Blog

  • சிவனுக்கு கண்களை அர்ப்பணித்து கண்ணப்பன் மோட்சம் அடைந்த ஸ்ரீகாளஹஸ்தி ! 

    ஆந்திர மாநிலத்தில் வைணவ தளங்களில் புகழ்பெற்றுமையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலையும்" செய்வ சமயத்தின் புகழ்பெற்ற கோயில்களில் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலையும் குறிப்பிடலாம், சொர்ணமுகி நதிக்கரையில் அமைந்துள்ள இது பஞ்சபூத தலங்களில் வாயு லிங்க க்ஷேத்திரமாக கருதப்படுகிறது.

    வேடன் கண்ணப்பன் சிவன் மேல் கொண்ட பக்தியால் தன் இரண்டு கண்களையும் அர்ப்பணித்து மோட்சம் பெற்றதும்,  சிலந்தி (ஸ்ரீ), பாம்பு (காள), யானை (அஸ்தி) ஆகிய மூன்றும்  இறைவனை வழிபட்டு மோட்சம் பெற்ற ஸ்ரீ காளாஸ்தி வரலாற்றை அறிந்து கொள்வோம்" 

    ஆந்திர மாநிலத்தில் உள்ள உட்டுகுரு என்ற சிறு கிராமத்தில் வேடர்  குலத்தில் பிறந்தவர் கண்ணப்பர். பாசுபத அஸ்திரத்தை பெற அர்ஜுனன் தவமிருந்தபோது, அவனது வீரத்தை சோதித்த சிவபெருமான் அர்ஜுனனின் போர் திறனை. கண்டு அவனுக்கு  அஸ்திரத்தை வழங்கியதோடு,  மீண்டும் கலியுகத்தில் அவதரிக்கும் வரத்தையும் அளித்தார். அதன்படி அர்ஜுனன் கலியுகத்தில் வனப்பகுதியில் வேடவ குளத்தில் திண்ணனாக அவதரித்தபோது. வேட்டையாடச் சென்ற திண்ணன் சிறு குன்றின் மீது இருந்த சிவலிங்கத்திற்கு அந்தணர் ஒருவர் பூஜை செய்து  நிவேதனம் செய்வதை கண்டு, சிவபெருமான் மீது பக்தி கொண்டார். வழிபாட்டு முறை தெரியாத வேடன்  திண்ணன். தானும் சிவலிங்கத்திற்கு வழிபாடு செய்ய எண்ணி அருகில் இருந்த சொர்ணமுகி ஆற்றிலிருந்து வாயில் நீரை உறிந்து வந்து  சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, தான் வேட்டையாடி கொண்டு வந்த விலங்குகளின் மாமிசத்தை நிவேதனமாகப் படைத்து, காட்டில் இருந்து மலர்கள், இலைகள் கொண்டு வந்து மாலையாக கட்டி, அதை சிவலிங்கத்திற்கு அணிவித்து வழிபட்டான். அப்போது திண்ணனின் பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒருநாள் வழக்கம் போல் திண்ணன் வழிபட வந்தபோது தனது ஒரு கண்ணில் ரத்தப் பெருக்கை ஏற்படுத்தினார்.

    இதனைக் கண்டு பதறிய திண்ணன் சிவலிங்கத்தில் வழியும் ரத்தத்தை நிறுத்த முயற்சித்தும் பலன் இல்லாததால்,  சிவனின் கண்களுக்குப் பதிலாக தன் கண்ணைத் தோண்டி எடுத்து, அர்ப்பணித்தபோது லிங்கத்தின் மற்றொரு கண்ணில் இருந்தும் ரத்தம் வழிந்தது, இதனால் மனம் வருந்திய அவன் தனது மற்றொரு கண்ணையும், கையில் வைத்திருந்த ஈட்டியால் தோண்டி எடுக்க முற்பட்டபோது அதனைத் தடுத்து நிறுத்தி திண்ணனின் பக்தியில் மகிழ்ந்து சிவபெருமான்  நேரில் தோன்றி ஆட்கொண்டார். சிவபெருமானுக்கு தனது கண்ணையே" கொடுத்ததால் அன்று முதல் கண்ணப்பன் என்ற திருப்பெயரால் அவர் அழைக்கப்பட்டார். 63 நாயன்மார்களில் நாயன்மார்களில் கண்ணப்பரும் ஒருவராக திகழ்கிறார். மேலும் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலின் புராணக் கதைகளில் ஒன்றாக மற்றொரு சம்பவமும் கூறப்படுகிறது.- அதில் ஒரு முறை  வாயு பகவான்  கற்பூர லிங்கத்தை பிரதிஷ்டை செய்து,  அதன் முன்பாக பல ஆண்டுகள் தவம் தவம் புரிந்து வந்தான்.

    அதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், வாயு பகவான் முன்பு தோன்றி, வாயு பகவானே, ஓரிடத்தில் நிற்கும்  தன்மையில்லாத நீ, பல ஆண்டுகள் சிறு நகர்வு கூட இல்லாமல், ஓரிடத்திலிருந்து தவம் புரிந்தமையால் உனக்கு, மூன்று வரங்களை அளிக்கிறேன்"என கூறினார்.  அதன்படி வாயு பகவான், 'தான் உலகம் முழுவதும் எங்கும்.  நீக்கமற நிறைந்திருக்க வேண்டும்’ அனைத்து  உயிரின் அந்தராத்மாக செயல்பட வேண்டும்' தான் ' வழிபட்ட கற்பூர லிங்கம் தன்னுடைய   பெயராலேயே வழங்கப்பட வேண்டும்’, என மூன்று வரங்களை கேட்டான். அதன்படி   சிவபெருமான் வரம் அளித்தார். இதனால்  வாயு பகவான் இல்லாமல் உயிர்கள் இயங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே" சிவலிங்க வழிபாடு ஏற்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் எழுந்தருளி உள்ள இறைவன் திருப்பெயர்:   ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர். அம்பிகையின் திருப்பெயர்: அருள்மிகு ஸ்ரீஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை, ஞானாம்பிகை, ஞானசுந்தரி தல விருச்சகம் வில்வம்,       தீர்த்தம் : ஸ்வர்ணமுகி, பொன்முகலியாறு. இங்கு சம்பந்தர், அப்பர், சுந்தரர், நக்கீரதேவ நாயனார், பரணதேவ நாயனார், அகத்திய மாமுனிவர், பட்டினத்தார், பத்ரகிரியார்,  நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், சிலந்தி, பாம்பு, யானை, முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • கொள்ளையடித்து பொருள் ஈட்டி கோவில் கட்டிய மன்னன் “வழிப்பறியில் ஈடுபட்டபோது திருமாலிடம் பிடிபட்டது எப்படி ?

    இறைவன் ஆட்கொண்டு விட்டால் பக்தர்கள் அவனுக்கு தொண்டு புரிந்து பேர் ஆனந்தம் அடைவர் அவரவர் பொருளாதார நிலை, எண்ணங்களுக்கு ஏற்ப பாமாலை சுட்டுவது, பூமாலை தொடுத்து கொடுப்பது, ஆலயங்களை தூய்மைப்படுத்துவது போன்ற தொண்டுகளை புரிவது உண்டு, ஆனால் கொள்ளை அடித்து அதில் கோவில் கட்ட எண்ணிய மன்னன் வழிப்பறியில் ஈடுபட்டபோது திருமாலிடம், பிடிபட்ட கதையை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

    காவேரி வலப்பகுதியான திருவாலி நாட்டின் திருக்குறையலூர் கிராமத்தைச் சேர்ந்த அல்லி நாட்டான் – வல்லித்திரு தம்பதியரின் மகனான" நீலன் கிபி ஏழாம் நூற்றாண்டு பிறந்தான். இளம் வயதிலேயே கல்வி கற்க பயின்று பல கலைகளும் கற்று'போர் வீர சாகச கலைகளிலும் தேர்ச்சி பெற்றான் நீலன். திருமங்கை கிராம தலைவனான இவனது ஆற்றலை அறிந்த எட்டிக் கடம்பன் சோழ முத்தைரயன்  அரசன் அவனை தனது சேனாதிபதியாக நியமித்தார், பின்  நடைபெற்ற பல்வேறு போர்களில் வெற்றியடைந்த முத்தைரயன் அரசன் நீலனை கௌரவிக்கும் வகையில், அவனை ஆலிநாட்டிற்கு அரசனாக நியமித்து எதிரிகளுக்கு காளானாக விளங்கியதால், பரகாலன்  என்ற பட்டத்தையும் வழங்கினான். இதன் காரணமாக' நீலனை நாட்டு மக்கள்  திருமங்கை மன்னன் என அழைத்தனர்.

    பின்னாளில் திருமங்கை மன்னன்" குமுதவல்லி என்ற பெண்ணை மணந்தார், திருமாலின் பக்தையான இவருடைய மனைவி குமுதவல்லி திருமணத்தின் போது, ஒரு நிபந்தனை வைத்து, திருமாலுக்கு திருக்கோவில் கட்ட வேண்டும், தினமும் 1008 வைணவர்களுக்கு விருந்து அளிக்கும்படி வேண்டினார், அரசியின் விருப்பப்படி திருமங்கை மன்னன் திருத் தொண்டர் களுக்கு நாள்தோறும் அமுது படைத்தும், மற்றொரு புறம் கோவில் திருப்பணிகை மேற்கொண்டும் வந்தான். இதனால் அரசு கருவூலத்தில் இருந்த தனது அனைத்து செல்வங்களையும் இழந்து, அடியார்களுக்கு உணவளிக்க வழி இன்றி திருமங்கை மன்னன் தவித்தான். இருந்த போதும் எப்போதும் போல்,  உணவு அளிக்க முடிவு செய்து, செல்வந்தர்களிடமும், பக்கத்து நாடுகளுக்குச் சென்று பொன், பொருள்களை கொள்ளை அடித்து கொண்டு வந்து வழக்கம்போல் உணவளித்து வந்தான்.

    திருமங்கை மன்னன் தவறான வழியில் தனது அடியார்களுக்கு துண்டு புரிவதை விரும்பாத திருமால்,   ஒரு நாள் வனப்பகுதியில் கொள்ளையடிக்கும் நோக்கோடு, தனது கூட்டத்துடன்  திருமங்கை மன்னன். பதுங்கி இருப்பதை அறிந்து, கொள்ளையை தடுக்கும் நோக்கோடு' திருமால் தானே தன் தேவியருடன் மானுட ரூபம் எடுத்து ஏராளமான தங்க, வைர, வைடூரிய அபகரணங்களை  அணிந்துகொண்டு  திருமண கோலத்தில் இரட்டை மாட்டு வண்டிகளில் சுற்றம் சூழ கூட்டமாக அவழியாக வந்தார், திருமங்கை மன்னன் திருமண கோஷ்டியை  கண்டதும் ஆயுதங்களுடன்  அவர்களை சுற்றி வளைத்து, அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களை  கழற்றி தருமாறும் மறுத்தால் கொன்று விடுவதாகவும்" மிரட்டினான். இதனால் அச்சமடைந்த திருமண கூட்டத்தினர், தங்கள் அணிந்திருந்த அனைத்து நகைகளையும் கழற்றிக் கொடுத்தனர்.

    அப்போது மணமகன் ஆகிய திருமாலின்  வலது காலின் ஒரு விரலில் மட்டும் வைரக்கல் பதிக்கப்பட்ட மெட்டி  அகற்றப்படாமல் இருந்ததை கண்டு அதையும் கழற்றிக் கொடுக்க வற்புறுத்தினார். மாப்பிள்ளை வேடத்தில் இருந்த திருமால் இந்த மெட்டியை கழற்றி இயலவில்லை என்றார், திருமங்கை மன்னன் அதனை  தன் பற்களால் மாப்பிள்ளையின் விரலில் இருந்து கடித்து கழற்ற முயன்றான் முடியவில்லை, பிறகு வழிப்பறி செய்த பொருட்களை மூட்டையாக கட்டி தூக்கிச் செல்லும் முயன்றனர், அவர்களால் அதை நகர்த்த கூட முடியவில்லை, இதனால் கோபம் கொண்ட திருமங்கை மன்னன்' மணமகனை நோக்கி,    மூட்டையை தூக்க முடியாமல் நீ ஏதோ மந்திர தந்திர வேலையை செய்து விட்டாய்.  அந்த மந்திரத்தை சொல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன் என கர்ஜித்தான்.

    மாப்பிளை (திருமால்) என் அருகில் வா அந்த மந்திரத்தை கூறுகிறேன் என்றார், திருமங்கை மன்னனும் திருமால் அருகே சென்றான். எம்பெருமானாகிய இறைவன், அவரது காதில், "ஓம் நமோ நாராயணா" என்ற திருமந்திரமான திருவெட்டெழுத்தை உபதேசித்தார். அதைக் கேட்ட "திருமங்கை மன்னனின் அகக்கண் திறந்தது தாயினும் இனிய அன்பின் வடிவமான  நலம் தரும் சொல்லை நான் அறிந்து கொண்டேன்"  என இறைவனுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறி திகைத்து நின்றார். மணப்பெண் கோலம் பூண்டிருந்த மகாலட்சுமியும் கருணை பொழியும் திரு  கண்களால் திருமங்கை மன்னனை பார்த்து அருளினால், பிறகு தோன்றிய இறைவனும் இறைவியும் சுற்றத்தாறுடன்  மறைந்து விட்டனர்.

    இந்நிகழ்வுக்குப் பின் திருமங்கை மன்னனுக்கு ஞானத் தெளிவு பிறந்தது உள்ளத்தில் பேரொலி எழுந்தது உடன் திருமாலை நோக்கி பாசுரங்கள் பாடத் தொடங்கினார்.

    "வாடினேன் வாடினேன் மனத்தாற்
    பெருந்துயர் இடும்பையிற் பிறந்து
    கூடினேன், கூடி இளையவர் தம்மோடு"
    அவர்தரும் கலவியே கருதி
    ஓடினேன், உயவதோர் பொருளால்
    உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
    நாடினேன், நாடி நான் கண்டு கொண்டேன்நாராயணா என்னும் நாமம்"

    என நாராயணனை பாடி பல்வேறு பல்வேறு இடங்களுக்கு சென்று திருமாலின் மீது பாசுரங்களை பாடி எம்பெருமானின் அருளால் திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வார் என போற்றுதலுக்கு உள்ளாகி அரங்கனின் திருப்பாத கமலத் திருவடியில் சேர்ந்தார் என்பதே" திருமங்கை மன்னன் வழிப்பறியில் ஈடுபட்டு திருமால் இடம் சிக்கிய புனித வரலாறு ஆகும். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • மகா சிவராத்திரி நாளில் 63 நாயன்மார்களும் கைலாய நாதனுக்கு பாமாலை சுட்டும் அற்புத நிகழ்வை நீங்களும் காண வேண்டுமா ?

    சிவபெருமான் தனது திருவிளையாடல் மூலம், தனது அடியார்களுக்கு பல்வேறு சோதனைகளை கொடுத்து அதில் அவர்கள் படும் அவதியை கண்டு மகிழ் பவர் மட்டுமல்ல, அதிலிருந்து அவர்களை மீட்டெடுத்து மோட்ச நிலை வழங்குவதற்காக தானே" வெவ்வேறு வடிவங்கள் எடுத்து நேரடியாக சென்று ஆட்கொண்ட கதைகள் சிவபுராணத்தில் ஏராளம், அப்படி சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட 63 நாயன்மார்கள் குறித்து நாம் அறிந்திருப்போம், அவர்களின் வரலாற்றை தான் நாம் சிவபுராணமாக போற்றி வருகிறோம்"அந்த 63 நாயன்மார்களும் ஒரே" நேரத்தில் கூடி சிவபெருமானுக்கு பாமாலை சூட்டுவது எப்போது தெரியுமா ?

    உலகத்தில் பிறளையும் ஏற்பட்டபோது. உலக உயிர்கள் அனைத்தும் அபயம் தேடி கைலாயம் சென்று சிவபெருமானின் திருவடியை பற்றின. அப்போது பார்வதி தேவி உயிரினங்களைக் காக்க சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தால், பார்வதி தேவியின் தவத்தை மெச்சிய சிவபெருமான். தனது கருணையால் உலகை சமப்படுத்தி மீண்டும் உயிரினங்களை படைத்தார், அப்போது பார்வதி தேவி தான் மேற்கொண்ட தவத்தின் பலன் உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் சென்றடைய அருள் புரியுமாறு" இறைவனை வேண்டினாள். அதன்படி சிவபெருமான் அருளிய தினமே" மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த மகா சிவராத்திரி ஆனது" பூலோகத்தில் உள்ள ஆலயங்களில் மட்டுமல்ல ஏழு லோகங்களிலும் கொண்டாடப்படுவதாகவும், அப்போது தேவர்கள், மாமுனிகள், ரிஷிகள், கந்தவர்களும் விரதத்தை கடைப்பிடித்து கண் விழித்து சிவபெருமானை போற்றி வணங்குவார்கள்.

    இதேபோன்று மானுடர்களாக அவதரித்து சிவன் ஆட்கொண்டதால் பிறப்பில்லா நிலை அடைந்து இறைவனடி சேர்ந்த 63 நாயன்மார்களும் மகா சிவராத்திரி அன்று கைலாயத்தில் ஒன்றாக கூடி சிவனைப் போற்றி பாமாலை சூட்டி வழிபடுவதாகவும், இந்த அற்புத நிகழ்வை சிவராத்திரி விரதத்தை கடைபிடிக்கும் நீங்களும் காண வேண்டுமா ? அதற்கு சிவனை நோக்கி ஆழ்ந்த தியானத்தில் மனதை ஒருங்கிணை படுத்துங்கள் பின் கைலாயத்தில் இருப்பது போன்று வாவித்துக் கொண்டு ஓம் நமச்சிவாய"ஓம் நமச்சிவாய"என்ற திருமந்திரத்தை ஆத்ம ரீதியாக உச்சரித்து உங்கள் அவ கண்ணை திறந்து பாருங்கள் கைலாயநாதன் உங்கள் கண்முன்னே" முழுவதும் நாயன்மார்கள் பாமாலை சுற்றி அவரை போற்றுவதையும் நாம் உணரலாம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • உலக உயிர்கள் இன்புற்று வாழதவக்கோலம் பூண்ட ஊமையவள்’ ஈசன் அருளால் வரமாக கிடைத்த மகா சிவராத்திரி ! 

    மகா சிவராத்திரி எப்படி உருவானது? புராண காலத்தில் உலகம் பிரளயம் ஆன போது, அதில் இருந்த உயிரினங்கள் அவையும் தேடி" சிவபெருமானிடம் சென்றன.  இதனால் உலகம் செயலற்று போனது. இதனைக் கண்ட, அன்பின் வடிவமான உமையவள்  உலகம் மீண்டும் இயங்குவதற்கும், உயிரினங்கள் இன்புற்று வாழ்வதற்காகவும் கடும் தவம் செய்தால், அன்னையின் தவக்கோளத்தை கண்ட சிவபெருமான்   அப்போது, மீண்டும் உயிரிகளை உயிர்களை படைத்து ஆட்கொண்டார்.

    எம்பெருமானின் அருளால்.உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கியது. உமையவள் சிவனை நோக்கி விரதம் இருந்து வழிபட்ட அந்நேரத்தில் அனைத்து உயிரினங்களும்  விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டன. அந்த நாளை சிவராத்திரி ஆகவும் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில்  மகா சிவராத்திரி விரத வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று  முக்தி அடைய வேண்டும் என உமையவள் வேண்டி ஈசனிடம் வரம் பெற்றமையால், நந்தி தேவர், சனாகதி முனிவர் உள்ளிட்ட முக்கோடி தேவர்களும் மகா சிவராத்திரி விரதம் இருந்து நற்பலன்களை பெற்றதாக பல்வேறு புராண கதைகள் வெவ்வேறு வடிவங்களில் கூறுகின்றன.

    அன்றைய நாள் முதல்  பல யுகங்களாக இந்த மகா சிவராத்திரி தினத்தை தற்போது வரை தேவர்களும், மாமுனிகளும், கந்தவர்களும் கடைப்பிடித்து வருவதாக ஐதீகம்,மகா சிவராத்திரி தினத்தன்று  மாலை சூரியன் மறைந்தது முதல் மறு தினம்  சூரியன் உதயமாகும் வரை சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபட்டால் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும் என்பது திண்ணம். ஐதீகமாகும்.மகா சிவராத்திரி அன்று  அன்று தேவாரம், திருவாசகம், திருமுறைகள் மற்றும் சிவபுராணம் படிப்பது மிகவும் சிறப்புடையதாகும், மகா சிவராத்திரி திருநாள் அன்று சிவபெருமானுக்கு'பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், திருநீர் ஆகியவற்றை கொண்டு பக்தியுடன் நாளை எங்களுக்கு சென்று அபிஷேகம் செய்ய வேண்டும், இதனால் லிங்க வடிவான சிவபெருமான் ஆனந்தம் அடைந்து அருளை அள்ளி வழங்குவார், அன்பே சிவம்" அவன் அருளே" பெரும் செல்வம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • புற்றுக்குள் மறைந்த முருகன் கந்தகோட்டம் வந்தது எப்படி?

    ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
    உத்தமர் தம் உறவுவேண்டும்,
    உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்,
    உறவுகல வாமைவேண்டும்.
    பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும், பொய்மை
    பேசா திருக்கவேண்டும்.
    பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
    பிடியா திருக்கவேண்டும்.
    மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை,
    மறவா திருக்கவேண்டும்.
    மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
    வாழ்வில்நான் வாழவேண்டும்.

    தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே,
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி,
    சண்முகத் தெய்வமணியே

    என அருள் பிரகாச வள்ளலார் சுவாமிகள் தனது திரு அருட்பாவில் கந்தகோட்டை முருகன் குறித்து இவ்வாறு பாடி பணிந்துள்ளார். அத்தகைய சிறப்பு மிக்க கந்தகோட்டை முருகன் வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம்.

    போரூர் அடங்கிய நிலப்பரப்பை பாளையக்காரர்கள் ஆண்டு கொண்டு இருந்தபோது, மராட்டியர்கள் பகை கொண்டு படை எடுத்து வந்தனர். அப்போது இருதரப்பிற்கும் ஏற்பட்ட போரில் மராட்டிய படையினர் பெரும் அழிவை ஏற்படுத்தியதோடு, வழிபாட்டு தளங்களையும் விட்டு வைக்காமல் கோவிலுக்குள் புகுந்தும் செல்வங்களையும் அபகரித்தனர். இதனைக் கண்டு மனம் வருந்திய பொன்னம்பல தம்பி பிரான் அடிகள், திருப்போரூர் கோவிலில் இருந்த முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தியை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று வைக்குமாறு கட்டளை இட்டார். அதன்படி மூலவர் திரையிட்டு மூடப்பட்ட நிலையில் உற்சவமூர்த்தி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இறைவனுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதை நினைத்து தம்பி பிரான் அடிகள் மனம் வரைந்தினார். பின் போரூர் கோவிலுக்குள் புகுந்த மராட்டிய படை கலக காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். அப்போது மூலவர் முருகப் பெருமான் திரை நீக்கி அங்கிருந்து புற்று ஒன்றில் புகுந்தது மறைந்ததாகவும், முருகப்பெருமானை வேண்டி பக்தர்கள் பக்தியுடன் உருகியதால் மராட்டிய படையினரின் பிடியிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பிய அப்பகுதி மீண்டும் செல்வ செழிப்புடன் மேலோங்கி வளர்ந்ததாகவும் பெருமையுடன் பக்தர்கள் தெரிவித்தனர்.

    பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் ஆடி கிருத்திகை அன்று காவடி எடுத்து பாதயாத்திரை ஆக திருப்போரூர் சென்று முருகனை வழிபட்ட பின்னர், இருப்பிடம் திரும்பி கொண்டு இருந்தபோது, சற்று ஓய்வு எடுப்பதற்காக மரத்தடி ஒன்றில் தங்கினர். அப்போது, பக்தர் ஒருவர் கனவில் தோன்றிய முருகன், அருகில் இருந்த புற்றில், தான் சிலையாக இருப்பதை உணர்த்தினார்.

    புற்றிலிருந்த சிலையை எடுத்த பக்தர்கள், ஊர் திரும்பிய போது குறிப்பிட்ட ஓரிடத்தில் பாரம் அதிகமானதால் கையில் இருந்த முருகன் சிலையைக் கீழே வைத்தனர். பின்னர் அங்கிருந்து அதை எடுக்க முற்பட்டபோது முடியாததால், அங்கேயே திருக்கோயில் எழுப்பினர். முருகனுக்கு “கந்தசுவாமி” என்ற திருப்பெயரிட்டு வழிபட்டனர். அந்த இடம்தான் பெத்தநாயக்கன்பேட்டை என அழைக்கப்பட்ட, அவ்விடம் முருகன் கோயில் அமைந்த பிறகு, “கந்தகோட்டம்” என தற்போது அழைக்கப்படுகிறது.

    இங்குள்ள முருகனை பம்பன் குமாரகுருபரதாச சுவாமிகள், இராமலிங்க அடிகளார் ஆகியோரும் பாமாலை சூட்டி உள்ளனர். அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் கந்தகோட்டம், சென்னை பாரிமுனையில்அமைந்துள்ளது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • தமிழகத்தின் திருப்பதி: சிவபெருமான் அருள் பாவிக்கும் ஏழுமலை!

    தென்னகப் பகுதியில் ஆன்மீக பயணம் மேற்கொண்ட அகத்திய மாமுனிவர், திருமால் வாசம் செய்யும் திருமலையின் பெருமை குறித்து பிறர் கூற அறிந்து, இதுபோன்று சிவபெருமானுக்கு ஏழுமலை இல்லையே என ஏங்கினாராம். இதனை அறிந்த அகத்திய முனிவரின் உள் அகத்தில் குடி கொண்ட சிவபெருமான், "தனது தொண்டரின் விருப்பத்தை நிறைவேற்றும்படியாக" ஏழு குன்றுகள் அமைந்த வெள்ளையங்கிரி மலை மீது எழுந்தருளி, தன்னை அங்கு வந்து தரிசிக்குமாறு அகத்திய மாமுனிவருக்கு ஞானத்தின் மூலமாக உணர்த்தினாராம்.

    அதன்படி, அகத்திய மாமுனிவர் வெள்ளையங்கிரி மலை சென்று, அங்கு சுயம்புவாக அவதரித்த சிவ லிங்கத்தை வழிபட்டு தவத்தில் ஈடுபட்டார். சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்திய மாமுனிவர் தவம் புரிவதை கண்ட அந்த ஏழு குன்றுகளும் சிவனை நோக்கி தானும் தவம் புரிந்தன. அவைகளின் பக்தியை மெச்சி சிவபெருமான் தானும் தவக்கோலம் பூண்டதாக வரலாறு.

    அதன்படி, பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இதன் பெருமை அறிந்து இப்பகுதிக்கு வந்த போது, வேடன் ஒருவன் தனது நிலப்பரப்பில் அனுமதி இன்றி நுழைந்த அர்ஜுனனுடன் போர் புரிந்ததாகவும், பின் அந்த வேடன் தன் வேடத்தை கலைத்து சிவபெருமானாக காட்சியளித்த போது, அவரை பக்தி பெருக்குடன் வணங்கிய அர்ஜுனனுக்கு சிவபெருமான் தனது பாசுபத ஆயுதத்தை அளித்து அருள் பாவித்தார்.

    இங்கிருக்கும் ஏழு குன்றுகளும், நம் உடலில் உள்ள “ஏழு யோக சக்கரங்களை” குறிப்பதாக சாஸ்திர வல்லுநர்கள் கூறுகின்றனர். இமயத்தில் உள்ள கைலாயத்திற்கு யாத்திரை செல்ல இயலாதவர்கள் "தென் கைலாயம்" என ஆன்மீக அன்பர்களால் அழைக்கப்படும். வெள்ளையங்கிரி யாத்திரை சென்று அங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்தால், ஏழு பிறவியிலும் கைலாய யாத்திரை சென்று வந்த பலன் கிட்டும் என்பது திண்ணம்.

    கோவை மாவட்டம் பூண்டி கிரிமலையானது 5 1/2 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஏழு குன்றுகள் சிவபெருமான் அருள் பாவிக்கும் தென் திருப்பதி ஆகும். கோவை மாநகரிலிருந்து மேற்கே சுமா 36 கி.மீட்டதூரத்தில் மேற்குத் தொடச்சி மலையின் அடிவாரத்தில் அமையப்பெற்ற பிரசித்தி பெற்ற தென் கைலாயம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பல்வேறு ரிஷிகளும், மாமுனிகளும், சித்தர்களும், ஞானிகளும் ஈசனை வேண்டி தவம் புரிந்து பிறப்பில்லை நிலை அடைந்த பெருமைக்குரிய இடமாகும்.

    – பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • அடியார்க்கு வழிபாடு முடிந்த பின்னரே ஸ்ரீரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடு?

    ஸ்ரீரங்கம் கோவிலில் ராமானுஜரின் தியான திருமேனி, அடியார்க்கு வழிபாடு முடிந்த பின்னரே ஸ்ரீரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது ஏன்?

    வைணவ சான்றோர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர் ஸ்ரீராமானுஜர். கி.பி. 1017 ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். இவரது தந்தை ஆருலகேசவ சோமயாகி, தாயார் காந்திமதி அம்மையார். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ராமானுஜர் தனது தந்தையிடமே வேதங்களை கற்று தேர்ச்சி பெற்றார். 16 வயது தாண்டிய போது தந்தையை இழந்த இவர் 17 வயதில் தஞ்சம்மாள் என்பவரை மனம் முடித்தார். பின்னர் யாதவப்பிரகாசர் என்பவரிடம் வேத கல்வியை பயின்றார்.

    ஆனால் ராமானுஜருக்கும் யாதவப்பிரகாசருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ராமானுஜரை கொன்று விடுவதற்கு அவருடைய குரு திட்டமிட்டார். அதன் பின், ராமானுஜர் திருக்கச்சி நம்பியிடம் மாணவராக சேர்ந்து வேத பாடங்களை கற்க தொடங்கினார். அங்கு பல அவமானங்களை சந்தித்த பின், தனது குருவான திருக்கச்சி நம்பிகள் இடம் உபதேசம் பெற்றவர் ஸ்ரீ ராமானுஜர்.

    இந்த மந்திர உபதேசத்தை வேறு யாரிடமும் கூறக்கூடாது என்று குருநாதர் திருக்கச்சி நம்பிகள் கூறிய போதும், அதனை பொறுப்பெடுத்தாமல் உலகத்திற்கு எடுத்துரைத்தார். “ஓம் நமோ நாராயணாய” என்ற திருமாலின் மந்திரத்தை எடுத்துரைத்தார். தன் குருவான திருக்கச்சி நம்பிகளின் வார்த்தையை மீறி, உலகிற்கு எடுத்துரைத்தார். இதனால் அவர் நரகம் செல்வார் என்று சாபங்கள் கொடுக்கப்பட்டு இருந்தது.

    ஆனால், ராமானுஜர் தன் கடைசி காலம் வரை எம்பெருமானுக்கு தொண்டுகள் புரிந்து, 120 ஆவது வயதில் உயிர் நீத்தார். மறு தினமே உடல் மேலெழுந்து வந்தது, இது அனைவரையும் வியக்க வைத்தது.

    தியானம் செய்தபடி அமர்ந்த அவருடைய திருமேனிக்கு சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை தைலம் தடவப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோவிலில் இவருக்கு வழிபாடு நடந்த பின்னரே, ஸ்ரீ ரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • பொன்.கோ.முத்து, திருவள்ளூர்
  • ஆலயம் ஒன்று, மும்மூர்த்திகள் மூன்று, திருக்காட்சி நம்பிகள் கண்ட பிரம்மோற்சவம் மூன்று!

    வெங்கடேச பெருமாள் மீது பெரும் பக்தி கொண்ட ராமானுஜ சுவாமிகள் குருவான திருக்கச்சி நம்பிகள், பெருமாளிடம் தன்னால் இயன்ற ஏதேனும் கைங்கரியம் செய்ய எண்ணினார். அதன்படி கையில் விசிறியுடன் திருவரங்கம் சென்று விசிறி சேவை புரிய அனுமதித்தருமாறு பெருமாளிடம் வேண்டியபோது, அவர் காவிரி கரையில் இருப்பதால் எப்போதும் குளிர்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்து சேவையை ஏற்க மறுத்தார்.

    பின்பு திருக்கச்சி நம்பிகள், அங்கிருந்து நேராக திருமலை சென்று வெங்கடேச பெருமாளிடம் தான் வந்த நோக்கம் குறித்து தெரிவித்த போது, ஏற்கனவே மழையின் மீது இருப்பதால் அதிக அளவில் குளிர் காற்று வீசும் காரணத்தால் தன்னை சுற்றி குளிர்ச்சியான சூழலில் நிலவுவதை எடுத்துரைத்து சேவையை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் காஞ்சி மாநகரை வந்த திருக்கச்சி நம்பிகள் அங்கு உக்கிரமாக இருந்த ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு தனது விசிறி சேவையை புரிந்து பூரிப்படைந்தார்.

    பூவிருந்தவல்லி வாழ்ந்த திருக்கச்சி நம்பிகள், நாள்தோறும் காஞ்சி மாநகரில் சென்று தனது கைங்கரியத்தை செய்து வந்த நிலையில், நாளடைவில் வயது முதிர்வு அடைந்தும், விடாமல் பெருமாளுக்கு கைங்கரியம் செய்வதை தனது வாழ்நாள் கடமையாக எண்ணி சேவையை தொடர்ந்தார். அவரது பக்தியில் உருகிய வரதராஜ பெருமாள், பூவிருந்தவல்லி தோன்றி, திருக்கச்சி நம்பிகளின் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்று காட்சியளித்து அவரை ஆட்கொண்டார். அவர் காட்சி அளித்த அந்த இடத்தில்தான் ஆலயம் எழிலோடு காட்சி அளிக்கிறது.

    இங்கு திருக்கச்சி நம்பிகள் கையில் விசிறியுடன் சேவை புரிகிறார். மூலவரான ஸ்ரீ வரதராஜப் பெருமாள், புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின் சிரத்தில் சூரியனுடன் இருப்பதால் இது சூரிய தலமாகவும் போற்றப்படுகிறது. மேலும், திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள், திருவரங்கம் ஸ்ரீ அரங்கநாதர், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆகியோரும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி இருப்பதும், மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவம் நடைபெறுவது தனி சிறப்பு.

    அப்போது ஒரே பரம்பொருளான எம் பெருமான் மூவராக கருட வாகனத்தில் திருக்கச்சி நம்பிக்கு காட்சி தரும் அழகை காண கண் கோடி போராது. தாயார், மல்லிகை மலர் தோட்டத்தில் அவதரித்ததால் அருள்மிகு ஸ்ரீ 'புஷ்பவல்லி' என்று அழைக்கப்படுகிறாள். அன்னை பூவில் இருந்து வந்தவள் என்பதால், இந்த ஊர் 'பூவிருந்தவல்லி' என்று அழைக்கப்பட்டு தற்போது, அதுவே மருவி 'திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி' என அழைக்கப்படுகிறது.

    • பொன்.கோ.முத்து, திருவள்ளூர்
  • பார்வதி தேவியின் மடியில் படுத்து உறங்கும் சிவன்

    தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது ஆதிசேஷன் வெளிப்படுத்திய ஆலகால விஷத்தை தேவர்களை காக்கும் பொருட்டு சிவபெருமான் அதனை தான் அருந்திய கதை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், விஷத்தை உண்ட சோர்வில் சிவன் பார்வதியின் மடியில் ஒரு மழலையே போல் படுத்து உறங்கிய இடம் எங்கே உள்ளது தெரியுமா? வாருங்கள் அங்கு செல்லலாம்.

    தேவலோகத்தில் ஒருமுறை இந்திரன் மகாவிஷ்ணுவின் உதவியோடு அமிர்தம் வேண்டி பாற்கடலை கடையை முற்பட்டான். தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் மற்றொரு புறமாக நின்று, வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். போட்டி போட்டு கொண்டு இரு தரப்பினரும் வாசுகி பாம்பை பிடித்து இழுத்ததால், வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் விஷத்தை கக்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்து தங்களைக் காப்பாற்றுமாறு அனைவரும் கதறினர். சிவபெருமானால் தன் அருகில் இருந்த சுந்தரரை அனுப்பி, விஷத்தை சேகரித்து கொண்டுவர அனுப்பினார். சுந்தரரும் பாற்கடலில் தோன்றிய விஷம் அனைத்தையும் பந்து போல் உருட்டி, சிவபெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தார். சிவன் அந்த கொடிய நஞ்சினை வாயில் போட்டு விழுங்கினார். விஷம் உடலுக்குள் செல்வதை தடுக்க, சிவனின் கழுத்தை பார்வதி தேவி இறுக்கமாக கைகளால் அழுத்தி பிடித்துக் கொண்டாள். இதனால் விஷம் சிவனின் தொண்டையிலே நின்று விட்டது. இதன் காரணமாகத்தான் ஈசனை ‘நீலகண்டன்’ என்று போற்றுகிறோம்.

    விஷத்தை அருந்திய பின்னர், உமையவளுடன் சிவபெருமான் கயிலாயம் போகும். வழியில் அவருக்கு சோர்வு ஏற்பட்டது. அதனால் அவர் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து களைப்பு நீங்க உறங்கிய அந்த இடமே சுருட்டப்பள்ளி என்று கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ளது அருள்மிகு ஸ்ரீ சர்வ மங்களாம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ பள்ளிகொண்ட ஈஸ்வரர் திருக்கோவில். இங்குள்ள மூர்த்திகள் பலர் குடும்ப சமயத்தைத் தரராக காட்சியளிப்பது தனி சிறப்பு. வைணவத் தலங்களில் ஆதிசேஷன் மீது அரங்கநாதன் சைனகுளத்தில் காட்சி அளிப்பது போன்று, சிவபெருமான் இங்கு மங்களாம்பிகையின் மடியில் ஒரு மழலையை போல் பள்ளிகொண்ட ஈஸ்வரராக சயன கோலத்தில் காட்சியளிக்கும் சிறப்புடைய ஒரே கோவில். உமையவள் ‘சர்வமங்களா அம்பிகை’ என்ற திருப்பெயருடன் அருள் புரிய.

    பிரகார வளாகத்தில் நந்தீஸ்வரர், பிருகு முனிவர், பிரம்மதேவன், ஸ்ரீ மகாவிஷ்ணு, மார்க்கண்டேயன், நாரத மாமுனி, சந்திரன், சூரியன், குபேரன், அகத்திய மாமுனிவர், உள்ளிட்ட பரிவார தெய்வங்களோடு விநாயகப் பெருமான், வள்ளி-தெய்வயானை சகோதரராக முருகப்பெருமான் ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர்.

    • பொன்.கோ.முத்து திருவள்ளூர்
  • உலக உயிர்களுக்கு அறிவை வழங்கும் புதனின் தந்தை யார்  ? 

    நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்த இடத்தில் உள்ள முதல் கிரகம் புதன் ஆகும். கிரகங்களில் இளையவராக இருப்பதால், சந்திரனுக்கு அடுத்து வேகமாக சுழலக் கூடிய ஆற்றல்மிக்க கிரகமாக புதன் இருக்கிறான். சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகம் புதன் என்பதால், புதனுக்கு சூரிய ஒளி அதிகமாகக் கிடைக்கும். இதன் காரணமாக புதன், புத்தி, அறிவு, ஞானம் உள்ளவராக இருப்பதாக ஜோதிட வல்லுநர்கள் கணிக்கின்றனர். இத்தகைய ஆற்றல் மிக்க புதன் யார்? அவனது வரலாறு என்ன, வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

    குருபகவானின் மனைவியான தாரை, ஒரு சமயம் சந்திரனுடைய இல்லத்திற்கு செல்கிறாள். அப்பொழுது, சந்திரனின் அழகை கண்டு மயங்கிய தாரை தன் கணவன் குரு பகவானை மறந்து சிலகாலம் சந்திரன் இருப்பிடத்தில் வசிக்கிறாள். அப்போது சிவபெருமானை நோக்கி குரு பகவான் தவத்தில் இருந்ததால், மனைவி தாரையைப் பற்றி அவர் நினைக்கவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சந்திரன், தாரையை தன் மனைவியாகவே நினைத்து சிலகாலம் அவளோடு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டான். பின் தவம் முடிந்து குரு பகவான் தாரையைத் தேடினார். இதனால் தாரை, சந்திரனிடமிருந்து விடை பெற்று மீண்டும் குருவிடம் வந்து சரண் அடைந்தாள். அவ்வேளையில் தாரை கர்ப்பவதியாக இருந்தாள். குருவோடு சிலகாலம் வாழ்ந்ததும், தாரா ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். அந்த குழந்தைக்கு புதன் என்று பெயரிட்டாள். திருமண வாழ்க்கைக்கும் தாம்பத்திய நிலைக்கும் மாறாக பிறந்த அந்த குழந்தை சீக்கிரமே பிறந்து விட்டது. இந்த குழந்தைக்கு உண்மையான தந்தை யார்? என்று குரு பகவானுக்கே சந்தேகம் உண்டானது. அவரது சந்தேகம் நியாயமானது என்பதை அறிந்த பிரம்ம தேவன் புதனுடைய உண்மையான தந்தை சந்திரன் தான் என்பதை குருவுக்கு எடுத்துரைத்தார் என்பது புராண கதைகளில் ஒன்று.

    பிரம்ம தேவன் புதனை அழைத்து "சூரியனுக்கு அருகில் அமர்க" என கட்டளையிட்டதால், புதனும் அதனை ஏற்று சூரியனுக்கு அருகே வந்து அமர்ந்தான். சூரியனைப் போலவே சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து ஒன்பது கிரகங்களில் ஒன்றாக விளங்கும் வரத்தினை பெற்றான். புதன் தன் கைப்பட பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் ஒன்று தற்போதும் காசியில் உள்ளது. புதன் மீண்டும் கடும் தவம் மேற்கொண்டு, ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்தின் அதிபதியாக தேர்வு செய்யப்பட்டான் என்கிறது வேதம். உலக உயிர்களுக்கு அறிவை அளிப்பதால், புத்தி போதகன் என்றும், அறிவை வளர்ப்பதால் புத்தி விவர்த்தனன் என்ற பெயர்களும் புதனுக்கு உள்ளது. புதனுக்கு வலது புறம் ஸ்ரீ மகா விஷ்ணு இருப்பதால், அவரை பிரார்த்தனை செய்தாலும் அது புதனை சென்று அடையும்.

    • பொன்.கோ.முத்து திருவள்ளூர்