Tag: Thirupathy

  • Thirupathy free dharshan ticket

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதத்தில் ரூ. 300 கட்டணத்தில் தரிசனம் செய்யவதற்கான டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதத்தில் ரூ. 300 கட்டணத்தில் தரிசனம் செய்யவதற்கான டிக்கெட்டுகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

    நவம்பர் மாதத்திற்கான இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நாளை மறுதினம் காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    டிக்கெட் பெற்று வரும் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் வருகிற 25ந் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது எனவே பக்தர்கள் http:// Tirupati Balaji. AP. gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரூ.300 கட்டணத்தில் ஏற்கனவே 8 ஆயிரம் டிக்கெட் வெளியிடப்பட்டது. தற்போது அது 10 ஆயிரம் டிக்கெட்டாகவும் இலவச தரிசனத்தில் வெளியிடப்பட்ட 8 ஆயிரம் டோக்கன் தற்போது 12 ஆயிரம் டோக்கனாகவும் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

  • Thirupathy bramorchavam starts

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலத்துடன் தொடங்கியது. இன்று மாலை 5.10 மணிமுதல் 5.30 மணிக்கு இடையே ஆகம முறைப்படி வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று இரவு அங்குரார்ப்பணம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு பெரிய சே‌ஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஏழுமலையான் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.
     
    சீனிவாச பெருமாள் குடியிருக்கும் மலையும் அவர் சயனித்து இருப்பதும் சே‌ஷத்தின் (ஆதிசே‌ஷன்) மீது என்பதால் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நாளை 7 தலைகளுடன் கூடிய பெரிய சே‌ஷ வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்குள் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட உள்ளது. பிரம்மோற்சவ விழாவை காண ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்குள் அனுமதிக்கபடுவார்கள்.

    புரட்டாசி மாதம் என்பதால் தமிழக பக்தர்கள் விரதம் இருந்து கோவிந்த மாலை அணிந்து பாத யாத்திரை வருவது வழக்கம். ஆனால் மாலை அணிந்திருந்தாலும் டிக்கெட் இருந்தால் மட்டுமே திருமலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பிரம்மோற்சவ விழாவை காண வரும் பக்தர்களுக்காக தினந்தோறும் 3 லட்சம் லட்டுகள் இருப்பு வைத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திருமலையில் உள்ள தரிகொண்ட வேங்கமாம்பா அன்னபிரசாத கூடத்தித்தில் அன்னதானம் வழங்கப்படும்.

    பக்தர்களுக்காக திருப்பதி – திருமலை இடையே 200 அரசு பஸ்கள் மூலம் தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • thirupathy ezhumalayan dharshan certificate

    திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்காக வரும் பக்தர்கள் இனி 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சர்டிபிகேட் அல்லது கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் கொண்டு வரவேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இம்மாதம் 25 ஆம் தேதி முதல் பக்தர்கள் இலவச தரிசனம் டோக்கன்களை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை ஏழுமலையானை இலவசமாக தரிசிக்கும் வகையில் இலவச தரிசனம் டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படும்.

    இதனால், இம்மாதம் 26ஆம் தேதி முதல் திருப்பதி உள்ள சீனிவாசம் கட்டிட வளாகத்தில் செயல்படும் இலவச தரிசன கவுண்டர் மூடப்படும். இனிமேல் ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அத்தாட்சி அல்லது மூன்று நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை உடன் கொண்டு வரவேண்டும். மேலும், இம்மாதம் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டோக்கன் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், மீண்டும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 8 ஆயிரம் பேருக்கு இலவச டோக்கன் வழங்கப்படும் நிலையில், அவற்றை வாங்குவதற்கு கடந்த இரண்டு நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். 
     

  • September 22 Thirupathy ezhumalayan

    செப்டம்பர் 22 – திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்
    பிலவ வருடம் – புரட்டாசி 6
    திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்
    22-செப்-2021 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    துவிதியை          
    திதி நேரம்    :    பிரதமை    கா    6.28
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    கா    6.31
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • thirupathy free dharshan

    ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இலவச தரிசனம், கட்டண தரிசனம், விஐபி தரிசனம், விவிஐபி தரிசனம் என பல்வேறு முறைகள் இருக்கின்றன. இதில் சாதாரண மக்கள் இலவச தரிசனத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் கொரோனா இரண்டாவது அலையை கருத்தில் கொண்டு கடந்த மே மாதம் 5ஆம் தேதி முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    அதேசமயம் 300 ரூபாய் சிறப்பு கட்டண நுழைவு தரிசனம் மட்டும் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இதனுடன் கல்யாண உற்சவ டிக்கெட், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன. இந்த டிக்கெட்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் சிபாரிசு கடிதங்கள் மூலம் விஐபி தரிசனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் அனுமதிகப்படா விட்டாலும், ரூ.1,000 கட்டணம் செலுத்தி நடப்பாண்டிற்குள் 2 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ரூ.300 கட்டண தரிசன வரிசையில் சென்று தரிசித்து கொள்ளலாம். பல்வேறு மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் வெளியூர் பயணங்களில் பொதுமக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

    திருப்பதியில் இலவச தரிசனத்தை நிறுத்தி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க தேவதானம் போர்டு முடிவு செய்துள்ளது. இதன்படி நாளை முதல் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 2000 பேருக்கும் மட்டும் முதல் கட்டமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டையை காண்பித்து தரிசனம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • Thirupathy september function

    திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் நடைபெறும் முக்கிய விழாக்கள் மற்றும் விசேஷங்கள் குறித்து பார்க்கலாம். 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விழாக்கள் குறித்த விவரங்களை தேவஸ்தானம் அறிவித்து வருகிறது. அதன்படி இந்தமாதம் நடைபெறும் முக்கிய விழாக்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை (2-ந் தேதி) நாத நீராஜனம் மேடையில் பாலகாண்டா முதல் அகண்ட பாராயணமும், 3-ந் தேதி முதல் 18-ந் தேதிவரை வசந்த மண்டபத்தில் ஷோடா சதினா பாலகாண்ட பாராயண தீட்சையும் நடக்கிறது. 8-ந் தேதி பலராம ஜெயந்தி, 9-ந் தேதி வராஹ ஜெயந்தி, 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி மற்றும் 19-ந் தேதி அனந்த பத்மநாப விரதம் ஆகியவை நடக்கிறது.
     

  • Thirupathy ezhumalayan dharshan ticket

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 1ம்தேதி முதல் 30ம்தேதி வரை சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300க்கான டிக்கெட் ஆன்லைனில் நாளை (இன்று) வெளியிடப்படுகிறது. ஒரு நாளைக்கு 8 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் நாளை (இன்று) காலை 9 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகர்பத்தி விற்பனை திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் செயல் அதிகாரி ஜவகர், கோசாலை மற்றும் ஆயுர்வேத கல்லூரி அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர் பேசியதாவது:ஏழுமலையான் கோயில் உள்பட இதர தேவஸ்தான கோயில்களில் சுவாமிக்கு பயன்படுத்திய பூக்களை கொண்டு பெங்களூரை சேர்ந்த தர்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஏழு விதமான நறுமணங்கள் கொண்ட அகர்பத்திகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை செப்டம்பர் முதல் வாரத்தில் பக்தர்களுக்காக விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். 

    திருமலையில் உள்ள லட்டு கவுன்டர், தேங்காய் கவுன்டர், கோசாலை, திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயில், திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில், விஷ்ணு நிவாசம் மற்றும் சீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை ஆகிய இடங்களில் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். எஸ்.வி. ஆயுர்வேத மருந்தகம், கோவையைச் சேர்ந்த ஆசிர்வாத் நிறுவனத்துடன் இணைந்து, 15 வகையான பஞ்சகவ்ய பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

  • thirupathy free dhrashan

    கொரோனா பெரும் தொற்று பரவல் அச்சம் காரணமாக இம்மாதம் 11 ம் தேதி திங்கட்கிழமை இரவு முதல் ஏழுமலையானை தரிசிப்பதற்கான  இலவச தரிசன டோக்கன் வழங்கல் நடைமுறை ரத்து செய்யப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கரோனா பெரும் தொற்றுபரவல் நாடு முழுவதும் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், அதனை தடுத்து நிறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் பெரும் தொற்று பரவலை தடுத்து நிறுத்தும் வகையில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.அதனை ஒட்டி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன டோக்கன்களை இம்மாதம் பதினோராம் தேதி இரவு  முதல் ரத்து செய்ய இருப்பதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    இலவச தரிசன டோக்கன்களை வாங்குவதற்காக அதிக அளவில் பக்தர்கள் திருப்பதிக்கு தினமும் வருகின்றனர். இதுதவிர திருப்பதியிலும் கரோனா பெரும் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. எனவே கரோனா  பரவலை தடுத்து நிறுத்தும் வகையில் பக்தர்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் நடைமுறை இம்மாதம் 11 ஆம் தேதி இரவு முதல் நிறுத்தி வைக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.இலவச  தரிசன டோக்கன்கள் மீண்டும் வழங்குவது பற்றிய அறிவிப்பு நிலைமை சீரான பின் வெளியிடப்படும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • thirupathy perumal dharshan

    உலகில் பழமையான மலைகளில் இரண்டாம் நிலையில் உள்ள சிலாதோரணம்  இங்கு தான் உள்ளது  சங்க இலக்கியங்களில்  திருமலையானுக்கு இட்ட பெயர் வெறுங்கை வேடன்.
       
    கோவில் கட்டிய வரலாறு அறிய முடியவில்லை  ஆகாசராஜனின் தம்பி தொண்டைமான் என்கிறது தலபுராணம். சோழர் பல்லவர்  பாண்டியர் சாளுக்கியர்  விஜய நகர  மன்னர்களால்  பராமரிப்பு செய்த கல்வெட்டு உண்டு  பெரும்பாலும் தமிழ் கல்வெட்டுகள் தான் உள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் இராமானுஜர் ஆச்சார அனுஷ்டங்கள் முறைப்படுத்தப்பட்டது.

    மதுரை மீனாட்சி ஸ்ரீ ரங்கம் கோவில்கள் இஸ்லாமிய படையெடுப்பில்  சூறையாடப்பட்ட போது  தென் இந்தியாவில் தப்பிய கோவில் இது மட்டுமே  (இதன் பிண்ணனியில் ஒரு செவிவழி கதை  மலைமீது என்ன கோவில் என்ற போது வராகர் என்பதை பன்றி கோவில் என்றதால்   இஸ்லாமியர் போகவில்லை என்று  சொல்கிறார்கள் )

    வருடத்தில் 365 நாள்கள் மட்டுமே  வருடத்தில் இங்கு 450 திருவிழா நடைபெறுகிறது தலவிருட்சம் புளியமரம். பெருமாளுக்கு நைவேத்தியம் தயிர் சாதம் மட்டுமே மண் பாத்திரத்தில் .

    சந்திர ஸ்தலம் என்னும் நமது நம்பிக்கையோடு சம்பந்தப்பட்ட விஷயம். திருப்பதி குலதெய்வம் என்று சொல்பவர்கள் அதிக உண்டு  ஒரு காலத்திலும் அப்படி இருக்க வாய்ப்பில்லை  தமிழராக பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு குலதெய்வம் என்பது கிராம தேவதைகளாக தான் இருக்கும்   சிலரின் தவறான கருத்து முறையில் முன்னோரின் தொடர்பின் மை காரணமாக  பெயர் பெற்ற கோவிலை குலதெய்வமாக அங்கீகாரம் செய்து கொண்டார்கள்.

    திருப்பதி செல்லும் முன் குலதெய்வத்தை வழிபட்டு தான் புறப்பட்டு செல்ல வேண்டும்  (திருப்பதி தேவஸ்தான அறிவிப்பில் இந்த வார்த்தை அறிவுறுத்தலில் இடம் பெற்ற இருக்கும்  )

    முன்பு பல நாட்கள் பயணப்பட்டு திருப்பதி செல்வார்கள்  இப்போது  இப்படி போய்  அப்படி வந்துவிடலாம். அகோபில முதலாம் ஜீயர் சுவாமிகள் ஸ்ரீ  சடகோப யதீந்திரா மகா தேசிகர்  தான் முதலில் மலைமீது செல்ல படி அமைத்தார்கள்
              
    மலைக்கு செல்லும் இரண்டாம் நடை வழி  ஸ்ரீ வாரி மெட்டு  திருப்பதிக்கு 20 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீ நிவாசமங்காபுரத்தில் மலைக்கு போகலாம் ஆந்திரப் பிரதேச மக்கள் இந்த வழியில் தான் மலைக்கு நடைபயணம் செல்வார்கள்.

    திருவண்ணாமலை எப்படி மலையே சிவனாக இருப்பது போல திருப்பதி மலையே பெருமாளாக நினைத்து மலையேறும் முன் மலையை தொட்டு வணங்க வேண்டும் (காலால் மிதித்து நடப்பதற்கு பெருமாளிடம்   உத்தரவுபெற இதன் பிண்ணனியில் எனக்கு ஒரு அனுபவம் உண்டு  2003 ல் திருப்பதி  புராணம் படித்தேன் அதை படித்து விட்டு  சரி மலைக்கு போகும் போது  மிதியடி போடாமல் நடக்க வேண்டும் என்று எண்ணி கொண்டேன் அதன் பிறகு மூன்று வருடங்கள் கழித்து தான் மலைக்கு போனேன் இந்த மிதியடி விஷயம் மறந்து விட்டேன் காரில் இருந்து இறங்கி  ஒரு அடி எடுத்து வைத்தேன் புது மிதியடி  அறுந்தது    அந்த நொடி தான் நினைவுக்கு வந்தது  என் சங்கல்பம்   அதோடு சரி அந்த முறை மூன்று நாட்களாக மலையில் தங்கி இருந்தோம்  மூன்று நாட்களும் வெறும் காலாக தான் நடந்தேன்  அதன் பிறகு இன்று வரை மலைக்கு போகவில்லை)

    திருப்பதி போனால் பலர் நேராக பெருமாள் தரிசனம் தான் செய்கிறார்கள்   இப்படி செய்வது தவறு. சிவன் கோவிலில் முதலில் சிவ தரிசனம் செய்து விட்டு மற்ற பரிவாரங்களை தரிசனம் செய்ய வேண்டும் ஆனால் பெருமாள் கோவிலில் முதலில்  அனுமான் தாயார் கருடன்   பிறகு தான் பெருமாள் தரிசனம் செய்ய வேண்டும்.

    திருமலைக்கு செல்லும் முன் முதலில்  அலமேலுமங்காபுரம் என்னும் திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்து தான் தான் மலைக்கு செல்லவேண்டும். 

  • Thirupathy Free Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வழங்கப்படும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியையொட்டி 25ஆம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக ஏற்கனவே ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் மூன்றாம் தேதி நள்ளிரவு முதல் சொர்க்கவாசல் ஆகம முறைப்படி மூடப்பட உள்ளது. அடுத்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 

    இந்நிலையில் 4ஆம் தேதி முதல் வழக்கம்போல் நடைபெறக்கூடிய தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள்  31-ஆம் தேதி வரையிலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு நாடு முழுவதும் உள்ள  பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இலவச  தரிசன டிக்கெட்டுகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் திருப்பதியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ் மற்றும் விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வு அறையில் வழங்கப்பட உள்ளது. 

    எனவே இந்த கவுண்டர்களில் டிக்கெட்டுகளை பெரும் பக்தர்கள் 4-ஆம் தேதி காலை முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்படி ஒருநாள் முன்னதாக தரிசனத்திற்கான இலவச டிக்கெட்களை ஆதார் அடையாள அட்டை வைத்து வழங்கப்படும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.