Blog

  • thiruvannamalai car festival

    திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது, பத்து நாட்கள் நடைபெறும் தீப திருவிழாவில் ஆறாம் நாள் இரவு உற்சவத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் தனித்தனியே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் எழுந்தருளி திருக்கோவிலின் நான்கு மாட விதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நினைத்தாலே முக்திதரும் அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் நடைபெறும் அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, அதனை தொடர்ந்து இன்று ஆறாம் நாள் இரவு உற்சவத்தில் திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனைகள் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளும் தனித்தனியே வெள்ளித் தேரில் எழுந்தருளி திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    ஆறாம் நாள் தீப திருவிழா உற்சவத்தில் முதலில் விநாயகர், இரண்டாவதாக முருகர், மூன்றாவதாக அண்ணாமலையார் உண்ணாமலையம்மன், நான்காவதாக பராசக்தி அம்மன், ஐந்தாவதாக சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி பவனி வந்தனர்.

    தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவாக கருதக்கூடிய ஏழாம் நாள் திருவிழா நாளை காலை நடைபெற உள்ளது, இதில் பஞ்ச மூர்த்திகளும் தனித்தனி மரத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்கள் காட்சியளிக்க உள்ளனர்.

  • Kal azhagar kumbabishegam

    பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் 18ம், படி இராஜகோபுர குடமுழுக்கு நன்னீராட்டு விழா அதிவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா! கோவிந்தா!  என்று கோஷங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முக்கியமான திருத்தலமாகும். இதனால் இக்கோவில் தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.  இக்கோவிலில் மாதந்தோறும் விழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை மாதம் நடைபெறும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும், ஆடி மாதம் நடைபெறும் ஆடித் தேரோட்டமும் உலக புகழ்பெற்றதாகும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் 18ம் படி இராஜகோபுரத்திற்கு குடமுழுக்கு விழா கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடத்துவது என்பது ஆகம விதியாகும் அதன்படி இந்த ஆண்டு குடமுழுக்கு விழா நடத்த தமிழக அரசின் அறநிலைத்துறை முடிவு செய்து அதற்காக சுமார் 2 கோடி ரூபாய் ஒதிக்கீடு செய்தது.

    120 அடி உயரம் கொண்ட இந்த இராஜகோபுரம் 7நிலைகளைக் கொண்டது. கோபுரத்தில் உச்சியில் 6.1/2 அடி உயரம் கொண்ட 7 கலசங்கள் உள்ளன. இந்த இராஜகோபுரத்தின் கீழ் 18ம் படி கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சிலைவழிபாடு கிடையாது அங்குள்ள நிலை கதவுகளுக்கும், 18 படிகளுக்கும் தீபாராதனை வழிபாடு மட்டும் நடைபெறும்.  இதன் பழமை மாறாமல் இருக்க கடுக்காய், சுண்ணாம்பு, பணங்கற்கண்டு ஆகிய பொருட்களை கொண்டு புனரமைக்கும் பணியானது நடைபெற்று வந்தது.இந்நிலையில் வண்ணங்கள் பூசப்பட்டு புனரமைக்கும் பணி நிறைவு பெற்று ராஜகோபுரம் புதுப்பொலிவுடன் காட்சியளித்தது.

    பணிகள் நிறைவு பெற்ற நிலையில் நவம்பர் 23ஆம் தேதி இன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 3ஆம் தேதி கோவில் முன்பாக உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் யாக சாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. யாக சாலையில்  தனித்தனியாக 8 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. அதனையடுத்து நவ-21 நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் வாஸ்து சாந்தி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

    மூலவர் சன்னதியில் பூஜை செய்யப்பட்ட நூபுர கங்கை தீர்த்த குடங்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் யானை சுந்தரவல்லி முன்னே செல்ல பட்டர்கள் ஊர்வலமாக தீர்த்தக் குடங்களை யாகசாலைக்கு எடுத்து வந்தனர். யாக சாலையில் 160 தீர்த்த கலசங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் கள்ளழகர் கோவில் சுந்தர நாராயண அம்பி பட்டர் தலைமையில் 40க்கும் மேற்பட்ட பட்டர்கள் கலந்து கொண்டு அன்று மாலை 5 மணியளவில் முதற்கால யாக பூஜைகள் நடைபெற்றது. நவ-22 நேற்று காலை 2 ஆம் கால பூஜையும் மாலை 3 ஆம் கால பூஜையும் வேத மந்திரங்கள் ஒலிக்க நடைபெற்றது.

     3 ஆம் நாளான இன்று காலை புண்யாகவாசனம், பூர்ணாகுதி, தீர்த்த குடங்களுக்கு தீபாராதணைகள் காட்டபட்டு 9:15 மணிக்கு மேல் திருக்கல்யாண மண்டப யாக சாலையில் இருந்து மேலதாளங்கள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் யானை சுந்தரவல்லி முன்னே செல்ல பட்டர்கள்  தீர்த்த குடங்களை தலையில் சுமந்தவாறு கடம்புறப்பாடாகி ஊர்வலமாக 18 ம் படி இராஜகோபுரத்திற்கு எடுத்து வந்தனர். வேத மந்திரங்கள் முழங்க தீர்தகுடங்களில் இருந்த புனித நீரானது கலசங்களில் சுமார் 9:43 மணிக்கு ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பாக ஆங்காங்கே பைப்புகள் அமைத்து பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக ராஜ கோபுரத்தின் மீதும் பக்தர்கள் மீது மலர்கள் தூவப்பட்டன.

    மேலூர், கள்ளந்திரி, மாங்குளம், வல்லாளபட்டி, கிடாரிபட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரகணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா! கோவிந்தா!  என்று கோஷங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களின் பாதுகாப்பிற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். மேலும் மேலூர், மதுரை பெரியார் பேருந்து நிலையம், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

  • Thirunallaru sani bagavan

    திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் இன்று  நடைபெற்றது.

    காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஸ்தலத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.  

    அவ்வாறு இந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் 05.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ள சனிப்பெயர்ச்சி விழாவிற்க்கான முன்னெடுப்பு பணிகளுக்காக இன்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இந்த பந்தக்கால் முகூர்த்தம் சென்ற மாதம் 27ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்தின் உள்துறை தருமை ஆதீனத்தின் கட்டுப்பாடு எனவும் மற்றும் மற்ற அனைத்து முடிவுகளும் அரசு சார்பில் சிறப்பு அதிகாரி தருமை ஆதீன பிரதிநிதியை கலந்தாலோசித்து முடிவு செய்யப்பட வேண்டியது என 2012ல் உயர் நீதிமன்ற தீர்ப்பு உள்ளதால் இந்த தேவஸ்தானத்தில் நடைபெறும் அனைத்து முடிவுகளும் இருதரப்பினரும் சேர்ந்து முடிவு செய்யப்பட வேண்டியது.

    ஆனால் இம்முறை ஆலய நிர்வாக சார்பில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ ல ஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக தேதி குறிப்பிட்டு பின்னர் தம்பிரான் சுவாமிக்கு இவ்விழாவிற்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தருமபுர ஆதீனத்தை ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்பதால்  தம்பிரான் சுவாமிகள் பந்தக்கால் முகூர்த்ததில் பங்கேற்காததால் ஐந்து கிராம மக்கள் இவ்விழாவினை புறக்கணித்ததால் பூஜைக்கு தயார் நிலையில் இருந்தும் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றவில்லை.

    அப்போதே ஆதினத்தின் தரப்பில் வேறு தேதியில் மாற்றி அமைக்கப்படும் என ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆதினம் சார்பில் நீதிமன்றத்தை நாடினர் அதற்கு புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து ஆலய நிர்வாகம் சார்பில் ஆதினத்துடன் ஆலோசித்து இன்று பந்தக்கால் மூகூர்த்தம் விழா சிறப்பாக நடைபெற்றது‌. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

  • November 23 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  பாராட்டு
    ரிஷபம்         –    அசதி
    மிதுனம்     –   அமைதி
    கடகம்         –  பரிவு
    சிம்மம்         –   நலம்  
    கன்னி         –    இரக்கம்
    துலாம்         –     உதவி  
    விருச்சிகம்     –  வெற்றி
    தனுசு         –     நிம்மதி
    மகரம்         –    எதிர்ப்பு
    கும்பம்         –       நலம்
    மீனம்         –      ஊக்கம்  
    சந்திராஷ்டமம்    –    மகம், பூரம்

  • November 23 2023 indrayanaal

    நவம்பர் 23 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    சோபகிருது வருடம் – கார்த்திகை7
    சுபமுகூர்த்த நாள்
    23-நவ-2023 வியாழன்
    சாய்பாபா பிறந்த நாள்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : ஏகாதசி இ 8.47
    நட்சத்திரம் : உத்திரட்டாதி மா 5.35
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • November 22 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  சிந்தனை
    ரிஷபம்         –    நன்மை
    மிதுனம்     –   அனுகூலம்
    கடகம்         –  சுகம்
    சிம்மம்         –   ஓய்வு
    கன்னி         –    பிரிவு
    துலாம்         –     இன்பம்  
    விருச்சிகம்     –  பெருமை
    தனுசு         –     களிப்பு
    மகரம்         –    மறதி
    கும்பம்         –       ஏமாற்றம்
    மீனம்         –      அன்பு
    சந்திராஷ்டமம்    –    ஆயில்யம், மகம்

  • November 22 2023 Indraya naal

    நவம்பர் 22 – இன்றைய நல்லநேரம்
    சோபகிருது வருடம் – கார்த்திகை 6
    22-நவ-2023 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : தசமி
    திதி நேரம் : தசமி இ 10.56
    நட்சத்திரம் : பூரட்டாதி இ 7.3
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Tanjai periya koil 1008 sangabishegam

    கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் 1008 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி  கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலிலுள்ள பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளது. பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம்  நடத்தப்பட்டது.

    இதனையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு பால், சந்தனம் , மஞ்சள்  , அன்னம்,  விபூதி உள்ளிடட் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்   செய்யப்பட்டது . பின்னர் பெருவுடையாருக்கு முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட   1008 சங்குகளை வைத்து அபிஷேகம் மற்றும் தீபாரதனை  காண்பிக்கப்பட்டது.

    அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற -ந்தேதி 27-வது சோமவாரமும், அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி 3-வது சோமவாரமும், 11-ந்தேதி கடைசி சோமவாரமும் கடைபிடிக்கப்படுகிறது.

  • singaravelar alayam valli thirumanam

    புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வள்ளி திருமண காட்சி,  யானையுடன் வள்ளியை பயமுறுத்தும் காட்சி தத்ரூபமாக நடத்தி காட்டி திருமணம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கலில் புகழ்பெற்ற சிங்காரவேலர் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் கந்த சஷ்டி விழா கடந்த மாதம் 13ஆம் தேதி கணபதி ஹோமத்துடன்  துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வள்ளி முருகன் திருமணம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு குறவள்ளி முருகனை சந்திப்பதும் அப்போது விநாயகர் பெருமான் யானை ரூபத்தில் வந்து வள்ளியை பயமுறுத்துவதும் அதனைத் தொடர்ந்து முருகனை வள்ளி அடைக்கலமாகி திருமண காட்சி நடைபெறுவதும் நடைபெற்றது.  

    யானை அழைத்து வரப்பட்டு யானை பிளிருவதும் அதனை அடுத்து யானைக்கு பயந்து வள்ளி முருகனை சந்திப்பதும் அடியார்களால் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வேதியர்கள் மந்திரம் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு மாங்கல்யதாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை எடுத்து மாலை மாற்றும் வைபவம் மகா தீபாரதனை உள்ளிட்டவைய் செய்யப்பட்டு வள்ளி திருமணம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

  • Tamilnadu Iyappan Temples

    திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே ஐயப்பன் ஆலயம் உள்ளது. இங்கே 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன; இந்திய புண்ணியத் தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 444 புனிதக் கற்கள் ஆலயத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வணங்கப்படுகின்றன.

    * சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் மகாசாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்ம சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா என எட்டு சாஸ்தாக்கள் திசைக்கொருவராக அருள்கின்றனர்.

    * சென்னை  அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பத்தில் ஐயப்ப சாஸ்தா ஆலயம் உள்ளது. இவர் திருவுரு முன் ஒரு வாழையிலையில் அரிசியைப் பரப்பி அதன்மீது தேங்காய் மூடியில் நெய் தீபமேற்றி வழிபட நல்ல வேலை கிடைப்பதாக நம்பிக்கை.

    * சென்னை  ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் ஆலயம் வடசபரி என போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் தங்கத்தேரில் ஐயன் உலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.

    * திருத்துறைப்பூண்டி அருகே காடந்தேத்தியில் ஐயப்பன் ஐயனாராக அருளாட்சி புரிகிறார். இவரை சுகப்பிரம்ம ரிஷி வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

    * சீர்காழி தென்பாதியில் யானை வாகனத்தில் பூரணா, புஷ்கலாவோடு சாஸ்தா வீற்றருள்கிறார். தேவேந்திரனிடமிருந்து இந்திராணியை பிரியாமல் காத்ததால் இவர் கைவிடேலப்பர் என போற்றப்படுகிறார்.

    * கையில் பூச்செண்டுடனும் இருபுறமும் தேவியருடனும் அமர்ந்த நிலையில் அருளும் சாஸ்தாவை காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயப் பிராகாரத்தில் தரிசிக்கலாம்.

    * கன்னியாகுமரி, ஆச்ராமம் தலத்தில் உச்சிக்கொண்டை போட்டு, திருமார்பில் பூணூல் தவழ, கழுத்தில் பதக்கம் மின்ன, நெற்றியில் திருநீற்றுப் பட்டையுடன் ‘அஞ்சனம் எழுதிய சாஸ்தா’ எனும் பெயரில் ஐயப்பன் காட்சி தருகிறார்.

    * சபரிமலையில் ஐயப்பன் யோகாசன முறையில், மூலாதாரத்து குண்டலினி சக்தி மேலெழ உதவும் ஆசனத்தில் வீற்றருள்கிறார். அறிவின் அடையாளமான சின்முத்திரை ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கிய நிலையையும் ஹரிஹர ஐக்கியத்தில் பிறந்ததை கால்களை இணைக்கும் பட்டையும் உணர்த்துகிறது.

    * சிதம்பரம் அருகே உசுப்பூரில், ஐயப்பனை, பரதேசியப்ப ஐயனார் என்ற பெயரில் வழிபடுகிறார்கள்.

    * விழுப்புரம் அருகே நேமூர் பாதையில் எண்ணாயிரம் கிராமத்தில் செம்மணேரி ஆண்டவர் எனும் பெயரில் சாஸ்தா அருள்கிறார். தன்னை குலதெய்வமாகக் கொண்டவர்கள் தன்னை மறந்தால் அவர்கள் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை தெரிவிக்கும் அற்புதத்தை நிகழ்த்துபவர் இவர்.

    * திருவையாறு திருக்காட்டுப்பள்ளி பாதையில், கூத்தூரில், கேரள வியாபாரிகள் கொணர்ந்த ஐயப்பன் விக்ரகம், வழியில் இங்கே நிலை கொண்டு விட்டார். கருவறையில் தேவியருடன் ஐயப்பனும் விநாயகப் பெருமானும் அருள்கிறார்கள்.

    * பூத கணங்கள் புடைசூழ தன் நாயகியருடன் ஐயன் அருளும் தலம் சொரிமுத்தையனார் ஆலயம். தென்திசையை சமன் செய்ய வந்த அகத்தியருக்கு ஐயன் காட்டிய அருட்கோலம் இது.

    * ஈசன் பவனி வரும் திருவழகை உலாவாக்கினான் சேரமான் பெருமான். அதை பூவுலகிற்கு தெரியப்படுத்த அந்த ஏட்டுக்கட்டினை ஏந்திய ஐயனை அரங்கேற்றிய ஐயனார் எனும் பெயரில் திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் பாதையில் உள்ள பிடவூரில் தரிசிக்கலாம்.

    * தென்காசி அருகே குற்றாலத்தில் நான்கு திசைகளிலும் ஐயன் அருள்புரிகிறார். இதில் மேலவாசல் தர்மசாஸ்தா, பல குடும்பங்களுக்கு குல தெய்வமாய் அருள்புரிகிறார். பீட வடிவில் அருவமாக ஐயன் இங்கு அருள்வது சிறப்பு.

    * திருநெல்வேலி – கல்லிடைக்குறிச்சி அருகே, ஏரிக்கரை ஓரத்தில் கர்ப்பிணி ஒருத்திக்கு கையில் விளக்கொளியுடன் சடைமுடியுடன் வந்து பிரசவம் பார்த்த ஐயன், பாலக வடிவில் நின்ற கோலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

    * சேங்காலிபுரம் அருகே எருமைத்தலை கிராமத்தில் மாவிலங்கை மரத்தடியில் யானை மீதமர்ந்த கம்பீரமான சாஸ்தாவை தரிசிக்கலாம்.

    * நெல்லை, பாளையங்கோட்டை, சாந்தி நகரில் சங்குகர்ணன் எனும் அரக்கனை அழித்த சண்பகாரண்ய சாஸ்தா எனும் மத்யாரண்யேஸ்வர சாஸ்தாவை தரிசிக்கலாம்.

    * மயிலாடுதுறை, வஸ்த்ரராஜபுரம் எனும் இடத்தில் தேவியரை அணைத்தபடி காட்சி தரும் ஐயனை தரிசிக்கலாம். இங்கு நாகம் ஒன்று ஐயனுக்கு காவலாக உள்ளதால் இவர் நாகசாஸ்தா என்றும் வணங்கப்படுகிறார்.

    * தஞ்சை, மெலட்டூர் அருகே சுரைக்காயூரில் ஐயன் தன் தேவியுடன் அருள்கிறார். வருடா வருடம் மெலட்டூரில் நடக்கும் பாகவதமேளாவில் ஹரிஹரபுத்ர ஜனனம் மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்படுகிறது.