Blog

  • Kalki Avadharathi Malayappa swamy

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்திக் எட்டாவது நாளான் இன்று கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி பாயும் தங்க குதிரையில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கலியுகத்தில் துஷ்ட சக்திகளை வதம் செய்வதற்காக பாயும் தங்க குதிரை மீது பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று இரவு  மலையப்ப சுவாமி கல்கி அவதாரத்தில் நான்கு மாடவீதியில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

    பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான நாளை காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. திருமலையில் வராஹ சுவாமி கோயில் எதிரே உள்ள மண்டபத்தில்  ஸ்ரீ தேவி பூதேவி தயார் சமேத மலையப்ப சுவாமிக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறவுள்ளது.

    பின்னர் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் நடைபெறவுள்ளது. இதில் பல்லாயிரகணக்காண பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்பதால் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பக்தர்கள் புனித நீராட தேவஸ்தான ஏற்பாடுகள் செய்துள்ளது. நாளை முழுவதும் தெப்பகுளத்தில் புனித நீராடலாம் என்பதால் பக்தர்கள் தள்ளுமுள்ளு இல்லாமல் தேவஸ்தான அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு அளித்து புனித நீராட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.
     

  • October 8 Rasi Palan

    அக்டோபர் 8 …  விஜய தசமி ராசி பலன்…. 
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – லாபம் 
    ரிஷபம் – நிறைவு
    மிதுனம் – விருத்தி
    கடனம் – வரவு
    சிம்மம் – அன்பு
    கன்னி –  நன்மை 
    துலாம் –  நலம்  
    விருச்சிகம் – மறதி
    தனுசு –     உதவி
    மகரம் –   நஷ்டம் 
    கும்பம் – பொருமை 
    மீனம் – ஆதரவு
    சந்திராஷ்டமம்    – புனர்பூசம், பூசம்
     

  • October 8 Vijaya Dhasami

    அக்டோபர் 8 விஜயதசமி
    08-அக்-2019 செவ்வாய்  
    விகாரி வருடம் – புரட்டாசி 21
    விஜயதசமி
    கொலு எடுக்க காலை 7.30 – 9.00 மணி
    ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்
    மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் தேர்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    மா    5.44
    நட்சத்திரம்    :    திருவோணம்    இ    11.30
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    புனர்பூசம்,பூசம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Thirupathy Car Festival

    திருப்பதி ஏழுமலையான்  கோயிலில் பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான நாளை காலை 7 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்  பாலீக்க உள்ள ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத மலையப்ப சுவாமி

    அலைபாயும் மனதை சிதரவிடாமல் கட்டுபடுத்தி சரிரம் என்னும் ரதத்தை நல் வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி் பூதேவி தயார்களுடன் பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை 7 மணி முதல் 9.30 மணி வரை  மகா ரதம் எனப்படும் தேரில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழுங்கியபடி வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

    ரத உற்சவத்தின் போது  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுவாமியின் ரதஉற்சவத்தில் பங்கேற்று தரிசனம் செய்தால் மறு ஜன்மம் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கலியுகத்தில் துஷ்ட சக்திகளை வதம் செய்வதற்காக பாயும் தங்க குதிரை மீது பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாள் மலையப்ப சுவாமி கல்கி அலங்காரத்தில் இன்று இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
     

  • Kulasekarapattinam Dusera

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் – அருள்வந்து ஆக்ரோசமாக ஆடும் காளி வேடமணிந்த பக்தர்கள்.

    திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு உலகபுகழ்பெற்றதாகும். இந்த திருவிழா கடந்த 29ம்தேதி காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

    விரதமிருக்கும் பக்தர்கள் மாலையணிந்து காப்பு கட்டிய பின்னர் காளி , அம்மன், ஆஞ்சநேயர் , விலங்குகள் , மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு வகையான வேடங்கள் அணிவது இத்திருவிழாவின் சிறப்பாகும்.மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்ற வேடம் அணிந்தவர்கள் தத்ரூபமாக நடந்துகொள்வது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

    வேடமணிந்த பக்தர்கள் குழுவாக இணைந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துவர். தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் நாளை நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும். இதில் 15 லட்சம் பக்தர்கள்வரை கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
     

  • Chandra prabai vaganathil Thirupathy Ezhumalayan

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திர பிரபை வாகனத்தில் லட்சுமி நாராயணன் அலங்காரத்தில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தை ஒட்டி தினந்தோறும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பெரிய சேஷம்,  சின்ன சேஷம்,  அன்ன,  முத்துப்பந்தல்,  கற்பக விருட்சம், சிம்மம், கருட,  மோகினி , கஜ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

    பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான இன்று இரவு சந்திரபிரபை வாகனத்தின் மீது லட்சுமி நாராயணன்  அலங்காரத்தில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

    சூரியன் அக்னி வடிவம், சந்திரன் சாந்த வடிவம் என்பதால் இரண்டும் தனது அம்சமே என்னும் விதமாக சூரியன் மற்றும் சந்திர வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. வீதிஉலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 
     

  • Srinivasa Perumal Bramorchava ther

    சேத்துப்பட்டு அருகேஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவில் மேல்மலையில் உள்ள சீனிவாசபெருமாள் சன்னதி புரட்டாசி பிரமோற்சவ பெருவிழா முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத சினிவாசபெருமாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் அமர்ந்து சிம்மலையை கிரிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுத்தனர்.
     

  • Kannigaparameswari 2 crore alangaram

    விசாகப்பட்டினத்தில் உள்ள கன்னிகாபரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி உற்சவத்தில் 2 கோடி பணம் மற்றும் 4 கிலோ தங்கத்தால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கன்னிகாபரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நவராத்திரி உற்சவம் நரைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தில் இன்று மகாலட்சுமி தாயார் ரூ 2 கோடி ரூபாய் பணம், 4 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. 

    இதற்காக பக்தர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து அலங்கரிக்கப்பட்டது. இதனை காண பக்தர்கள் திரண்டு வந்து பார்த்து வருகின்றனர்.

  • Navarathiri Saraswathi Devi Pugazh

    வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
    வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
    கொள்ளை யின்பம் குலவு கவிதை
    கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
    உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
    ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
    கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
    கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்.

    மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
    மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
    கீதம் பாடும் குயிலின் குரலைக்
    கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
    கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
    குலவு சித்திரம் கோபுரம் கோயில்
    ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
    இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.
     

  • October 7 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – உற்சாகம் 
    ரிஷபம் – போட்டி
    மிதுனம் – பொறுமை 
    கடனம் – ஓய்வு
    சிம்மம் – ஆதாயம் 
    கன்னி –  நட்பு
    துலாம் –  நஷ்டம் 
    விருச்சிகம் – செலவு 
    தனுசு –     கவலை
    மகரம் –   பெருமை
    கும்பம் – பகை
    மீனம் – பயம் 
    சந்திராஷ்டமம்    – திருவாதிரை, புனர்பூசம்