அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த வயலூர் முருகன் கோயிலில் தைப்பூசதிருவிழா கோலாகலம் கொண்டாடப்பட்டது. திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமானதும், ஆன்மீக அடிகளார் எனப்படும் கிருபானந்தவாரியாருக்கு அருள்புரிந்து ஞானம் அளித்த வயலூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயிலில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றுவருகிறது. அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அறுபடைவீடுகளில் சென்று வழிபட இயலாத பக்தர்கள் இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடு செய்தாலே அறுபடை பெருமானை தரிசனம் செய்த பாக்கியம் கிட்டும் என்பதால், தைப்பூச திருநாளில் திருச்சி வயலூர் முருகப்பெருமானை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். வள்ளி தெய்வானை சமேதராக முத்துக்குமாரசுவாமி வெள்ளி அங்கியுடன், வெள்ளி கேடயத்தில் எழுந்தருளினார் பின்மகாதீபாராதனைகள் நடைபெற்றது. பிற்பகல் அதவத்தூர் தீர்த்தக்குளத்திற்கு வீதிஉலாவும் பின்னர் தீர்த்தவாரியும் நடைபெற்றது.
Blog
-
2018-01-31-06-48-20
இன்று முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு, 3 நிகழ்வுகள் ஒரே நாளில் நடக்கும் அரிய நிகழ்வு இது. சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இது, இந்த மாதத்தின் 2-வது பவுர்ணமி ஆகும். அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதனால், அது ‘புளு மூன்’ என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாகும். மாலை 6.25 மணியளவில் முழு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, நிலா இயல்புநிலையை அடையும்.இதையொட்டி யார் யாருக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து பஞ்சாங்கங்களில் சொல்லப்பட்டுள்ளது. கிரகணம் முடிந்த பின் பரிகார பூஜை செய்யப்பட்டு கோயில்களில் நடை திறக்கப்படும். நாளை மாலை 5:16மணிக்கு ஏற்படும் இந்த கிரகணம் இரவு 8:40 மணி வரை நீடிக்கிறது. கிரகணம் முடிந்த பின் நீராடி சந்திரனை தரிசனம் செய்வது நன்மையளிக்கும். புதன்கிழமையில் பிறந்தவர்களும், புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் பரிகார அர்ச்சனை செய்ய வேண்டும். குழந்தைகள், கர்ப்பினிகள், நோயுற்றவர்கள் என அனைவரும் கிரகணம் விட்டபிறகு குளித்துவிட வேண்டும். தோஷமுள்ள நட்சத்திரங்கள் கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைப்பது மரபாகும்.
-
2018-01-31-04-51-20
ஜீவ காருண்ய நெறிகளையும், செம்மையான நல்ல அறநெறி வாழ்க்கைக்கு உரிய வாழ்வியல் தத்துவங்களையும் போதித்தவர் வள்ளலார். ‘கடவுள் ஒருவரே – இறைவன் ஒளி வடிவானவன்’ என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் 1867-ம் ஆண்டு வடலூரில் சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவினார். மனித ஸ்தூல உடல் அமைப்போடு ஒப்பிடும் வகையில் சத்தியஞான சபை எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தெற்கு வாயில் வழி உள் சென்றால், வலப்புறம் பொற்சபையும் இடப்புறம் சிற்சபையும், பஞ்சபூதங்களைக் குறிக்கும் ஐந்து படி களையும் காணலாம். அவற்றைக் கடந்து உள்ளே சென்றால், சதுர வடிவ பீடத்தின் மேல் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபமும், அதற்குப் பின்னே 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக் கண்ணாடியையும் காணலாம். கண்ணாடியை மறைக்கும் வண்ணம் ஏழு நிறங்களைக் கொண்ட ஏழு திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இந்தத் திரைகளை விலக்கி, கண்ணாடி யில் தெரியும் தீபத்தை தரிசிப்பதே ‘ஜோதி தரிசனம்’ எனப்படுகிறது. இந்த ஜோதி தரிசனத்தை 1872-ம் ஆண்டு தைப்பூசத்தன்று சத்தியஞான சபையில் வள்ள லார் தொடங்கி வைத்தார். அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தன்று மட்டுமே ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனத்தை காணலாம். மற்ற மாதங்களில் வரும் பூச நட்சத்திர நாளன்று ஆறு திரைகள் மட்டுமே விலக்கப்படும். அதன்படி இன்று காலை 6 மணிக்கு 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. அப்போது அதிகாலை முதலே காத்திருந்த பக்தர்கள், ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை’ என்ற மகா மந்திரததை முழங்கி ஜோதி தரிசனம் செய்தனர்.
-
2018-01-30-05-36-07
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைமுன்னிட்டு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45க்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு ரங்கா, ரங்கா கோபுரம் அருகே உள்ள தைத் தேர் மண்டபத்திற்கு 4.30க்கு வந்தடைந்தார். காலை 4.30 முதல் 5.15 வரை ரத ரோஹணம் நடைபெற்றது. பின்னர் ரங்கா, ரங்கா கோபுரம் அருகில் உள்ள அலங்கரிக்கப்பட்ட தை தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ரங்கா ரங்கா என்ற கோஷத்துடன் பக்தர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகளிலும் வலம் வந்த பின்னர் நிலையை வந்தடைந்தது.
தெப்ப உற்சவம் ….
தெப்ப உற்சவம் பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தை தெப்பம் நடக்கிறது. மாலை 6 மணி அளவில் கோயிலில் உள்ள உற்சவ மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் மரக்கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் சன்னதி வீதி வழியாக வந்து திருவானைக்காவல் ட்ரங்ரோடு மேல் புறம் உள்ள ராமதீர்த்த தெப்ப குளம் வந்து சேர்கின்றனர். அங்கு குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளுகின்றனர். குளத்தில் உள்ள நடுமண்டபத்தை 3 முறை வலம் வந்து நடுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். -
2018-01-30-04-58-58
மண்டைக்காடு பகவதி அம்ம்ன கோவிலில் மாசித்திருவிழாவுக்காக பந்தல் கால்நாட்டு விழா ஜனவரி 31-ந்தேதி நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பிரசித்திப்பெற்றது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவில் ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான மாசித்திருவிழா மார்ச்-4 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 13-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைகிறது. இதற்கான பந்தல் கால்நாட்டுவிழா வருகிற 31-ந் தேதி நடக்கிறது. விழாவில் அன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை, 8.30 மணிக்கு பந்தல் கால்நாட்டு விழாவும், மதியம் 1 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. மாலை சந்திரகிரகணம் நடைபெறுவதால், அப்போது நடத்தப்படும் பூஜைகள், பிற்பகலில் நடத்தப்பட்டு நடை சாத்தப்படுகிறது. பின்னர், மறுநாள் காலை வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
-
2018-01-28-17-35-39
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 13-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஜனவரி 29-ஆம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம். மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழச்சி ஆகியவை நடைபெறும். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நகர் மாரியம்மன் கோயிலில் இருந்து 30-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சீர்வரிசை எடுத்து வந்து, மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும். இரவு 7 மணிக்கு கிராமியக் கலைநிகழ்ச்சி நடைபெறும். காமாட்சியம்மன் கோயிலில் இருந்து 31-ஆம் தேதி காலை 9 மணிக்கு பால்குடம், கொடுமுடி தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், நல்லகாத்து ஆற்றிலிருந்து முருக பக்தர்கள் 10 மணிக்கு காவடி எடுத்து ஊர்வலமாக வந்து பால், தீர்த்த அபிஷேகம் நிகழ்ச்சியும் நடைபெறும். அதைத் தொடர்ந்து, காலை 10.30-க்கு அன்னதானம் நடைபெறும். இரவு 9 மணிக்கு அலங்காரத் தேரில் வள்ளி – தெய்வானை தேவியருடன் முருகன் திருவீதி உலா வருதலும், இரவு 12 மணிக்கு மஹா அபிஷேகம் மற்றும் வாணவேடிக்கையுடனும் விழா நிறைவடைகிறது.
-
31-10-30
சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 31ம்தேதி 10.30 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. 31ம்தேதி மாலை 5.40 மணி முதல் இரவு 8.30 மணிவரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்று காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படுகிறது. 9.30 மணிக்குபிறகு நடை திறக்கப்பட்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்து பரிகார பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கோயில் நடை அடைக்கப்படுவதையொட்டி அன்றைய தினம் ரூ.300 டிக்கெட் வழங்குவது நிறுத்தப்படும். அதேபோல் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் 1 வயது குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமை தரிசனமும் ரத்து செய்யப்படும். மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு 31ம்தேதி அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை திவ்ய தரிசன டிக்கெட் வழங்குவதும் நிறுத்தப்படும். சந்திர கிரகணம் நடைபெறுவதால் அன்றைய நாளில் அன்னப்பிரசாதம் தயார் செய்யப்படாது. வைகுண்டம் காத்திருப்பு அறைகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே இதனை கருத்தில்கொண்டு திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் பயணத்தை மாற்றியமைத்து கொள்ள வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
-
2018-01-28-17-06-19
அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில் மன்னாதீஸ்வரர், பச்சைமலையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான, தொன்மை வாய்ந்த திருமுல்லைவாயில் பச்சைமலையம்மன் சமேத மன்னாதீஸ்வரர் திருக்கோயிலில் பல லட்சம் செலவில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்தன.
இதையடுத்து இத்திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை விமர்சையாக நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு கடந்த 22-ஆம் தேதி திங்கள்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, 25-ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. சனிக்கிழமை காலை 8 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், மாலை 4.30 மணிக்கு 5-ஆம் கால யாக பூஜையும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. மகா பூர்ணாஹுதியும் அதைத் தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு, யாத்ரா தானமாக வந்து ராஜ கோபுரத்துக்கு 9.30 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு உற்சவமூர்த்தி பச்சைமலையம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். -
2018-01-27-16-23-33
பழனியில் வரும் 31ம் தேதி காலை தைப்பூச தேரோட்டம் நடைபெறும் என பழனி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. 60 ஆண்டுகளுக்கு பிறகு தைப்பூச திருநாளன்று சந்திர கிரகணம் வருவதையடுத்து தைப்பூச தேரோட்டத்தின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. பழனியில் தைப்பூசத் திருவிழா பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக வருகிறார்கள். இவ்வாறு பாத யாத்திரை செல்வதால் பக்தர்களுக்கு ஆன்ம பலமும், உடல் நலமும் ஒருங்கே பெருகுகிறது. மன உளைச்சல் அகன்று உள்ளத்தில் உற்சாகம் பிறக்கிறது. பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 3ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஜனவரி 30ஆம் தேதியும் தேரோட்டம் ஜனவரி 31ஆம் தேதி தைப்பூச தினத்தன்று நடக்கிறது. ஜனவரி 31ஆம் தேதி சந்திர கிரகணம் என்பதால் பூஜைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழனி கோயிலில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, மதியம் 2.45 முதல் 3.45 மணி வரை நடைபெறும். அதன் பிறகு கோயில் நடை அடைக்கப்படும். தைப்பூசத்தில் மாலை நேரத்தில் நடைபெறும் தேரோட்டம், சந்திரகிரகணத்தால் பகலில் நடைபெறும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல தைப்பூசத்தில் சந்திரகிரகணம் வந்ததாகவும் அதனால் பகலில் தைப்பூசத் தேரோட்டம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
-
2018-01-26-15-58-29
ஜனவரி 31 ஆம் தேதி அதாவது தை மாதம் 18 ஆம் நாள் புதன் கிழமை பெளர்ணமி தினத்தன்று சந்திரகிரகணம் நடைபெறுகிறதது. பூசம் நட்சத்திரத்தில், ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் கடகம் இராசியில் கன்னியா லக்கினத்தில் சந்திர கிரகணம் ஆரம்பம் ஆகி முடிவடைகிறது. ஜனவரி 31ஆம் தேரி மாலை 5.16 க்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. இரவு மணி 6.58 க்கு மத்திய காலமாக இருக்கும், இரவு 8.40 க்கு சந்திர கிரகண முடிவடைகிறது. சந்திரகிரகணம் புதன்கிழமை அன்று வருவதால், புதன் கிழமை பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. அதே போல, புனர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, பூரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.