நிகழ்வு..

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இம்மாதம் 2 கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற அக்டோபர் மாதம் 3–ந் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி 11–ந் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் 5–வது நாளில் ஏழுமலையான் கருடவாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் திரள்வார்கள்.

    வருகிற 7–ந் தேதி கருடபஞ்சமி விழா நடக்கிறது. அன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை தங்க கருடவாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வருகிற 18–ந் தேதி ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி விழா நடக்கிறது. அன்றைய தினமும் உற்சவர் மலையப்பசாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    எனவே இந்த மாதத்தில் ஏழுமலையான் கோவிலில் 2 கருடசேவை நிகழ்ச்சிகள் நடப்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

  • திருப்பதியில் அபூர்வ நிகழ்வு…..

  • மேல்மலையனூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்…

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
    இரவு 11.30 மணிக்கு பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவ அங்காளம்மன் மேளதாளம் முழங்க பலத்த கரகோஷத்துக்கு இடையே ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    பின்னர், கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மனுக்கு தாலாட்டு பாடல்களை பாடினர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் தங்களது கைகளில் எலுமிச்சை மற்றும் தேங்காயில் கற்பூரம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

  • திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.24 கோடி வசூல்…

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த மாதத்தின் முதல் நாளிலேயே 4 கோடியே 24 லட்ச ரூபாய் உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது.

    திருப்பதியில் கோயில் உண்டியலில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி மற்றும் வீட்டு மனை, நிலப்பத்திரங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இதன் காரணமாக உண்டியல் மூலம் மட்டுமே ஆண்டுக்கு சுமார் ரூ.1,300 கோடியும், ஒரு டன் தங்கமும், 1,500 கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைத்து வருகிறது.

    நடப்பாண்டு கடந்த ஜூலை 18-ம் தேதி ரூ.4.69 கோடி உண்டியல் மூலம் ஒரே நாளில் அதிகபட்ச வருவாய் கிடைத்தது. இதேபோன்று ஜூன் 27-ம் தேதி ரூ.4.22 கோடியும், ஜூலை 28-ம் தேதி ரூ.4.03 கோடியும் வருவாயாக கிடைத்தது.

    இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளிலேயே உண்டியல் காணிக்கை ரூ.4.24 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.3 முதல் 3.5 கோடி வரை உண்டியல் காணிக்கை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • திருப்பதியில் கூட்டம் இல்லை….

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வார நாட்களில் சராசரியாக 65 ஆயிரத்தை எட்டும் பக்தர்கள் எண்ணிக்கை, சனி, ஞாயிறு போன்ற வார நாட்களில் 80 ஆயிரத்தைத் தாண்டும்.

    இந்நிலையில், சித்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இப்போது கன மழை பெய்து கொண்டிருக்கிறது. திருமலைப் பகுதியிலும் மழை நீடிக்கிறது. இதனால், திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், பக்தர்கள் வருகையால் திணறிக் கொண்டிருக்கும் ஏழுமலையான் கோயிலில் இன்று காலை குவிந்த பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்து திரும்பினர். இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறும்போது, “திருமலை பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், நேற்று மாலை முதல் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இன்று மட்டும் 20 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்து இருப்பார்கள்.

    பொதுவாக திருமலை பகுதியில் கனமழை பெய்யும்போது, கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஆனாலும், மழைக் காலத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, அவர்களுக்கான சிறப்பு வசதிகள் தொடர்ந்து செய்யப்படும்” என்றனர்.

  • பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் குருபெயர்சி….

    குருபெயர்ச்சியை முன்னிட்டு சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை- திருவள்ளுர் நெடுஞ்சாலையில் அம்பத்தூர் அருகே உள்ள பாடியில் அமைந்துள்ளது திருவலியதாயம் திருத்தலம்.
    தேவாரத் திருப்பதிகம் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் 21-வது தலமாகும். மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்மிகு திருவலிதாய நாதர், வல்லீசர் எனவும், அம்மன் தாயம்மை, வடமொழியில் ஜகதாம்பாள் எனவும் திருநாமம் கொண்டு அருள்புரிகின்றனர். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இத்தலத்தில் வியாழபகவான் தனிசந்நதியில் கோயில் கொண்டுள்ளார்.
    இது முக்கிய குருஸ்தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் அருள்மிகு குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னியா ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு ஆகஸ்டு 1 முதல் 3 வரை லட்சார்ச்சனை விழாவும், ஆகஸ்ட் 2-ம் தேதி குருபெயர்ச்சி தினத்தன்று ஒரு நாள் மட்டும் குரு பரிஹார ஹோமமும் நடைபெறுகின்றது.
    இந்த துர்முகி வருடம், ஆடி மாதம் 18 ம் தேதி ஆகஸ்ட் 02ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கன்யா லக்னத்தில் பிரகஸ்பதி எனும் தேவ குருவாகிய வியாழ பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் சென்று அமர்கிறார். 01.09.2017 வரை கன்னி ராசியில் இருப்பார் குருபகவான். இந்த குருபெயர்ச்சிக்கு மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசிகள் குரு பரிகார சாந்தி செய்து கொள்ள வேண்டிய ராசிகள் ஆகும்.
    குரு பரிஹார ஹோமங்களிலும், லட்சார்ச்சனையிலும் பங்கேற்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி 044-26540706

  • திருக்கழுகுன்றம் கோயிலில் 31 ஆம் தேதி கலசாபிஷேகம்

    திருக்கழுகுன்றம் ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் 108 கலசாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

    ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சங்கு தீர்த்த புஷ்கர மேளா, லட்ச தீப பெருவிழா ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
    இவ்விழா சிறப்பாக நடைபெற வேண்டி, சங்கு தீர்த்த குளத்தையொட்டி உள்ள ருத்ரகோட்டீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை 108 கலசாபிஷேகம், கலச பூஜை, ஹோமம் நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கழுகுன்றம் வேதமலை பெருவள குழுத் தலைவர் தி.க.துரை, செயலாளர் தி.து.அன்புச்செழியன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.