Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவம் அக்டோபர் 3 முதல் தொடக்கம்….

    திருப்பதி திருமலை வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் அக்டோபர் 3-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா வரும் அக்டோபர் 3-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருமலையில் நேற்று தேவஸ்தான இணை செயல் நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘பிரம்மோற்சவ விழா அக்டோபர் 3 முதல், 11-ம் தேதி வரை நடக்கும் எனவும், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

    பிரம்மோற்சவ காலத்தில் சாதாரண பக்தர்களும் ஏழுமலை யானை எளிதாக தரிசிப்பதற்கான ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி, தங்குமிடம் ஆகியவையும் எவ்வித குறைபாடின்றி மேற் கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். கூட்ட நெரிசல், அசம்பாவித சம்பவங் களை தவிர்க்க பாதுகாப்பு கெடுபிடிகளும் அதிகரிக்கப்படும்’’ என்றும் அவர் கூறினார்.

  • பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை…

    கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி தொடங்கி 12 நாள்கள் நடைபெற உள்ளது.

    கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி களப பூஜை 12 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு திருவிழா ஆக.1ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிவரை நடைபெறும். தொடக்கநாள் காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகம் நடைபெறும். திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் தங்கக் குடத்தில் சந்தனம், களபம், பச்சைக் கற்பூரம், ஜவ்வாது, கோரோசனை, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் நிரப்பப்பட்டு பூஜை நடைபெறும். இதை மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ பூஜை செய்கிறார்.

    களப அபிஷேகத்துக்குப் பின்னர் அம்மனுக்கு தங்க ஆபரணங்கள், வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க அங்கிகவசம் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். முற்பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராத, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு அம்மனுக்கு முல்லை, பிச்சி, ரோஜா, தாமரை, துளசி உள்ளிட்ட பூக்களால் புஷ்பாபிஷேகம் நடைபெறும். இரவு 8.30 மணிக்கு அம்மன் உள்பிரகாரத்தில் வலம் வருதல், தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை ஆகியன நடைபெறும்.
    ஏற்பாடுகளை தேவசம் போர்டு இணை ஆணையர் பாரதி, கோயில் மேலாளர் சிவராமச்சந்திரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

  • அருணாசலேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது….

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் சிறப்புப் பூஜைகளுடன் உண்ணாமுலையம்மன் சன்னிதியில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

    தொடர்ந்து, ஆகஸ்ட் 4-ம் தேதி வரை தினமும் காலை, மாலை வேளைகளில் விநாயகர், ஸ்ரீபராசக்தி அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், மாலை கோயில் வளைகாப்பு மண்டபத்தில் ஸ்ரீபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம், வளைகாப்பு உற்சவமும், இரவு சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரே தீ மிதி திருவிழா நடைபெறுகிறது. இத்துடன், இந்தக் கோயிலின் ஆடிப்பூர பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

  • ஆடிக்கிருத்திகை, திருத்தணியில் விழாக் கோலம்….

    ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயில் விழா கோலம் பூண்டுள்ளது. கோயிலில் லட்சக்கணக்காண பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் 5ம் படைவீடாக திகழும் திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி முதலான விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.

    28ம் தேதி ஆடிக்கிருத்திகை விழா, தெப்பத்திருவிழாவும் நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இங்கு ஆடிக்கிருத்திகை விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாது புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர். இன்று ஆடி பரணியும், 28ம் தேதி ஆடிக்கிருத்திகை, முதல் நாள் தெப்பத் திருவிழாவும் நடைபெறுகின்றன.

  • 10 ஆயிரம் பேர் தீ மிதித்த ஆடிக்குண்டம்….

    வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று ஆடிக்குண்டம் விழா துவங்கியதை அடுத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீமிதித்து அம்மனை வழிப்பட்டனர். மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, கடந்த 19ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து 24ம் தேதி கொடியேற்றப்பட்டு, நேற்று பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை, 3 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், காலை, 6 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினார்.

  • நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா 27 ஆம் தேதி கொடியேற்றம்

    திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் உள்ள காந்திமதியம்மன் சன்னதியில் ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் அம்மன் சன்னதியில் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி ஜூலை 27 ஆம் தேதி காலை 6.15 முதல் 7.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதன்பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற உள்ளது. இம் மாதம் 30 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். அன்று இரவு 8 மணிக்கு காந்திமதியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். பத்தாம் திருநாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் இக் கோயிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து ஆடிப்பூரம் முளைக்கட்டுத் திருநாளும், அதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை, வழிபாடுகளும் நடைபெற உள்ளன.

  • திருப்பதி ஏழுமலையானை உடனடியாக தரிசிக்க….

    திருப்பதி ஏழுமலையானை உடனடியாக தரிசனம் செய்யும் வகையில் ஆந்திர அரசு பேருந்துகளில் திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் விற்கும் முறை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    சென்னை, கோவை, ஐதராபாத், புதுச்சேரி போன்ற நகரங்களில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் பேருந்துகளில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் ஆந்திர அரசின் சொகுசு பேருந்துகளில் செல்லும் பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை பெறலாம்.

    ஆந்திர அரசு பேருந்துகளில் தரிசன டிக்கெட் பெறும் திட்டம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தற்போது திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைன் மூலமும், திருப்பதி மற்றும் தேவஸ்தானம் அங்கீகரிக்கப்பட்ட கோயில்களிலும் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. இப்போது கூடுதலாக பக்தர்களின் வசதிக்காக ஆந்திர அரசு பேருந்துகளில் தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

  • சிதம்பரம் கோயிலில் லட்ச ருத்ர பாராயணம்… ஜூலை 28-இல் தொடக்கம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக நன்மை, அமைதி வேண்டி முதல்முறையாக லட்ச ருத்ர பாராயணம், கோடி அர்ச்சனை வருகிற 28ஆம் தேதி தொடங்குகிறது.

    இந்த பாராயணம் செப்டம்பர் 15ஆம் தேதி வரை 50 நாள்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 9 மணி தொடங்கும் பாராயணம் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும். இந்த பாராயணத்தில் 100 தீட்சிதர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், 100 பேர் கோடி வில்வ அர்ச்சனை செய்ய உள்ளனர்.

    நிறைவு நாளான செப்டம்பர் 15ஆம் தேதி லட்ச ஆவர்த்தி சம்மேளன சகஸ்ரநாம ஹோமம், ருத்ர ஆவர்த்தி ஹோமம் நடைபெறும். ஹோமத்துக்கு கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, காவிரி, சிந்து உள்ளிட்ட சப்த நதிகளிலிருந்தும் தீர்த்தங்கள் கொண்டு வரப்படும்.