Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • காஞ்சி காமாட்சிக்கு தங்க திரிசதி மாலை

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மண்டலாபிஷேக நிறைவையொட்டி, அம்பாளுக்கு தங்க திரிசதி மாலை அணிவிக்கப்பட்டது.
    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இக் கோயிலில் நடைபெற்று வந்த மண்டலாபிஷேகம் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
    இதையொட்டி கடந்த 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம அகண்ட பாராயணம் நிகழ்ச்சி சுமங்கலிகள் மூலம் நடத்தப்பட்டது. தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு அணிவிப்பதற்காக 300 நாமாவளிகள் கொண்ட தங்க திரிசதி மாலை தயார் செய்யப்பட்டது.
    இந்த மாலை காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதிகள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரால் காமாட்சி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது.
    இந்த திரிசதி மாலையை ஏராளமான பக்தர்கள் பார்த்து வழிபட்டனர்.

  • திருப்பதிக்கு 2 டன் பூக்கள் அனுப்பி வைப்பு

    ஆந்திர மாநிலம் திருப்பதி வெங்கடாசல பெருமாள் கோவிலுக்கு, சேலம் ஸ்ரீபக்திசாரர் பக்தசபா சார்பில் யுகாதி, மகாசிவராத்திரி, பிரமோற்சவ விழா உள்ளிட்ட முக்கிய விழாக்களுக்கு மணமுள்ள மலர்களை தொடுத்து அனுப்பி வைப்பது வழக்கம்.
    மார்ச் 29 அன்று தெலுங்கு வருடபிறப்பு என்னும் யுகாதி உற்சவம் திருப்பதி-திருமலையில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி சேலம் ஸ்ரீபக்திசாரர் பக்தசபா சார்பில் டி.ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் பூக்கள் தொடுத்து அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. பூக்களை திரளான பெண்கள் மாலையாக தொடுத்தனர். சுமார் 2 டன் எடையுள்ள பூக்கள் தொடுக்கப்பட்டு, திருப்பதி வெங்கடாசல பெருமாள் கோவிலுக்கு நேற்று மாலை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

  • கோதண்டராமர் கோயில் பிரமோற்சவம்

    ஆரணி ஸ்ரீகோதண்டராமர் வீர ஆஞ்சநேயர் கோயிலில் பிரமோர்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆரணி டவுன் கொசப்பாளையம் தியாகி சுப்பிரமணிய சாஸ்திரியார் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் வீர ஆஞ்சநேயர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் கர்போஸ்வ 10ம் ஆண்டு பிரமோர்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு ராமர், சீதா, லட்சுமணர், வீர ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்து வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பட்டாச்சாரியார்கள் கொடியேற்றினர். அலங்கரிக்கப்பட்ட உற்சவமூர்த்திகள் மேளதாளம் நாதஸ்வர இசையுடன் கோயில் உட்பிரகாரம், மாட வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் தினசரி இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், தேர் உலா, குதிரை வாகனம் மற்றும் முத்துப்பந்தல் வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதொறும் யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முன்னதாக வரும் செவ்வாய் கிழமைகளில் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தெலுங்கு வருடப்பிறப்பு மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவையுடன் வெங்கடேஸ்வர சுவாமியை துழில் எழுப்பபட்டு தோல்மலை, அர்ச்சனை சேவைகள் பக்தர்கள் அனுமதிக்காமல் அர்ச்சகர்கள் மட்டும் ஏகாந்தமாக செய்தனர். பின்னர் காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயிலில் உள்ள கருவறையில் உள்ள மூலவருக்கு பட்டு வஸ்திரத்தில் முடப்பட்டு ஆனந்த நிலையம், கொடிமரம், மகாதுவாரம், ரங்கநாதர் மண்டபம், சம்பங்கி மண்டபம் என அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் திருச்சூணம், பச்சைகற்புரம், கிச்சிலி கட்டை, சந்தனம், குங்குமம் ஆகிய மூலிகை பொருட்களை கொண்டு செய்யப்பட்டு கலவையை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

  • அருணாசலேஸ்வரர் கோயிலில் நடிகர் ராகவா லாரன்ஸ்

    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
    சனிக்கிழமை பிற்பகல் கோயிலுக்கு வந்த அவர் ஸ்ரீசம்பந்த விநாயகர், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்தார். பின்னர், கோயில் நவக்கிரக சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டார். நடிகர் ராகவா லாரன்ஸýடன் அவரது தாய், தம்பி உள்பட உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர்.
    கோயில் நிர்வாகம் சார்பில் ராகவா லாரன்ஸýக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமி தரிசனம் முடிந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.

  • தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரமோற்சவம் தொடக்கம்

    திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில் பங்குனி பிரமோற்சவ விழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருவள்ளூர் பஜார் வீதியில் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாத பிரமோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
    இந்த ஆண்டுக்கான பங்குனி பிரமோற்சவ விழா புதன்கிழமை காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    இதைத்தொடர்ந்து, காலை 7 மணிக்கு தங்க சப்பரத்தில் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    இரவு சிம்ம வாகன வீதியுலா நடைபெற்றது. இரண்டாம் நாளான வியாழக்கிழமை அம்ச வாகனத்தில் பக்தர்களுக்கு உற்சவர் அருள்பாலித்தார்.
    பிரம்மோற்சவத்தின் அனைத்து நாள்களிலும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா நடைபெறும்.
    ஏழாம் நாளான வரும் 28-ஆம் தேதி காலை தேர்த் திருவிழாவும், மாறுநாள் திருக்கல்யாணமும் நடைபெறும்.
    இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

  • ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி தேர்

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் மண்டல பிரம்மோற்சவம் கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா ஏப்ரல் 13-ந் தேதி வரை 42 நாட்கள் நடைபெறுகிறது. மேலும் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழாவையொட்டி 3 மற்றும் 4-ம் பிரகாரங்களில் 8 திசைகளிலும் உள்ள கொடிமரங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக 8 திசைகளிலும் ஏற்றப்படும் கொடிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் யாகம் செய்யப்பட்டு கிழக்கு திசைக்கு யானை கொடியும், தென் கிழக்கு திசைக்கு ஆடு கொடியும், தென் திசைக்கு எருமை கொடியும், தென் மேற்கு திசைக்கு பூத கொடியும், மேற்கு திசைக்கு மகர கொடியும், வடமேற்கு திசைக்கு மான் கொடியும், வடக்கு திசைக்கு குதிரை கொடியும், வடகிழக்கு திசைக்கு இடப கொடியும் ஏற்றப்பட்டன.

    28-ந் தேதி பங்குனி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி சுவாமி, அம்பாள் தனித்தனி பெரிய தேர்களில் எழுந்தருளி 4-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். பங்குனி தேர் திருவிழா ஏப்ரல் 2-ந் தேதி நிறைவடைகிறது.

    இதைத்தொடர்ந்து மவுன உற்சவம், சண்டிகேசுவரர் உற்சவம், சொக்கர் உற்சவமும், ஏப்ரல் 11-ந் தேதி பஞ்சப்பிரகார விழாவும் நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமி, அம்பாள் வேடமிட்டும், அம்பாள் சுவாமி வேடமிட்டும் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். ஏப்ரல் 13-ந் தேதியுடன் விழா நிறை வடைகிறது.

  • திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோயில் தேரோட்டம்

    திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.
    இக்கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் மார்ச் 15-ஆம் தேதி தொடங்கியது. 4-ஆம் நாளான சனிக்கிழமை கருட சேவை நடைபெற்றது. தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 8-ஆம் நாளான புதன்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.
    விழாவையொட்டி உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் திருத்தேரில் அருள்பாலித்தார். காலை 8 மணிக்கு புறப்பட்ட தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதைத் தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்றது. வழிநெடுகிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவையொட்டி ஆங்காங்கே அன்ன தானம் நடைபெற்றது.

  • திருப்பரங்குன்றத்தில் உற்சவர் சாந்தி பூஜை

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழாவின் நிறைவாக, உற்சவர் சாந்தி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இக் கோயிலில் கடந்த 4 ஆம் தேதி பங்குனிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக கடந்த 16 ஆம் தேதி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு திருக்கல்யாணமும், 17 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது. விழா நிறைவடைந்ததையொட்டி, உற்சவர் சாந்தி பூஜை நடைபெற்றது.

    இதையொட்டி, திருவாச்சி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், தெய்வானையுடன் சுவாமி ஆஸ்தான மண்டபத்தை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

  • முருகனுக்கு உகந்த கிழமை?

    வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். வாரத்தின் ஏழு நாட்களில் மூன்றாவது நாளாக இடம் பிடிப்பது செவ்வாய்க் கிழமை. பொருளாதார நிறைவையும் வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. முருகப் பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை இந்த தெய்வங் களை வணங்கினால் கவலைகள் அகலும். செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; நைவேத்தியமாக அன்றை தினம் அங்காரகனுக்கு முக்கியத்துவம் உகந்த நாளாகும். தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்பு களையும், மாபெரும் சக்தியையும் பொங்கி வரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.