Author: சக்தி ஆன்லைன் டீம்

  • Virgo: February will be a lucky month for these zodiac signs! Everything will go well!

    கன்னி :

     

    கிரகநிலை :

     

    பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன்   – ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சனி, ராஹூதொழில் ஸ்தானத்தில் குரு() – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
     

    கிரகமாற்றம்:
     

    07.02.2026 அன்று சுக்கிரன் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
     

    13.02.2026 அன்று சூரியன் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
     

    21.02.2026 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
     

    பலன்:
     

    இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் சஷ்டாஷ்டக ஸ்தானத்தில் இருக்கிறார்.

    அனைவரும் உங்களிடம் நேசமுடன் பழகுவார்கள். மற்றவர்களால் இருந்த மனகஷ்டம் அகலும்.

    அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் வேகமாக நடக்கும்.

    எதிர்ப்புகளை சிறப்பாக சமாளிப்பீர்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும்.

     ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

     குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவுத்திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள்.

     பெண்களுக்கு சுபச்செலவுகள் உண்டாகும். காரிய தாமதம் அகலும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வரும்.

    அரசியல்துறையினருக்கு எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்கும்.

    மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.

     

    பரிகாரம்: வாராகி தேவியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.

     

     

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள்புதன்

     

    சந்திராஷ்டம தினங்கள்: பிப்ர 22, 23

     

    அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ர 01, 02, 28

  • Why does Krishna love cows so much? Little-known interesting reasons!

    ஏன் கிருஷ்ணருக்கு பசுக்கள் மிகவும் பிடிக்கும்? அறியப்படாத சுவாரசியமான காரணங்கள்!

    இந்து தர்மத்தில் கிருஷ்ண பரமாத்மா என்றாலே நம் நினைவுக்கு வருவது குழலூதும் கோலமும், அவரைச் சூழ்ந்து நிற்கும் பசுக்கூட்டங்களும்தான். கிருஷ்ணரின் அவதாரத்தில் பசுக்கள் வெறும் விலங்குகள் அல்ல; அவை அவரது வாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்தன. ஏன் கிருஷ்ணர் பசுக்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்தார்? இதன் பின்னணியில் உள்ள ஆன்மிக மற்றும் அறிவியல் ரகசியங்களை இங்கே காண்போம்.

    1. ஆன்மிகத்தின் உச்சம்: 33 கோடி தேவதைகளின் இருப்பிடம்

    புராணங்களின்படி, பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் வாசம் செய்வதாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் பசுக்களை மேய்த்ததன் மூலம், அவை தெய்வீகத்தின் சின்னம் என்பதை உலகுக்கு உணர்த்தினார். பசு தரும் பால், தயிர், நெய் போன்றவை இறை வழிபாட்டில் 'பஞ்சகவ்யமாக' பயன்படுத்தப்படுவது அதன் புனிதத்தை உறுதிப்படுத்துகிறது.

    2. எதிர்பார்ப்பற்ற அன்பின் அடையாளம் (நிஷ்காம்ய கர்மா)

    கிருஷ்ணர் போதிக்கும் 'பலன் எதிர்பாராத கடமைக்கு' (நிஷ்காம்ய கர்மா) பசுக்களே சிறந்த உதாரணம். தன்னிடம் உள்ள அனைத்தையும் மனிதகுலத்திற்கு வழங்கும் பசுக்கள், பதிலுக்கு எதையும் எதிர்பார்ப்பதில்லை. இந்தத் தூய அன்பிற்கு அடிமையான கிருஷ்ணர், ஒவ்வொரு பசுவிற்கும் தனித்தனி பெயரிட்டு அழைத்து, அவற்றுடன் ஒரு உன்னத பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டார்.

    3. கோவர்த்தன கிரி: பாதுகாப்பின் சின்னம்

    இந்திரனின் ஆணவத்தால் ஏற்பட்ட பெருமழையிலிருந்து பசுக்களையும், மக்களையும் காக்க கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தன் சுண்டு விரலால் தூக்கினார். இது வாயில்லா ஜீவன்களைப் பாதுகாப்பது ஒரு இறைவனின் தலையாய கடமை என்பதைப் பறைசாற்றுகிறது. இதனாலேயே அவருக்கு 'கோபாலன்' (பசுக்களைக் காப்பவர்) என்ற பெயர் நிலைத்தது.

    4. பசுக்களும் கிராமப் பொருளாதாரமும்

    அன்றைய காலகட்டத்தில் பசுக்களே ஒரு நாட்டின் செல்வமாகக் கருதப்பட்டன. விவசாயம், உரம், எரிபொருள் என அனைத்திற்கும் பசுவின் பங்களிப்பு தேவையாய் இருந்தது. பசுக்களைப் பாதுகாப்பது என்பது சமூகத்தின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதாகும் என்பதை கிருஷ்ணர் அன்றே வலியுறுத்தினார்.

    5. இன்றைய உலகுக்கான பாடம்: இயற்கையோடு இணைந்த வாழ்வு

    இயற்கையைச் சுரண்டி செயற்கை வாழ்வைத் தேடும் நவீன மனிதனுக்கு கிருஷ்ணரின் வாழ்வு ஒரு மிகச்சிறந்த பாடம்.

    உயிரிரக்கம்: எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

    சுற்றுச்சூழல்: ரசாயன உரங்களைத் தவிர்த்து பசுக்களின் மூலம் கிடைக்கும் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது மண்ணுக்கும் மனிதனுக்கும் நல்லது.

    ​​​​​​​அமைதி: கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசைக்கு பசுக்கள் மயங்குவது போல, அன்பினால் எதையும் சாதிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது.

     

    முடிவுரை: கிருஷ்ணரின் பசு அன்பு என்பது ஒரு புராதனக் கதை மட்டுமல்ல; அது ஆன்மிகம், பொருளாதாரம் மற்றும் சூழலியல் சார்ந்த ஒரு வாழ்க்கை முறை. பசுக்களைப் போற்றுவதும் பாதுகாப்பதும் நமது கலாச்சாரத்தின் அடையாளம் மட்டுமல்ல, அது வருங்காலச் சந்ததியினரின் வளமான வாழ்விற்கான அடித்தளமுமாகும்.

  • Cancer: December is a lucky month for these zodiac signs! Everything will be good!

    கடகம்:

    கிரகநிலை:

    ராசியில் குரு () – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேதுசுக ஸ்தானத்தில் புதன்பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், சுக்ரன்அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராஹூபாக்கிய ஸ்தானத்தில் சந்திரன்என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    06-12-2025 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-12-2025 அன்று சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கு குரு பகவான் ராசியில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-12-2025 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    25-12-2025 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    சிறு விஷயத்திலும் உணர்வுப் பூர்வமாக செயல்படும் கடக ராசியினரே இந்த மாதம் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கை கண்டு பொறாமை உண்டாகலாம் கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும். வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தடைபட்டிருந்த வீடு கட்டும் பணிகள் நிறைவடையும்.

     
    தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகஸ்தர்கள் வேலை பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள்.

    குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கடன் பிரச்சனையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

    பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்குவன்மையால் நன்மை உண்டாகும்.

    அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம்.

    கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.

    மாணவர்களுக்கு படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

    புனர்பூசம்:

    இந்த மாதம் மன மகிழ்ச்சி ஏற்படும் சம்பவங்கள் நிகழும். இழந்த சொத்து மீண்டும் கைக்கு வந்து சேரும். காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை வந்து சேரும். தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சனை நீங்கும்.

    பூசம்:

    இந்த மாதம் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். தேவையான வசதி வாய்ப்புகள் வந்து சேரும்.

    ஆயில்யம்:

    இந்த மாதம் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும். கொஞ்சம் சிரமம் எடுத்தால் மிக சிறப்பாக நடந்தேறும். முக்கிய முடிவுகளை குடும்பப் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும்.

    பரிகாரம்:

    திங்கட்கிழமை அன்று அருகிலிருக்கும் அம்மனை தரிசித்து நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட மனகுழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்:

    ஞாயிறு, திங்கள், வியாழன்;

    சந்திராஷ்டம தினங்கள்: 25, 26
    அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19
     

  • December is a lucky month for these zodiac signs! Everything will be good!

    ரிஷபம்

     

    கிரகநிலை:

    தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு () – சுக ஸ்தானத்தில் கேதுரண ருண ரோக ஸ்தானத்தில் புதன்களத்திர ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், சுக்ரன்தொழில் ஸ்தானத்தில் சனி, ராஹூலாப ஸ்தானத்தில் சந்திரன்என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    06-12-2025 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-12-2025 அன்று சூர்ய பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கு குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-12-2025 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    25-12-2025 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    கொடுத்த வாக்கை உயிருக்கு மேல் மதிக்கும் ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். அதே வேளையில் சுபச்செலவுகள் அதிகமாகும். திடீர் கோபம் ஏற்பட்டு அதனால் அடுத்தவர்களிடம் சண்டை உண்டாக நேரலாம். எனவே மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

    தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதோ நன்மை தரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

    குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வகையில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

    பெண்களுக்கு வீண் பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை தரும். மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது.
    கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யபோய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும்.

    அரசியல் துறையினருக்கு சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
    மாணவர்களுக்கு நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

    கார்த்திகை:

    இந்த மாதம் புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப்பதற்கும் சிறந்த காலமாகும். பிறருடைய மனம் நோகும்படி வார்த்தைகளை வாங்கிக் குவிப்பீர். பொழுதுபோக்கான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள்.

    ரோகினி:

    இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். நம்பிக்கை உகந்தவர்களாக பழகுவார்கள். வரவுக்குத் தகுந்த செலவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வரி செலுத்துவதில் முறைகளைப் பின்பற்றுங்கள். வேலையாட்கள் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

    மிருகசீர்ஷம்:

    இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். வேலை பார்த்து கொண்டே உபதொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

    பரிகாரம்:

    தினமும் சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்சனை தீரும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

    அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

  • December is a lucky month for these zodiac signs! Everything will be good!

    கிரகநிலை:

    சுக ஸ்தானத்தில் குரு () - பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சனி, ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் - என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    06-12-2025 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    15-12-2025 அன்று சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கு குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    22-12-2025 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    25-12-2025 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    வாழ்க்கையை குறிக்கோளுடன் நடத்தி வெற்றி காணும் மேஷ ராசியினரே இந்த மாதம் மனதிடம் அதிகரிக்கும். அதே வேளையில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கை கூடி வரும். பணவரவு நன்றாக இருக்கும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவச்சொல் வாங்க நேரிடும்.

    தொழில் வியாபாரம் ஏற்றம் தரும் வகையில் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் ஏற்படும்.

    குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாக பேசுவது நல்லது. உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த பூசல்கள் அகலும்.

    பெண்களுக்கு எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

    அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், மாணவர்களுக்கு கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.

    அச்வினி:

    இந்த மாதம் தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே நீங்கள் எடுத்த காரியங்கள் முடியும். வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது.

     

    பரணி:

    இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

     

    கார்த்திகை:

    இந்த மாதம் மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும்.

    பரிகாரம்:

    செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;

    சந்திராஷ்டம தினங்கள்: 18, 19

    அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11, 12

  • How is October going for you?

    கிரகநிலை:

    சுக ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் குரு – தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – லாப ஸ்தானத்தில் சூரியன் – விரைய ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    08.10.2025 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    10.10.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    17.10.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    27.10.2025 அன்று  அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   ராசிக்கு  மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் அனுகூலமான பலன்களை தரும் வகையில் இருக்கிறது. மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன்  கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை.  

    தொழில் வியாபாரம்  தொடர்பான  போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். புதிய  ஆர்டர்கள்  பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். 

    குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகளின்  நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள்.   மனநிம்மதி  உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். 
    பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த தகராறுகள் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
    கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.

    அரசியல் துறையினருக்கு தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். கடன்கள், நோய்கள் தீரும். விவாதம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். 
    மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். 

    விசாகம் 4ம் பாதம்:

    இந்த மாதம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை.

    அனுஷம்:

    இந்த மாதம் என்பது உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். மிக அருமையான நேரத்தை பயன்படுத்திக் கொள்வது நல்லது. அறிவு திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை.

    கேட்டை:

    இந்த மாதம் பொருள் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்கது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை.

    பரிகாரம்: பழனி முருகனை வணங்கி வர குடும்ப  பிரச்சனை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும். 

    சந்திராஷ்டம தினங்கள்:     அக் 13, 14

    அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 22, 23
     

  • How is October going for you?

    கிரகநிலை:

    தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ), ராஹூ – களத்திர ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், கேது – தொழில் ஸ்தானத்தில் சூரியன் – லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றம்:

    08.10.2025 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  குரு பகவான் அதிசாரமாக அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    10.10.2025 அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்   தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    17.10.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  சூரியன்   லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    27.10.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய், புதன்   அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

    பலன்:

    இந்த மாதம் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும்.  புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும்.  உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சாரம் இருப்பதால் பேச்சு திறமை கை கொடுக்கும்.
    தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்பட்டாலும் கைக்கு வந்து சேரும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

    குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படலாம் கவனம் தேவை. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

    பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை குறைப்பது நன்மை தரும்..
    கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. பணீகள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். 

    அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எடுத்த வேலைகளில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மன வலிமை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு கூடும். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

    மூலம்:

    இந்த மாதம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. உங்களை சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம்.

    பூராடம்:

    இந்த மாதம் சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம்.

    உத்திராடம் 1ம் பாதம்:

    இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். அதே நேரத்தில் பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

    பரிகாரம்: ஸ்ரீபைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும்.

    சந்திராஷ்டம தினங்கள்:     அக் 15, 16

    அதிர்ஷ்ட தினங்கள்:     அக் 24, 25, 26
     

  • Are you suffering from a debt crisis? You can get relief from it with simple spiritual remedies.

    கடன் நெருக்கடியால் அவதிப்படுகிறீர்களா? எளிய ஆன்மீக பரிகாரங்கள் மூலம் இதிலிருந்து விடுபடலாம். நம்பிக்கையுடன் பின்பற்றினால், செல்வ வளம் பெருகும்.

    1. பசுவுக்கு பாசிப்பருப்பு தானம்: பாசிப்பருப்பையும் வெல்லத்தையும் கலந்து, முந்தைய நாள் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் பசுவுக்கு (கோமாதா) அளிக்கவும். பசுவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்வதாக ஐதீகம். வாரம் ஒருமுறை இதை செய்தால், கடன் படிப்படியாகக் குறையும்.

    2. புதன் கிழமை தானம்: புதன்கிழமை புதன் ஹோரையில் பாசிப்பருப்பை அருகிலுள்ள கோவிலில் அல்லது ஏழைகளுக்கு தானமாக வழங்கவும். இது செல்வத்தை பெருக்கி, கடனை அகற்றும்.

    3. பாசிப்பருப்பு பிரசாதம்: பாசிப்பருப்பு சுண்டல் செய்து, கோவிலில் கடவுளுக்கு நைவேத்யமாக படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கவும். பிரதோஷ நாளில் இதை செய்வது சிறப்பு. இதனால் பணம் தேடி வரும்.

    4. குலதெய்வ வழிபாடு: குலதெய்வத்தை வணங்குவது மிக முக்கியம். பௌர்ணமி அன்று கோவிலில் பாசிப்பருப்பு பிரசாதம் படைத்து, கடன் தீர வேண்டவும். கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் வழிபாடு செய்யலாம். பிரசாதத்தை காகத்திற்கு சிறிது வைத்து, பின்னர் குடும்பத்தினருக்கு வழங்கவும்.

    இந்த நான்கு எளிய பரிகாரங்களையும் அல்லது இயன்றவற்றை முழு நம்பிக்கையுடன் செய்யவும். கடன் தொல்லை நீங்கி, செல்வ செழிப்புடன் வாழலாம்.

  • If you perform this simple prayer, long-awaited things will soon be fulfilled.

    நமது வேண்டுதல்கள் நிறைவேற இறைவனை வணங்குகிறோம். சில சமயங்களில் இது விரைவில் நிறைவேறலாம், சில சமயங்களில் தாமதமாகலாம். ஆனால், எளிமையான வழிபாட்டால் வேண்டுதல்களை விரைவாக அடைய முடியும். அத்தகைய சக்தி வாய்ந்த தெய்வம் ஆஞ்சநேயர். வலிமையும் ஆற்றலும் மிக்க இவர், ராம நாமத்தால் திருப்தியடைபவர். சனி பகவானின் அதிபதியாகத் திகழ்ந்து, ஏழரை சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற தோஷங்களை நீக்குபவர். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வணங்கினால், சனி தோஷங்களின் தீவிரம் குறையும், பிரச்சினைகள் தீரும்.

    எளிய வழிபாடு முறை

    1. காலையில் குளித்து, யாருடனும் பேசாமல், வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றவும்.
    2. ஒரு மஞ்சள் நூலில் 108 வெற்றிலைகளை மாலையாகக் கட்டுங்கள். ஒவ்வொரு வெற்றிலையையும் கட்டும்போது உங்கள் வேண்டுதலை மனதில் நினைத்து கூறவும்.
    3. மாலையை ஆஞ்சநேயர் கோவிலுக்கு எடுத்துச் சென்று, அவருக்கு சாற்றவும்.
    4. கடுகு எண்ணெயில் இரண்டு தீபங்கள் ஏற்றி, “ராமா ராமா” என 11 முறை கூறி ஆஞ்சநேயரை வலம் வரவும்.
    5. வழிபாடு முடியும் வரை யாருடனும் பேசாமல், வேண்டுதலில் கவனமாக இருங்கள்.

    வழிபாட்டிற்கு பிறகு பிறருடன் பேசலாம். இந்த எளிய வழிபாட்டைசனிக்கிழமையில் செய்தால், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட காரியங்கள் விரைவில் நிறைவேறும்.

  • A spiritual journey into the Velliangiri Mountains, revered as the Kailash of the South!

    கோவை மாநகரில் இருந்து மேற்கே 36 கி.மீ. தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில். புனிதமும் சுற்றுலாத் தலமுமான இது, “தென் கயிலாயம்” என அழைக்கப்படுகிறது. மேகங்களால் சூழப்பட்டு, வெள்ளி வார்ப்படத்தால் மூடப்பட்டது போல் தோற்றமளிக்கும் இம்மலை, “வெள்ளியங்கிரி” என்ற பெயர் பெற்றது.

    ஸ்தல வரலாறு

    புராணப்படி, கன்னியாகுமரி எனும் பெண், சிவனை மணக்க உறுதியெடுத்து, அவர் வராவிட்டால் உயிர் துறப்பேன் என சூளுரைத்தார். ஈசன் வரத் தாமதமானதால், அவர் உயிர் துறந்தார். மனமுடைந்த சிவன், தனிமையை வேண்டி இம்மலையின் உச்சியில் தியானித்தார். பின்னர் மனம் தெளிந்து கயிலாயம் திரும்பினார். இவ்விடம் தென் கயிலாயமாகி, சிவன் சுயம்புவாகக் குடிகொண்டார்.

    மலை ஏற்றம்

    வெள்ளியங்கிரி ஏழு மலைகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. மலையேற்றத்தில் ஏழு ஏற்ற-இறக்கங்கள் உள்ளன. கைதட்டி சுனை, பாம்பாட்டி சுனை போன்ற சுனைகள் உள்ளன. சூறைக்காற்றால் புற்கள் மட்டுமே வளரும் இம்மலையில், மூன்று பாறைகள் இணைந்து லிங்கத்திற்கு ஆலயமாக உள்ளன.

    ஆன்மீக முக்கியத்துவம்

    யோகிகள், முனிவர் இங்கு தவமிருந்து சக்திகளைப் பெற்றனர். இம்மலை யாத்திரை ஆன்மீக உணர்வையும், உடல் புத்துணர்வையும் தருகிறது. இங்கு சிவன் “வெள்ளியங்கிரி ஆண்டவர்”, அம்பாள் “மனோன்மணி” என அழைக்கப்படுகிறார்கள். ஏழு மலைகள் உடலின் ஏழு சக்கரங்களைக் குறிக்கின்றன. இமயமலை கயிலாயம் செல்ல முடியாதவர்கள் இங்கு யாத்திரை செய்து அதே பலனைப் பெறலாம். ஆண்டி சுனை “தென் மானசரோவர்” எனப்படுகிறது.

    உகந்த காலம்

    ஜனவரி முதல் மே வரை மலை ஏற உகந்த காலம். கடும் குளிர், விலங்கு நடமாட்டம் காரணமாக மற்ற காலங்களில் பயணம் தவிர்க்கப்படுகிறது. 3,500 அடி உயரமுள்ள இம்மலையில், ஆறு சிகரங்களைக் கடந்து, ஏழாவது மலையில் சுயம்பு சிவனை தரிசிக்கும் அனுபவம் அளவற்ற இன்பத்தைத் தரும்.

    செல்லும் வழி

    கோயம்புத்தூர் காந்திபுரத்தில் இருந்து சிறுவாணி வழியாக 40 கி.மீ. பயணித்து கோவிலை அடையலாம். இருட்டுப்பள்ளம் வழியாக 8 கி.மீ. சென்றால் கோவில் உள்ளது. காந்திபுரத்தில் இருந்து ஒன்றரை மணிக்கு ஒரு முறை பஸ் வசதி உள்ளது.