Author: சக்தி ஆன்லைன் டீம்

  • Lord Shiva helped Hanuman save Lakshmana’s life!

    திருவள்ளூர் மாவட்டம் காக்களுரில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ  செண்பகவல்லி உடனுறை ஸ்ரீ காரணீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்கு சஞ்சீவி மலையுடன் வந்து அனுமான் சிவனை வணங்கிய பெருமைக்குரிய இதன் சிறப்பை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

     ராமாயண காலத்தில் ராவண படையுடன் சீதையை மீட்க போராடிய தனது சகோதரன் ஸ்ரீராமனுக்காக லக்ஷ்மணனும் போர் புரிந்தான். அப்போது இராவணப்படை வீரர்கள் தாக்கியதில் காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லட்சுமணனை காப்பாற்ற எண்ணிய ஸ்ரீ ராமன் சிகிச்சை அளிக்க மருத்துவம் குணம் கொண்ட குறிப்பிட்ட மூலிகையை  கொண்டு வருமாறு அனுமானை கிஷ்கிந்தா அனுப்பி வைத்தார். சஞ்சீவி மலை சென்று அடைந்த அனுமான் ராமன் குறிப்பிட்ட அந்த மூலிகை எதுவென்று தெரியாததால்' சஞ்சீவி மலையே பெயர்த்து எடுத்து தனது கையில் ஏந்தியவாறு வானில் பறந்து கொண்டு இருந்தார்.

    இந்த தகவலை அறிந்த இலங்கை மன்னன் இராவணன் தனது நண்பனான காக்காசூரன் என்ற அசுரனிடம், மூலிகையை கொண்டு செல்ல விடாமல் அனுமானை தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தான். நண்பனுக்கு உதவி புரிய எண்ணிய காக்காசூரன் ஏற்கனவே அனுமானின் பலத்தை அறிந்திருந்த காரணத்தால், நேரடியாக சண்டையிடுவதை தவிர்த்து, தந்திரமாக அனுமானை மூலிகையை உரிய நேரத்தில் கொண்டு செல்ல விடாமல் தடுப்பதற்காக  ஆங்காங்கே 108 சிவலிங்கங்களை தனது தவ வலிமையால் பிரதிஷ்டை செய்தான். ராம பக்தனான அனுமான் ஆகாயத்தில் பறந்தபடியே பூமியில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு, சஞ்சீவி மலையுடன் கீழே வந்து கையில் இருந்த சஞ்சீவி மலையை இறக்கி பூமியில் வைத்து விட்டு, இரு கரம் கூப்பி  சிவபெருமானிடம் உயிருக்கு போராடும் லட்சுமணன் பூரண நலம் பெற்று நீண்ட காலம் வாழவும், இலங்கையில் சிறைப்பட்டுள்ள சீதாப்பிராட்டியாருக்கு எவ்வித தீங்கும் நேர்ந்து விடாமல் காக்குமாறும், போரில் ஸ்ரீ ராமன் வெற்றி பெற வேண்டும் என பக்தியுடன் வழிபட்ட அனுமான் மீண்டும் சஞ்சீவி மலையை அங்கிருந்து எடுக்க முற்பட்டபோது.

    மலையை அங்கிருந்து நகற்ற முடியாமல் தடுமாறி நின்றான். அப்போது லிங்கத்துள் மறைந்திருந்த ஈசன் இது இராவணனின் சூழ்ச்சி"என்பதையும் தன் வடிவத்தை வைத்து உயிர் காக்கும் மூலிகைகளை கொண்டு செல்ல விடாமல் நடத்தப்பட்ட நாடகம் என்பதை அனுமானுக்கு, உணர்த்தியதோடு'அனுமானின் கையில் சென்று அமருமாறு சஞ்சீவி மலைக்கு கட்டளை இட்டதாகவும் அதன்படி உரிய நேரத்தில் சஞ்சீவி மலையை கொண்டு சென்று அனுமான் லக்ஷ்மணனின் உயிரை ஸ்ரீ ராமன் மூலம் காப்பாற்றியதாக இக்கோவில் புராண வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே' முற்காலத்தில் இப்பகுதி காக்கா சூரண பட்டணம், என அழைக்கப்பட்டு, லட்சுமணனின் உயிரை காக்க சிவபெருமான் அனுமானுக்கு உதவியதால் காக்களூர் என தற்போது அழைக்கப்படுகிறது. இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன். அருள்மிகு ஸ்ரீ காரணீஸ்வரர் என்ற திருப்பெயரிலும், அன்னை அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி எனவும் அழைக்கப்படுகிறாள். ஸ்ரீ அனுமான் வழிபட்ட இறைவனை நாமும் வணங்க சென்னை கோயம்பேட்டில் இருந்து பேருந்து மூலம் சென்று திருவள்ளூரில் இறங்கி அங்கிருந்து' காக்களுரை அடையலாம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Why did the District Collector, who requested Sri Rama, build a separate shrine for Sita Prati?

    தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏரி, குளங்கள் உள்ளன பெரும்பாலும் கிராமப்புறங்களில் காணப்படும் ஏரிகள் விளை நிலங்களின் பாசனம், குடிநீர், கால்நடைகளின் தாகம் தீர்க்கவும் பயன்பட்டு வந்தன தற்போது தொடர் மணல் கொள்ளை, தொழில் புங்க அமைத்தல், ஏரிகளை துரத்து வீட்டு மனை ஆக்குதல் போன்ற காரணங்களினால் ஏரி, குளங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீர் ஆனது, குடியிருப்பு பகுதிகளை சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஏரி உடைப்பை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் ஒருவர் வைத்த கோரிக்கையை ஏற்று ஸ்ரீ ராமனே நேரடியாக வந்து ஏரியை காத்ததால் தற்போது அந்த இடம் ஏரி காத்த ராமர் என மதுராந்தகம் அழைக்கப்படுவதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம் வாருங்கள். மதுராந்தகத்தில் உள்ள பெரிய ஏரியானது சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கியது. கோடை காலத்தில் மக்களின் தாகத்தை தீர்த்து வந்த இந்த ஏரியா ஆனது வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது நீரின் ஓட்டத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, கிராமங்களுக்குள் வெள்ளை நீரானது சூழ்ந்து பொதுமக்களுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்தி வந்தது,  மழை நீரை சேமித்து  வைக்கும் இந்த ஏரியில், அடிக்கடி உடைப்பு ஏற்படுவதை தடுக்க.

    அப்போது நாட்டை ஆண்ட ஆங்கிலேய அரசு ஏரியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதனால் பலன் ஏதும் ஏற்படாததால், லயோனல் பிளேஸ், என்ற ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் ஏரிக்கரையைப் பலப்படுத்தப் பல முயற்சிகள் மேற்கொண்டார்.  ஆனால் பலனேதும் ஏற்படவில்லை. இதனால் ஆழ்ந்த சிந்தனையோடு இங்குள்ள  ராமர் கோயிலுக்கு வந்த ஆட்சியரிடம் அவரிடம், கோவில்  அர்ச்சகர் அவரிடம் சீதாப்பிராட்டி தாயாருக்கு தனி சன்னிதி அமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும், அப்போது  மாவட்ட ஆட்சியரும் ராமரிடம்   கோரிக்கை ஒன்றை வைத்தார்.  இனி வரும் காலங்களில்  ஏரி உடைப்படாமல் காத்தால், கோவில் கட்டும் திருப்பணியை தானே ஏற்று நடத்துவதாக கோரிக்கை வைத்தார். மீண்டும் வடகிழக்கு பருவமழை தொடங்கி வழக்கம் போல் ஏரி நிரம்பி வழிந்தது.

    இந்தச் செய்தியை கேட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏரியை பார்வையிட ஆட்சியர் லயோனல் பிளேஸ் வந்தபோது அவரது கண்களுக்கு இளைஞர்கள் இருவர் கைகளில் வில்லில் அம்பு ஏந்திய நிலையில் இருப்பதை கண்டுள்ளார்.  மின்னல் ஒளியில் இதனைக் கண்ட ஆட்சியர், அவர்கள் வைத்திருந்த அம்பில் இருந்தும் மின்னல் ஒளி தோன்றியதைக் கண்டு மெய்சிலிர்த்து போனார்.

    அதற்குப்பின்  ஏரிக்கரை உடையவில்லை எனவே தான் கூறியபடியே ஆட்சியர் அன்னை சீதாப்பிராட்டிக்கு  தனி சன்னிதி கட்டிக் கொடுத்தார் என கோவில் கல்வெட்டு குறிப்பிட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு பின் இங்குள்ள ஸ்ரீராமன் ஏரி காத்த ராமன் என அழைக்கப்படுகிறார்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • The Swayam Lingam that the Pandavas worshipped to get rid of their sins!

    இந்திய திருநாட்டில் தொன்மை வாய்ந்த ஏராளமான திருக்கோவில்கள் உள்ளன இவற்றில் பெரும்பாலானவை நிலப்பரப்பிலேயே கட்டப்பட்டதாக இருப்பினும் ஒரு சிலது மட்டும் மலைகள் மீதும், குகைகள், அருவிகள் போன்ற இடங்களில் கட்டப்பட்டிருக்கும் ஆனால் கடலில் பாண்டவர்களால் கட்டப்பட்ட அதிசய கோவில் எங்கே உள்ளது தெரியுமா ?  

    குஜராத் மாநிலம் பவ்வு நகர் அடுத்த கோலியாக்கில் தான் இந்த அதிசய கடல் கோவில் உள்ளது. நிஷ்கலங்க் மகாதேவ் என அழைக்கப்படும் இந்த சிவன் கோவில் ஆனது' தனித்துவம் பெற்றதாகும் காரணம். கடலுக்கு அடியில் கட்டப்பட்டுள்ளது. இதனால் கடலில் ராட்சத அலைகள் வீசும் பொழுது நீரில் மூழ்கி, தாழ்வான அலைகள் வீசும் போது கம்பீரத்துடன் தனது தோற்றத்தை வெளிப்படுத்தி ஈசன் உள்ளே இருப்பதை அவ்வப்போது உறுதி செய்து வருகிறது. மேலும்  இறைவன் திருமேனி நீரில் மூழ்கி, கோவிலின் கொடி மரம் மற்றும் தூண்கள் மட்டுமே பக்தர்களின் பார்வைக்கு தெரியும்.

    மகாபாரத காலத்தில் நிஷ்கலங்க் சிவன் கோவில் குருசேத்திர போரின் போது கௌரவர்களை கொன்ற பாவங்களை போக்குவதற்காக போர் முடிந்து பல சிவ ஆலயங்களை பாண்டவர்கள் கட்டினர். அதில் ஒன்றுதான் இந்த சிவன் கோவில் என்றும் இங்குள்ள சுயம்புலிங்கத்தை பாண்டவர்கள் பூஜித்து பாவ விமர்சனம் பெற்றதாக புராணம் கூறுகிறது. சிறிய நிலப்பரப்பில் நற்புறமும் கடல் நீர் சூழ்ந்திருக்க ராட்சத அலைகள் தொடர்ச்சியாக வீசினாலும் அதனை எதிர்கொண்டு கம்பீரமாக நிலைத்து நிற்கும் வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவில் தற்போதைய நவீன பொறியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு சவாலாகவே உள்ளது. நிஷ்கலங்க் மகாதேவ் என அழைக்கப்படும் இங்கு அருள்பாவிக்கும் அருள்மிகு ஸ்ரீ சிவபெருமான் சுயம்புலிங்க வடிவில் மூலவராகவும், உலகம் பஞ்சபூதங்களால் ஆனது' பஞ்சபூதங்கள் தனக்குள் அடக்கம் என்பதை உணர்த்தும் விதமாக  சதுர மேடை ஒன்றில் தனித்தனியாக ஐந்து பஞ்சபூத சுயம்புலிங்கங்கள் அதனை வணங்கும் தோரணையில் எதிரி தனித்தனி நந்தீஸ்வரரும் அமையப் பெற்றுள்ளது தனி சிறப்பாகும். ஆவணி மாதத்தில் அம்மாவாசை இரவில்'பதர்வி, என அழைக்கப்படும் புகழ்பெற்ற திருவிழா நடைபெறுகிறது.   
       

    கோவிலுக்கு செல்லும் பிரதான பாதை நள்ளிரவு முதல் மதியம் வரை தண்ணீரில் மூழ்கி கிடக்கும். எனவே பக்தர்கள் மதியம் 1:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை இங்கு சுவாமி தரிசனம் செய்யலாம். அது சரி பிற மாநிலங்களில் இருந்து ஆன்மீக சுற்றுலா வரும் பக்தர்கள் இக்கோவிலுக்கு எப்படி செல்வது ? என்று தானே கேட்கிறீர்கள் பாவ்நகர் விமான நிலையம், இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் துல்லியமாக  இணைக்கப்பட்டுள்ளது. அதே போன்று  அகமதாபாத் மற்றும் மும்பை தொடர்வண்டி நிலையத்திலிருந்தும்,  ராஜ்கோட், அகமதாபாத், வதோதரா போன்ற முக்கிய நகரங்களிலிருந்து  பாவ்நகருக்கு பேருந்து சேவை உள்ளது. வாழ்வில் ஒரு முறை எனும் கடலுக்கு அடியில் பாண்டவர்கள் கட்டிய இந்த அதிசய கோவிலுக்கு வந்து இறைவனை தர்சிக்கும் வரத்தை சிவபெருமான் நமக்கு வழங்க வேண்டும்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • ஸ்ரீ ஆதி ஜெகந்நாத பெருமாளிடம் வரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு பால் பாயாசமே”  பிரசாதம் !

    தசரத சக்கரவர்த்தியின் மூன்று மனைவியருக்கு பிள்ளை  பேரு பாக்கியம்  அளித்து சமுத்திர ராஜனை ஸ்ரீ ராமனிடம் சரணாகதி அடைய வைத்து வரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு பால் பாயாசத்தை பிரசாதமாக வழங்கும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படும் அற்புதத் தளம், ராமநாதபுரம் மாவட்டம்  திருப்புல்லாணி அருள்மிகு ஸ்ரீ ஆதிஜெகந்நாத பெருமாள் திருக்கோவில் ஆகும்,  இராமாயணத்துடன் தொடர்புடைய இதன் வரலாற்றை தெரிந்து கொள்வோம் வாருங்கள். 

    தசரத சக்கரவர்த்தி தனது மூன்று மனைவியருக்கும் நெடு நாட்களாக குழந்தை பிறக்காததால் மன வருத்தம் அடைந்தார். பின் சாஸ்திர வல்லுநர்களின் ஆலோசனைப்படி, பிள்ளைவரம் வேண்டி 1008, யாக குண்டங்கள் வளர்த்து வேத விற்பனர்கள் மூலம் மகா புத்திரகாமேஷ்டி யாகம், ஒன்றை நடத்தினார். அப்போது  யாக குண்டத்தில் இருந்து தோன்றிய தேவதூதர் கொடுத்த பாயாசத்தை, தன்னுடைய மூன்று மனைவிகளுக்கும் வழங்கினார். அதன் பலனாக' முதல் மனைவிக்கு ராமனும், இரண்டாவது மனைவிக்கு பரதனும், மூன்றாவது மனைவிக்கு லட்சுமணன் மற்றும் சத்ருக்ணன் ஆகிய மகன்கள் பிறந்தனர்; இலங்கை மன்னன்  ராவணனுடன் போர் புரிந்து.  சீதையை ஸ்ரீ ராமன் மீட்டு வந்தபிறகு, ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்து வழிபட்டார், பின் அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீ ராமபிரான்.  

    திருப்புல்லாணி வந்து  தான் சீதையை மீட்க இலங்கை செல்லும் முன் இங்குள்ள ஜெகந்நாதரை தரிசிக்குச் சென்றபோது அவருக்கு,  திருப்புல்லாணி இறைவன்,  ஒரு சக்கர  பாணத்தை கொடுத்தான். அந்த சக்கர பாணத்தை யுத்தத்தின்போது பிரயோகித்துதான், ஸ்ரீ ராமன் ராவணனை வீழ்த்தியதாகவும், அந்த வெற்றியினை மீண்டும் வந்து பெருமாளின் பொற்பாதங்களில் சமர்ப்பித்து ராமன் இங்கு வழிபட்டான் எனவும் சொல்லப்படுகிறது. ராமன் இலங்கைக்கு செல்ல கடல் மேல் பாலம் கட்ட சமுத்திர ராஜனிடம் அனுமதி கேட்டு மூன்று நாட்கள் அங்கு காத்திருந்தான்.

    ஆனால் அவரது கோரிக்கையை சமுத்திர ராஜன் பரிசீலனை செய்யாமல் அலட்சியத்துடன்  இருந்தான். மேலும் ஸ்ரீ ராமனின்  முன்பாகத் தோன்றி இறுமாப்புடன் காரணம் ஏதும் சொல்லாமல் நின்றான். இதனால் சினம் கொண்ட  ஸ்ரீ ராமன் , கடலை நோக்கி அம்பு பிரயோகப்படுத்த முயன்றார். ஸ்ரீ ராமனின் வில் திறனை முன்னரே"  அறிந்திருந்த சமுத்திரராஜன், தனது மனைவி சமுத்திர அரசியுடன்  அங்கு தோன்றி, ஸ்ரீ ராமனிடம் சரணாகதி அடைந்தான். அதன் காரணமாக, ஸ்ரீ ராமர் வணங்கிய  இத்திருத்தளத்தில் புத்திர பாக்கியத்தின் மூல மந்திரத்தை தசரத சக்கரவர்த்திக்கு பெருமாள் எடுத்துரைத்த இடமும், அவன் பிரதிஷ்டை செய்து வணங்கிய நாகலிங்கமும் கோவிலில் உள்ளது.  அதிகாலையில், கடலில் புனித  நீராடி  கணவனும், மனைவியும் விரதம்  இருந்து பக்தியுடன் பெருமாளை வழிபட்டு. அன்று அன்றிரவு ஆலயத்தில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் முறைப்படியாக நாகபிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்து, பிரசாதமாகத் தரப்படும் பால் பாயாசத்தை அருந்தினால் ஸ்ரீ சீதாராமனின் அருள்கொடையால் பிள்ளை பாக்கியம் ஏற்படும் என்பது தின்னம். 

         பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Why did the miraculous Ganesha silver shields that grow in spring water become smaller?

    விநாயகர் பெருமான் ஞானத்தில் சிறந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே எந்த காரியம் செய்தாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டுத்தான் நாம் தொடங்குவோம் அரிதாக கிடைத்த ஞானப் பழத்தை பெறுவதற்கான தகுதி தனது தனது மூத்த மகனான விநாயகருக்கு உள்ளதா ? அல்லது இளைய மகன் முருகனுக்கு உள்ளதா ? என்பதை சோதித்து பார்க்க சிவபெருமான் இருவருக்கும் இடையே உலகை யார் முதலில் சுற்றி வருகிறீர்களோ'அவர்களுக்கே இந்த ஞானப்பழம் என அறிவித்தார் முருகன் தனது வாகனமான மயில் மீது ஏறி உலகை சுற்றிவர புறப்பட்டபோது தனது தாய் தந்தையை சுற்றி வந்து அந்த ஞானப்பழத்தை தான் பெற்று முருகனை ஆண்டி கோலத்தில் பழனி மலை மீது நிற்க வைத்தவர் விநாயகர் அந்த விநாயகர் பெருமான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக தோன்றி தற்போது வளர்ந்து வரும் அதிசயம் எங்கே தெரியுமா ?

    ஆந்திர மாநிலம் அரகோண்டா அருகே உள்ள காணியம்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுயம்பு விநாயகர் ஆலயம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் விவசாயி ஒருவர் கிணறு தோண்டியதாகவும் அப்போது, கட பாறையில் மண்ணைத் தோண்டிய போது கணீர்" என பாறையில் இடித்தது போன்று சப்தம் கேட்டதால் அந்த இடத்தில் கைகளால் மண்ணை அப்புறப்படுத்தி பார்த்தபோது சுயம்பு விநாயகரின் தலைப்பகுதி மட்டும் தென்பட்டது, அதனை அங்கேயே விட்டுவிட்டு கிணற்றை தோண்டி உள்ளனர். நாளடைவில் அந்த சுயம்பு விநாயகர் சிலை படிப்படியாக வளர தொடங்கியுள்ளது இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அங்கேயே விநாயகப் பெருமானுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பி வழிபட்டு வந்தனர். தற்போது விநாயகர் பெருமான் அருள் பாவிக்கும் கருவறையில் கிணற்றிலிருந்து ஊற்று நீர் வெளியேறி விநாயகரை சுற்றியும் தேங்கி நிற்கிறது இதன் காரணமாக ஆண்டுதோறும் விநாயகர் பெருமான் வளர்ந்து கொண்டே வருகிறார், இதனை அறிந்த பக்தை ஒருவர் விநாயகர் பெருமானுக்கு வாங்கி கொடுத்த வெள்ளி கலசத்தை அவருக்கு அணிவித்து அன்றாட பூஜைகள் செய்து வந்தனர், என்ன ? அதிசயம் அந்த வெள்ளி கவச சிறிதாகி விநாயகர் பெருமான் தனது உருவத்தை பெரிதாக காட்டி அருளினார்.

    சிறிது காலம் கழித்து அரசியல் பிரமுகர் ஒருவரும் புதிதாக வெள்ளிக்கவசம் செய்து விநாயகருக்கு காணிக்கை கொடுத்தார் அந்த வெள்ளிக் கவசமும் நாளடைவில் சிறியதாகி விட்டது தற்போது ஆண்டுக்கு ஆண்டு விநாயகர் பெருமான் வேகமாக வளர்ந்து தன்னை வணங்க வரும் பக்தர்களை அதிசயத்து வருகிறார். சொந்தமாக காணிநிலம் வேண்டும் என எண்ணுபவர்கள் இந்தக் காணியம்பாக்கம் அதிசய விநாயகரை ஏழு சதுர்த்திகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் அவர்களது எண்ணம் ஈடேறி வருவதாக பக்தர்களின் நம்பிக்கை, இதுவரை விநாயகருக்கு அணிவிக்கப்பட்டு சிறியதாகப் போன வெள்ளி கவசங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஊற்றெடுக்கும் கிணற்று நீரில் விநாயகர் சிலை வளர்ந்து வருவதை  ஒரு அதிசயமான நிகழ்வாக காணப்படுகிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Pisces lovers, is March favorable?.. unfavorable?.. Here is your horoscope for this month..!

    கிரகநிலை:

    ராசியில்ராகு, சுக்ரன், புதன் – தைரிய வீரிய  ஸ்தானத்தில் குரு -சுக ஸ்தானத்தில் செவ்வாய் -களத்திர  ஸ்தானத்தில் கேது -அயன சயன போக  ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன், சனி என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    14-03-2025 அன்று சூரிய பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் ராசியில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

    பலன்:

    குடும்பத்தில் அக்கறை காட்டும் மீன ராசியினரே நீங்கள் கவலை, பயம் இல்லாமல் செயல்படக்கூடியவர். எல்லா விஷயத்திற்கும் மனசாட்சியை நம்புபவர். இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும் நிலையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். எல்லாவற்றிலும் இருந்து வந்த மனகவலையை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை. 

    தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும்.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

    குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது.  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
    பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை.

    அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்க்கட்சியினர் உதவுவார்கள். மறைமுக போட்டிகள் இருக்கும். தொண்டர்களின் உதவியுடன் செயலாற்றுவீர்கள்.

    கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம்.

    மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

    பூரட்டாதி 4ம் பாதம்:

    இந்த மாதம் விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி தேவை. சந்திரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும். வாகன மூலம் லாபம் வரும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். 

    உத்திரட்டாதி:

    இந்த மாதம் பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த  போட்டிகள் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் விரிவாக்கம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க  பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகள் உதவி கிடைக்கும்.  சக ஊழியர் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் விலகும்.

    ரேவதி:

    இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வருகை இருக்கும். திருமணம்  போன்ற சுப காரியம் நடக்கும். நிலம், வீடு மூலம் லாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுவையான உணவு கிடைக்கும். மனோ பலம் கூடும்.

    பரிகாரம்: நவகிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வியாழன் – வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 18, 19, 20
    அதிர்ஷ்ட தினங்கள்:  10, 11

  • Aquarius lovers, is March favorable?.. unfavorable?.. Here is your horoscope for this month..!

    கிரகநிலை:

    ராசியில்சூர்யன், சந்திரன், சனி -தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் – சுக ஸ்தானத்தில் குரு -பஞசம  ஸ்தானத்தில் செவ்வாய் -அஷ்டம  ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார்.
    09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார்.
    14-03-2025 அன்று சூரிய பகவான் ராசியில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.
    30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

    பலன்:

    எந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உடைய கும்பராசியினரே நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். இந்த மாதம் நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது.  வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன்  செயல்பட்டாலும் காரிய தடங்கல் ஏற்படலாம். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். 
    தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

    குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு – மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.
    பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம்.

    அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

    கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. 

    அவிட்டம் 3, 4 பாதம்:

    இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.

    சதயம்:

    இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில்  அக்கறை தேவை. சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக  பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம். கவனம் தேவை.

    பூரட்டாதி 1, 2, 3  பாதம்:

    இந்த மாதம் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலன் பெறுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. 

    பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்
    சந்திராஷ்டம தினங்கள்: 15, 16, 17
    அதிர்ஷ்ட தினங்கள்:  8, 9

  • Capricorn lovers, is March favorable?.. unfavorable?.. Here is your horoscope for this month..!

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன், சனி -தைரிய வீரிய  ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் – பஞசம  ஸ்தானத்தில் குரு -ரண ருண ரோக  ஸ்தானத்தில் செவ்வாய் -பாக்கிய ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    14-03-2025 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

    பலன்:

    எத்தனை தடைவந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்காத மகர ராசியினரே இந்த மாதம் நன்மை வரும். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். அனுகூலமான பலன் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 
    தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள்  சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.

    குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் – நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.

    பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
    அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக்கொள்ள வேண்டாம்.

     

    கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். உங்கல் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும்.
    மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். 

    உத்திராடம் 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன லாபம் ஏற்படும். தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளி தொடர்புகளில் எச்சரிக்கை தேவை. எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. கவுரவம் உயரும்.
    திருவோணம்:

    இந்த மாதம் எடுத்துக் கொண்ட காரியங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும். சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள். பணவரத்து இருக்கும். திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். 

    அவிட்டம் 1,2 பாதம்:

    இந்த மாதம் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும் பயணங்கள்  ஏற்படலாம். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் கவனம் தேவை.

    பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 12, 13, 14
    அதிர்ஷ்ட தினங்கள்:  5, 6, 7

  • Sagittarius lovers, is March favorable?.. unfavorable?.. Here is your horoscope for this month..!

    கிரகநிலை:

    தைரிய வீரிய  ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன், சனி -சுக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் – ரண ருண ரோக  ஸ்தானத்தில் குரு -களத்திர  ஸ்தானத்தில் செவ்வாய் -தொழில்  ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    14-03-2025 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

    பலன்:

    எந்த நேரத்திலும் தகுதி குறையாமல் செயல்படும் தனுசு ராசியினரே நீங்கள் உயர்ந்த எண்ணங்களை உடையவர்கள். இந்த மாதம் பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். சுப பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனாலும் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
    தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.
    குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

    பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.
    அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். தொகுதி மக்களிடம் நெருங்கி பழகுவது அவசியம். 
    கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அயராத உழைப்பால் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். 
    மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

    மூலம்:

    இந்த மாதம் மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். சந்திரன் சஞ்சாரம் உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.

    பூராடம்:

    இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.

    உத்திராடம் 1ம் பாதம்:

    இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை  தருவதாக இருக்கும். குடும்பத்தில்  சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக  பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். 

    பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். 
    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன் – வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 10, 11
    அதிர்ஷ்ட தினங்கள்:  4, 5

  • Scorpio lovers, is March favorable?.. unfavorable?.. Here is your horoscope for this month..!

    கிரகநிலை:

    சுக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன், சனி -பஞசம  ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் – களத்திர  ஸ்தானத்தில் குரு -அஷ்டம  ஸ்தானத்தில் செவ்வாய் -லாப  ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    14-03-2025 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

    பலன்:

    எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கும் விருச்சிக ராசியினரே இந்த மாதம் வீடு – மனை – வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். காரிய தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். ஆனாலும் மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.

    தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.
    குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.     
    பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.  

    அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம். கட்சித் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.
    கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். படைப்புகளை வெளியிட சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள். 

    விசாகம் 4ம் பாதம்:

    இந்த மாதம் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும் எதை பற்றியும் கவலைப்படாமல் நினைத்த காரியத்தை செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் கவுரவம் கூடும்.

    அனுஷம்:

    இந்த மாதம் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும். கடன் பிரச்சனை குறையும். முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.

    கேட்டை:

    இந்த மாதம் வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

    பரிகாரம்: திருமுருகாற்றுபடையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.
    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி
    சந்திராஷ்டம தினங்கள்: 8, 9
    அதிர்ஷ்ட தினங்கள்:  1, 2, 3, 29, 30