திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய 3 சிறப்பு வரிசைகள் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஜெயபேரி, விஜயபேரி, துவாரபாலகர்கள் அருகே பக்தர்கள் வரும்போது, சுவாமியை ஒரு நிமிடம் கூட தரிசனம் செய்ய விடாமல், அங்கு பணியில் இருக்கும் ஊழியர்கள், ஸ்ரீவாரி சேவகர்கள் இழுத்து தள்ளிவிடுகிறார்கள் என்று பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக கணக்குக் காட்ட இவ்வாறு செய்யப் படுவதாக பக்தர்கள் புகார் கூறினர்.
இந்நிலையில் கோயிலின் உட்புறம் வெள்ளிக்கதவு முதல் தங்கக்கதவு வரை உள்ள பகுதிகளில் தள்ளுமுள்ளு ஏற்படுவது வழக்கமாக இருக்கிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க புதிய திட்டம் சோதனை ஓட்டமாக நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பக்தர்கள் சிரமம் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக தங்கக்கதவு முதல் துவாரபாலகர்கள் வரை 3 வரிசை முறை திட்டத்தை அமல்படுத்தினார். 12 இன்ச், 6 இன்ச் மற்றும் தரைதளம் என 3 விதமான உயரத்தில் வரிசை அமைக்கப்பட்டது.
இதனால் பக்தர்கள் ஒருவரை ஒருவர் மறைக்காமல் சுவாமி தரிசனம் செய்தனர். இத்திட்டம் பக்தர்கள் இடையே பெரிதும் வரவேற்கப்பட்டது. தற்போது, வெள்ளிக்கதவு முதல் தங்கக்கதவு செல்லும் வரை 3 வரிசைகள் அமைத்து சோதனைமுறை திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
Category: ஆன்மீக செய்திகள்
ஆன்மீக செய்திகள்
-
திருப்பதியில் விரைவில் 3 வரிசை…
-
அண்ணாமலையார் உண்டியல் காணிக்கை….
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ஒரு மாதத்தில் 77 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகி உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாத பவுர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு கோயிலில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு செல்கின்றனர். இவ்வாறு செலுத்துவது மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது.
அதன்படி உண்டியல்களில் இருந்த காணிக்கை எண்ணப்பட்டதில், 77 லட்சத்து 33 ஆயிரத்து 940 ரூபாய் பணத்தை பக்தர்கள் காணிக்கையாக அளித்திருந்தனர். இவற்றுடன், 125 கிராம் தங்கமும், 444 கிராம் வெள்ளியையும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர். -
சபரிமலையில் நடை திறப்பு….
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜைக்காக, நவம்பர் 15 ஆம்தேதி மாலை நடை திறக்கப்பட்டது.
சபரிமலையில் ஐயப்பனுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை 1-ஆம் தேதி முதல் 41 நாள்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி கார்த்திகை மாதம் பிறப்பதையடுத்து நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தற்போதைய சபரிமலை மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி 18படிநடை, சன்னிதான நடையை திறந்து, ஐயப்பனின் தவக்கோலத்தை களைந்து மூலஸ்தானத்தில் தீபம் ஏற்றிவைத்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கு மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள சபரிமலை மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, மாளிகைப்புரம் மேல்சாந்தி மனுகுமார் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டி 18படி அருகே வந்தனர். அவர்களை மேல்சாந்தி தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்றனர்.
மாலை 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகளுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு அபிஷேகம் நடத்தி, ஐயப்பன் மூலமந்திரம் சொல்லி, கோயிலுக்கு அழைத்து சென்றார்.
இதையடுத்து பம்பையில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபாதை திறக்கப்பட்டதும் சபரிமலை நோக்கிச் சென்றனர். மாலையில் கோயில் நடை திறக்கப்பட்டதும் அவர்கள் 18படி ஏறி சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து புதன்காலை நெய் அபிஷேகம் செய்வதற்காக சோபனத்தில் காத்திருந்தனர். இரவு 10 மணிக்கு சபரிமலை, மளிகைப்புரம் கோயில் நடை அடைக்கப்பட்டு புதிய மேல்சாந்திக்களிடம் சாவி வழங்கப்பட்டது.
மண்டல காலம் தொடக்கம்: இதையடுத்து புதன்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு, புதிய மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, ஐயப்பன் சன்னதி நடைதிறந்ததும், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்குகிறது.
தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரு ஐயப்பனுக்கு தந்திரி,மேல்சாந்தி இருமுடியில் கொண்டுவந்த நெய்யால் முதல் அபிஷேகம் நடத்தி, பிரசாதம் வழங்கியதும், நெய் அபிஷேகம் தொடங்கும். 41 நாள்களும் அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் 3 மணிக்கே நடை திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. -
திருப்பதியில் கார்த்திகை வனபோஜன உற்சவம்
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் நவம்பர் 20 ஆம் தேதி கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெற உள்ளது.
மதியம் 1 மணியில் இருந்து 3 மணிவரை பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜன உற்சவம் நடக்கிறது.
அதையொட்டி உற்சவர் மலையப்பசாமியை சிறிய கஜ வாகனத்தில் வைத்தும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை பல்லக்கு வாகனத்தில் வைத்தும் கோவிலில் இருந்து ஊர்வலம் நடைபெறுகிறது.
தொடர்ந்து பார்வேடு மண்டபத்தில் வைத்து உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது. -
திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக….
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் ரூ.500, ரூ.1000 பெறப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து டிக்கெட் மற்றும் பிரசாத கட்டணமாக ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் பெறப்படும். மேலும், ஆந்திர அரசு பஸ்களில் வந்து செல்லும் பக்தர்களிடம் இருந்து ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விதித்துள்ள காலக்கெடு முடியும் வரையில் இவ்வாறு பெறப்படும் என கூறப்பட்டுள்ளது.
திருமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் ஓட்டல்கள், கடைகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க மறுப்பதால், பக்தர்கள் பாதிக்காத வகையில், அவர்களுக்கு தேவையான பால், டீ, மோர், அன்னப்பிரசாதம் போன்றவை தரிகொண்டா வெங்கமாம்பாவில் மட்டுமல்லாமல் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவஸ்தானம் சார்பில் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -
ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம்
திருப்பதி ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் நிறுத்தப்பட்ட புஷ்பயாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் 1980ம் ஆண்டு முதல் மீண்டும் தெலுங்கில் வரும் கார்த்திகை மாதத்தில் ஸ்ராவண நட்சத்திரத்தில் நடத்தி வருகிறது.
அதன்படி வருடாந்திர புஷ்ப யாகத்தையொட்டி பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்தில் இருந்து அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி, தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் ஆகியோர் தலைமையில் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட வண்ண மலர்கள் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் ரங்கநாதர் மண்டபத்தில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.
இதில் ரோஜா, மல்லி, முல்லை, மருதம், சாமந்தி உள்ளிட்ட 18 ரகமான சம்பிரதாய மலர்களை கொண்டு அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க புஷ்ப யாகம் நடத்தினர்.
புஷ்ப யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். -
சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் : கேரள அரசு
சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என கேரள அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில், சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 2007-ஆம் ஆண்டு, இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, முந்தைய அரசு சபரிமலை கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு தாங்கள் உடன்படுவதாக தெரிவித்தது. அதாவது, 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களை சபரிமலை கோயிலில் அனுமதிப்பதில்லை என்ற முந்தைய முடிவை பின்பற்றப் போவதாக தெரிவித்தது.
இந்த நிலையில் நவம்பர் 7 (திங்கள்கிழமை) ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கேரளாவின் தற்போதைய ஆளும் அரசு, சபரிமலை ஐயப்பன் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. -
முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம்
கந்த சஷ்டி நிறைவு விழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்வசம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோயில் சஷ்டி விழா கடந்த 31-ம் தேதி தொடங்கிது.
கந்த சஷ்டி நிறைவு நாளில், காலை 10.30-மணிக்கு மலைக்கோயில் அலுவலகத்தில் இருந்து முருகன் கோயில் பிரசாதக்கடை ஒப்பந்ததாரர் என்.ஹரிஹரமுத்து அவர்களின் உபயத்தில் முருகன் சுவாமிக்கு சீர்வரிசை எடுத்து செல்லப்பட்டது.
உற்சவ முருகன் சுவாமி காவடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து முருப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் நடைபெற்று வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பிற்பகல் 12.30-மணிக்கு மூலவ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவ நிறைவு விழாவில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. -
திருப்பதி பாதயாத்திரை பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு….
திருப்பதி மலைப்பாதையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நேர ஒதுக்கீட்டு முறையில் விரைவில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
மலைப்பாதை வழியாக வரும் பக்தர்கள், 6 முதல் 15 மணி நேரத்திற்கு மேலாகவும், இலவச தரிசன பக்தர்கள் 10 முதல் 24 மணி நேரத்திற்கும் மேலாகவும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து கடந்த ஆண்டு முதல் ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி 1 மணி நேரத்தில் ஆயிரம் பக்தர்கள் தரிசனம் என ‘டைம் ஸ்லாட்’ முறை பின்பற்றப்படுகிறது.
அந்த டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சுமார் 1 மணி முதல் 2 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில், மலைப்பாதை வழியாக பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கும் நேர ஒதுக்கீடு செய்யப்பட்டால், பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க முடியும் என தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை நடத்தியது.
அதன்படி, அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில், பாதயாத்திரையாக வந்து, திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கும், நேரம் ஒதுக்கீடு செய்து சுவாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
அதற்கான மென்பொருட்கள் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் மலைப்பாதையில் வரும் பக்தர்கள் திவ்ய தரிசன டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு, வைகுண்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட திவ்ய தரிசன டிக்கெட்டுக்கான வரவேற்பு அறைக்கு சென்றால், சுமார் 1 மணி அல்லது 2 மணி நேரத்தில் சுலபமாக சுவாமி தரிசனம் செய்யலாம். -
வெற்றி வேல் வீரவேல் முழக்கத்துடன் சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்கள் வெற்றி வேல் வீரவேல் முழக்கமிட சூரசம்ஹாரம் விமர்சையாக நடந்தது. அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 31ம் தேதி துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கடற்கரையில் நடந்தது. சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு ஊர்கள், இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
கந்த சஷ்டியை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. மாலை 4.35 மணிக்கு கடற்கரையில் சூரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார்.
அப்போது பக்தர்கள் வெற்றி வேல் வீரவேல் என்று முழக்கமிட்டனர்.