Blog

  • kovilil-palli-yen-vangappadugirathu

    பல்லிக்கு சில சக்திகள் இருப்பதாலேயே காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோவிலில்  கர்பகிரகத்தின் மேல் கூரையில்  தங்கம் மற்றும் வெள்ளியில்  பல்லி உருவங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதே போல் ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி கோவிலிலும் பல்லி வணங்கப்படுகிறது.

    பல்லி நம் உடல்மீது எங்கு விழுந்தால் என்ன பலன்!

    தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்.
    தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்.
    நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி.
    நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்.
    வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி.
    வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்.
    முதுகு இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை.
    முதுகு வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்.
    கண் இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்.
    கண் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்.
    தோள் இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி.
    தோள் வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி.
    பிருஷ்டம் இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்.
    பிருஷ்டம் வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்.
    கபாலம் இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு.
    கபாலம் வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு.
    கணுக்கால் இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்.
    கணுக்கால் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு.
    மூக்கு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை.
    மூக்கு வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி.
    மணிக்கட்டு இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி.
    மணிக்கட்டு வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை.
    தொடை இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்.
    நகம் இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்.
    நகம் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு.
    காது இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்.
    காது வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்.
    மார்பு இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்.
    மார்பு வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்.
    கழுத்து இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி.
    கழுத்து வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை.

  • aiyapanin-pathinetu-padigalin-sirappu

    பதினெட்டு என்ற எண்ணுக்கு வரலாற்று சிறப்புண்டு. பாரதப் போர் நடைபெற்றது 18 நாட்கள், இராமாயணப் போர் நடைபெற்றது 18 மாதங்கள், தேவ, அசுரப்போர் நடைபெற்றது 18 ஆண்டுகள். எனவே பதினெட்டு என்ற எண் மிக முக்கியத்துவமானது. நம்முடைய பிறப்பு இறப்புக்குக் காரணமான பிறவிப் பெருங்கடலைக் கடக்க விடாமல், நம்மை முக்திநெறிக்கு ஆட்படுத்தாமல், நமது பிராரப்த வினைகள் நம்மை வாட்டி வதைக்கின்றன. இவற்றைக் களையவே நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும் நம்முடைய வினைகளைக் களையும் வகையில், தீய குணங்களை விட்டு விலக்கி, பிறவிப் பெருங்கடலிருந்து முக்தி அடைய வழிகாட்டுகிறது.

    முதல் படி – பிறப்பு நிலையற்றது: நாம் செய்யும் நன்மைகளும், தீமைகளும் நமது புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்ற உண்மையை உணர்ந்து, இறையருளால் முக்தி அடைய வேண்டும் என்ற ஆத்ம உணர்வினை அளிக்கிறது. இதுவே விஷாத யோகமாகும்.

    இரண்டாம் படி – சாங்கிய யோகம்: பரம்பொருளை குருவாக உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.

    மூன்றாம் படி – கர்ம யோகம்: உபதேசம் மட்டும் போதாது. மனம் பக்குவம் அடைய வேண்டும். அதாவது, பலனைக் கருதாமல் கடமையைச் செய்யும் பக்குவத்தை மூன்றாம்படி உணர்த்துகிறது.

     நான்காம் படி -ஞான யோகம்: பாவ, புண்ணியங்களைப் பற்றிக் கவலைப்படாமல், எதன் மீதும் பற்றின்றி பரமனை அடையும் வழியில் முன்னேறும் பாதையைக் காட்டுவது.

     ஐந்தாம் படி- சன்னியாச யோகம்: நான், எனது என்ற சிந்தனை இன்றி, எல்லாவற்றையும் துறந்து, இறைச் சிந்தனை ஒன்றையே வாழ்க்கையின் இலட்சியமாகக் கருதி செயல்படும் வழியினைக் காட்டுகிறது.

     ஆறாம் படி- தியான யோகம்: கடவுளை அடைய புலனடக்கம் மிக இன்றியமையாதது. ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, காது இவற்றை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அவை இழுத்த இழுப்புக்குச் செல்லாமல் தடுத்து, இறைவனால் அளிக்கப்பட்ட ஐம்புலன்களையும் நல்லவிதமாக இறைச் சிந்தனையால் நிரப்பி நல்வழிப்படுத்தும் வழியினைக் காட்டவே ஆறாம்படி அமைந்துள்ளது.

    ஏழாம் படி – ஞானவிஞ்ஞான யோகம்: அனைத்தும் பிரம்மமே என்ற உண்மையை உணர வைக்கிறது.

    எட்டாம் படி – அட்சர பிரம்ம யோகம்: எப்போதும் இறைச் சிந்தனையில் மூழ்கி, வேறு சிந்தனைகளற்று இருப்பது.

    ஒன்பதாம் படி – ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்: கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை; உண்மையான பக்தி, ஆன்மிகத்தை உணர வைத்து, ஏழையின் சிரிப்பில் இறைவனைக காண வைப்பது.

     பத்தாம் படி – விபூதி யோகம்: அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய குணங்களைக் கண்டாலும், அதை இறைவனாகவே உணர்வது.

    பதினொன்றாம் படி – விஸ்வரூப தரிசன யோகம்: உலகில் ஆண்டவனையும் ஆண்டவனில் உலகத்தையும் பார்க்கும் மனப் பக்குவத்தைப் பெறுவது.

     பன்னிரண்டாம் படி – பக்தி யோகம்: இன்ப – துன்ப, விருப்பு – வெறுப்பு, ஏழை – பணக்காரன் என்ற வேறுபாடுகளை நீக்கி, அனைத்திலும் சமத்துவத்தைக் காண வைக்கிறது.

    பதிமூன்றாம் படி – க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்: எல்லா உயிர்களிலும் இறைவனே வீற்றிருந்து, அவ்வுயிர்களை இயக்குகிறார் என்ற உண்மை நிலையினை உணர வைக்கிறது.

    பதினான்காம் படி – குணத்ரய விபாக யோகம்: பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களைக் களைந்து இறையளுக்குப் பாத்திரமாவதை காட்டுகிறது.

    பதினைந்தாம் படி – புருஷோத்தம யோகம்: தீய குணங்களை விட்டொழித்து, நற்குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நமக்குள் தெய்வாம்சத்தை அதிகரித்துக்கொள்ள வழிகாட்டுகிறது.

    பதினாறாம் படி – தைவாசுரஸம்பத் விபாக யோகம்: இறைவனது படைப்பில் அனைவரும் சமமானவர்களே என்ற உண்மை நிலையினை உணர்த்தி யாரிடமும் அகங்காரம் இல்லாமல் இருக்க வைக்க உதவுகிறது.

    பதினேழாம் படி – ச்ரத்தாத்ரய விபாக யோகம் : சர்வமும் பிரம்ம மயம் என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு பரபிரம்ம ஞானம் பெறுவதற்கு வழிகாட்டுகிறது.

    பதினெட்டாம் படி – மோட்ச சன்னியாச யோகம்: பதினெட்டு படிகளையும் படிப்படியாய் அடியெடுத்துக் கடந்து வந்தால் நம் கண் எதிரே காட்சி தரும் மணிகண்டப் பிரபு பேரொளியாய் தரிசனம் தந்து, நமது வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயப்பனின் பதினெட்டு படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

    18 படிகளிலும் ஐயப்பன் 18 வகையான திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது அவை என்னவென்றால்

    ஒன்றாம் திருப்படி : குளத்துப்புழை பாலகன்

    இரண்டாம் திருப்படி : ஆரியங்காவு ஐயன்

    மூன்றாம் திருப்படி : எரிமேலி சாஸ்தா

    நான்காம் திருப்படி : அச்சன்கோயில் அரசன்

    ஐந்தாம் திருப்படி : புவனேஸ்வரன்

    ஆறாம் திருப்படி : வீரமணி கண்டன்

    ஏழாம் திருப்படி : பொன்னம்பல வாஸன்

    எட்டாம் திருப்படி : மோஹினி பாலன்

    ஒன்பதாம் திருப்படி : சிவ புத்ரன்

    பத்தாம் திருப்படி : ஆனந்த சித்தன்

    பதினொன்றாம் திருப்படி : இருமுடிப் பிரியன்

    பனிரெண்டாம் திருப்படி : பந்தள ராஜகுமாரன்

     பதிமூன்றாம் திருப்படி : பம்பா வாஸன்

    பதினான்காம் திருப்படி : வன்புலி வாஹனன்

     பதினைந்தாம் திருப்படி : ஹரிஹர சுதன்

    பதினாறாம் திருப்படி : ஸத்குரு நாதன்

    பதினேழாம் திருப்படி : பிரம்மாண்ட நாயகன்

    பதினெட்டாம் திருப்படி : ஸத்ய ஸ்வரூபன்

    கோயிலைச் சுற்றியுள்ள 18 மலை தெய்வங்களை குறிப்பதுதான் 18 படிகளாகும்.

    18 படிகளில் வாஸம் செய்யும் தேவதாக்கள்

    ஒன்றாம் திருப்படி : சூரிய பகவான்

    இரண்டாம் திருப்படி : சிவன்

    மூன்றாம் திருப்படி : சந்திர பகவான்

    நான்காம் திருப்படி : பராசக்தி

    ஐந்தாம் திருப்படி : அங்காரக பகவான்

    ஆறாம் திருப்படி : முருகன்

    ஏழாம் திருப்படி : புத பகவான்

    எட்டாம் திருப்படி : விஷ்ணு

    ஒன்பதாம் திருப்படி : வியாழ ( குரு ) பகவான்

    பத்தாம் திருப்படி : பிரம்மா

    பதினொராம் திருப்படி : சுக்கிர பகவான்

    பனிரெண்டாம் திருப்படி : இலட்சுமி

    பதிமூன்றாம் திருப்படி : சனி பகவான்

    பதிநான்காம் திருப்படி : எம தர்ம ராஜன்

    பதினைந்தாம் திருப்படி : இராகு பகவான்

    பதினாறாம் திருப்படி : சரஸ்வதி

    பதினேழாம் திருப்படி : கேது பகவான்

    பதினெட்டாம் திருப்படி : விநாயகப் பெருமான்

     இதில் கவனிக்கப்பட வேண்டியவை ஒற்றைப்படை வரிசையில் நவக்ரஹ தேவதாக்களும் இரட்டைப்படை வரிசையில் தெய்வக் குடும்பமும் வாஸம் செய்வதாக ஐதீகம் .எனவேதான் படிபூஜை சபரிமலையில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது படிபூஜை நடைபெறும்.

  • karthikai-matha-somavara-siva-pujaiyil-sangabishegam

    மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது.

    பூவுலகம் தோன்றிய நாள் முதல் ஏற்பட்ட ஒலி அலைகளும், ஒளி அலைகளும், பஞ்ச பூதங்களின் மூலமாக தமது அதிர்வுகளை வெளிப்படுத்தியவாறு இருக்கின்றன. சாதாரணமாக நமக்கிருக்கும் கேட்கும் சக்தி மற்றும் பார்க்கும் திறம் ஆகியவற்றால் மட்டுமே அவற்றை அறிவது சிரமமான ஒன்று. இயற்கையில் உள்ள பல பொருட்களில், ஒலி அலைகளின் மூலாதாரமாக இருக்கும் ஓம்கார ஸ்வரூபம் தாமாக வெளிப்படுவதாக பல ஆன்மிக பெரியோர்கள் கண்டறிந்துள்ளார்கள். குறிப்பாக சங்கின் மூலம் ஓம்காரம் வெளிப்படுவதை பலரும் அறிந்துள்ளனர். 

    சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும்.

    அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை வலம்புரிச் சங்கு என்பார்கள். தமிழ் மக்களின் ஆதி கலாச்சாரத்தில் ஒன்று இந்த சங்கு ஊதுதல்.சங்கு ஊதினால் அபசகுணம் என்று தற்போது நம் மக்களை நம்ப வைத்துள்ளனர். ஆனால் சங்கின் மகத்துவம் நம்மில் யாருக்கும் தெரியாமல் இப்படி மழுவியது.

    சங்கின் குணம் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீது மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள். இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது.

    இதனால் தான் இன்று வரை சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் பருகுவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர்.

    சங்கு ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும்.

    மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஸ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது.

    ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். பாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று.

    இந்தச் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார். சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீட்சம் பெருகும். வியாதிகள் நீங்கும்.

    ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது. அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர்.

    கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்கை வழிபட்டு ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெறுவோம்.

  • karthikai-somavaram-yen-sirappu-vainthathu-theriyuma

    கார்த்திகை திங்கள். அதாவது கார்த்திகை சோமவாரம். சிவவழிபாட்டுக்கு  மிக உகந்த திருநாள்.  ஏன் தெரியுமா?சிவபெருமானைக் குறித்து நோற்கப்படும் விரதங்களுள் சோமவார விரதம் முக்கியமானது. சந்திரனுக்குரிய நாளான திங்கள்கிழமையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது.
    க்ஷயரோகத்தில் துன்புற்று அழியும்படி சபிக்கப்பட்ட சந்திரன், இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, விமோசனம்பெற்று சிறப்பு பெற்றான். அவனுக்குச் சிவபெருமான் அருள்புரிந்ததுடன், அவனை தனது முடிமேல் சூடிக்கொண்டு ‘சந்திரசேகரர்’ என்ற பெயரையும் ஏற்றார். சந்திரனின் நல்வாழ்வுக்காக அவனுடைய மனைவி ரோகிணி அவனுடன் சேர்ந்து இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாள். அன்று முதல், பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
    சோமவார விரதம் ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியதாகும். என்றாலும், கார்த்திகை மாதத்துச்சோமவாரங்கள் (திங்கள் கிழமைகள்) தனிச் சிறப்பு பெறுகின்றன.
    இந்த நாட்களில் சிவாலயங்களில் ‘சங்காபிஷேகம்’ நடைபெறும். சந்திரசேகரர் பவனி விழா நடைபெறும். 108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்குத் திருமுழுக்காட்டுகின்றனர்.
    கார்த்திகை சோமவார தினங்களில் இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், சிவாலயங்களில் அருளும் சந்திரசேகர மூர்த்திக்கு வெண்மலர்கள் சூட்டி, வெண்பட்டு அணிவித்து வழிபட்டால், ஆயுள் விருத்தி அடைவதுடன் மன அமைதி கிட்டும், வம்சம் தழைக்கும். மேலும் கார்த்திகை சோமாவார திருநாட்களில் சிவத்தலங்களைத் தரிசிப்பதும் கோடிபுண்ணியத்தைப் பெற்றுத் தரும். குறிப்பாக இறைவன் சிவனார், சந்திரனின் பெயரை ஏற்று அருள்பாலிக்கும் தலங்களைத் தரிசிப்பது விசேஷம். 

  • 2017-11-19-14-35-15

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நவம்பர் 23-ந்தேதி நடக்கிறது.
    பூலோக வைகுண்டம் என்றும், பெரிய கோவில் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் டிசம்பர் 3-ந்தேதி திருக்கார்த்திகை திருநாள் நடக்கிறது. அன்று இரவு 8.30 மணிக்கு கோவிலில் சொக்கப்பனை நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக அன்று காலை 8 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி, சக்கரத்தாழ்வார் சன்னதி முன்பு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் கார்த்திகை கோபுரவாயில் முன்பு 20 அடி உயர தென்னை மரத்தில் 15 அடி சுற்றளவுடன் பனை மட்டைகளால் வேயப்பட்ட சொக்கப்பனையில் நம்பெருமாளிடம் இருந்து பந்தத்தில் தீபம் ஏற்றி வைக்கப்படும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சொக்கப்பனை நிகழ்ச்சியை தரிசிப்பதன் மூலம் இருள் நீங்கி பிரகாசமான வாழ்வு அமைய பெறுவது இத்திருநாளின் சிறப்பு அம்சமாகும். அதன்படி அன்று காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு நடக்கிறது. 8 மணிக்கு சந்தனு மண்டபம் சேர்தல் நடக்கிறது. பின்னர் இரவு 8 மணிக்கு 2-ம் புறப்பாடும் நடக்கிறது. பின்னர் இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சேர்தல் நடக்கிறது. அன்று மாலை 4.15 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. திருக்கார்த்திகையை முன்னிட்டு வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் மகர லக்கனத்தில் முகூர்த்தக்கால் நடும் விழா நடக்கிறது.

  • 2017-11-19-14-30-21

    சபரிமலையில் பார்கோடுடன் கூடிய இருமுடிக்கான பை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்தாண்டு மண்டல பூஜைக்கான திருவிழா கடந்த 16ஆம் தேதி தொடங்கியதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துவருகின்றனர். விடுமுறை நாளான இன்று அதிகாலையிலேயே இருமுடி கட்டி வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
    வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் போக, சன்னிதானத்தில் விரதமிருந்து இருமுடி கட்டும் ஐயப்ப பக்தர்களும் உள்ளனர். அவர்களது வசதிக்காக தேவசம் போர்டு அனுமதியோடு பார்கோடுடன் கூடிய இருமுடி பைகள் சன்னிதானத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பையில் இடம்பெற்றுள்ள பார்கோடை மொபைல் போனில் ஸ்கேன் செய்தால் பூஜைகள் நடக்கும் நேரம், நடை திறக்கும் நேரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் மொபைல்போன் திரையில் காட்டும். இந்த முயற்சி பக்தர்களுக்கு பலன்கொடுக்கும் என்று தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 2017-11-18-15-00-22

    சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்துள்ள பக்தர்கள் ஐயப்பன் பற்றி விரதம் அனுஷ்டிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்களை பார்க்கலாம்.
    குருசாமிக்குரிய தகுதி :
    சபரிமலைக்கு 18 முறைக்கு மேல் சென்று வந்தவர்கள் குருசாமி என்ற தகுதியை பெறுகிறார்கள். ஒரே ஆண்டில் 18 முறை சென்றுவிட்டு, குருசாமி என கூற முடியாது. 18 ஆண்டுகள் மகரவிளக்கு அல்லது மண்டல பூஜைக்கு கட்டு கட்டி, 41 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை விரதமிருந்து சென்று வருபவர்களே குருசாமி ஆக முடியும். இவர்கள் தங்கள் கையால் மற்ற ஐயப்பன் மார்களுக்கு மாலை அணிவிக்கலாம். இவர்கள் சபரிமலை சீசன் அல்லாத நாட்களில் கூட ஐயப்பனுக்கு பூஜை செய்து வரவேண்டும்.
    கட்டு கட்டும் முறை :
    நீலம், காவி அல்லது கருப்பு நிற துணியில் பூஜைபொருட்களை குருசாமி முன்னிலையில் நிரப்ப வேண்டும். துணியை இரண்டு பகுதியாக பிரித்து தேங்காய், பச்சரிசி, வாழைப்பழம், அவல், பொரி, சந்தனம், பத்தி, விபூதி, குங்குமம், மஞ்சள்பொடி, வெல்லம், கல்கண்டு, உண்டியல் காசு ஆகியவற்றை வைக்க வேண்டும். பின்முடியில் தனக்கு தேவையான உணவுப்பொருளை வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை இருமுடி தலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
    கற்பூர தீபம் :
    ஐயப்பனை கற்பூர தீபப்பிரியன் என்பர். சபரிமலை யாத்திரையின்போது அங்கு தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரத்தில் கற்பூரம் ஏற்றி சரண கோஷம் ஒலித்து ஐயப்பனை வழிபட வேண்டும் என்பது கட்டாயமான விதிமுறையாகும். கற்பூர ஆழியில் ஐயப்பன்மார் கற்பூரத்தை இட்டு வழிபடுகிறார்கள்.
    நோய் நீக்கும் வழிபாடு:

    ஐயப்பன் கோயிலில் மாளிகைப் புறத்தம்மனின் தனி சன்னதி உள்ளது. இங்கே தேங்காயை உடைக்கக் கூடாது. உருட்டி வழிபட வேண்டும். இங்கு மஞ்சள்பொடியை அம்பாளுக்கு படைத்து பொட்டாக இட்டுக்கொண்டால் நோய்கள் நீங்கும் என்பதும் வாய் சாமர்த்தியம் கிட்டும் என்பதும் நம்பிக்கையாகும்.
    நெய் அபிஷேகம்:
    சபரிமலைக்கு சென்றதும் கோயிலின் அருகில் இருக்கும் பஸ்ம குளத்தை ஒட்டிய குழாய்களில் நீராட வேண்டும். இருமுடி கட்டைப்பிரித்து, நெய்த் தேங்காயை உடைத்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, அபிஷேகம் செய்ய கிளம்ப வேண்டும். நெய் அபிஷேகம் செய்ய தேவஸ்தான அலுவலகத்தில் பணம் கட்டி ரசீது பெற வேண்டும். அபிஷேகம் செய்த நெய்யை பாத்திரத்தில் ஊற்றி புரோகிதர் பக்தருக்கு கொடுப்பார். இந்த நெய் ஒரு புனிதமான மருந்து என்பதால் பக்தர்கள் தங்கள் வீட்டிற்கு கொண்டு வருவர்.
    மகரபூஜை அன்று நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்து நிற்பார்கள். இந்த ஒரு நாள் மட்டும்தான் காலை முதல் மதியம் வரை தொடர்ந்து ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடக்கும்.
    ஐயப்பன் கோயிலில் மிக அதிகமாக கிடைப்பது நெய்தான். பக்தர்கள் கொண்டு சென்ற நெய்யை தீவட்டி எரிப்பதற்கும், விளக்கு எரிப்பதற்கும் கொடுத்து விடுகிறார்கள். அப்பம், அரவணை ஆகியவை தயாரிக்கவும் நெய்யே பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருந்தும் மீதி வரும் நெய்யை நூற்றுக் கணக்கான டின்களில் அடைத்து அதை விற்பனைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.
    பிரம்மச்சரியம் கட்டாயம் 60 நாள்:
    சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்படும் நாள் முதல் அறுபது நாட்கள் கழித்து மகரவிளக்கு பூஜை நடக்கிறது. ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு கொண்டாடப்படும். இந்த 60 நாட்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு உணவைக்குறைத்து, ஐயப்பன் புகழ்பாடி விரதம் இருக்க வேண்டும்.
    41 நாளிலும் விரதத்தை முடிக்கலாம். மண்டல பூஜைக்கு செல்பவர்களுக்கு 41 நாட்கள் விரதம் போதுமானது. ஆனால் கோயிலுக்கு சென்று திரும்பிய பிறகும் ஜனவரி 14ம் தேதி வரை பிரம்மச்சரிய விரதத்தையும், பிற கட்டுப்பாடுகளையும் கடைபிடிப்பதன் மூலம் ஐயப்பனின் அருளை முழுமையாகப் பெறலாம்.
    வாபர் வழிபாடு:
    ஐயப்பன் கோயில் 18ம் படிக்குகீழாக கிழக்கு பக்கத்தில் வாபரை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். இங்கே ஒரு இஸ்லாமியர் பூஜை வழிபாடுகளை செய்வார். வாபருக்கு நெல், நல்லமிளகு, சந்தனம், சாம்பிராணி, பன்னீர், நெய், தேங்காய் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தலாம்.
    நெய் தேங்காய் யாருக்கு?:
    சபரிமலையில் பதினெட்டாம்படியின் கீழே ஒருபுறத்தில் எரியும் ஆழித்தீயில் போடப்படும் நெய் தேங்காய் ஐயப்பனுக்கு உரியது என பலரும் கருதுகின்றனர். உண்மையில், இது ஐயப்பன் சன்னதியின் இடதுபுறமுள்ள கன்னிமேல் கணபதிக்கு உரிய வழிபாடாகும்.
    சபரிமலை கோயிலில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஏற்றுதல், பாயாசம் வைத்தல், வெள்ளை நைவேத்யம், திரிமதுரம், பஞ்சாமிர்தம், அப்பம், எள்உருண்டை, பழம், பானகம், இளநீர், நெய்விளக்கு, புஷ்பாஞ்சலி, சந்தனம் சார்த்துதல் ஆகியவை முக்கிய வழிபாடுகளாக உள்ளன. இவற்றில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஆகியவை தினமும் செய்யப்படும் வழிபாடுகளாகும்.

  • 2017-11-18-14-38-14

    திருச்சி மாவட்டம், துறையூரில் நந்திகேசுவரர் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
    துறையூர்-ஆத்தூர் சாலையிலுள்ள ஸ்ரீ நந்திகேசுவரர் கோயிலில் கார்த்திகை முதல் தேதியையொட்டியும், பக்தர்கள் தடையின்றி விரதமிருந்து சபரிமலை சென்று வர வேண்டியும் சிறப்பு கணபதி ஹோமமும் அதனைத் தொடர்ந்து விநாயகருக்கும், ஐயப்ப சுவாமி சிலைக்கும் நெய் உள்ளிட்ட வாசனை திரவியங்கள், பழங்கள், பால், தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஐயப்ப பக்தர்களுக்கு கோயில் குரு க்கள்பஞ்சாபிகேசனும், குருசாமிகளும் மாலை அணிவித்து விரதம் கடைபிடிக்கும் முறையை கூறினார்.