Blog

  • karthikai-mathathil-seiya-vendiyavai

    கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. இம்மாதத்தில் வீடு முழுவதும் விளக்குகளால் அலங்கரிப்போம். திருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்பே தமிழ்மக்கள் இறைவனைஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இவ்வழிபாட்டை ‘கார்த்திகை விளக்கீடு’ என்று குறிப்பிடுகின்றன.பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன.

    சங்க இலக்கிய ஆய்வாளர்கள் சிலர், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டுகொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர்.

    விளக்கு

    திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது.இதன் அடிப்பாகத்தில்பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம்செய்கின்றனர்.

    பொட்டு

    திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல்குங்குமமும் வைக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.

    எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர்,காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்துபூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.

    கார்த்திகை மாதம்

    கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும்யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது.

    தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

    நேரம்

    தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும்.

    முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

    திசைகள்

    தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.

    மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும். பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.

    தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

    எண்ணெய்

    கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.

    அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணை தீபம். நல்லெண்ணை தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது, நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றது.

    செல்வம் பெற

    மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணெய் கொண்டு தீபமேற்ற வேண்டும்.

    செல்வங்கள் பெற விரும்புவோர் வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

    இந்த எண்ணெய் கூடாது

    கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது.

    மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.

    திரி

    விளக்கிற்கு திரியும் மிகவும் முக்கியமானது. சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி.

    முற்பிறவியின் பாவங்களை அகற்றி செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

    மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது.

    வரலாறு

    தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது அந்த போட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் ஒளியாக எழுந்து நின்று ஒளியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும், அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களை பெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்ட இருவரும் தமது பயணத்தத் தொடங்கினர்.

    தோல்வி

    அன்னப்பறவையாக உருமாறிய பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார், பன்றியாக உருமாறிய விஷ்ணு நிலத்தைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார். இருவரும் பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. கடைசியில் தமது தோல்வியை இருவரும் ஒப்புக் கொண்டனர்.

    அப்படி சோதிப் பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்ட வேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக் கொள்கிறார், அதன்படி ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை நாளில் சோதியாய் வெளிப்பட்ட நாள்தான் கார்த்திகை தீபம் நாள்.

    ஆறு பெண்கள்

    சப்த ரிஷிகளின் மனைவிகளின் அழகில் மயங்கிய அக்னிபகவானுக்கு அந்த பெண்கள் மீது அடக்க முடியாத மோகம் உண்டானது. அதைப் பற்றி தெரிந்துக் கொண்ட அவனது மனைவி சுவாகாதேவி தனது கணவன் முறைத் தவறி நடந்துக் கொண்டால் சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்துபோனாள்.

    அதனால் தானே ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவத்தை மாற்றிக் கொண்டு, தன் கணவன் ஆசையை நிறைவேற்றிளாள். ஆனால் வசிட்டரின் மனைவி அருந்ததியைப் போல அவளால் உருமாற முடியவில்லை. எனினும் சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை பெண்கள் என்று பெயர். இப்பெண்கள்தான் முருகனை வளர்த்தார்கள் என்பது ஒரு கதை.

    முதல் சோதனை

    கார்திகை மாதத்தில் ஏற்றப்படும் திருவண்ணாமலை ஜோதி மிகவும் பிரபலமானது. பவுத்த சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆமணக்கு விதையில் இருந்து நெய் எடுக்கலாம் என கண்டுபிடித்தனர்.

    இதை ஒரு துணியில் நனைத்து தீ வைத்த போது, பிரகாசமான வெளிச்சம் கொடுத்தது. அந்த காலத்தில் இப்போது இருப்பது போல் லைட் எல்லாம் கிடையாது. இரவில் எங்கு பார்த்தாலும் இருட்டு தான்.

    ஏனென்றால் இரவில் விளக்கு ஏற்றும் பழக்கம் அப்போது இல்லை. காய்ந்த மரத்தை வெட்டி தீமூட்டி அந்த வெளிச்சத்தைதான் பயன்படுத்தினர். எனவே இந்த கண்டுபிடிப்பு பற்றி மக்கள் மன்னிடம் கூறினர். முதலில் பயந்த மன்னனுக்கு பின்னர் அந்த நெய்யை சோதித்து பார்க்க ஆர்வம் வந்தது.

    திருவண்ணாமலை

    இதற்காக நகருக்கு பக்கத்தில் இருந்த அண்ணாந்து என்ற குன்றின் உச்சியில் ஒரு பெரிய பள்ளத்தை வெட்டினான். அதில் இந்த ஆமணக்கு நெய்யை அதிகளவில் ஊற்றி், பெரிய திரியை ஏற்றி கொளுத்தினான்.

    அந்த வெளிச்சத்தால் எந்த விலங்கிற்கும், மனிதர்களுக்கும் தீங்கு ஏற்படவில்லை என்ற நம்பிக்கை பிறந்தது. எனவே மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ஆமணக்கு நெய்யைப் பயன்படுத்தி தீபம் ஏற்றிக் கொள்ள அனுமதித்தான்.

    அப்படி ஆமணக்கு நெய் சோதிக்கப்பட்ட இடம் அண்ணாந்துமலை என்ற திருவண்ணாமலை .

    அர்த்த நாரீஸ்வரர்

    கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடப் பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை.

    துளசிதேவி திருமணம்

    கார்த்திகை மாத (பிருந்தாவன) துவாதசி நாளில், துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு .

    நவக்கிரக தோஷம்

    நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும்.

  • ramba-thiruthiyai-patri-theriyuma

    அட்சயத் திருதியை  பற்றி அனைவருக்கும் தெரியும்.அந்த நாளில் சிறிய அளவிலாவது செல்வம் வாங்கிவிட வேண்டும் என்று அனைவரும் ஆவல் கொள்வார்கள். அதன்  முலம் செல்வம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

     அட்சயத் திருதியை பற்றி தெரியும். ரம்பா திருதியைப் பற்றி தெரியுமா?

    செல்வத்தை அள்ளி தருவது அட்சயத் திருதியை என்றால் ஐஸ்வரியத்தோடு பேரழகை அள்ளித் தரும் விரதம் ரம்பா திருதியை ஆகும். இந்த விரதம் தேவலோக நடன  மங்கையின் ரம்பையின் நினைவாக, பார்வதிதேவியை நினைத்து செய்யப்படும் சிறப்பு மிகுந்த வழிபாடாகும். இந்த நாளில் தான் தேவேந்திரனின் அறிவுரையின் பேரில், பார்வதி தேவியை வழிபட்டு, ரம்பை தன்னுடைய பேரழகை மீட்டெடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகை அமாவாசைக்கு அடுத்த முன்றாவது நாளில் “ரம்பா திருதியை” விரதம் கடைப்பிடிக்கபடுகிறது.

     ஒருமுறை தேவசபையில் ரம்பை, ஊர்வசி, மேனகை இவர்களுக்கிடையே நடந்த நடனப் போட்டியின்போது, தேவலோக பேரழகி என்ற தனது பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள எண்ணிய ரம்பை, அரங்கமே அதிரும்படி ஆக்ரோஷமாக ஆடினாள். அப்போது அவள் அணிந்திருந்த நெற்றிப் பொட்டும் பிறைச் சந்திரனும் கீழே விழ, நிலைகுலைந்த அவள், கீழே விழுந்த அணிகலன்களை எடுத்துக் கொண்டு, அழுதபடியே அரங்கை விட்டு வெளியேறினாள். இந்தக் காட்சியைக் கண்ட ஊர்வசியும் மேனகையும் ரம்பையைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனர்.

    தங்களது ஆட்டத்தை நிறுத்திவிட்டு வெளியேறினர். அவர்களின் செய்கையை தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதிய ரம்பை, கீழே விழுந்த அணிகலன்களை எடுத்துக் கொண்டு, அழுதபடியே அரங்கை விட்டு வெளியேறினாள். நடந்ததை எல்லாம் தேவர் பெருமக்கள் வியப்புடனும், அதிர்ச்சியுடனும் பார்த்துக் கொண்டிருக்க… ‘இன்றைய சகுனம் சரியில்லை; சபை கலையலாம்’ என்று உத்தரவிட்டு எழுந்தான் இந்திரன். அன்று இரவு, ரம்பைக்குத் தூக்கம் வர மறுத்தது. சபையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி எண்ணிக் கண்ணீர் சிந்தினாள்.

    மறுநாள் முதல் வேலையாக, தூக்கம் தொலைத்த கண்களுடன் இந்திரனைச் சந்தித்தாள். ‘நேற்று அவையில் எனக்கு ஏற்பட்ட அவமானத்துக்குப் பிராயச்சித்தம் வேண்டும். நடந்த சம்பவத்தால் ‘முதல் அழகி’ என்ற அந்தஸ்து என்னை விட்டுப் போய்விட்டதோ என்று அச்சம் கொள்கிறேன்’ என்று கண்ணீர் பெருக பேசினாள் ரம்பை. ரம்பையை முறைத்துப் பார்த்த இந்திரன், ‘ உன்னுடைய ஆட்டம்தான் பேயாட்டமாகி அரங்கையே அதிரவைத்துவிட்டது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கலைகளின் அரசி கலைவாணி, அதைக் காணச் சகிக்காமல்தான் உனது பிறைச் சந்திரனைக் கழற்றியதோடு, நெற்றிப் பொட்டையும் அகற்றி விட்டாள். அதனால், இன்னும் சில ஆண்டுகளுக்கு உன்னுடைய அழகிப் பட்டமும் நர்த்தன முறையும் அரங்குக்கு வராமலேயே இருக்கட்டுமே..!’ என்று ஆவேசப்பட்டுப் பேசினான்.

    ‘தேவேந்திரா! பதவி உயர்வுக்கும், பட்டத்துக்கும், கௌரவத்துக்கும் தேவருலகில் அதிபதியான நீங்களே என்னை விலகி இரு என்று சொல்லலாமா? இதற்குச் சரியான வழியை- பிராயச்சித்தத்தை எனக்கு இப்போதே சொல்லி, எனது துயரத்தைப் போக்கிட வேண்டும்” என்று மன்றாடினாள் ரம்பை. அழுது புலம்பும் ரம்பைக்கு ஆறுதல் சொல்ல விரும்பிய தேவேந்திரன், ‘பூலோகத்தில், தன் பதியைத் தேடிச்சென்ற பார்வதிதேவி கௌரி அன்னையாக அவதரித்திருக்கிறாள். அவள் ஒரு மகிழ மரத்தின் கீழ் தவக்கோலத்தில் இருக்கிறாள். அந்தத் தேவியை விரதமிருந்து வழிபட்டால், உனக்கு அருள் செய்வாள். உனக்கு நேர்ந்துள்ள களங்கமும் தீரும்’ என்றான். அதன்படி, பூலோகம் வந்த ரம்பைக்கு கெளரிதேவியின் தரிசனம் கிடைத்தது.

    கார்த்திகை மாதம் அமாவாசைக்கு இரண்டாவது நாளான துவிதியை அன்று, மஞ்சள் பிரதிமையில் அம்பிகையை ஆவாஹனம் செய்து, விரதம் இருந்து பூஜை செய்தாள் ரம்பை. முறையாக ரம்பை செய்த பூஜையை ஏற்றுக் கொண்ட கெளரிதேவி, மறுநாள் சுந்தர ரூபனான முருகனை மடியில் வைத்தபடி கார்த்தியாயினியாக, பொன்மேனியளாகக் காட்சி தந்தார். ரம்பையின் பூஜையில் மகிழ்ந்த தேவி, மீண்டும் தேவலோகத்தில் முதல் அழகியாகும்படி அவளுக்கு அருள்புரிந்ததோடு, அவளது அழகும் ஐஸ்வரியங்களும் மேலும் வளர ஆசி கூறினார்.

    மேலும் அவள் மேற்கொண்ட இந்த விரதத்தை அவளது பெயரால் “ரம்பா திருதியை’ என்று வழங்கப்படுமெனவும், இதனைப் பெண்கள் அனுஷ்டித்தால் அவர்களது அழகும் செல்வமும் அதிகரிக்குமென்றும் அருளினாள். ரம்பா என்றால் வாழை என்ற அர்த்தமும் உண்டு. எனவே நாலாபுறமும் வாழை மரங்கள் கட்டி, நடுவில் தேவியின் பிரதிமை அல்லது படம் வைத்து நன்கு அலங்கரித்து, பூஜை செய்து, அம்பிகையின் பாடல்களைப் பாடி, நிறைய வாழைப் பழங்களையும் பட்சணங்களையும் நிவேதனம் செய்து, பெண்கள், குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் அவற்றை தானம் செய்து பூஜையை நிறைவு செய்வர். பெண்கள் தனியாகவோ கணவருடன் சேர்ந்தோ இந்த ரம்பா விரதம் அனுஷ்டிக்கலாம்.

    இந்த பூஜையினால் நல்ல துணை, நீண்ட ஆயுள், நல்ல குழந்தை, நல்ல வீடு முதலியவற்றை அடைவார்கள் என்கிறது பவிஷ்யோத்தர புராணம். திருப்பைஞ்ஞீலி என்ற திருத்தலத்தில் பார்வதி சிவபெருமானை வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி நிழல் தந்து உதவி, அவர்களது அருளைப் பெற்றனர். வாரணாசியில் மேனகையும், திருக்கழுக்குன்றத்தில் திலோத்தமையும், சிவபெருமானை வழிபாடு செய்து அருள் பெற்றனர்.

  • iyappan-maghishiyai-kondra-erumai-kollai

    சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எல்லோரும் ஒன்று கூடும் இடம் எருமேலி. இங்கு பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் உள்ளது. வேட்டைக்குச் செல்ல அம்பும், வில்லும் ஏந்தி நிற்கின்ற உருவில் தர்மசாஸ்தா காட்சியளிக்கிறார்.

    வாபர் கோயில்:
    எருமேலியில் பேட்டை சாஸ்தா கோயில் எதிரில் ஐயப்பனின் முஸ்லிம் நண்பரான வாபரின் பள்ளி வாசல் உள்ளது. ஐயப்ப பக்தர்கள் வாபர் பள்ளி வாசலுக்கு சென்று வணங்கி அங்கு தரப்படும் விபூதி பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.

    பேட்டைதுள்ளல்:
    ஐயப்பன், எருமைத்தலை அரக்கி மகிஷியை கொன்ற தலம் இது. எருமைக்கொல்லி எனப்பட்ட இத்தலம், ” எருமேலி’ என மருவியது. இது மணிகண்டன் மகிஷியை வதம் செய்து அவள் பூதவுடல் மீது நர்த்தனம் செய்ததன் நினைவாக பக்தர்களால் நடத்தப்படும் ஓர் சடங்கு தான் பேட்டை துள்ளல் எனப்படுகிறது. உடல் மீது வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டு, இலை, தழைகளை கட்டிக் கொண்டு மரத்தினாலான சரக்கோலுடன் மேளதாளத்துடன் சுவாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என ஆடிப்பாடிக் கொண்டு வாபர் சன்னதியை வலம்வந்து பின் பேட்டை சாஸ்தா கோயிலிலிருந்து தர்மசாஸ்தாவின் சன்னதி வந்தடைந்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு பெருவழிப்பாதையாத்திரையை தொடர வேண்டும்.

    பேரூர்தோடு:
    பெருவழிப்பாதையில் முதலில் வரும் இடம் பேரூர்த்தோடு. இது ஓர் சிறிய ஆறு ஆகும். எருமேலியிலிருந்து சுமார் 2 மைல் கிழக்கே இருக்கிறது. பக்தர்கள் இந்த ஆற்றில் நீராடி, சிறிது இளைப்பாறி சுவாமியை வழிபட்டுத் தங்கள் பயணத்தை தொடரலாம்.

  • 2017-11-21-05-20-19

  • sabari-malai-priya-padhaai

    ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்வார்கள். ஒரு காலத்தில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்ல எருமேலியிலிருந்து செல்லும் காட்டுப்பாதை மட்டுமே பயன்பட்டதாக கூறுவர்.

    இந்தப்பாதையில் சென்று ஐயப்பனை தரிசிப்பதே முறையானதாகும். எருமேலியில் ஆரம்பித்து சபரிமலை வரையில் 56 கி.மீ., தூரம் உள்ள இந்த பாதை தான் பெருவழிப்பாதை என அழைக்கப்படுகிறது.

    இந்த பெருவழிப்பாதை வழியாகச் சென்றால் உடலும், உள்ளமும் தூய்மையடையும். பந்தளராஜா, ஐயப்பனைக் காணச் சென்ற வழியும் இதுவே. இந்தப் பாதை வழியே ஐயப்பனைத் தரிசிப்பதே சிறந்தது என பக்தர்கள் நினைக்கின்றனர்.

  • 2017-11-20-15-22-11

    ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்வார்கள். ஒரு காலத்தில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்ல எருமேலியிலிருந்து செல்லும் காட்டுப்பாதை மட்டுமே பயன்பட்டதாக கூறுவர். இந்தப்பாதையில் சென்று ஐயப்பனை தரிசிப்பதே முறையானதாகும். எருமேலியில் ஆரம்பித்து சபரிமலை வரையில் 56 கி.மீ., தூரம் உள்ள இந்த பாதை தான் பெருவழிப்பாதை என அழைக்கப்படுகிறது. இந்த பெருவழிப்பாதை வழியாகச் சென்றால் உடலும், உள்ளமும் தூய்மையடையும். பந்தளராஜா, ஐயப்பனைக் காணச் சென்ற வழியும் இதுவே. இந்தப் பாதை வழியே ஐயப்பனைத் தரிசிப்பதே சிறந்தது என பக்தர்கள் நினைக்கின்றனர்.

  • 2017-11-20-14-55-01

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, மாலை அணிந்து வரும் பக்தர்கள் அனைவருக்கும், கோயில் தேவசம்போர்டு சில கோரிக்கைகளை வைத்துள்ளது.

    தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை என்னவென்றால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து வரும் பக்தர்கள், பம்பை நதியில் குளிக்கும் போது, தங்களது ஆடைகளை நதியிலேயே விட்டுவிடும் பழக்கத்தை மேற்கொள்கின்றனர். ஆனால், இது பாரம்பரியமாக வந்த வழக்கம் அல்ல என்றும், சமீப காலத்தில் உண்டான தவறான பழக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

    பம்பை நதியில் தங்களது ஆடைகளையோ அல்லது மாலைகளையோ கழற்றி வீசும் பழக்கம் சுகாதார சீர்கேட்டையே உருவாக்குவதாகவும், இது பம்பை நதியின் சூழலைக்கும் குலைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    எனவே, பம்பை நதியை தூய்மையாக வைத்திருப்பது என்ற நோக்கத்தை நிறைவேற்ற, பக்தர்கள் இனி இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என வலியுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் குடிநீர் கேன் மற்றும் பிளாஸ்டிக் பைகளை வனப்பகுதிகளில் வீசுவதால், வனப்பகுதி மோசமடைவதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களிடம் இருந்து எச்சரிக்கை வந்துள்ளது. எனவே பிளாஸ்டிக் கொண்டு வருவதையும், பயன்படுத்துவதையும் பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

  • 2017-11-20-14-44-28

    திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் உலகப் பிரசித்தி பெற்ற நிகழ்வுகளுள் ஒன்று.
    அந்த அற்புதக் காட்சியைக் காண உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் வருவதுண்டு.
    கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை மலை உச்சியில் பல நூறு லிட்டர் நெய்யில் மகா தீபம் ஏற்றப்படும். அப்போது இறைவன் தன்னுடைய பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
    இது உலகத்துக்கு வளத்தையும் ஒளியையும் வழங்கும் நிகழ்வு. அந்த நாளில், இறைவன் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் இருப்பார்.
    மகா தீபம் ஏற்றியதும் பக்தர்களுக்கு காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் ஐந்தே நிமிடங்களில் உடனடியாக பிரகாரத்துக்குள் குடியேறிவிடுவார்.
    இந்த அதிசயக் காட்சி அங்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும்.
    இப்படி இறைவன் காட்சியளிப்பதற்கு ஒரு புராண காரணம் கூறப்படுகிறது. தேவர்கள், முனிவர்கள் என அத்தனைபேரும் சிவபெருமானை மட்டுமே சுற்றி, வழிபட்டு வந்துகொண்டிருந்த போது, பார்வதி சிவன் மீது மிகுந்த கோபம் கொண்டாராம்.
    அதனால் சிவனும் சக்தியும் ஒன்று தான், ஆணும் பெண்ணும் சமம் தான், அவர்களுக்குள் வேறுபாடு எதுவும் கிடையாது என சக்திக்கும் தன்னுடைய பக்தர்களுக்கும் ஒருசேர உணர்த்தவே சிவன் அர்த்தநாரீஸ்வரர் கோலம் பூண்டு, சக்தியை மகிழ்வித்ததாக, புராணங்கள் குறிப்பிடுகின்றன.

  • virathangalum-avatrin-palanum

    நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.
    சோமவார விரதம்
    நாள் : கார்த்திகை மாத திங்கள்கிழமைகள்
    தெய்வம் : சிவபெருமான்
    விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.
    பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை
    சிறப்பு தகவல் : கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.
    பிரதோஷம்
    நாள் : தேய்பிறை, வளர்பிறை திரயோதசி திதிகள்.
    தெய்வம் : சிவபெருமான், நந்திதேவர்
    விரதமுறை : சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஏதாவது ஒன்றில் வரும் சனிப் பிரதோஷம் முதலாக தொடங்கி வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்க வேண்டும். பகலில் சாப்பிடக்கூடாது. மாலை 4.30 மணிக்கு நீராடி, சிவாலயம் சென்று வணங்கி, பிரதோஷ காலம் கழிந்தபிறகு சிவனடியார்களுடன் இணைந்து சாப்பிட வேண்டும்.
    பலன் : கடன், வறுமை, நோய், அகால மரணம், பயம், அவமானம் ஏற்படுதல், மரண வேதனை ஆகியவற்றிலிருந்து விடுதலை, பாவங்கள் நீங்குதல்.
    சிறப்பு தகவல் : பிரதோஷ நேரத்தில் சாப்பிடுதல், தூங்குதல், குளித்தல், எண்ணெய் தேய்த்தல், விஷ்ணு தரிசனம் செய்தல், பயணம் புறப்படுதல், மந்திர ஜபம் செய்தல், படித்தல் ஆகியவை கூடாது.
    சித்ரா பவுர்ணமி விரதம்
    நாள் : சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்
    தெய்வம் : சித்திரகுப்தர்
    விரதமுறை : இந்நாளில் இரவில் மட்டும் சாப்பிட வேண்டும். காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
    பலன் : மறைந்த முன்னோர் பாவம் நீங்கி பிறப்பற்ற நிலையை எய்துவர்.

    திருவாதிரை விரதம்
    நாள் : மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்
    தெய்வம் : நடராஜர்
    விரதமுறை : பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.
    பலன் : நடனக்கலையில் சிறக்கலாம்
    சிறப்பு தகவல் : காலை 4.30க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.

    தெய்வம் : சுப்பிரமணியர்
    விரதமுறை : முதல் 5 நாட்கள் ஒருபொழுது சாப்பாடு. கடைசிநாள் முழுமையாக பட்டினி, சூரசம்ஹாரம் முடிந்தபிறகு வாழைப்பழம், சிறிதளவு மிளகு சாப்பிட்ட பின், மாம்பழச்சாறு, பால், பானகம் இவற்றில் ஏதாவது ஒன்று அருந்துதல்.
    பலன் : குழந்தைப்பேறு.

    சிவராத்திரி விரதம்
    நாள் : மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி
    தெய்வம் : சிவன்
    விரதமுறை : மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம். முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான  உணவு வகைகளை சாப்பிடலாம். இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
    பலன் : நிம்மதியான இறுதிக்காலம்.

    கிருத்திகை விரதம்
    நாள் : கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலும் அனுஷ்டிப்பது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுஷ்டிக்க வேண்டும்.
    தெய்வம் : சுப்பிரமணியர்
    விரதமுறை : பகலில் பட்டினி கிடந்து இரவில் பழம், இட்லி சாப்பிடலாம்
    பலன் : 16 செல்வமும் கிடைத்தல்.

    நவராத்திரி விரதம்
    நாள் : புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமி திதி வரை
    தெய்வம் : பார்வதிதேவி
    விரதமுறை : முதல் 8 நாள் பழம், இட்லி உள்ளிட்ட சாத்வீக உணவு சாப்பிடலாம். 9ம் நாளான மகாநவமி அன்று (சரஸ்வதி பூஜை) முழுமையாக சாப்பிடக் கூடாது.
    பலன் : கல்வி, செல்வம், ஆற்றல்.