Blog

  • Thiruthani puspanjali

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி  உற்சவர் சண்முக பெருமாளுக்கு  4-டன் மலர்களால் புஷ்பாஞ்சலி பக்தர்கள் முன்னிலையில் தொடங்கியது.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5- படை திருக்கோயிலாகும்,  உற்சவர் சண்முகப் பெருமானுக்கு திருவிழாவில் கந்த சஷ்டி , இன்று 4-டன்மலர்களால் புஷ்பாஞ்சலி,1008 இலட்சார்ச்சனை நிகழ்ச்சி வெகு விமர்சையாக பக்தர்கள் முன்னிலையில் தொடங்கியது.

     இதனை தொடர்ந்து நாளை நவம்பர் 19-ஆம் தேதி காலை 10- மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் முருகப்பெருமான் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற உள்ளது,

    இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள்- வி. சுரேஷ் பாபு, மோகனன், நாகன் ,ஆகியோர்கள் செய்துள்ளனர்.

  • Palanai Soorasamharam

    பழனி முருகன் கோவில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான  சூரசம்ஹாரம் நடைபெற்றது ,இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டனர்.

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் விமர்சையாக நடைபெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்று கந்தசஷ்டி திருவிழா. இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 13 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்ய கூடிய நிகழ்ச்சி  மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதையில் நடைபெற்றது.

    முன்னதாக மலைமீது எழுந்தருளி இருக்கக்கூடிய மலைக்கொழுந்து அம்மனிடம் இருந்து சின்னக்குமாரர் சக்திவேலை வாங்கி கொண்டு நவ வீரர்கள் முன்னே அணிவகுத்து வர மலையடிவாரத்திற்கு வந்து சூரபத்மன்களை வதம் செய்தார். முதலில் வடக்கு கிரி வீதியில் தாரகாசுரனையும், அடுத்ததாக கிழக்கு வீதியில் பானுகோபன் சூரனையும் சின்னகுமரர் வதம் செய்வார்.

    பின்னர் தெற்கு கிரி வீதியில் சிங்கமுக சூரனையும் இறுதியாக மேற்கு கிரி வீதியில் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூரனை வதம் செய்யக்கூடிய நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் எழுப்பி விமர்சியாக திருவிழாவானது நடைபெற்றது.  விழாவுக்கான ஏற்பாடு கோயில் நிர்வாகம் செய்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

  • Murugan vel vangum nigazhchi

    கந்தசஷ்டி விழாவையொட்டி நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தில் நடைபெற்ற வேல் வாங்கும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு; அம்மனிடம் வேல் வாங்கிய முருகனுக்கு முகத்தில் முத்து,முத்தாக வியர்க்கும் மகிமையை கண்டு பக்தர்கள் பக்தி பரவசம்.

    தமிழ்கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான திருத்தலமாக நாகை மாவட்டத்திலுள்ள சிக்கல் சிங்காரவேலவர் ஆலயம் விளங்கி வருகிறது.இத்தகைய சிறப்புகளை கொண்ட சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தின் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 13,ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. தினமும் ஆலயத்திலிருந்து  சிங்காரவேலவர்சுவாமி தங்க மயில் வாகனம், வெள்ளிரிஷப வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

    இந்நிலையில் கந்த சஷ்டி பெருவிழாவையொட்டி,சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமான் தன் தாயிடம் வேல்வாங்கியதும் திருமேனி எங்கும் வியர்வைபொழியும் அருட்காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேரில் எழுந்தருளிய சிங்காரவேலவர் தனது தாயார் வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் சக்திவேல் வாங்கினார்.

    அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கந்தனுக்கு அரோகரா,முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டனர். பின்னர் வேல் வாங்கிய முருகப்பெருமான் தனி சன்னதியில் அமர்ந்ததும், சிங்காரவேலவரின் திருமுகம் முழுவதும் வியர்வை துளிகள் அரும்பியது. சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவில் சிங்காரவேலவர் முகத்தில் முத்து முத்தாக வியர்க்கும் அதிசயத்தை கண்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

  • November 18 2023 Rasipalan

    நவம்பர் 18 – இன்றைய ராசிபலன்….
    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  லாபம்
    ரிஷபம்         –    நலம்
    மிதுனம்     –   களிப்பு  
    கடகம்         –  செலவு
    சிம்மம்         –   பரிசு
    கன்னி         –    அமைதி
    துலாம்         –     எதிர்ப்பு
    விருச்சிகம்     –  வருத்தம்
    தனுசு         –     அச்சம்
    மகரம்         –    உறுதி
    கும்பம்         –       ஆதரவு   
    மீனம்         –      பயம்
    சந்திராஷ்டமம்    –    மிருகசீருஷம், திருவாதிரை

  • November 18 2023 Soorasamharam

    நவம்பர் 18 – கந்தசஷ்டி சூரசம்ஹாரம்
    சோபகிருது வருடம் – கார்த்திகை 2
    18-நவ-2023 சனி
    சூரசம்ஹாரம்,
    கந்தசஷ்டி விரதம் முடிவு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் : பஞ்சமி கா 10.14
    நட்சத்திரம்: உத்திராடம் ந.இ 1.26
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மிருகசீரிசீ டம்,திருவாதிரை
    சூலம் : கிழக்கு

     

  • Koil agal vilakku deepam

    விளக்கில் எண்ணை விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும். தீபம் ஏற்ற தூய்மைமான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது.அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

    விநாயக பெருமானுக்கு 7 தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளுக்கு 6 தீபம், நாக அம்மனுக்கு 4 தீபம், சிவனுக்கு 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்- சிங்கம்- நந்தி முன்பாக, பிள்ளையார்-பெருச்சாளி முன்பாக, பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்-மயில் முன்பாக ஏற்ற வேண்டும்.

    தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

    காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

    முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2-வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3-வது மேற்கு நோக்கி இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2-வது வடக்கே உள்ள திரியையும், 3-வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும். ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில் – தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி – எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

  • Karthigai Deepa Vazhipadu

    கார்த்திகை மாதம் மற்ற தமிழ் மாதங்களைவிட மிக, மிக புனிதமானது. முறைப்படி மனதை ஒரு முகப்படுத்தி வழிபட்டால் அளவிடற்குரிய பலன்களை கார்த்திகை மாதத்தில் பெறலாம். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.

    தினமும் அதிகாலை பிரம்ம கூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும். மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும். திருமண தடை விலகும்.

    வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம். அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணைய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

    விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும். மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும். குழந்தைபாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.

     

  • palani lingeswarar koil kumbabishegam

    பழனி லிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பழனி ராமநாதன் நகரில் காரிய நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. நரசிம்மர் கோயில் வளாகத்தில் ஐஸ்வர்ய லிங்கேஸ்வரர், ஐஸ்வர்ய நந்தி தேவர், ஐஸ்வர்ய நாயகி, பஞ்சமுக கணபதி சன்னதிகள் அமைப்பதற்கான திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கோயில் திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து குடமுழுக்கு இன்று விழா நடைபெற்றது.

    முன்னதாக கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்கப் பட்டன. அதனைத் தொடர்ந்து புண்ணிய நதிகளில் இருந்தது கொண்டுவரப்பட்ட தீர்த்தம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. குடமுழுக்கு விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    குடமுழுக்கு விழா நிறைவடைந்தது அடுத்து திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பக்தர்கள் ஐஸ்வர்ய லிங்கேஸ்வரர்- ஐஸ்வர்ய நாயகியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உணவு அறுந்தினர்.

  • Thiruthani kantha sasti vizha

    திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி இலட்சார்ச்சனை 3ஆம் நாள் திருவிழா உற்சவர் சண்முகப் பெருமான் நீல நிற பட்டு உடுத்தி சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் தீப ஆராதனை நடைபெற்றது, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்…

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி & புஷ்பாஞ்சலி இலட்சார்ச்சனை 3-ஆம் நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் மலைக் கோவிலில் மூலவர் முருகப் பெருமான் பட்டு அங்க வஸ்திரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதேபோல் மலைக்கோயில் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமான் அவருக்கு  பால், பழம், தயிர், பஞ்சாமிர்தம், திருநீர், இளநீர், போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்து, புஷ்ப அலங்காரம் சிறப்பு நீல நிற பட்டு உடுத்தி, சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது,

     இதனைத் தொடர்ந்து இலட்சார்ச்சனை யில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி விரதம் இருந்து வரிசையில் சென்று  சாமி தரிசனம் செய்தனர்.

  • sabari malai nadai thirappu

    இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜைக்காக தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றினார். மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோவிலில் அதிகாலை 3.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    நடப்பாண்டில் கார்த்திகை மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது. நாளை முதல் நாள்தோறும் அதிகாலை 3.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும்.

    41 நாட்கள் நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு, டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும். டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு ஜனவரி 15ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெறும்.  அன்று மாலை 6.30 மணிக்கு புகழ்பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.