Blog

  • November 26 2023 Karthigai deepam

    நவம்பர் 26 – திருக்கார்த்திகை தீபம்
    சோபகிருது வருடம் – கார்த்திகை 10
    கார்த்திகை
    26-நவ-2023 ஞாயிறு
    திருக்கார்த்திகை,
    திருப்பரங்குன்றம் முருகன் தேர்
    கரிநாள்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : சதுர்த்தசி ம 3.57
    நட்சத்திரம் : பரணி ம 2.40
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

  • Ambigai kadaipiditha karthiga deepa viradham

    முன்னொரு காலத்தில் தாரகாசுரன் என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவனுக்கு கமலாட்சன், தாரகாட்சன், வித்தியுன்மாலி என்று மூன்று புதல்வர்கள் இருந்தனர். `திரிபுராசுரர்’ என்று அழைக்கப்படும் இந்த மூவரும் பிரம்மனை நோக்கித் தவம்புரிந்தனர். பிரம்மனிடம் சாகா வரம் தரும்படி வேண்டினர்.

    பிரம்மன் கொடுத்த வரம்
    சிவபெருமானைத் தவிர அனைவரும் ஒருநாள் இறந்தே தீர வேண்டும். எனவே, சாகா வரம் கிடைக்காது என்றார் பிரம்மா. `அப்படியானால் இரும்பு, பொன், வெள்ளியாலான மூன்று நகரங்களும், அவை நாங்கள் விரும்பியபடி பறக்கவும், வேண்டிய இடத்தில் இறக்கவும் வேண்டும், சிவபெருமான் நேரில் வந்து அழித்தாலொழிய, வேறு எவராலும் அழியக் கூடாது என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றனர்.

    சிவனின் கோபம்
    முப்புரங்களைப் பெற்றதால், அவர்களின் கர்வம் தலைக்கேறியது. அசுரர்கள் பலத்தோடு அனைத்தையும் அழித்தனர். அச்சமடைந்த மக்களும் தேவர்களும் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். சிவபெருமான் பூமியை ரதமாகவும், சந்திரனை தேர்ச் சக்கரமாகவும், நான்மறைகளைக் குதிரைகளாகவும், மேரு மலையை வில்லாகவும், திருமாலை அம்பாகவும் கொண்டு திரிபுரம் எரிக்கப் புறப்பட்டார்.

    திரிபுரத்தை நோக்கி, தம் வில்லை வளைத்து நாணை ஏற்றினார். ஆனால், கணையைத் தொடுக்காமல், பார்த்துவிட்டு புன்சிரிப்பு ஒன்றை உதிர்த்த மாத்திரத்தில், முப்புரங்கள் தழலென எரிந்து சாம்பலாயின. அத்தனை அரக்கர்களும் கார்த்திகைப் பெளர்ணமி அன்று மடிந்தனர். இதனையறிந்த தேவர்களும் மக்களும் மகிழ்ந்தனர். அந்த நாளே திருகார்த்திகை தீப நாளாகும்.

    ஒருமுறை அம்பிகை தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்ள, கார்த்திகை தீபம் ஏற்றிவைத்து, விரதமிருந்து, சிவபெருமானின் பேரருளால் தோஷத்தைப் போக்கிக்கொண்டாள் என்று தேவி புராணம் கூறுகிறது. திரிசங்கு, கிருத்திகை விரதம் கடைபிடித்து பேரரசனானான். பகீரதன், கார்த்திகை விரதம் கடைப்பிடித்து, தான் இழந்த நாட்டை மீண்டும் திரும்பப் பெற்றான் என புராண கதைகள் கூறுகின்றன.

  • Karthigai deepam endha disai nokki deepam ettra vendum

    கார்த்திகை மாதம் மற்ற தமிழ் மாதங்களைவிட மிக, மிக புனிதமானது. முறைப்படி மனதை ஒரு முகப்படுத்தி வழிபட்டால் அளவிடற்குரிய பலன்களை கார்த்திகை மாதத்தில் பெறலாம். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். தினமும் அதிகாலை பிரம்ம கூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும். மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும். திருமண தடை விலகும்.

    வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம். அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணைய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும். மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும். குழந்தைபாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.

    விளக்கில் எண்ணை விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும். தீபம் ஏற்ற தூய்மைமான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது.

    அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும். விநாயக பெருமானுக்கு7 தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளுக்கு 6 தீபம், நாக அம்மனுக்கு 4 தீபம், சிவனுக்கு 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்- சிங்கம்- நந்தி முன்பாக, பிள்ளையார்-பெருச்சாளி முன்பாக, பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்-மயில் முன்பாக ஏற்ற வேண்டும். தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

    காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

    முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2-வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3-வது மேற்கு நோக்கி இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2-வது வடக்கே உள்ள திரியையும், 3-வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும். ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில் – தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி – எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

  • Thiruvannamalai deepam kopparai

    கார்த்திகை தீபத் திருவிழா 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் தீப கொப்பறை சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீப திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழா நாளை நடைபெறுகிறது, நாளை காலை 4 மணியளவில் திருக்கோயிலின் கருவரை முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு திருக்கோயில் பின்பு உள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது, மகா தீபம் ஏற்றப்படும் பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதித்த 5 – 3/4 அடி உயரமுள்ள கொப்பறை திருக்கோயிலின் கிளி கோபுரம் அருகில் உள்ள நந்தி சிலை முன்பு சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    நினைத்தாலே முக்தி தரும் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் 5 – 3/4 அடி உயரமுள்ள பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதித்த தீப கொப்பறை பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது, கொப்பறையை மலை உச்சிக்கு கொண்டு சென்ற பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தியுடன் தூக்கி சென்றனர்.

  • November 25 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வெற்றி
    ரிஷபம்         –    உதவி
    மிதுனம்     –   பக்தி
    கடகம்         –  சினம்
    சிம்மம்         –   லாபம்
    கன்னி         –    புகழ்
    துலாம்         –     தனம்  
    விருச்சிகம்     –  ஆதாயம்
    தனுசு         –     செலவு
    மகரம்         –    ஆக்கம்
    கும்பம்         –       பரிசு
    மீனம்         –      நிறைவு
    சந்திராஷ்டமம்    –    உத்திரம், அஸ்தம்

  • November 25 2023 Indrayanaal

    நவம்பர் 25 – கார்த்திகை 9
    சோபகிருது வருடம்
    25-நவ-2023 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : திரையோதசி
    திதி நேரம் : திரையோதசி மா 5.13
    நட்சத்திரம் : அசுவினி ம 3.19
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • deepam thiruvizha 8th day

    பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்கி தரும்  திருதலமாக விளங்குவது திருவண்ணாமலையாகும். இங்கு உள்ள புகழ் மிக்க அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோரும் திருக்கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகின்றது.

    இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொங்கியது. திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 8ஆம் நாளான இன்று காலையில் விநாயகர் ,சந்திரசேகரர்  வெட்டும்குதிரையில் மாடவீதியுலா வந்தனர்.

    முன்னதாக விநாயகர் மற்றும் சந்திரசேகர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடந்து  விநாயகர் சந்திரசேகரர் வெட்டும் குதிரை வாகனத்தில்  மாடவீதியுலா வந்தனர். ஆயிரக்கண்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 26 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணி அளவில் மழை உச்சியின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த தீப தரிசனத்தை காண தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Vedapuriswarar temple pradhosham

    புதுச்சேரி காந்திவீதியில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில், பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பிரதோஷ நாளில் பக்தர்கள் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வணங்குகிறார்கள். ஒவ்வொரு பிரதோஷத்திலும் விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்களுக்கு, சிவபெருமான் மகிழ்ச்சியையும், செழிப்பையும், பேரின்ப வாழ்வையும் வழங்குவார் என்பது நம்பிக்கை. அதனால் பிரதோஷ நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

    இந்த பிரதோஷ நாளை முன்னிட்டு புதுச்சேரி புதுச்சேரி காந்திவீதியில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில்,சிவ பெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், திருநீறு மற்றும் பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு சிவபெருமான் மற்றும் நந்தி பகவானை வழிபட்டு வணங்கி சென்றனர்.

  • November 24 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  பெருமை
    ரிஷபம்         –    நற்சொல்
    மிதுனம்     –   எதிர்ப்பு
    கடகம்         –  பொறுமை
    சிம்மம்         –   போட்டி
    கன்னி         –    ஆர்வம்  
    துலாம்         –     வரவு
    விருச்சிகம்     –  விவேகம்
    தனுசு         –     வருத்தம்
    மகரம்         –    அன்பு
    கும்பம்         –       உற்சாகம்  
    மீனம்         –      இன்பம்
    சந்திராஷ்டமம்    –    பூரம், உத்திரம்

  • November 24 2023 Pradhosham

    நவம்பர் 24 – பிரதோஷம்
    சோபகிருது வருடம் – கார்த்திகை8
    பிரதோஷம்
    சுபமுகூர்த்த நாள்
    24-நவ-2023 வெள்ளி
    வாஸ்து நாள்(காலை 11.29 – 12.05)
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : துவாதசி
    திதி நேரம் : துவாதசி மா 6.51
    நட்சத்திரம் : ரேவதி மா 4.18
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்