The Swayam Lingam that the Pandavas worshipped to get rid of their sins!

இந்திய திருநாட்டில் தொன்மை வாய்ந்த ஏராளமான திருக்கோவில்கள் உள்ளன இவற்றில் பெரும்பாலானவை நிலப்பரப்பிலேயே கட்டப்பட்டதாக இருப்பினும் ஒரு சிலது மட்டும் மலைகள் மீதும், குகைகள், அருவிகள் போன்ற இடங்களில் கட்டப்பட்டிருக்கும் ஆனால் கடலில் பாண்டவர்களால் கட்டப்பட்ட அதிசய கோவில் எங்கே உள்ளது தெரியுமா ?  

குஜராத் மாநிலம் பவ்வு நகர் அடுத்த கோலியாக்கில் தான் இந்த அதிசய கடல் கோவில் உள்ளது. நிஷ்கலங்க் மகாதேவ் என அழைக்கப்படும் இந்த சிவன் கோவில் ஆனது' தனித்துவம் பெற்றதாகும் காரணம். கடலுக்கு அடியில் கட்டப்பட்டுள்ளது. இதனால் கடலில் ராட்சத அலைகள் வீசும் பொழுது நீரில் மூழ்கி, தாழ்வான அலைகள் வீசும் போது கம்பீரத்துடன் தனது தோற்றத்தை வெளிப்படுத்தி ஈசன் உள்ளே இருப்பதை அவ்வப்போது உறுதி செய்து வருகிறது. மேலும்  இறைவன் திருமேனி நீரில் மூழ்கி, கோவிலின் கொடி மரம் மற்றும் தூண்கள் மட்டுமே பக்தர்களின் பார்வைக்கு தெரியும்.

மகாபாரத காலத்தில் நிஷ்கலங்க் சிவன் கோவில் குருசேத்திர போரின் போது கௌரவர்களை கொன்ற பாவங்களை போக்குவதற்காக போர் முடிந்து பல சிவ ஆலயங்களை பாண்டவர்கள் கட்டினர். அதில் ஒன்றுதான் இந்த சிவன் கோவில் என்றும் இங்குள்ள சுயம்புலிங்கத்தை பாண்டவர்கள் பூஜித்து பாவ விமர்சனம் பெற்றதாக புராணம் கூறுகிறது. சிறிய நிலப்பரப்பில் நற்புறமும் கடல் நீர் சூழ்ந்திருக்க ராட்சத அலைகள் தொடர்ச்சியாக வீசினாலும் அதனை எதிர்கொண்டு கம்பீரமாக நிலைத்து நிற்கும் வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவில் தற்போதைய நவீன பொறியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு சவாலாகவே உள்ளது. நிஷ்கலங்க் மகாதேவ் என அழைக்கப்படும் இங்கு அருள்பாவிக்கும் அருள்மிகு ஸ்ரீ சிவபெருமான் சுயம்புலிங்க வடிவில் மூலவராகவும், உலகம் பஞ்சபூதங்களால் ஆனது' பஞ்சபூதங்கள் தனக்குள் அடக்கம் என்பதை உணர்த்தும் விதமாக  சதுர மேடை ஒன்றில் தனித்தனியாக ஐந்து பஞ்சபூத சுயம்புலிங்கங்கள் அதனை வணங்கும் தோரணையில் எதிரி தனித்தனி நந்தீஸ்வரரும் அமையப் பெற்றுள்ளது தனி சிறப்பாகும். ஆவணி மாதத்தில் அம்மாவாசை இரவில்'பதர்வி, என அழைக்கப்படும் புகழ்பெற்ற திருவிழா நடைபெறுகிறது.   
   

கோவிலுக்கு செல்லும் பிரதான பாதை நள்ளிரவு முதல் மதியம் வரை தண்ணீரில் மூழ்கி கிடக்கும். எனவே பக்தர்கள் மதியம் 1:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை இங்கு சுவாமி தரிசனம் செய்யலாம். அது சரி பிற மாநிலங்களில் இருந்து ஆன்மீக சுற்றுலா வரும் பக்தர்கள் இக்கோவிலுக்கு எப்படி செல்வது ? என்று தானே கேட்கிறீர்கள் பாவ்நகர் விமான நிலையம், இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் துல்லியமாக  இணைக்கப்பட்டுள்ளது. அதே போன்று  அகமதாபாத் மற்றும் மும்பை தொடர்வண்டி நிலையத்திலிருந்தும்,  ராஜ்கோட், அகமதாபாத், வதோதரா போன்ற முக்கிய நகரங்களிலிருந்து  பாவ்நகருக்கு பேருந்து சேவை உள்ளது. வாழ்வில் ஒரு முறை எனும் கடலுக்கு அடியில் பாண்டவர்கள் கட்டிய இந்த அதிசய கோவிலுக்கு வந்து இறைவனை தர்சிக்கும் வரத்தை சிவபெருமான் நமக்கு வழங்க வேண்டும்.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *