Author: லிங்கேஷ்

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   செலவு
    ரிஷபம் – ஆர்வம் 
    மிதுனம் – பொறுமை  
    கடனம் – நேர்மை 
    சிம்மம் – உற்சாகம் 
    கன்னி – கவலை
    துலாம் –  சோர்வு
    விருச்சிகம் – நன்மை 
    தனுசு – புகழ்
    மகரம் – நலம்  
    கும்பம் – உறுதி
    மீனம் – ஆக்கம் 
    சந்திராஷ்டமம்    : அசுவினி
     

  • Indraya Nalla Neram

    இன்றைய நல்ல நேரம்
    பிப்ரவரி 25
    விளம்பி வருடம் – மாசி 13
    25-பிப்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சஷ்டி    கா    11.36
    நட்சத்திரம்    :    விசாகம்    இ    3.58
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அசுவினி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Arthanadeeswarar Mandhiram

    பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் அர்த்தநாரீஸ்வரர் மந்திரத்தை இங்கு காணலாம். இதனை தினமும் துதித்து வந்தால், கணவன் மனைவி இடையே இருக்கும் மனஸ்தாபங்கள் நீங்கி, ஒற்றுமை வலுப்பெறும் 

    அர்த்தநாரீஸ்வரர் மந்திரம் 

    சாம்பேய கௌரார்த சரீரகாயை 
    கர்பூர கௌரார்த சரீரகாய 
    தம்மில்லகாயை ச ஜ்டாதராய 
    நம:சிவாயை ச நம:சிவாய 
    கஸ்தூரிகா குங்கும சர்சி தாயை 
    சிதாரஜ:புஞ்ஜ விசர்சிதாய 
    க்ருதஸ்மராயை விக்ருதய்மராய 
    நம:சிவாயை ச நம:சிவாய 
    ஜணத் க்வணத் கங்கண நூபுராயை 
    பாதாப்ஜ ராஜத் பணி நூபுராய 
    ஹேமாங்கதாயை புஜகாங்கதாய 
    நம:சிவாயை ச நம:சிவாய 
    விசால நீலோத்பல லோசனாயை 
    விகாஸி பங்கேருஹ லோசனாய 
    ஸமேக்ஷனாயை விஷமேக்ஷணாய 
    நம:சிவாயை ச நம:சிவாய 
    மந்தார மாலா கலிதாலகாயை 
    கபால மாலாங்கித கந்தராய 
    திவ்யாம்பராயை ச திகம்பராய 
    நம:சிவாயை ச நம:சிவாய 
    அம்போதர ச்யாமல குந்தலாயை 
    தடித் ப்ரபா தாம்ரஜடாதராய 
    நிரீச்வராயை நிகலேச்வராய 
    நம:சிவாயை ச நம:சிவாய 
    ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுன்முக லாஸ்ய 
    காயை ஸமஸ்தஸம் ஹாரக தாண்டவாய 
    ஜகத்ஜநன்யை ஜகதேகபித்ரே 
    நம:சிவாயை ச நம:சிவாய 
    ப்ரதீப்த ரத்னோஜ்வல குண்டலாயை 
    ஸ்புரன் மஹாபந்நக பூஷணாய 
    சிவான்விதாயை ச சிவான்விதாய 
    நம:சிவாயை ச நம:சிவாய 
    ஏதத்படேத் அஷ்டக மிஷ்டதம் 
    யோ பக்த்யா ஸ மான்யோ 
    புவி தீர்கஜீவீப்ராப்னோதி 
    ஸெளபாக்ய மனந்தகாலம் 

  • 900 Temples

    குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷத்ருஞ்சயா எனும் மலைகளில்தான் பாலிதானா கோயில்கள் என்று அறியப்படும் 900 ஜைனக் கோயில்கள் அமைந்துள்ளன. உலகிலேயே 900 கோயில்கள் உள்ள ஒரே மலையாக ஷத்ருஞ்சயா விளங்குகிறது.  

    ஜைன மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது மெக்கா போன்று. வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த மலைக்கோயிலுக்கு செல்வது புண்ணியம் என்று கருதப்படுகிறது.

    இங்கே இளம் பெண்கள் முதல் முதிய பெண்கள் வரை ஜைனத்துறவிகள், வெள்ளை நிற உடையில் காட்சியளிக்கின்றனர். இப்பெண் துறவிகள் தங்களுடைய தலைமுடியை தாங்களே ஒரு வகை செய்முறையால் பிய்த்து எறிவதாக சொல்லப்படுகிறது.

    1618ஆம் ஆண்டு கட்டப்பட்ட சௌமுக கோயில் இந்த இடத்தின் மிகப்பெரிய கோயிலாகும். மொத்தம் 900 கோயில்களும் 18 கிமீ சுற்றுப்பரப்பிலேயே அமைந்துள்ளது இதன் சிறப்பம்சம். பலர் நடந்தே செல்வது என்பதை பிரார்த்தனையாக வைத்துக் கொள்ள மற்றவர்கள் ரதம் மூலம் சுற்றிவருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான அயல்நாட்டு பார்வையாளர்கள் இங்கு வருகின்றனர். 13ஆம் நூற்றாண்டின் தேஜ்பால் மற்றும், விஷுபால் சகோதரர்கள் இந்த மலைக்கோயிலுக்கு செல்ல கல்பாதை அமைத்ததாக கூறப்படுகிறது.

    ஒவ்வொரு கோயிலுக்கும் பின்னாலும் வேறு வேறு ஸ்தல புராணங்கள் உள்ளன.இந்த புண்ணியஸ் ஸ்தலத்திறு ரெயில், சாலை, மற்றும் வான் வழி போக்குவரத்துகள் உள்ளன. பலிதானா என்பது ஒரு சிறிய ரெயில் நிலையம் இங்கிருந்துதான் இந்த மலைக்கோயிலுக்கு எளிதாக செல்ல முடியும். ரெயில் நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் பஸ் நிலையம் உள்ளது அங்கிருந்து ஏகப்பட்ட பஸ்கள் இந்த மலைக்கோயிலுக்கு விடப்பட்டுள்ளன.

    இந்தக் கோயில்களில் உள்ள விக்ரகங்களில் ஒவ்வொரு இரவும் வெள்ளிப்படிவுகள் தானாகவே ஏற்படுவதாகவும் அதனை அந்தக் குருக்கள் தங்களுக்கு கடவுள் அளித்த பரிசாக நினைத்து அதனை எடுத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

  • Indraya Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   ஜெயம் 
    ரிஷபம் – பயம் 
    மிதுனம் – தெளிவு 
    கடனம் – சாந்தம் 
    சிம்மம் – வெற்றி 
    கன்னி – துன்பம் 
    துலாம் –  தனம் 
    விருச்சிகம் – பெருமை 
    தனுசு – முயற்சி
    மகரம் – உற்சாகம்  
    கும்பம் – தடங்கல்
    மீனம் – சுகம் 
    சந்திராஷ்டமம்    :    ரேவதி

  • Feb 24 Indraya Naal

    பிப்ரவரி 24 – சுபமுகூர்த்த நாள்
    விளம்பி வருடம் – மாசி 12
    24-பிப்-2019 ஞாயிறு  
    சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    பஞ்சமி    ம    12.33
    நட்சத்திரம்    :    சுவாதி    இ    3.58
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Adhisaya sivan koil

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்தின் மீது ரத சப்தமி அன்று சூரியன் ஒளிக்கதிர் படும் அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

    பழமையான இந்த ஆலயம் உள்ள திருத்தலத்தின் புராணப் பெயர் திருவோத்தூர். இத் தலத்தில் தேவர்களுக்கு ஈசன் வேதங்களை உபதேசம் செய்ததாக வரலாறு தெரிவிக்கிறது. 

    இந்த இறைவன் வேதபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சிவலிங்க வடிவில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் மீது தினமும் சூரிய ஒளிக்கதிர் விழுகிறது. இருப்பினும், ரத சப்தமி அன்று இறைவன் மீது சூரியக் கதிர் படுவது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.

    இறைவியின் திருநாமம் இளமுலையம்பிகை என்பதாகும். அன்னைக்கு பாலகுஜாம்பிகை என்ற பெயரும் உள்ளது. ஆலயத்தில் மகா மண்டபத்தில் நின்றபடி சுவாமி, அம்பாள், முருகப்பெருமான், விநாயகர், நவக்கிரகங்கள், தலமரம் என்று எல்லாவற்றையும் தரிசிக்க முடியும். ஒரே இடத்தில் நின்றபடி இவை அனைத்தையும் தரிசினம் செய்வது இந்த ஆலயத்தில் முக்கிய சிறப்பாக உள்ளது.

    சிவபெருமானைப் போற்றி பாடப்பட்ட தேவாரப் பாடல்கள் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240–வது தலமாக விளங்குகிறது. இத்தல இறைவனை திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிப் புகழ்ந்துள்ளனர். இங்குள்ள முருகப்பெருமானை அருண கிரிநாதர் பாடியுள்ளார்.

    இத்தல இறைவனான வேதபுரீஸ்வரரை, விநாயகர், முருகப்பெருமான், பைரவர், திருமால், பிரம்மன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இங்குள்ள சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு, இத்தலத்தில் தீர்த்தமாக விளங்குகிறது. இதன் காரணமாக இந்த ஊர் ‘செய்யாறு’ என்று பெயர் பெற்றுள்ளது. இத்தல விநாயகர் ‘நர்த்தன விநாயகர்’ என்றும், முருகப்பெருமான் ‘சண்முகர்’ என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.

    ஸ்தல புராணம்….
    பார்வதியின் தந்தையான தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். ஆனால் அந்த யாகத்திற்கு உலகை காத்தருளும் சிவபெருமானை அழைக்கவில்லை. இதுபற்றி அறிந்ததும் பார்வதிதேவி வருத்தம் கொண்டாள். தன் கணவனை அழைக்காததற்கு காரணம் என்ன என்பது பற்றி அறிய அவர் தட்சனிடம் சென்றான். ஆனால் பார்வதி தேவி அங்கு செல்வதற்கு சிவபெருமான் சம்மதிக்கவில்லை.

    இருந்தாலும் அவரது சொல்லை மீறி பார்வதிதேவி யாகத்திற்குச் சென்றாள். அங்கு அன்னைக்கு அவமரியாதை ஏற்பட்டது. கணவனின் சொல்லை மீறிச் சென்று அவமானத்தை சந்தித்ததற்காக பாவம் நீங்க, பார்வதிதேவி இத்தலத்தில் வந்து தங்கி இறைவனை நினைத்து தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள்.

    தேவர்களுக்கு வேதத்தை இறைவன் ஓதிவித்தான். சிவபெருமான் தேவர்களுக்கு இத்தலத்தில் வைத்து வேதத்திற்கு பொருள் சொன்னார் என்பதால் இந்தத் தலம் திருவோத்தூர் என்று அழைக்கப்பட்டது என்கிறது தல வரலாறு.
     

  • Thiruvannamalai Car fest

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்கத் தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்த தஙகத்  தேர் பழுதானதால் 3½ ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் போனது.

    ரூ. 3 லட்சம் மதிப்பில் தங்கத் தேர் சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்தது. அந்த பணி நிறைவு பெற்று நேற்று வெள்ளோட்டம் நடந்தது.

    இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேர் உட்பிரகாரத்தில் வலம் வந்தது.
     

  • Thirupathy Theppa Urchavam

    திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. பிப்ரவரி  20-ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதனையொட்டி கோவிலில் நடைபெறும் வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

    நிகழ்ச்சி நிரல்….. 

    பிப்ரவரி 16 – 
    முதல் நாளில் உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயருக்கு தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதைத் தொடர்ந்து உற்சவர்களை தெப்ப தேரில் வைத்து தெப்ப குளத்தை 3 முறை சுற்றி வரப்படும்.

    பிப்ரவரி 17 – 
    ருக்மணி சமேத கிருஷ்ணர் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டு மாடவீதிகளில் வீதி உலா நடக்கிறது. 

    பிப்ரவரி 18 – 
    உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    பிப்ரவரி 19 – 
    19-ந் தேதி உற்சவரான மலையப்பசாமியை தேரில் வைத்து தெப்ப குளத்தை 5 முறை சுற்றி வரப்படும்.

    பிப்ரவரி 20 –
    உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்ப குளத்தை 7 முறை சுற்றி வரப்படும். 
     

  • Feb 23 – Indraya Nalla Neram

    பிப்ரவரி 23
    விளம்பி வருடம் – மாசி 11
    குச்சனூர் சனிபகவான் ஆராதனை
    23-பிப்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    திதித்துவயம்          
    திதி நேரம்    :    சதுர்த்தி    ம    1.55
    நட்சத்திரம்    :    சித்திரை    அ.கா    4.27
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்