Tag: Thirupathy

  • thirupathy ezhumalayan free dharshan

    ஏழுமலையானை தரிசனம் செய்ய இம்மாதம் 16ஆம் தேதி முதல் திருப்பதி உள்ள கவுண்டர்களில் மேலும் 10,000 பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு இதுவரை ஆன்லைன் மூலம் மட்டுமே 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

    இந்த நிலையில் கட்டுப்பாடுகளில் கொண்டுவரப்பட்டுள்ள தளர்வுகள் மற்றும் கொரோனா பரவலில் ஏற்பட்டுள்ள மந்தநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இம்மாதம் 16ஆம் தேதி முதல் திருப்பதி உள்ள கவுண்டர்களில் மேலும் 10,000 பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    இதுபற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி, அறங்காவலர் குழுவின் ஒப்புதல் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் திருப்பதியில் கட்டப்பட்ட வரும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாய் மற்றும் ஒன்றரை கோடி ரூபாய் என்ற அளவில் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு உதய அஸ்தமன சேவை டிக்கெட் ஒன்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    உதய அஸ்தமன சேவை டிக்கெட் மூலம் வருடத்தில் ஒரு நாள் அவற்றை பெரும் பக்தர்கள் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் அனைத்து சேவைகளையும் தரிசிக்க முடியும். நன்கொடையை ஆன்லைன் மூலம் செலுத்தி உதயாஸ்தமன சேவை டிக்கெட்டுகளை பக்தர்கள் பெறுவதற்கு தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் நிறைவடைந்து இம்மாதம் 16ஆம் தேதி முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

    ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் பக்தர்கள் கலந்து கொள்வது பற்றி இம் மாதம் நடைபெறவிருக்கும் அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
     

  • thirupathy ezhumalayan sannadhi thirappu

    திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். 

    முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். 

    அந்நேரத்தில் ""கௌசல்யா சுப்ரஜா ராம… என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும். சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க,  வெங்கடாசலபதி அருகில் "போக ஸ்ரீனிவாச மூர்த்தி" பெருமாள் விக்ரஹத்தைக் கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர்.  சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். 

    சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து "நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும்.  "விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு.  இந்த சேவையைக் காண கட்டணம் வசூலிக்கப்படகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.

    திருப்பதி மலையிலுள்ள ஆகாய கங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். பிரம்மோற்ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும். 

    ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள்.  பின்னர் உத்தரணி (ஸ்பூன் போன்றது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள். 

    முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை.  மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். 
    பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும்.  சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும். இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும். சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். 

  • Thirupathy ezhumalayan dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாக பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.தலைமை செயல் அதிகாரி ஜவகர் தலைமை தாங்கினார்.அவர் பேசியதாவது;-

    வருகிற 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி 13-ந்தேதி அதிகாலை 1.45 மணிக்கு நித்யபூஜைகள் தொடங்கப்படும். வைகுண்ட ஏகாதசி அன்று மாடவீதியில் தங்கரதத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

     14-ந்தேதி வைகுண்ட துவாதசி நாளில் அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    ஒமைக்ரான் தொற்றைக் கருத்தில் கொண்டு 48 மணி நேரத்திற்கு முன் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு டோஸ்கள் போட்டதற்கான சான்றுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பதி பழைய கெங்கையம்மன் கோவில் அருகே 7 ஏக்கரில் மலர்ச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. அதிலிருந்து தினமும் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பூஜைகள் அலங்காரங்களுக்கு 100 முதல் 150 கிலோ பூக்கள் எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 29,652 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 14,916 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.75 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

  • Thirupathy thirumalai new road

    கடப்பா மாவட்டம் குக்கலதொட்டியில்  இருந்து திருப்பதி மலைக்கு அன்னமய்யா மார்க்கம் வழியாக மூன்றாவது மலைப்பாதைக்கு  திட்ட அறிக்கை தயார் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

    திருப்பதி ஏழுமலையான் மீது 32,000 கீர்த்தனைகளை இயற்றிப் பாடிய தாளப்பாக்கம் அன்னமய்யா தன்னுடைய வாழ்நாளில் கடப்பா மாவட்டத்தில் உள்ள குக்கலதொட்டி பகுதியில் இருந்து திருமலைக்கு நடந்து  சென்றார்.

    பலமுறை அந்த வழியாக அன்னமய்யா திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு நடந்து சென்றிருக்கிறார். எனவே அந்த பாதைக்கு அன்னமய்யா மார்க்கம் என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் அந்த வழியில் பக்தர்கள் யாரும் இப்போது நடந்து செல்வது கிடையாது.

    இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக திருப்பதி மலைப்பாதையில் உள்ள 2வது பாதை கடும் சேதமடைந்தது. இதற்குமுன் எப்போதும் ஏற்படாத வகையில் மலைப்பாதை சேதமடைந்த காரணத்தால் மூன்றாவது பாதை ஒன்றை அமைக்க வேண்டிய கட்டாயம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஏற்பட்டுள்ளது.

     இந்த நிலையில் அன்னமய்யா மார்க்கம் வழியாக மூன்றாவது மலைப்பாதை அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அதிகாரிகளுடன் அன்னமய்யா மார்க்கம் பகுதிக்குச் சென்று திருப்பதி மலைக்கு மூன்றாவது சாலை அமைப்பது பற்றி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இங்கிருந்து திருப்பதி மலையில் உள்ள பாரிவேட்டை மண்டபம்  23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

     இதே வழியில் பாரிவேட்டை மண்டபம் பகுதிக்கு அன்னமய்யா நடந்து சென்றிருக்கிறார். எனவே மிகவும் புராதனமான இந்த வழியில்  23 கிலோமீட்டர் தூரம் திருப்பதி மலைக்கு மூன்றாவது சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தயார் செய்ய தேவஸ்தான பொறியியல் துறை அதிகாரிகளுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

  • December 29 2021 Thirupathy charabishegam

    டிசம்பர் 29 – திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்
    பிலவ வருடம் – மார்கழி 14
    திருப்பதி ஏழுமலையான் சகஸ்ரகலசாபிஷேகம்
    29-டிச-2021 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    தசமி    கா    11.53
    நட்சத்திரம்    :    சுவாதி    இ    11.08
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரட்டாதி,ரேவதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Thirupathy vip break dharshan ticket booking

    நாளை 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடர்பான  தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு.

     அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களுக்கான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடர்பான விஐபி பிரேக் தரிசனம் டிக்கட்டுகளை தேவஸ்தானம் நாளை 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிட உள்ளது.

     திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிதாக துவங்கிய ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன டிக்கட்டுகள் வழங்கப்படுகிறது.

     ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பக்தர்கள் வழங்கும் நன்கொடையை பயன்படுத்தி தேவஸ்தான நிர்வாகம் நாடு முழுவதும் ஏழுமலையான் கோவில்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

    இந்த நிலையில்
     ஜனவரி முதல் தேதி அன்று ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் 1000 ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடர்பான விஐபி தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் நாளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது. 

    டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் ஆன்லைன் மூலம் ஒவ்வொரு டிக்கெடிற்க்கும் தலா 10,000 ரூபாய் நன்கொடையும்,டிக்கட் கட்டணமாக தலா 500 ரூபாயும் செலுத்தி  முன்பதிவு செய்யலாம்.

    வைகுண்ட ஏகாதசி தினமான 13ஆம் அடுத்த மாதம் தேதி அன்று பக்தர்கள் ஏழுமலையானை வழிபடும் வகையில் 300 ரூபாய் டிக்கெட்டுகளை ஆயிரம் எண்ணிக்கையில் நாளை மாலை ஆன்-லைனில் வெளியிடப்பட உள்ளது.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் 13ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும்.

     எனவே பக்தர்கள் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்வதற்கு வசதியாக 14ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நாள் ஒன்றுக்கு 2000 என்ற எண்ணிக்கையில் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் தரிசனம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

     டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் ஸ்ரீ வாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை மற்றும் டிக்கெட் கட்டணம் 500 ஆகியவற்றை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

     அதேபோல் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் ஸ்ரீவாணி அறக்கட்டளை திட்டத்தின்கீழ் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 200 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளையும்,சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 300 விஐபி பிரேக் தரிசன டிக்கெட் களையும் தேவஸ்தானம் நாளை மாலை ஆன்-லைனில் வெளியிட உள்ளது அவற்றையும் பக்தர்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடையாக 10,000 ரூபாயும் டிக்கெட் கட்டணம் 500 ரூபாயும் செலுத்தி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

  • Thirupathy ezhumalayanai ezuppa thiruppavai

    திருப்பதி ஏழுமலையானை துயில் எழுப்ப வரும் மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் திருப்பாவை பாடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 16-ந்தேதி மார்கழி மாதம் பிற்பகல் 12.26 மணிக்கு பிறப்பதால் மறுநாள் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை திருப்பாவை சேவை நடத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் 11 மாதங்கள் வரை ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை அதிகாலை நேரத்தில் துயில் எழுப்பப்பட்டு அன்றைய நாளின் இதர சேவைகள் தொடர்ந்து நடைபெறும்.

    ஆனால் தமிழ் மாதமான மார்கழி மாதத்தில் மட்டும் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடி ஏழுமலையான் துயில் எழுப்பப்படுகிறார். இந்த ஆண்டு 16-ந்தேதி மார்கழி மாதம் பிற்பகல் 12.26 மணிக்கு பிறப்பதால் மறுநாள் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 14-ந்தேதி வரை திருப்பாவை சேவை நடத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    கோவிந்தராஜர் கோவில், பத்மாவதி தயார் கோவில், கபில் தீர்த்தம், ஸ்ரீநிவாச மங்காபுரம் ஆகிய தேவஸ்தான கோவில்களிலும் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

  • Thirupathy calander online sale

    ஆங்கிலப் புத்தாண்டுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் காலண்டர், டைரிகளை வெளியிடுகிறது. அதன்படி, 2022-ம் ஆண்டுக்கான தேவஸ்தான காலண்டர்கள் மற்றும் டைரிகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனில் அமேசான் மூலமாகவும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தேவஸ்தானத்தின் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் உள்ள ‘பப்ளிகே ஷன்ஸ்’ மீது கிளிக் செய்து, டெபிட்/கிரெடிட் அட்டை மூலம் பணம்செலுத்தலாம். இவர்களுக்கு தபால் மூலம் காலண்டர்கள், டைரிகள் வழங்கப்படும்.

    இதுதவிர காலண்டர்கள், டைரிகளை அதிகமாக வாங்க விரும்புவோர், “தலைமை நிர்வாக அதிகாரி, தி. தி. தேவஸ்தானம், திருப்பதி” எனும் பெயரில் டி.டி. எடுத்துஅதனை, “சிறப்பு அதிகாரி, புத்தக விற்பனை மையம், பிரஸ்காம்பவுண்ட், கே.டி. ரோடு, திருப்பதி” எனும் முகவரிக்கு அனுப் பலாம். 

    வண்ணமயமான 12 பக்க காலண்டர்ரூ.130, பெரிய டைரி ரூ.150, சிறிய டைரிரூ.120, டேபிள்டாப் காலண்டர் ரூ.75, ஏழுமலையானின் தனி காலண்டர் ரூ.20, பத்மாவதி தாயார் தனி காலண்டர் ரூ.15, பத்மாவதி தாயார் சமேத ஏழுமலையான் காலண்டர் ரூ.15, தெலுங்கு பஞ்சாங்கம் ரூ.30 என விலை நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி, திருமலையில் உள்ள அனைத்து புத்தக மையங்கள், சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களில் இவை கிடைக்கும்.

  • Thirupathy bakthargal dharisana ticket

    ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் பஸ், ரெயில், தனியார் வாகனங்கள் மூலம் திருமலையை வந்தடைகின்றனர்.

     
    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் நீடித்து வருவதால் பக்தர்களின் வருகையை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன் ஒருபகுதியாக 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம் முறை மட்டும் அமலில் இருந்து வந்தது.

    கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பின்னர் இலவச தரிசனம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு பஸ் டிக்கெட்டுடன் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.

    கொரோனா நெருக்கடி காரணமாக இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதையொட்டி பஸ் டிக்கெட் உடன் தரிசன டிக்கெட் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்க உள்ளனர். அதன்படி, நாள்தோறும் ஆயிரம் டிக்கெட்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, பெங்களூரு, சென்னை, வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து புறப்படும் ஆந்திர அரசு பஸ்களில் சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஏசி பஸ்களில் திருப்பதிக்கு செல்ல முன்பதிவு செய்யும் போது கூடுதலாக ரூ 300 கட்டணம் செலுத்தினால் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டும் வழங்கப்படும். விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. 

  • Thirupathy Thiruppam Kidaikkuma

    யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம். இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும்.  ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

    கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

    வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும். செல்வம் மலை போல குவியும். உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்யுடன் உள்ளார்கள்.

    அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

    கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.

    நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும். சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால் நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும். திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.

    திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும். அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு. பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.