Blog

  • தெரிந்த கோயில் தெரியாத அதிசயம்…. தேவிகாபுரம் பொன்மலைநாதர் கோயில்

    திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.

  • பழநி முருகன் கோயிலில் இலவச பஞ்சாமிர்த திட்டம்….

    பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு இலவச பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே, காணொலி காட்சி மூலமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பழநி முருகன் கோயிலில் இலவச பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டத்தை இன்று காலை தொடங்கினார்.

    இந்த திட்டத்தின்படி, கோயிலுக்கு வரும் சுமார் 2 ஆயிரம் பக்தர்களுக்கு தொன்னையில் 20 கிராம் பஞ்சாமிர்தம் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி…

    மே 10-ஆம் தேதி சித்ரா பௌர்மணியை முன்னிட்டு திருவண்ணாமலை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பஞ்சபூத சிவஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கி வருவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலாகும். இங்கு ஒவ்வொரு மாதம் பௌர்ணமி நாளின்போது ஏராளமானோர் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்வர். சுமார் 14 கி.மீ. தூரம் கொண்ட மலையை சுற்ற முடியாத முதியவர்கள், உடல் நலிந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்காக ஆட்டோ, கார்கள் மூலமும் சுற்றும் வசதியும் உள்ளது. இந்நிலையில் வரும் மே 10-ஆம் தேதி சித்ரா பௌர்ணமி என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவர். பக்தர்கள் கிரிவலம் செல்ல ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  • மந்திரங்களின் தாயான காயத்ரி

     

    மந்திரங்களின் தாயான காயத்ரி

     

    மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என்று கிருஷ்ணா பரமாத்மா கூறியிருப்பதன் மூலம் நம்மால் காயத்ரி மந்திரத்தின் மகிமையை உணர்ந்துகொள்ள முடிகிறது . மந்திரங்களுக்கெல்லாம் தாயாக விளங்குவது காயத்ரி மந்திரம் . மகரிஷி விசுவாமித்திரரால் மக்களுக்கு சொல்லப்பட்டது தான் மகிமை வாய்ந்த இந்த காயத்ரி மந்திரம் .

     

    காயத்ரி மந்திரம்:

     

    ஓம் பூர் புவஸ்ஸூவ

    தத் சவிதுர்வரேண்யம்

    பர்கோ தேவஸ்ய தீமஹி

    தியோ யோ ந: ப்ரசோதயாத்|

     

    காயத்ரி மந்திரத்தின் விளக்கம்:

     

    பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

     

    24 அட்சரங்களைக் கொண்ட காயத்ரி மந்திரதை  தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும் என்றும் ஜபிப்பவர்களுக்கு அளவற்ற சக்தியையும்  , வைராக்கியத்தையும் தரும் என்பது நம்பிக்கை .

     

     சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்களால் போற்றப்படும் காயத்ரி மந்திரம் ,காலையில்  காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டிலும்  காயத்ரிக்குத் தான் முதல் இடம்.

     

    ஒரு முறை பிரம்மா புஷ்கரம் என்ற புண்ணிய சேக்திரத்தில் ஒரு யாகத்தை தொடங்கினார் . அந்த யாகத்தில் பங்கேற்க சரஸ்வதி வராததால் , பிரம்மா தனத்து சக்தியின் பயனால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்டித்தார்.காயத்ரி தேவியை நாமகளின் அம்சமாக கொண்டு நான்முகன் தனத்து யாகத்தை நிறைவு செய்தார்  என்கிறது புராணம் .  செந்தாமரையில் எழுந்தருளிய அன்னை ஐந்து திருமுகங்களும் பத்து கரங்களும் கொண்டு அழகே உருவாக திகழ்கிறாள் .

     

    சில முக்கிய காயத்ரி மந்திரங்கள்

     

    காயத்ரி தேவி மந்திரம்

     

     

    ஓம் பூர்: புவ: ஸூவ: தத்ஸவிதுர் வரேண்யம்

    பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரயோதயாத்.

     

     

    ஸ்ரீ கணபதி

     

    ஓம் தற்புருஷாய வித்மஹே: வக்ர துண்டாய தீமஹி

    தந்நோ தந்தி: ப்ரயோதயாத்.

     

     

    ஸ்ரீ விஷ்ணு

     

     

    ஓம் நாராயணாய வித்மஹே: வாசுதேவாய தீமஹி

    தந்நோ விஷ்ணு ப்ரயோதயாத்.

     

     

    ஸ்ரீ சிவா

     

     

    ஓம் பஞ்ச்வக்த்ராய வித்மஹே: மஹாதேவாய தீமஹி

    தந்நோ ருத்ர ப்ரயோதயாத்.

     

     

    ஸ்ரீ பிரம்மா

     

     

    ஓம் வேதாத்மனாய வித்மஹே: ஹிரண்ய கர்ப்பாய

    தீமஹி

    தந்நோ பிரம்ம: ப்ரயோதயாத்.

     

     

    ஸ்ரீ லட்சுமி

     

     

    ஓம் மஹாலட்சுமியை ச வித்மஹே: விஷ்ணு பத்ன்யை தீமஹி

    தந்நோ லட்சுமி: ப்ரயோதயாத்

     

     

    ஸ்ரீ சரஸ்வதி

     

     

    ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே: ப்ரம்ம பத்ன்யை தீமஹி

    தந்நோ வாணி ப்ரயோதயாத்.

     

    ஸ்ரீராமர்

     

    ஓம் தாசரதாய விதமஹே

    சீதா வல்லபாய தீமஹி

    தந்நோ ராமஹ ப்ரசோதயாத்

     

    ஸ்ரீசீதா

     

    ஓம் ஜனக நந்தின்யை ச வித்மஹே

    பூமிஜாயை ச தீமஹி

    தன்னோ சீதா ப்ரசோதயாத்

     

     

     ஸ்ரீ ஆதிசேஷன்

    (நாக தோஷம் நீங்கிட ஜபிக்கவும்)

     

    ஓம் ஸகஸ்ய சீர்ஷாய வித்மஹே

    விஷ்ணு தல்பாய தீமஹி

    தந்நோ நாக ப்ரசோதயாத்

     

     

    ஸ்ரீஹயக்ரீவர்-குதிரை முக விஷ்ணு

    (கல்வி வளர)

     

    ஓம் வாகீச்வராய வித்மஹே

    ஹயக்ரீவாய தீமஹி

    தந்நோ ஹம்ஸ ப்ரசோதயாத்

     

    ஸ்ரீகருடன்

    (சர்ப்ப தோஷம் நீங்கிட)

    ஓம் தத்புருஷாய வித்மஹே

    ஸீவர்ண பட்சாய தீமஹி

    தந்நோ கருடஹ ப்ரசோதயாத்

     

    ஸ்ரீசரபேஸ்வரர்

    (செய்வினை,ஏவல்,வசியம் மற்றும் மாந்திரீகப் பிரயோகங்களால்  உண்டான தீமைகள் நீங்க )

    ஓம் ஸாலுவே சாய வித்மஹே

    பட்சி ராஜாய தீமஹி

    தந்நோ சரபஹ ப்ரசோதயாத்

     

     

    ஸ்ரீஅன்னபூரணி

    ( என்றும் உணவு கிடைக்க)

     

    ஓம் பகவத்யை வித்மஹே

    மாஹேச்வர்யை தீமஹி

    தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

     

    குபேரன்

    (செல்வம் பெருக )

     

    ஓம் யட்சராஜாய வித்மஹே

    வைச்ரவணாய தீமஹி

    தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்

     

    அனுமான்

     (புத்தி, பலம், தைரியம் பெருக)

     

    ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

    வாயுபுத்ராய தீமஹி

    தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்

     

    நந்தீஸ்வரர்

    (சிவபெருமான் அருள் கிடைக்க)

     

     

    ஓம் தத்புருஷாய வித்மஹே

    சக்ரதுண்டாய தீமஹி

    தன்னோ நந்திஹ் ப்ரசோதயாத்

     

    தன்வந்திரி

     

    (சகல நோய்களும் குணமடைய)

    ஓம் தன்வந்தராய வித்மஹே

    அமிர்த கலச ஹஸ்தாய தீமஹி

    தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத்

                                                            

    எமன்

     

    (துர் மரணம் நிகழாமல் இருக்க)

     

     

    ஓம் வைவஸ்வதாய வித்மஹே

    தண்டஹ்ஸ்தாய தீமஹி

    தன்னோ எமஹ் ப்ரசோதயாத்

     

    காயத்ரி என்றால் தன்னை ஸ்மரிப்பவர்களை காப்பாற்றுபவள்  என்று பொருள். காயத்ரி மந்திரம் ஜபித்தால் எடுத்த இந்த பிறவியில் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அனுதினமும் நமது இஷ்ட தெய்வதிற்கான  காயத்ரி மந்திரத்தை தூய மனதோடு ஜபித்து சகல சம்பத்துக்களையும் அடைவோம் .

  • அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி….

    திருவண்ணாமலை கோவிலில் சித்திரை வசந்த உற்வச விழாவையொட்டி அய்யங்குளத்தில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை வசந்த விழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான சித்திரை வசந்த விழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேம், ஆராதனை நடந்து வந்தது. இரவில் கோவில் 3-ம் பிரகாரத்தை சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் தலவிருட்சமான மகிழமரம் அருகே வரும்போது உற்சவருக்கு குழந்தை பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் 10-வது நாளான நேற்று காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி முற்பகல் 11.30 மணியளவில் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் புறப்பட்டு அய்யங்குளத்தில் எழுந்தருளினார்.

  • ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மங்களப் பொருட்கள் அனுப்பும் விழா

    மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு, ஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த மங்கள பொருட்கள் அனுப்பும் விழா ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த வஸ்திரம், மாலை, கிளி உள்ளிட்டவற்றை மே9 ஆம் தேதி இரவு தல்லாகுளம் பெருமாள் திருக்கோயிலில் கள்ளழகர் திருமஞ்சனம் கண்டருளி சூடிக் கொள்வார். அதன் பின்னரே வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக ஸ்ரீஆண்டாளுக்கு விசேஷ மாலை, புது வஸ்திரம், கிளி உள்ளிட்டவை சூடப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இவை மாட வீதிகளின் வழியே உலா வரப்பெற்று மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  • மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா தேரோட்டம் ….

    மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 5-ந் தேதியும், திக் விஜயம் 6-ந் தேதியும் நடைபெற்றது. இந்த விழாவின் முத்தாய்ப்பாக தேரோட்டம் விமரிசையாக நடை பெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே பக்தர்கள் தேர்முட்டி வீதியில் திரண் டனர். சுவாமி- அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வந்தனர்.

  • “என் குழந்தைகளைத் தந்தையான நான் காப்பாற்றாமல் வேறு யார் காப்பாற்றுவார்!”- சத்குரு சாயி

     

    கடவுளை நம்பினோர் கை விடப்படார் என்பதற்கு நம் கலியுகக் கடவுளான சாயி ஒரு மிகச் சிறந்த உதாரணம் . ஒவ்வொரு நாளும் தன்னை சரணடைந்த அடியவர்களுக்கு தான் இருந்த இடத்தில் இருந்தே தன்னுடைய வரம் நல்கும் கரத்தை கொண்டு ஆசீர்வதிக்கும் கல்பக விருக்ஷம் அவர் . அந்த சீரடி மகானின் கருணையை தங்கள் வாழ்நாளில் தினம் தினம் உணரக் கூடிய பேறு பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள் . நிறைய அடியவர்கள் தங்கள் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாபாவின் படத்தின் மூலமே அவரின் அற்புதங்களை கண்கூடாகப் பார்த்திருக்கிறார்கள் .  தன்  அடியவர்கள் தன்னை நினைக்கும்  நேரம் , நினைக்கும் தருணம்  எதிரே வந்து ஆட்கொள்ளும்  தயாளன் சீரடி சாயி .

     

    சீரடியை அடுத்து இருந்த ஒரு ஊரிலும் பாபாவுக்கு ஒரு அடியவர் இருந்தார் . அவர் வாழ்வில் பாபா நிகழ்த்திய ஒரு அற்புதத்தைப் பார்க்கலாம் .  ஒரு சிறிய பள்ளிக்கூடம் ஒன்றில் பணியாற்றி வந்த மாதவராவ் மல்வந்த் தேஷ் பாண்டே பரம ஏழை . ஆனாலும் தன்னுடைய பூர்வ புண்ணிய பலனில் பணக்காரரான அந்த மனிதர் பாபாவின் பரம பக்தர் . பாபாவை தன்னுடைய  கண்கண்ட தெய்வமாகக் கருதி பூஜித்து வந்தார் . முழு முதற் கடவுளான தன்னுடைய சாயி , தன்னை எந்த தீங்கில் இருந்ததும் காப்பாற்றுவார் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார் . தான் சந்திக்கும் அன்றாட பிரச்சனைகளை சாயின் மூலம் தீர்வுக் கண்டு , அதற்கு அவருக்கு நன்றியும் செலுத்தி வந்தார் . தன்னுடைய பணிகளுக்கு இடையே , முடியும் போதெல்லாம் சீரடி சென்று பாபாவை தரிசனம் செய்து , அவரது அமுத மொழிகளை கேட்பதில் ஆனந்தம் அடைந்தார் .

     

    ஒருநாள் மசூதிக்கு பாபாவை தரிசிக்கும் பொருட்டு , அவர் நாமத்தை ஸ்மரணம் செய்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார் அப்போது திடீரென்று சாலையின் குறுக்காக ஊர்ந்து வந்த ஒரு கருநாகம்! அவரை  எதிர்பாராதவிதமாக  தீண்டி விட்டு விறுவிறுவென மறைந்துவிட்டது. கொடிய அந்த நாகப் பாம்பின் விஷம் அவரது உடலெங்கும் கிடுகிடுவெனப் பரவத் தொடங்கியது. .  கண் மூடி திறக்கும் நேரத்தில் இவை அனைத்தும் ஒரு கணத்தில் நடந்து விட்டது . அவர் மேனி நீலமாக மாறத் தொடங்கியது .  

     

    வாயில் நுரை தள்ள  மாதவராவுக்கு  என்ன நடந்தது என்பது  அப்போது தான் சுதாரித்துக்கொண்டார் .  சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள் அவர் நிலையைப் பார்த்து உதவ ஓடோடி வந்தார்கள். ஆனால் யாருக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. அந்தக் கொடிய விஷத்தினால் அவர் முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்தார்கள் .  மற்றவர்கள் பதறினாலும் பாபாவின் மேல் உறுதியான நம்பிக்கை கொண்ட மாதவராவ் தன்னை தன் தெய்வம் காப்பாற்றும் என்று உறுதியாக நம்பினார் .  இதுவரை தன் வாழ்வின் எல்லா சோதனைகளிலும் உடனிருந்த சாயி இப்போது மட்டும் தன்னை விடடு விடுவாரா என்ன என்று பாபாவிடம் சரணடைந்தார் .   

     

    அதற்குப் பிறகு   ஒருகணம் கூடத் தாமதிக்காமல் உடனடியாக பாபா தங்கியிருந்த மசூதிக்கு வாயில் நுரை தள்ளத் தள்ள ஓடி வந்தார். அவருடன் மற்றவர்களும் கவலையோடு அவரைப் பின்தொடர்ந்து வந்தார்கள் .  “ என்னைக் காப்பாற்றுங்கள் பாபா. என்னைக் காப்பாற்றுங்கள்! உங்களையே சரணடைந்திருக்கும் என்னைக் கைவிட்டு விடாதீர்கள்!” என்று கதறியவாறே மாதவராவ் மசூதிப் படிகளில் அந்த நிலைமையிலும்  தன்னால் இயன்றவரை வேகமாக ஏறினார் .  

     

    கொட்டிய கருநாகத்தின் விஷத்தில் இருந்து பாபா எப்படி இவரைக் காப்பாற்ற போகிறாரோ என்று சந்தேகத்துடன் சிலரும் , பாபா நினைத்தால் எத்தகைய அற்புதத்தையும் செய்து விட முடியும் என்ற நம்பிக்கையுடன் சிலரும்  மக்கள் அவரை பின் தொடர்தார்கள் . தன்னிடம் முழு சரணாகதி  அடைந்து தன்னை நோக்கி மசூதி  படிமேல் ஏறிக் கொண்டிருந்தவரை  தன்னுடைய தீட்சணியமான கண்களால் பார்த்தார் பாபா. வாயில் நுரை தள்ளத் தள்ளப் படிகளில் மேலேறி வரும் தன் அடியவனைப் கொடிய பாம்பு கடித்திருக்கிறது என்பதை அந்த தெய்வம் புரிந்துக் கொண்டது .  

     

    அடுத்த கணம் தன்னையே நம்பி வந்த அந்த அடியவரைப் பார்த்து, ஏறாதே! நான் கட்டளையிடுகிறேன். ஏறாதே! நில்! இறங்கு! உடனடியாகக் கீழே இறங்கு! என்று பாபா ஆக்ரோஷமாகக் கூச்சலிட்டார். அவரது உரத்த கூச்சல் அனைவரையும் திடுக்கிட வைத்தது .  கேட்ட மக்கள் அனைவரும் வெலவெலத்தார்கள். அந்த அடியவரோ தான் எந்தத் தவறும் செய்யவில்லையே! பாபா தன்னைக் காப்பாற்றுவார் என்றல்லவோ தேடிவந்தோம்,  ஆனாலும் பாபா ஏன் நம்மிடம் இப்படி நடந்துக் கொள்கிறார் என்று அப்படியே படிகளில் மேலே ஏறாது நின்றார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக  கூப்பியக் கரத்தோடு பாபாவையே பார்த்துக் கொண்டிருந்தார் . கூட்டத்தினரும்  பாபாவின் இந்த செய்கைக்கு காரணம் புரியாமல்  விக்கித்து நின்றனர்.

     

    ஆனால், அடுத்த கணம் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் பாபா சொன்ன வார்த்தைகளின் பொருள் புரியத் தொடங்கியது. பாபா ஏறாதே! இறங்கு! என்று ஆணையிட்டது மாதவராவுக்கல்ல! மாதவராவின் உடலில் கிடுகிடுவென ஏறிக் கொண்டிருந்த கடுமையான விஷத்திற்கு! தான் என்பதை புரிந்துக் கொண்டனர் . இந்த உலகை சூழ்ந்துள்ள  பஞ்ச பூதங்களுமே பாபாவின் சொல்லுக்குக் கட்டுப்படும்  போது விஷமா அவரின் ஆணைக்கு அடங்காது ?  பாபாவின் ஆணைக்குப் பணிந்து, அடுத்த கணமே மாதவராவின் உடலில் இருந்து  விஷம் இறங்கத் தொடங்கியது. கொட்டுவாயின் வழியாக விஷம் வெளியேறியதையும், மாதவராவ் உடல் நீல நிறம் மாறிப் பழைய நிறம் பெறத் தொடங்கியதையும் பார்த்துப் பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். தன் நிலைக்கு திரும்பிய மாதவராவ் படிகளில் தடதடவென மேலே ஏறிச்சென்று என்னைக் காப்பாற்றிய தெய்வமே! என்று பாபாவின் பாதங்களில் பணிந்தார்.

     

    தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு என்றுமே  அரணாக நிற்கும் அந்தத் தாமரைப்பூம் பாதங்களை நன்றிப் பெருக்கோடு  தன்னுடைய  கண்ணீரால் கழுவினார். அவரை அள்ளியெடுத்த பாபா, “என் குழந்தைகளைத் தந்தையான நான் காப்பாற்றாமல் வேறு யார் காப்பாற்றுவார்!” என்றவாறே மாதவராவின் விழிகளில் வழிந்த கண்ணீரைத் தம் விரல்களால் துடைத்து விட்டார்.

    கருணையே மனித உருவெடுத்து வந்ததைப் போன்ற பாபாவின்  வாயில் இருந்து வந்த இந்த வார்த்தைகளைக் கேட்ட பக்தர்கள் நெகிழ்ந்தார்கள். ஆள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக தனது பக்தர்களுக்கு தனது கருணை ஊற்றை குறைவின்றி அளித்து வரும்  சாய் மகராஜின்  பாதம் பணிவோம் .

     

    சாயி சரிதம் தொடரும் …

  • சுந்தர வரதராஜ பெருமாள் கருட சேவை

    பிரசித்தி பெற்ற உத்தரமேரூர் ஸ்ரீ ஆனந்தவள்ளி நாயிகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருடசேவை நிகழ்ச்சி நடைபெ,றறது. இங்கு கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    இதன் முக்கிய நிகழ்வாக கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, சுந்தர வரதராஜ பெருமாள் அதிகாலை 5.30 மணியளவில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    பின்னர் கருட வாகனத்தில் புறப்பட்டு ராயர் தெரு, மேட்டு தெரு. கருணீகர் தெரு, திருமலையா பிள்ளை தெரு, வீர பெருமாள் அய்யங்கார் தெரு, பஜார் வீதி உள்ளிட்ட மாடவீதிகளில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள வைகுந்த வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வளாகத்துக்கு வந்த உற்சவருக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

  • திருச்சி தாயுமானவர் கோவிலில் திருக்கல்யாணம்….

    திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு இறைவன் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானவர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. 6-வது நாளில் பகல் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நேற்று அதிகாலை கல்யாண மாப்பிள்ளையான தாயுமான சுவாமிக்கும், மணப்பெண்ணான மட்டுவார்குழலம்மைக்கும் மங்கள ஸ்நானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவில் நுழைவு வாயில் முன்பு மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது.தொடர்ந்து 11.30 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். பின்னர் 12 மணிக்கு மேல் திருக்கல்யாண சடங்குகள் நடந்தன. அதையடுத்து தருமபுர ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் திரு நாணை தொட்டு வணங்கியவுடன் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.