Blog

  • Sabarimalai 18 Padigal

    ஒன்றாம் திருப்படி : குளத்துப்புழை பாலகன்

    இரண்டாம் திருப்படி : ஆரியங்காவு ஐயன்

    மூன்றாம் திருப்படி : எரிமேலி சாஸ்தா

    நான்காம் திருப்படி : அச்சன்கோயில் அரசன்

    ஐந்தாம் திருப்படி : புவனேஸ்வரன்

    ஆறாம் திருப்படி : வீரமணி கண்டன்

    ஏழாம் திருப்படி : பொன்னம்பல வாஸன்

    எட்டாம் திருப்படி : மோஹினி பாலன்

    ஒன்பதாம் திருப்படி : சிவ புத்ரன்

    பத்தாம் திருப்படி : ஆனந்த சித்தன்

    பதினொன்றாம் திருப்படி : இருமுடிப் பிரியன்

    பனிரெண்டாம் திருப்படி : பந்தள ராஜகுமாரன்

    பதிமூன்றாம் திருப்படி : பம்பா வாஸன்

    பதினான்காம் திருப்படி : வன்புலி வாஹனன்

    பதினைந்தாம் திருப்படி : ஹரிஹர சுதன்

    பதினாறாம் திருப்படி : ஸத்குரு நாதன்

    பதினேழாம் திருப்படி : பிரம்மாண்ட நாயகன்

    பதினெட்டாம் திருப்படி : ஸத்ய ஸ்வரூபன்

  • November 21 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  நன்மை
    ரிஷபம்         –    சாந்தம்
    மிதுனம்     –   வரவு
    கடகம்         –  மேன்மை
    சிம்மம்         –   உற்சாகம்
    கன்னி         –    வெற்றி
    துலாம்         –     அசதி
    விருச்சிகம்     –  சிரமம்
    தனுசு         –     ஆக்கம்
    மகரம்         –    வரவு
    கும்பம்         –       நட்பு
    மீனம்         –      புகழ்
    சந்திராஷ்டமம்    –    பூசம், ஆயில்யம்

  • November 21 2023 Indrayanaal

    நவம்பர் 21 – இன்றைய நல்லநேரம்…
    சோபகிருது வருடம் – கார்த்திகை 5
    21-நவ-2023 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : நவமி
    திதி நேரம் : நவமி ந.இ 1.12
    நட்சத்திரம் : சதயம் இ 8.38
    யோகம் : மரணயோகம்
    சந்திராஷ்டமம் : பூசம்,ஆயில்யம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • November 20 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வெற்றி
    ரிஷபம்         –    செலவு
    மிதுனம்     –   பாராட்டு
    கடகம்         –  நன்மை
    சிம்மம்         –   அமைதி
    கன்னி         –    உதவி
    துலாம்         –     கவனம்
    விருச்சிகம்     –  நலம்
    தனுசு         –     லாபம்
    மகரம்         –    ஊக்கம்
    கும்பம்         –       நிம்மதி  
    மீனம்         –      தனம்
    சந்திராஷ்டமம்    –    புனர்பூசம், பூசம்

  • November 20 2023 Indrayanaal

    நவம்பர் 20 – சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
    சோபகிருது வருடம் – கார்த்திகை 4
    20-நவ-2023 திங்கள்
    சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
    கரிநாள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : அஷ்டமி ந.இ 3.33
    நட்சத்திரம் : அவிட்டம் இ 10.17
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Palani murugan thirukalyanam

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தர்சஷ்டி நிறைவுநாள் நிகழ்ச்சியாக இன்று சண்முகர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

     திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த திங்கள்கிழமை காப்புக்கட்டுடன் துவங்கியது. ஒருவார காலம் நடைபெற்ற விழாவின் போது நாள்தோறும் அருள்மிகு சின்னக்குமாரருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

    நேற்று ஆறாம் நாள் நிகழ்ச்சியாக அடிவாரம் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.  நிறைவுநாள் நிகழ்ச்சியாக இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது.  மலைக்கோயில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட மணமேடைக்கு எழுந்தருளிய அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.   அபிஷேகத்தைத் தொடர்ந்து தம்பதி சமேதர் சண்முகருக்கு பட்டாடை,  நறுமணமிக்க வண்ணமலர்கள், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும், அதைத் தொடர்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது.  

    மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் மந்திரம் ஓத மங்கலநாண் அணிவிக்கப்பட்டது.  பின்னர் மஹாதீபாராதனை நடத்தப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பழனிக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் மற்றும் அறங்காவலர்கள், கோவில் அதிகாரிகள் ,உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.  விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மங்கல பிரசாதங்களும், திருமண விருந்தும் வழங்கப்பட்டது.

  • poojai coconut bid

    போடிநாயக்கனூர் சுப்பிரமணியர் திருக்கோவில் முருகன் திருக்கல்யாணத்தில் நடைபெற்ற சுவாரசியம். கந்த சஷ்டி பூஜை கலசத்தில் வைக்கப்பட்ட கலசத் தேங்காய் ரூபாய் 36 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த நபர்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் திருத்தலங்களிலும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று நடைபெற்று முடிந்ததை அடித்து திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக போடிநாயக்கனூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் இன்று முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

     முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தங்க கவசம்   சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கோவில் மண்டபத்தில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் அலை கடலென பக்தர்கள் திரண்டு வந்து திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர்.

     திருக்கல்யாணத்தின் முக்கிய நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது போல் இந்த முறையும்  கலச பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. ஆலய நிர்வாகம் சார்பாக ரூபாய் 3001ல் தொடங்கப்பட்ட ஏலம் படிப்படியாக உயர்ந்து நிறைவாக ரூபாய் 36 ஆயிரத்திற்கு  ஏலம் கேட்கப்பட்டது.

    போடிநாயக்கனூர் குப்பிநாயக்கம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மதன் வீரன் என்பவர் ரூபாய் 36 ஆயிரத்து ஒன்றுக்கு பூஜையில் வைக்கப்பட்ட ஒற்றை தேங்காயை ஏலம் எடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாணம் நிறைவு பெற்றதும் வேள்வி பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்படுவது குறிப்பிடத்தக்கது.

    வேள்வி பூஜையில் வைக்கப்பட்டு ஏலம் எடுக்கப்பட்ட தேங்காய் வீட்டில் வைத்து பூஜிக்கும் பொழுது பல்வேறு சுபிட்சங்கள் சுப காரியங்கள் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

  • November 19 2023 indrayanaal

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  நன்மை
    ரிஷபம்         –    வெற்றி
    மிதுனம்     –   எதிர்ப்பு
    கடகம்         –  சுகம்
    சிம்மம்         –   மகிழ்ச்சி  
    கன்னி         –    பாராட்டு
    துலாம்         –     மேன்மை
    விருச்சிகம்     –  ஆர்வம்
    தனுசு         –     இன்பம்  
    மகரம்         –    ஏமாற்றம்
    கும்பம்         –       நன்மை  
    மீனம்         –      முயற்சி
    சந்திராஷ்டமம்    –    திருவாதிரை, புனர்பூசம்

  • November 19 2023 Murugan thirukalyanam

    நவம்பர் 19 – முருகன் திருக்கல்யாணம்
    சோபகிருது வருடம் – கார்த்திகை 3
    சுபமுகூர்த்த நாள்
    19-நவ-2023 ஞாயிறு
    சோலைமலை முருகன் திருக்கல்யாணம்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.31 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : சப்தமி
    திதி நேரம் : சஷ்டி கா 8.4
    நட்சத்திரம் : திருவோணம் இ 11.55
    யோகம் : அமிர்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Thiruchendur soorasamharam

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமா நடைபெற்றது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான  கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது. ஆறு நாட்களும் தினமும் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. இன்று சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி, இன்று அதிகாலை 1-00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1-30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    இதனையடுத்து  யாகசாலை மண்டபத்தில் இன்று காலை 6-00 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி கந்த சஷ்டி மண்டபம் வந்தடைந்தார். பின்னர் மதியம் 2 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதருக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    மாலை 4-00 மணிக்கு கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமி ஜெயந்திநாதர் யானை முகம் கொண்ட தாரகாசூரனையும், சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார். பின்னர் தன் முகம் கொண்ட சூரபத்மனை வதம் செய்தார். தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்த  சூரபத்மனை வேலால் வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி சுவாமி ஜெயந்திநாதர் ஆட்கொண்டார். இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பல லட்சக்கணக்கான பக்தர்கள்  அரோகரா கோசத்துடன் கலந்து கொண்டனர். நாளை இரவு 11 மணிக்குமேல்  சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் திருக்கோயில் வளாக மேலக்கோபுரம் முன்பு உள்ள மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.