Blog

  • பக்தசீலராக நான் யாரை கருதுவது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் என்ன சொன்னார் ?

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னது" என் பக்தசீலர்களாக நான் கருதுவது யாரை என்றால், யார் அதி உத்தம நம்பிக்கையும் பற்றுறுதியான மனஒருமையும் கொண்டு சலனமற்ற பக்தி சிரத்தையுடன் உபாசிக்கிறார்களோ அவர்களையே.

    இதன் பொருள்:

    யார் இறைமையை அறிவதில் முழுமனத்துடனான பேரார்வம் கொண்டு, ஆன்மீகப் பயிற்சிகளால் தன் சுய ஊட்ட உணர்வை சரணடைவித்து இறையுணர்வை அனுபவிக்கிறார்களோ, அவர்களே இறைமையின் உண்மை உபாசகர்களாக அங்கீகரிக்கப் படுகிறார்கள்.

    -பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • கிழமைகளும்… அபிஷேகமும்…

    திங்கட்கிழமை சிவபெருமானுக்கு, செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கும் முருகனுக்கும், புதன்கிழமை பெருமாளுக்கும், வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கும், வெள்ளிக்கிழமை அம்பாளுக்கும், சனிக்கிழமை கண்ணனுக்கும் அபிஷேகம் செய்யலாம். வைணவ கோவில்களில் அனுமானுக்கு நடத்தப்படும் பால் அபிஷேகம் சிறப்பானது ஆகும், அதனை விட சிறப்புக்குரியது இமைப்பொழுதும் நம் நெஞ்சில் நீங்காமல் இறைவனை பூஜிப்பது. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • சேது சமுத்திர கால்வாய் கட்ட அணில் ராமருக்கு உதவியதா ?

    மகாவிஷ்ணு இராவணனை அழிக்க எடுத்த அவதாரம்தான் இராம அவதாரம். கடத்தப்பட்ட சீதையை மீட்பதற்கு இலங்கை செல்வதற்காக, கடற்கரைக்கு வந்த இராமரும் வானர சேனையும்  கடலை எப்படி கடப்பது என்று குழப்பமுற்றனர். அப்போது கடல் மேல் பாலம் கட்டுவதென்று முடிவெடுத்து.  அதற்கான செயலில் ஈடுபட தொடங்கினர்.

    கடற்கரையில் இருந்த அனைத்து மிருகங்களும் இராமருக்கு உதவ முன் வந்தன, அவைகள் தன்னால் முடிந்த கற்களை தூக்கிவந்து பாலத்தின் மீது போட்டது.சிறிய அணில் ஒன்று அனைவரும் செய்யும் உதவியை பார்த்து தானும் உதவி செய்ய எண்ணி கரையில் கிடந்த கூழாங்கற்களை எடுத்து கடலில் போட தொடங்கியது.

    என்றால் அதுதான் இல்லை. புகழ்பெற்ற வால்மீகி ராமாயணத்திலோ,  கம்பராமாயணத்திலோ,  துளசிதாசர் எழுதியதிலோ சேதுபாலம் கட்டும் பணியின் போது அணில் உதவியதாக எந்த தகவலும் இல்லை இது வெறும் கற்பனை கதையே இந்த கதையானது இந்திய மொழிகள் அனைத்திலும் வாய்மொழியாக சொல்லப்படுகிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • மானிடர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை கணக்கிட்டு, மேலோகத்தில் தீர்ப்பு வழங்கும் நீதிபதி யார் ?

    ஜனநாயக நாடான இந்தியாவில் மட்டும் இன்றி சர்வாதிகாரிகளின் ஆலமியின் கீழ் உள்ள மேலை நாடுகளில் கூட, ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்படும் நபருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன. வழக்கை கொடுத்தவருக்கும் எதிர் மனுதாரருக்கும் இடையே அவரவர் தரப்பு வழக்கறிஞர்களின் மாதத் திறமையின் அடிப்படையில் பாதிக்கப்படும் நபருக்கு நீதி வழங்குவதற்காக அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடுநிலையோடு நீதி வழங்க நீதிபதி ஒருவர் இருப்பது போன்று" பூலோகத்தில் மனிதர்களாகிய நாம் செய்யும் பாவ புண்ணியங்களை கணக்கிட்டு, அதற்கேற்ப நீதி வழங்குவதற்காக மேல் லோகத்தில் நீதிபதி ஒருவர் உள்ளார் அவர் யார் ? வாருங்கள் அந்த நீதிமானை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    அஷ்ட திசை பாலகர்களில் தெற்கு திசையின் அதிபதியான எமதர்மன், மகாவிஷ்ணுவின் வம்சத்தில் வந்தவர். அதாவது, மகாவிஷ்ணுவிடம் இருந்து தோன்றியவர் பிரம்மதேவன். அவரிடம் இருந்து தோன்றியவர்கள் மரீசி, காசியபர், சூரியன் ஆகிய மூவர். சூரியனிடம் இருந்து தோன்றியவரே எமதர்மன். விஸ்வகர்மாவின் மகளை சூரியன் மணம் புரிந்ததில், அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு ஆண் பிள்ளைகளும், யமுனா என்ற பெண் குழந்தையும் பிறந்தனர்.

    எமன் – நீதி, நேர்மை தவறாத சத்தியத்தின் காவலன். தனது சித்தி சாயாவால் பாதிக்கப்பட்ட போது, சூரியனின் ஆலோசனைப்படி சிவனை வேண்டி யாகம் நடத்தி கடும் தவம் புரிந்து, சிவபெருமான்ிடம் இருந்து தென் திசை அதிபதி என்ற பட்டம் பெற்று, எமலோகத்து அதிபர் ஆனார். சிவபெருமான், தனது ரிஷப வாகனத்திற்கு நிகராக, கருமை நிறம் கொண்ட எருமை மாடு ஒன்றை உருவாக்கி, மகாவிஷ்ணுவின் அம்சமான எமனுக்கு பரிசாக வழங்கினார் அதுவே எமதர்மனின் வாகனமான எருமை.

    மேலும், மானிடர்கள் உள்ளிட்ட ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களுக்கேற்ப நீதி வழங்கும் அதிகாரம் மிக்க நீதிபதி பொறுப்பையும் சிவபெருமான் எமதர்மனுக்கு அளித்தார். அவர் அமர்ந்து தீர்ப்பு வழங்குவதற்காக ஓடும் அக்னி ஆற்றுக்கு மேலே, சிம்மாசனம் அமைத்து கொடுத்தார்.

    எமதர்மன் அதில் அமர்ந்து நீதி வழங்குவதாக புராண இதிகாசங்கள் கூறுகின்றன. அவரது நீதி சிறிது சரிந்தாலும் சிம்மாசனத்துடன் எமதர்மன் அக்னி ஆற்றில் விழுந்து தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்பதால், நடுநிலையுடன் தீர்ப்பு வழங்கி வருவதாகவும் புராண கதைகள் உண்டு. தேவர்களுக்குள் மதிநுட்பம் மிக்கவராகவும் எமதர்மன் விளங்குகிறார். தர்மத்தின் வழி நடக்கும் அவர் ‘எமதர்மன்’ ‘தர்மராஜன்’ எனவும், காலம் தவறாமல் கடமையை செய்வதால் காலன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • என் பசி தீர உன் பங்கையும் தா” உண்ட மயக்கத்தில் முனிவரின் ஆசிரமத்தில் உறங்கிய வீரராகவ பெருமாள் ! 

    என் பசி தீர உன் பங்கையும் தா" உண்ட மயக்கத்தில் முனிவரின் ஆசிரமத்தில் உறங்கிய வீரராகவ பெருமாள் !

    எம்பெருமான் தனது அடியார்கள் மீது அளவற்ற அன்பு கொண்டவர், அதனால்தான் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் அவர்களின் இருப்பிடத்திற்கு தேடிச்சென்று அருள்புரிவார். அந்த வகையில் புரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய்ப் பிறந்த சாலிஹோத்ரர் எனும் மாமுனிவர் தினமும் தவம் செய்த பின்னர், பெருமாளுக்கு அமுது படைத்த பின்பு தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் சாலிஹோத்ர முனிவரின் ஆசிரமத்திற்கு வயோதிகர் வடிவில் வந்த பெருமாள். வெகு தூரத்தில் இருந்து தான் வருவதாகவும், பசிக்கிறது உன்ன உணவேதும் கிடைக்குமா ? என கேட்க முனிவரும் உணவளிக்க பசி தீரவில்லை என முனிவரின் பங்கையும் கேட்டு சாப்பிட்டு முடித்ததும், உண்ட களைப்புத் தீர எங்கே படுப்பது என முனிவரிடம் வினவ, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார்.

    "படுக்க எவ்வுள்" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று. தற்போது அந்த இடம்தான் திருவள்ளூர் என அழைக்கப்படுகிறது.

    ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்குப் பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் வேட்டைக்குச் சென்ற பெருமாள், தாயாரை மணமுடித்ததாகத் கோவில் வரலாறு தெரிவிக்கிறது.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு திருமழிசை ஆழ்வார், திருநங்கை ஆழ்வார், துப்பூர் வேதாந்த தேசிகன் ஆகியோரால் அப்பா மாலை சூட பட்டதாகும், 5 பஞ்சபூதங்களை குறிக்கும் வகையில் ஐந்தடுக்கு ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வீரராகவப் பெருமாள் வைத்திய வீரராகவப் பெருமாள் எனவும் போற்றப்படுகிறார், வீரராகவ பெருமாள் சைனா கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார், மூலவரின் வலது புறம் சாலி கோத்திர மகரிஷி, இடதுபுறம் பிரம்மாவுக்கு உபதேசிக்கும் ஞான முத்திரையும் நிறுவப்பட்டுள்ளது.

    மூலவர் பெருமாளுக்கு சந்தன தைலத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அருள்மிகு ஸ்ரீ கனகவல்லி தாயார் கருணையே வடிவாக காட்சி தருகிறார், ஆழ்வார், கணேசர், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகர், ராமானுஜர், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ரங்கநாதர், அனுமான் சன்னதி கொண்டுள்ளனர். இங்கு உள்ள சாலிங்கிய மகரிஷிக்கு, தை அமாவாசை அன்று வீரராகவ பெருமாள் காட்சி தந்ததால் தை அமாவாசை அன்று வீரராகவரை வழிபடுவது சிறப்பாகும்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • ஆண்டின் 12 மாதமும், ஆலயங்களில் 12 திருவிழாவும்!

    நம் முன்னோர்கள் இறைவனை இமைப்பொழுதும் மறவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இரவு-பகல் அடங்கிய 24  மணி நேரத்தை, வாரங்கள், மாதங்கள் என பிரித்தனர், அதன்படி  ஆலயங்களில் ஆண்டின் 12 மாதங்களில் நடைபெறும் 12 திருவிழாவை குறித்து பார்ப்போம்,

    (1) சித்திரை மாதம் – சித்ரா பௌர்ணமி
    (2) வைகாசி மாதம் – வைகாசி விசாகம்
    (3) ஆனி மாதம் – சாவித்திரி விரதம்
    (4) ஆடி மாதம் – சாவித்திரி விரதம், கோபத்ம விரதம்.
    (5) ஆவணி மாதம் – ரட்சா பந்தனம்,  ஆவணி அவிட்டம்,
    (6) புரட்டாசி மாதம் – உமாமகேசுவர விரதம்
    (7) ஐப்பசி மாதம் – சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா,
    (8) கார்த்திகை மாதம் – கார்த்திகை தீபத் திருவிழா,
    (9) மார்கழி மாதம் – திருவாதிரை விரதம்,
    (10) தை மாதம் – தைப்பூசம்,
    (11) மாசி மாதம் – மாசி மகம்,
    (12) பங்குனி மாதம் – பங்குனி உத்திரம், இந்த 12 மாத விழாக்களின் போதும் அனைத்து ஆலயங்களிலும் இறைவனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • கனவில் காட்சி தந்த ஆதிபராசக்தி

     

    விற்பனைக்காக கொண்டு வந்த வளையல்களை பறிகொடுத்த வணிகர் கனவில் காட்சி தந்த ஆதிபராசக்தி, சர்ப்ப மாலை அணிந்து புற்றுக்குள் காட்சி தந்த அதிசயம்!

    அம்மா வளையல் வாங்கலையோ வளையல் வளையல் வாங்கலையோ வளையல், ஏம்பா வளையல் காரரே குங்கும கலர் வலையில் இருக்கா இருக்கு தாயே எங்க மூட்டையை இறக்கு பார்க்கலாம், தலையில் மண்பாண்டத்துடன் நின்ற பெண் கூற தாயே சுட்டெரிக்கும் வெயில்ல வந்ததுனால தாகமா இருக்கு குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா தாயே,, வளையல் காரரே பானையில் மோர் வச்சிருக்கேன் கொடுக்கவா, கொடுத்தாயே வாங்கி குடித்த வணிகர் இடம் தாகம் தீர்ந்ததா வளையல்காரரே திருந்தது தாயே ,, பாவம் வேகாத வெயில்ல நாலு தெருவு சுத்தி வந்து இருப்ப சத்த நேரம் இந்த வேப்பமரத்து நிழல்ல இளைப்பாறு அதுவும் சரிதான் தாயே,,

    மரத்தடியில் உறங்கிய வணிகர் கண்விழித்து பார்த்த போது, அருகில் வைத்திருந்த வளையல் மூட்டைகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மூட்டைகளை தேடியபடி ஆரணி ஆற்றின் கரையில் மாலை நேர வேலையில் சென்று கொண்டிருந்தபோது ஆற்றின் கரையில் இருந்த பெரிய புற்றில் இருந்து பாம்பு ஒன்று சீரியபடி படம் எடுத்து ஆடுவதைக் கண்டு, அச்சத்துடன் வலையில் மூட்டைகளை தேடும் முயற்சியை கைவிட்டு ஏமாற்றத்துடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது ஊருக்கு திரும்பிய அவரது.

    ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது கனவில் ஆதிபராசக்தி தோன்றி நான் ரேணுகாதேவி. பெரியபாளையம் ஆரணி ஆற்றின் கரையில் பவானியாக அவதாரம் எடுத்துள்ளேன். உன் வளையல் மூட்டைகள் விழுந்துள்ள பாம்பு புற்றுக்குள் சுயம்புவாக கோவில் கொண்டுள்ளேன். நீ பயப்பட வேண்டாம் இது எனது திருவிளையாடல் உடனே அங்குவா உனக்கு நான் காட்சி தருகிறேன் என கூறியதை கேட்டு திடுக்கிட்டு விழித்த அவர், மறுநாள் தனது உறவினர்கள் சிலருடன் அற்புதம் நிகழ்ந்த திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்திற்கு வந்து ஊர் பெரியவர்களிடம் நடந்தவற்றை எடுத்துரைத்தார், இதனைக் கேட்டு ஊர்க்காரர்கள் அவரை அழைத்துக் கொண்டு ஆரணி ஆற்றின் கரையில் உள்ள புற்றை நோக்கி சென்று கிடப்பாரையால் புற்றை இடிக்க முயன்ற போது" ணங்"என்று ஒரு சத்தம் கேட்டது.

    கிடப்பாறையை வெளியில் எடுத்த போது அதில் ரத்தம் தென்பட்டது, அதோடு புற்றிலிருந்து ரத்தம் வழிந்தது இதைப் பார்த்து நடுங்கியபடி புற்றை முழுமையாக அகற்றி பார்த்தனர். அதில் சர்ப்ப மாலை அணிந்தபடி சுயம்பு ஒன்று தென்பட்டது அதன் மேல்பகுதியில் இருந்து தான் ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது.

    உடனே வளையல் வணிகர் தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வழிந்த இடத்தில் வைத்து அழுத்தினார். மறுகணம் ரத்தம் நின்று போனது சுயம்பு அணிந்திருந்த சர்ப்பமும் மறைந்தது இதனைடுத்து சுவைம்புவாக தோன்றிய அன்னை ஆதிபராசக்தி பவானி அம்மனுக்கு அதே இடத்தில் கோவில் கட்டிய ஊர் மக்கள் சுயம்பு வடிவ அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து இன்று வரை வணங்கி வருகின்றனர்,

    இப்பொழுதும் அந்த வெள்ளி கவசத்தை அகற்றி விட்டுப பார்த்தால் சுயம்பு வடிவின் உச்சியில் கிடப்பாரையால் ஏற்பட்ட காயத்தின் தழும்பை காணலாம், இப்படி தன்னை வெளிப்படுத்தி பெரியபாளையத்தில் எழுந்தருளியுள்ள அன்னை அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் தன்னை நாடிவரும் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள் புரிந்து வருவதால்.

    தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் பெரும் திரளான பக்தர்கள் வந்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி பவானி அம்மனை பக்தியுடன் வழிபட்டு செல்கின்றனர். மேலும் ஆடி மாதம் 14 வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு திருமுடி காணிக்கை செலுத்தியும், வேப்பஞ்சேலை அணிந்தும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் இட்டு வழிபடுகின்றனர்.

    பிள்ளை பேரு இல்லாத தம்பதியர், திருமணம் ஆகாத பெண்கள், பவானி அம்மனுக்கு குங்கும நிற வளையல், சிகப்பு நிற சேலை, மஞ்சள் குங்குமத்துடன் நெய் தீபம் ஏற்றி அம்மனுக்கு தாம்பூல தட்டை காணிக்கை செலுத்தினால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியமும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, சொந்த வீடு, வேலை வாய்ப்பு, பொருட்செல்வம், கல்விச்செல்வம் ஆகியவற்றை பெற விரும்புவோர் ஏழு வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து பவானி அம்மனை வழிபட்டால் எண்ணம் நிறைவேறும் என்பது திண்ணம்,

    கோவில் நடை காளை ஆறு மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும், ஆடி மாதம் 14 வாரமும் இதே நடைமுறையில் கோயில் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • சகல மங்கலங்களையும் பெருக வைக்கும் தைப்பூசம்!

    தைப்பூசம் என்பது  தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.   நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தை மாதத்தில் பூசமும், வியாழனும், பௌர்ணமியும், சித்த யோகமும் கூடிய நடுப்பகல் வேளையில், சிவபெருமான் திருநடனம் ஆடினார். எனவே  தைப்பூச தினம் மிகவும் உத்தமம் ஆகும் என்பார்கள்.

    முருகப்பெருமான், அசுரர்களை சம்ஹாரம் செய்யப் புறப்படு முன், பார்வதி தேவி தம் சக்தியை வேல் வடிவில் அளித்து அருள் பாலித்தார். இதனை `எம் புதல்வா… வாழி வாழி எனும்படி வீறான வேல் தர’ என்று அருணகிரியார் திருச்செந்தூர் திருப்புகழில் பாடுகிறார். இவ்வாறு அம்பிகை கந்தப் பெருமானுக்கு வேல் வழங்கிய நன்னாள் தைப்பூசம் எனக் கூறப்படுகிறது. எனவே, சிவாலயங்கள் போலவே முருகப்பெருமான் திருக்கோயில்களிலும் தைப்பூசத்தன்று தேர், தீர்த்தத் தெப்பத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

    தைப்பூசம் அறிவைப் பிரகாசிக்கச் செய்யும் நன்னாள் என்பதால், திருவருட்பிரகாச வள்ளலார் அன்று சித்தி விளாகத்தில் ஜோதியில் கலந்தார் என்பர். இதையொட்டி வடலூரில் ஏழு திரையை விலக்கி ஜோதிக் காட்சி நடைபெறும்.

    சிவபெருமானும் முருகப்பெருமானும் வேறல்ல – இருவரும் ஒருவரே என்னும் தத்துவப்படி தைப்பூசம் – பங்குனி உத்திரம் – வைகாசி விசாகம் முதலான விசேஷ நாள்கள் முருகப்பெருமானுக்கும் உரியதாகக் கொண்டாடப்படுகிறது.

    தைப்பூச விழாவையொட்டி பழநிக்குப் பாதயாத்திரை செல்வதும், காவடி எடுப்பதும் பிரசித்தமான விழாவாகும். தமிழகத்தில் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் போன்ற பல நாடுகளிலும் தைப்பூச விழா சிறப்பா கக் கொண்டாடப்படுகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தார் இந்த விழாவைப் பிரபலப்படுத்தி உலகில் உள்ள எல்லா முருகன் கோயில்களிலும் தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாட வகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இங்ஙனம் குருவருளும் திருவருளும் சிறந்து விளங்கும் தைப்பூசத் திருநாளில் நாமும் முக்கண்ணனையும் அவர் மைந்தன் முருக வேளையும் எல்லாம்வல்ல பராசக்தியையும் வழிபட்டு வேண்டும் வரம்பெற்று மகிழ்வோம்.

    திருநெல்வேலி தலத்தில் பராசக்தி தாமிரபரணியில் நீராடி தவம் இருந்து, தைப்பூசத் திருநாளில் இறைவனின் அருள் பெற்றாளாம். ஆக தைப்பூச நாளில் அம்மையப்பரை வழிபட, தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; சகல மங்கலங்களும் பெருகும். அதேபோல் இந்தப் புனித நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள், வாழ் வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர் என்பது ஐதிகம்.

  • செல்வ வளத்தைப் பெருக்கும் சூரியன் வழிபாடு!

    மாவாசைக்கு பிறகு வரும் 7 ஆவது நாள் திதியை 'சப்தமி' என்பார்கள். இது சூரியன் அவதரித்த தினம் என்பதால், இதனை ரத சப்தமி' என்று போற்றுகிறார்கள். அன்றைய தினம் சூரியனை நாம் வழிபாடு செய்தால், எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

    அன்றைய தினம் செய்யும் தர்மங்களுக்கு அதிக புண்ணியம் வந்துசேரும். அதேபோல் இந்நாளில் தொடங்கும் தொழில், சிறப்பான வளர்ச்சியைப் பெறும். கணவனை இழந்த பெண்கள், இந்த வழிபாட்டை மேற்கொண்டால் அடுத்த பிறவியில் இந்த நிலை வராது என்கிறது ஐதீகம். 

    ரத சப்தமி அன்று சூரியனுக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற்றி வழிபட்டால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும். சூரியனுக்கு உகந்த தானியம், கோதுமை. எனவே ரத சப்தமி அன்று சூரியனுக்கான நைவேத்தியத்தில் கோதுமையால் செய்யப்பட்ட உணவு இருப்பது பெரும் புண்ணியம் தரும். ரத சப்தமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, சூரியனை வணங்க வேண்டும். பின்னர் சூரியனுக்குரிய துதிகளைச் சொல்ல வேண்டும். 

    சூரியனுக்கு உகந்த நைவேத்தியம், சர்க்கரைப் பொங்கல். அதனை சூடாக இருக்கும் போதே நைவேத்தியம் செய்துவிட வேண்டும். வழிபாட்டிற்குப் பிறகு அந்த சர்க்கரைப் பொங்கலை, மற்றவர்களுக்கு வழங்கி நாமும் சாப்பிட வேண்டும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் இட வேண்டும். 

    சூரியனுக்கு உகந்த பத்ரம் (இலை), எருக்கம் இலை ஆகும். ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராடுவது மிகவும் அவசியம். இதனால் ஆரோக்கியமும் செல்வ வளமும் பெருகும். நீராடும் போது ஏழு என்ற எண்ணிக்கையில் எருக்கம் இலைகளை எடுத்து அடுக்கிவைத்து, அதன் மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆண்கள் என்றால் அதனுடன் விபூதியும், பெண்கள் என்றால் அதனுடன் மஞ்சளும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ. அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்களும் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு, நம் உடலில் பாய்ந்து,உடல் உபாதைகளையும், நோய்களையும் நீக்கும் என்பது ஐதீகம்.

    சூரியன், நாராயணரின் அம்சம் என்பதால், ரத சப்தமி தினம் அன்று, பெருமாள் கோவில்களில் அவர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குவார். சூரியன் வழிபாட்டை தினமும் கூட செய்யலாம்.

  • Advertisement

    Advertisement for Shakthi online page