இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நட்பு
ரிஷபம் – ஆதரவு
மிதுனம் – ஆதாயம்
கடனம் – ஆர்வம்
சிம்மம் – தெளிவு
கன்னி – தேர்ச்சி
துலாம் – பணிவு
விருச்சிகம் – கவனம்
தனுசு – நேர்மை
மகரம் – அலைச்சல்
கும்பம் – அனுகூலம்
மீனம் – குழப்பம்
சந்திராஷ்டமம் : திருவோணம்
Author: லிங்கேஷ்
-
Indraya Rasi Palangal
-
Feb 19 Full moon day
பிப்ரவரி 19 – பவுர்ணமி
விளம்பி வருடம் – மாசி 7
பவுர்ணமி
19-பிப்-2019 செவ்வாய் ஜமாதுல் ஆகிர்13
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : பவுர்ணமி
திதி நேரம் : பவுர்ணமி இ 10.05
நட்சத்திரம் : ஆயில்யம் கா 11.03
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : திருவோணம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Sakthi vinayakar koil Kumbabishegam
உளுந்தூர்பேட்டை கந்தசாமி புரத்தில் உள்ள சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரம் கந்தசாமி புரத்தில் அருள்மிகு சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் ராமகிருஷ்ணா குருகுலத்தில் இருந்து வந்திருந்த பத்மபிரியா அம்மாள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியையொட்டி நேற்றைய தினத்தில் இருந்து யாகசாலை பூஜைகள் துரைசாமிசிவாச்சார்யார், மற்றும் சங்கரசிவம் குருக்களின் தலைமையில் இரண்டு நாட்களாக யாகசாலை பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்றது.
நேற்றிலிருந்து இந்த பூஜையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இன்று காலை சரியாக 9 மணியளவில் யாகசாலையில் இருந்து புறப்பட்ட கலசங்கள் சக்திவிநாயகர், தட்சிணாமூர்த்தி மற்றும் நவகிரக மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மிக மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
இதில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசங்கர், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சௌ. ராமலிங்கம், லட்சுமிநாராயணன், ஜனார்த்தனன், குரு. கணேசன், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கர் விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு ,அமுதசுரபி விநியோக சங்க தென் மண்டல செயலாளர் ராமுசுப்பிரமணியன், உட்பட ஊர் முக்கியஸ்தர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர் வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
-
Ponni Amman Koil Kumbabishegam Vedio
அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள பல ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயிலில் ஜூர்னோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. முன்னதாக நேற்று கோ பூஜை, கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ தீபாராதனையும் நடைபெற்றது.
அதே போல் இரவு அம்மனுக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குராற்பணம், கலாகர்ஷணம் மற்றும் தீபாராாதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை மஹா சங்கல்பம், தத்வார்ச்சனையும், அவம்ருத யாகமும் விசேஷ ஹோமமும் 10 மணியளவில் கலசத்தை கோயில் நிர்வாகிகள் எடுத்துவர, கலசத்தில் உள்ள புனித நீரை விமான கோபுரத்தில் ஊற்றினர்.
அப்போது கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என கோஷம் எழுப்பினர். கலசத்தில் கொண்டு வந்த புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தில் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
-
Thiruthani thirukalyanam
திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் மாசி மாத பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வள்ளியம்மை திருக்கல்யாண நிகழ்ச்சி அதிகாலை நடந்தது. இதில், இருளர் சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் மலைக்கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த, 10ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் உற்சவர் முருகப்பெருமான் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று யாளி வாகனத்தில், ஆறுமுக சுவாமி கோவிலுக்கு உற்சவர் சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து 9வது நாளான இன்று அதிகாலை, 4:30 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முருகப்பெருமானுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர்.
முருகப்பெருமான் இரண்டாவதாக வள்ளியம்மையை திருமணம் செய்து கொண்டு கோயிலுக்குள் செல்லும் போது தெய்வயானை அம்மையார் கோயிலின் பிரதான வாயில் முடி உள்ளே அனுமதிக்காமல் மறுப்பது பின்னர் முருகப்பெருமான் தெய்வயானை அம்மையாரை சமாதானம் செய்து கோயிலுக்குள் செல்லும் வைபோக வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்
-
Indraya Rasi palangal
இன்று சந்திராஷ்டமம் உள்ள ராசிகள் …..
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – நட்பு
ரிஷபம் – பணிவு
மிதுனம் – ஆசை
கடனம் – பரிவு
சிம்மம் – செலவு
கன்னி – மேன்மை
துலாம் – ஆர்வம்
விருச்சிகம் – முயற்சி
தனுசு – உதவி
மகரம் – பக்தி
கும்பம் – தடை
மீனம் – போட்டி
சந்திராஷ்டமம் : உத்திராடம், திருவோணம்
-
feb 18 Indraya naal
பிப்ரவரி 18 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
விளம்பி வருடம் – மாசி 6
18-பிப்-2019 திங்கள்
வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)
நல்ல நேரம் : 6.00 – 7.30
ராகு : 7.30 – 9.00
குளிகை : 1.30 – 3.00
எமகண்டம் : 10.30 – 12.00
திதி : சதுர்த்தசி
திதி நேரம் : சதுர்த்தசி இ 12.49
நட்சத்திரம் : பூசம் ம 12.39
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : உத்திராடம்,திருவோணம்
சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
-
Thiruchendur Murugan Fest
திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழாவையொட்டி சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வருகிற 19-ந் தேதி 10-ம் திருவிழா அன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித் திருவிழா கடந்த 10-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7-ம் திருவிழாவான இன்று அதிகாலை 4.50 மணிக்கு கும்ப லக்கனத்தில் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 8.45 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு சுவாமி சிவன் அம்சத்தில் தங்க சப்பரத்தின் மீது சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
-
Kanchi Viswa roopa perumal
ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில் எது தெரியுமா?
காஞ்சிபுரத்தின் மிக பழமையான கோயில்களில் ஒன்று எது தெரியுமா?
அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்தால் அனைத்து பலன்களையும் தரும் கோயில் எது தெரியுமா?
திருப்பாடகம் – பாண்டவதூதர் பெருமாள் கோயில்
கிருஷ்ணா நீ வேகமாய் வாராய் என்று அழைத்தால் ஓடிவருவான்.
யசோத நந்தகோபாலனே! என்று பாடினால் புல்லாங்குழலோடு வருவான்.
நீராடும் பெண்களின் ஆடை திருடி விளையாடுவான்.
இப்படி குறும்புக்காரனாக, இனியவனாக, காதலனாக இருக்கும் கிருஷ்ணனை விஸ்வரூபத்தில் பார்த்திருக்கிறீர்களா?இவன் வெண்ணெய் திருடி தின்றவனில்லை, நம் மனதை திருடி தின்றவன்.
இதுவரை எங்கும் பார்க்காத திருக்கோலத்தில் 28 அடி உயரத்தில் பாண்டவ தூத பெருமாளாக காட்சியளிக்கிறார் கிருஷ்ணர்.
கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்தில்தான் இப்படி எழுந்தருளியிருக்கிறார், இந்த பாண்டவதூத பெருமாள்.
காஞ்சியில் உள்ள விஷ்ணு கோயில்களில் மூன்று மிகவும் பழமையானவை. உலகளந்த பெருமாள், சொன்னவண்ணம் செய்த பெருமாள் மற்றொன்று நம் பாண்டவதூத பெருமாள்.
முந்தைய காலத்தில் இந்த இடம் திருப்பாடகம் என்று அழைக்கப்பட்டது. தற்போது அதுவும் காஞ்சியாகவே அறியப்படுகிறது.கோயில் எளிமையாக 3 நிலை கோபுரங்களுடன் காட்சியளிக்கிறது.
பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. கருவறைக்குள் செல்லும் வரை இந்த கோயில் எளிமையாகவே தெரிகிறது. ஆனால், கருவறைக்குள் நுழைந்தால், இந்த பூமியையே நாம் மறந்துவிட வேண்டியதுதான். அப்படி ஒரு தரிசனம்.
கண்ணங்கரியனாய், காட்சிக்கழகனாய், அபயகரம் காட்டி அமர்ந்த திருக்கோலமது.
அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு 28 அடி உயரத்தில் திவ்ய தரிசனம். அழகான வேலைப்பாடமைந்த ஆடை அணிந்து, அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் பாண்டவ தூதரை கண்டதும் அத்தனை துயரங்களும் மறந்து அவன் காலடியில் சரணடைய மாட்டோமா என்ற ஏக்கத்தை விதைத்துவிடும் விந்தையை நம் மனதில் ஏற்படுத்திவிடுகிறார் இந்த பெருமாள்.தோஷங்கள், துயரங்கள், வேதனைகளுடன் வருவோர், ஒருமுறை பாண்டவதூத பெருமாள் முன் நின்றுவிட்டால் அத்தனையும் சூரியனை கண்ட பனி போல விலகிவிடும் என்கிறார்கள் பக்தர்கள்.
கோயிலின் வரலாறு
பஞ்ச பாண்டவர்களுக்கு ஐந்து வீடாவது கொடுக்கச் சொல்லி கேட்பதற்காக கவுரவர்களிடம் தூது போகிறார் கிருஷ்ணர். கிருஷ்ணர் வருவதை அறிந்து அவரை கொல்ல சதி செய்கிறார்கள் கவுரவர்கள்.
மூங்கிலால் ஆன பொய்யாசனம் அமைத்து, அதன் கீழ் ஆயுதங்களுடன் மல்லர்களை நிறுத்தி வைக்கிறான் துரியோதனன். கிருஷ்ணருக்கு இது தெரிந்துவிடுகிறது. அடுத்து அவர் செய்ததுதான் இந்த கோயில் எழுந்த வரலாறு.
கொல்ல சதி செய்து அமைக்கப்பட்ட பொய்யாசனத்தில் பாண்டவர்களுக்கு தூது போன பெருமாள் அமர்கிறார் சாதாரணமாக அல்ல. விஸ்வரூபம் எடுத்து அமர்கிறார். பொய்யாசனத்தின் கீழ் இருந்த மல்லர்கள் அழிக்கப்படுகிறார்கள். திருதுராஷ்ட்ரருக்கு பார்வை அளித்த அந்த நேரம் அவருக்கு விஸ்வரூப தரிசனம் தருகிறார் கிருஷ்ணர்.
ஜெனமே ஜெயனும், ஹரித முனிவரும் இந்த விஸ்வரூபத்தை தரிசனம் செய்யும் பேறு பெற்றனர்.
பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோர் தங்கள் பாடல்களில் இந்த ஊரை பாடகமாக குறிப்பிட்டு மங்களாசாசனம் செய்துள்ளனர். தாயார் ருக்மணியாக எழுந்தருளியிருக்கிறார்.கோயில் புராணம்
இந்த கோயிலில் ரோஹிணி தேவி, கிருஷ்ணரை வழிபட்டு, ஞானயோக நிலை அடைந்து, சந்திர பகவானை அடைந்ததாக புராணம் கூறுகிறது. 27 நட்சத்திரங்களில் ஞானசக்தியை உடைய ரோகிணியை திருமணம் செய்து கொண்ட சந்திரன், பின்னர் அக்னி சக்தியாகிய கார்த்திகை தேவியையும், மற்ற நட்சத்திர தேவிகளையும் திருமணம் செய்து கொண்டாராம். ரோகிணி தேவிக்குள் அனைத்து நட்சத்திரங்களும் உள்ளடக்கி இருப்பதால் இங்கு அனைத்து நட்சத்திரக்காரர்களும் வழிபட்டு பலன் பெறலாம்.
ரோகிணி தேவி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனத்தை பெற்றதுடன் இன்றும் மாய ரூபமாக இறைவனை வணங்கி வரம் பெற்ற தலமாக கருதப்படுகிறது. ரோகிணி நட்சத்திரக்காரர்கள் ரோகிணி சக்கரத்தை கிருஷ்ணர் பாதத்தில் வைத்து வணங்கினால், அனைத்து நற்பலன்களையும் பெறலாம்,
இங்கு ஸ்ரீகிருஷ்ணர், தனது பாதத்தை அழுத்தி அமர்ந்து விஸ்வபாதயோக சக்திகளை அருள்வதால், இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்தால் அவர்களின் 72 ஆயிரம் அங்க நாடிகளிலும் விஸ்வபூம்ய ஆகர்ஷண சக்தி பெருகி, சோகங்களுக்கும், துன்பங்களுக்கும் நிவர்த்தி தரும் என்பது ஐதீகம்.
பஞ்ச பாண்டவர்களை போல அடுக்கடுக்கான துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்தவர்கள் யாரும் இல்லை. அவர்களுக்கு துணை நின்றதுபோல, மனித பிறப்பின் துயரங்களை கடக்க இந்த விஸ்வரூப கிருஷ்ணர் துணை நிற்பார்.
கோயிலுக்கு செல்லும் வழி
சென்னையில் இருந்து 80 முதல் 90 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள தெருவில் பாண்டவதூதர் பெருமாளை தரிசிக்கலாம்.
– எழுத்தாளர் பாமா -
Vadiudai Amman Koil Ther
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் தேர் உற்சவம் நடைபெற்றதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க 2௦௦௦ஆண்டு பழமையான திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருகோவிலில் கடந்த 1941ம் ஆண்டு மன்னர் காலத்தில் தேர் உற்சவம் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து 75 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016 ம் ஆண்டு 46 இலட்சம் மதிப்பில் தேக்கு மற்றும் இலுப்பை மரத்தினால் 41அடி உயர திருத்தேர் புதியதாக செய்யப்பட்டு நான்காவது ஆண்டாக இன்று தேர் உற்சவம் நடைபெற்றது. மாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த 10 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று சந்திரசேகர சுவாமி திரிபுரசுந்தரி அம்மனை அலங்கரித்து 108 சங்க நாதம் முழங்க சிவாச்சாரியார்களின் பஜனை கோஷங்களுடன் நான்கு மாட வீதிகளிலும் சுற்றி வரும் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இதனையடுத்து வருகின்ற 18 ம் தேதி சுந்தரர்க்கும் சங்கிலிநாச்சியாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. முன்னதாக பள்ளி மாணவர்கள் முருகர் அம்மன் சிவன் வேடமிட்டு நடனமாடி தேரை வரவேற்றனர் வழி நெடுகிலும் ஏராளமான மக்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
வரலாற்று சிறப்புமிக்க வடிவுடையம்மன் கோவில் ஆண்டு தோறும் மாசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாட்டபட்டு வருகிறது முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஓம் நமச்சிவாய தியாகராய என பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பினர்