இன்று இன்பமாக இருக்க போகும் ராசி….
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நிம்மதி
ரிஷபம் – பகை
மிதுனம் – அச்சம்
கடனம் – சிந்தனை
சிம்மம் – பொறுமை
கன்னி – இன்பம்
துலாம் – பரிவு
விருச்சிகம் – பரிசு
தனுசு – சோதனை
மகரம் – ஆக்கம்
கும்பம் – பாசம்
மீனம் – பக்தி
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி
Author: லிங்கேஷ்
-
Rasi Palangal
-
Adhi Rudhra mahayagam
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள செங்கல் சிவபார்வதி கோயிலில் அதிருத்திர மஹாயாகம் தொடங்கியுள்ளது. இதற்காக சென்னை மஹாபலி புரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 108 சிவலிங்கங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை அருகே 111 அடி உயரத்தில் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பிடித்த உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் அமைத்துள்ள செங்கல் சிவபார்வதி கோயிலில் இன்று முதல் மார்ச் 3 வரை அதிருத்திர மஹா யாகம் நடக்க உள்ளது.
இதை தொடர்ந்து இங்கு 111 உயரத்தில் அமைந்துள்ள எட்டு நிலைகளை கொண்ட சிவலிங்கத்தின் உள் அறை களில் பிரதிஷ்டை செய்ய உள்ள 108 சிறு சிவலிங்க சிலைகள் மஹாபலி புரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது அந்த சிலைகளுக்கு தமிழக கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் பக்தர்கள் செண்டை மேளம் முழங்க ஏராளமான பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து 108 ஆட்டோகள் அணி வகுப்பு புடன் எராளமாண பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்று கோயில் வளாகத்தில் சிவலிங்கங்கள் பூஜைக்காக வைக்க பட்டு அதிருத்திர மஹா யாகம் துவங்கி நடத்து வருகிறது மார்ச் 3 சிவராத்திரி தினத்தன்று இந்த யாகம் முடிந்த பின் 108 சிவலிங்கங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
-
Thirupathi Mudi Kanikkai
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்திய தலைமுடி காணிக்கை ஏலம் விட்டதின் மூலமாக 7.94 கோடி ரூபாய் வருவாய்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தலைமுடிகள் இன்று ஏலம் விடப்பட்டது. 4 ஆயிரத்து 300 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டதில் 7.95 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
ஒரு கிலோ 22,499 ரூபாய் என 31 அங்குலத்திற்கு மேல் உள்ள முதல் ரக தலைமுடி 4100 கிலோ விற்பனைக்கு வைக்கப்பட்ட நிலையில் 1000 கிலோ தலைமுடி விற்பனை செய்யப்பட்டதன் மூலமாக 2.25 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. 16 முதல் 30 அங்குலத்திற்கு உட்பட்ட இரண்டாவது ரக தலைமுடி ஒரு கிலோ 17 ஆயிரத்து 250 ரூபாய் என 30 ஆயிரத்து 900 கிலோ தலைமுடி விற்பனைக்கு வைக்கப்பட்டதில் 3300 கிலோ விற்பனை செய்ததன் மூலமாக 5.69 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
முதல் மற்றும் இரண்டாவது ரக தலைமுடி 4 ஆயிரத்து 300 கிலோ விற்பனை செய்யப்பட்டதில் மொத்தம் 7. 94 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
Rasi Palangal
இன்று இந்த ராசிக்கு தொட்டது எல்லாம் வெற்றி…..
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – வெற்றி
ரிஷபம் – பாசம்
மிதுனம் – ஆர்வம்
கடனம் – பிரயாசை
சிம்மம் – பயம்
கன்னி – பாராட்டு
துலாம் – நலம்
விருச்சிகம் – அன்பு
தனுசு – அசதி
மகரம் – சுகம்
கும்பம் – நிறைவு
மீனம் – வாழ்வு
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
-
Feb 22 Indraya Naal Eppadi
பிப்ரவரி 22 – சதுர்த்தி – சுபமுகூர்த்த நாள்
விளம்பி வருடம் – மாசி 10
சங்கடஹர சதுர்த்தி
சுபமுகூர்த்த நாள்
22-பிப்-2019 வெள்ளி
சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 10.30 – 12.00
குளிகை : 7.30 -9.00
எமகண்டம் : 3.00 – 4.30
திதி : திரிதியை
திதி நேரம் : திரிதியை ம 3.38
நட்சத்திரம் : அஸ்தம் அ.கா 5.14
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி
சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
-
hanuman vazhipadu
எளிமையாக வணங்கக்கூடிய கடவுள்களில் முதன்மையானவர் ஹனுமன். அதே நேரத்தில் மனதில் எந்த அழுக்கும் இல்லாமல் வழிபட்டால் தான் அவரது ஆசியை பெற முடியும்.
ஹனுமனிற்கு பிடித்தமான படையல் என்பது வெல்லம் மற்றும் வறுத்த கடலைதான். மேலும் அவருக்கு கோதுமை மற்றும் வெல்லம் கொண்டு செய்யப்பட்ட உணவையும் படைத்து வழிபடலாம். இதன் மூலம் அனுமனின் ஆசியை பெற முடியும்.
தினமும் காலை எழுந்து நீராடிவிட்டு மற்ற கடமைகளை எல்லாம் முடித்து விட்டு அருகில் உள்ள ஹனுமன் கோவிலுக்கு சென்று வரலாம். அருகில் ஹனுமன் கோவில் இல்லை என்றால் வீட்டிலேயே சிறிய அனுமன் சிலைக்கோ அல்லது படத்திற்கோ செந்தூரம், பூக்கள், வெல்லம், ஆகியவற்றை வைத்து பஞ்சோப்சாரம் செய்யலாம். இதன் மூலமும் ஹனுமனின் ஆசியை பெறலாம்.
ஹனுமனின் உருவரும் 5 வகைகளாக வணங்கப்படுகிறது அதனால் நீங்கள் பஞ்சமுக ஹனுமனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயையும், வெல்லத்தையும் நெற்றியில் இட்டுக்கொண்டால் அதிஷ்டம் உங்களை தேடி வரும்.
தினமும் நீங்கள் மற்ற கடவுள்களை வணங்கும்படியே ஹனுமனது மந்திரத்தையும் தினமும் சொல்ல வேண்டும். நீங்கள் நேரடியா ராமனை வணங்குவது மூலமும் அனுமனின் அருளை பெறலாம். தினமும் 108 முதலை ராமஜெயத்தை ருத்ராட்சங்கள் கொண்டு சொல்வது மூலம் அதிஷ்டங்கள் உங்களை தேடி வரும்.
-
Vinayakar Thudhi
விநாயகர் – பாலும் தெளிதேனும்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம் செய்துங்க கரிமுகத்து தூமணியே
நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா!பொருள்:
பாலையும், கலப்படம் அற்ற தெளிந்த தேனையும், சர்க்கரை கலந்த பாகையும், வேகவைத்த கடலை பருப்பையும் கலந்து ஒரு சுவையான உனக்கு நான் நைவேத்தியமாக படைக்கிறேன்.
கோலமிகுந்த (அழகு மிகுந்த) துங்க (துதிக்கை அமைந்த) கரிமுகத்து (யானை முகம் படைத்த) தூய்மையான மணி போன்ற பொக்கிஷமே! நீ எனக்கு இயல், இசை, நாடகம் என முப்பரிமாணத்தில் மிளிரும் தமிழ் மொழியை அருள்வாயாக !
-
thrupathy ezhumalayan budget
திருப்பதி திருமலை தேவஸ்தானம் 2019 – 2020 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டாக ரூ.3,116.25 கோடிக்கு தாக்கல் செய்து இருக்கிறது. ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேவஸ்தானம் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது. தற்போது 2019-2020ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் விபரம்…. ரூ.3116.25 கோடி வருமானம்
இந்த ஆண்டு உண்டியல் வருமானமாக ரூ.1,231 கோடி கிடைக்கும் என எதிர்பார்ப்பு
நிதி வைப்புகள் மூலம் கிடைக்கும் வட்டித்தொகை ரூ.845.86 கோடி
விரைவு தரிசனம் மற்றும் பிரேக் தரிசன டிக்கெட் விற்பனை மூலம் ரூ.235 கோடி
பிரசாத விற்பனை மூலம் ரூ.270 கோடி
காணிக்கை தலைமுடி விற்பனை மூலம் ரூ.100 கோடி
விடுதி அறைகள், கல்யாண மண்டபங்கள் மூலம் ரூ.105 கோடி
பங்கு வைப்புகள் மூலம் ரூ.67.54 கோடி வருமானம்
ஆர்ஜித சேவை டிக்கெட்கள் விற்பனை மூலம் ரூ.57 கோடி வருவாய்
இதர முதலீடுகள் மூலம் ரூ.204.85 கோடி வருமானம்
வீதம் ஆண்டுக்கு மொத்தம் ரூ.3,116.25 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டில் செலவு கணக்கு….
பிற முதலீட்டுச் செலவினம் ரூ.78.85 கோடி
ஊழியர்கள் சம்பளம் மற்றும் கூலி ரூ.625 கோடி
என்ஜினீயரிங் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு இரும்பு தளவாட பொருட்கள் கொள்முதலுக்கு ரூ.541 கோடி
மானியம் மற்றும் பங்களிப்புத் தொகை ரூ.283 கோடி
அசையா சொத்துக்களை பராமரிக்க ரூ.400 கோடி
ஆதார செலவினம் ரூ.339.58 கோடி
ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க ரூ.260 கோடி
ஓய்வூதியம் வழங்க ரூ.75 கோடி
மின் கட்டணமாக ரூ.52 கோடி
அசையா சொத்துக்களை பழுது பார்க்க ரூ.135 கோடி
கடன், ஊழியர்களுக்கு முன்பணம் செலுத்துதல் ஆகியவற்றுக்கு ரூ.52.11 கோடி
விளம்பரம் ரூ.10 கோடி, பல்வேறு முதலீடு மற்றும் இதர செலவினத்துக்கு ரூ.264.21 கோடி ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
Feb 21 Sri Annai Birth Day
பிப்ரவரி 21 ஸ்ரீஅன்னை பிறந்த நாள்
விளம்பி வருடம் – மாசி 9
21-பிப்-2019 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : துவிதியை
திதி நேரம் : துவிதியை மா 5.37
நட்சத்திரம் : பூரம் கா 7.49
யோகம் : சித்த-மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : சதயம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம்
-
Rasi Palangal
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – சாந்தம்
ரிஷபம் – தனம்
மிதுனம் – எதிர்ப்பு
கடனம் – லாபம்
சிம்மம் – ஜெயம்
கன்னி – சோர்வு
துலாம் – போட்டி
விருச்சிகம் – வரவு
தனுசு – ஓய்வு
மகரம் – உயர்வு
கும்பம் – பிரீதி
மீனம் – உழைப்பு
சந்திராஷ்டமம் : சதயம்