Category: பரிகாரங்கள்

பரிகாரங்கள்

  • உங்களின்  கடன் தொல்லை தீர…. எளிய பரிகாரம்!

    ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.20 முதல் 2 மணிக்குள், ஆறு ஒரு ருபாய் பழைய நாணயத்தை வலது கையில் எடுத்து கொண்டு வீட்டின் அல்லது அலுவலகத்தின் / தொழில் செய்யும் இடத்தின் வடகிழக்கு மூலை சென்று வடகிழக்கை நோக்கியவாறு அமர்ந்து ஸ்ரீம் என்ற மந்திரத்தை 60 முறை கூறி பின்பு நாணயங்களை அவ்விடம் புதைத்து விடவும். 

    அடுத்து வரும் 33 நாட்களுக்கு மட்டும் கையளவு மஞ்சள் கலந்த நீரை மேற்கண்ட மந்திரத்தை 6 முறை கூறியவாறு தெளித்து வரவும். இது அவ்விடத்தை வறுமை நீக்கி, செல்வம் வளம் பெருக செய்யும் ஒரு பரிகாரமாகும். அந்த நாணயங்கள் நிரந்தரமாக அந்த மனையில் இருக்க வேண்டும்.

    வடகிழக்கில் மண் இல்லாதோர், அடுக்குமாடிகுடியிருப்பில் வசிப்போர், வாடகை வீடு, அலுவலகம் போன்றவற்றிற்கு மேற்கண்ட முறையை சிறு தொட்டியில் மண் நிரப்பி அதில் புதைத்து வைத்து செய்து வரவும். வேறு இடம் மாற்றம் செய்ய நேரின், அதை புது இடத்தில் குறிப்பிட்டு உள்ள பகுதியில் வைத்து விடலாம்.
     

  • மனோ வியாதி நீக்கும் அற்புத மந்திரம்

    வேலுண்டு வினையில்லை,மயிலுண்டு பயமில்லை என்பார்கள். மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் நீங்க, முருகப் பெருமான் கை வேலை வணங்கி வரலாம்.

    ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்

    ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்

    நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே

    பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ

    பொருள் : 
    ஓம் சக்தியான வேலே, இவ்வுலகத்திற்கு தாயானவளே,அனைத்து சுகத்தையும் கொடுப்பவளே,உன்னை வணங்குபவரின் மனோவியாதியை போக்குபவளே உன்னை ஆராதிக்கிறேன்.
     

  • முருகபெருமானுக்கு உரிய முக்கிய விரதங்கள்

    வெள்ளிக்கிழமை, கார்த்திகை, வெள்ளிக்கிழமை விரதம், சஷ்டி ஆகியவை முருகனுக்கு உரிய முக்கிய விரதங்கள் ஆகும். கார்த்திகை விரதத்தின் சிறப்பைச் சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அருளினார். கார்த்திகைப் பெண்கள் குமரக்கடவுளை வளர்த்த காரணத்தால், அவர்களுடைய நாளான கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து, குமரப்பெருமானை வழிபடுவோர் கல்வி, செல்வம், ஆயுள், தர்மபத்தினி, நன்மக்கள், நிலபுலம் யாவும் பெற்று வாழ்வார்கள் என்று சிவபெருமான் அருள்புரிந்தார்.
    கார்த்திகை மாதம் பரணி நாளில் விரதம் தொடங்கி, வழிபாடு செய்து, அடுத்த நாள் கார்த்திகையில் விரதம் இருந்து முறைப்படி வழிபாடு செய்து, அடுத்த நாள் ரோகிணி காலையில் நீராடி, நித்திய வழிபாடு செய்து அடியார்களோடு கூடி உண்ண வேண்டும். பின்னர் மாதந்தோறும் கார்த்திகையில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.

    நாரதர், சப்தரிஷிகளிலும் மேன்மையுற விரும்பி, அதற்கான விரதத்தை அருளுமாறு விநாயக்கடவுளை வேண்டிக் கொண்டார். அவர் அருளியவாறு, பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்து மேன்மை அடைந்தார்.

    வெள்ளிக்கிழமை விரதம்:
    வெள்ளிக்கிழமை விரதம், ஐப்பசி மாதம் முதல் சுக்கிர வாரத்தில் தொடங்கி, முறைப்படி விரதம் அனுஷ்டித்து, பின்னர் வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை விரதத்தின் சிறப்பை வசிஷ்ட முனிவர், முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு எடுத்துக் கூறினார். அவர் அனுஷ்டித்து மேன்மையுற்றார்.
    பகீரதன் என்னும் மன்னன் வெள்ளிக்கிழமை விரதம் மேற்கொண்டு, கோரன் என்னும் அரக்கனை வென்று இழந்த தன்னுடைய அரசு உரிமையை மீண்டும் பெற்றுப் புகழ் பெற்றான்.

    கந்த சஷ்டி விரதம் :
    கந்தசஷ்டி என்ற பிரபலமான விரதம் ஐப்பசி மாதம் சுக்கில் பட்சத்தில் வரும். பிரதமை நாளில் தொடங்கி, சஷ்டி வரை ஆறு நாட்கள் முறைப்படி விரதம் இருக்க வேண்டும். அந்த நாட்களில் காலையில் நீராடி, வழிபாடு வீட்டிலும் கோயிலிலும் செய்து, முருகன் சரிதத்தைக் கேட்டு அல்லது படித்து, முருகன் நாமத்தை ஜெபித்து, ஏழாம் நாள் காலையில் வழக்கப்படி வழிபாடு செய்து, விரதத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் பின்னர் மாதந்தோறும் வளர்பிறை சஷ்டி விரதம் இருக்கலாம். சஷ்டி விரதம் இருப்பவர்களின் வினைகள் அகலும், எண்ணிய காரியங்கள் நிறைவேறி, புண்ணியமும் கிடைக்கும்.
    கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி அனுஷ்டித்த முசுகுந்தச் சக்கரவர்த்தி எல்லா நலன்களும் பெற்றுச் சிறப்புடையவரானார்.

    குமார சஷ்டி விரதம் :
    ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் எனப்படும். கார்த்திகை மாத வளர்பிறைக்கு குமார சஷ்டியைச் ‘சுப்பிரமணிய சஷ்டி’ என்றும், ‘அனந்த சுப்பிரமணிய பூஜை’ என்றும் கூறுவர்.

    அனந்த சுப்பிரமணிய பூஜை:
    ‘சுப்புராயன்’ என்ற பெயர் முருகனையும், நாகப்பாம்பையும் ஒருங்கே குறிப்பிடுகிற பெயராம். திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறில்லாதவர்கள் அனந்த (நாக) சுப்பிரமணிய பூஜையை நிறைவேற்றினால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும். முருகனைப் பாம்பு வடிவத்தில் வழிபடலாம். அல்லது, இணைந்த இரு பாம்புகளுக்கிடையில் அமைந்த முருகனையோ, பாம்பின் முடிமீது அமைந்த முருகனையோ வழிபட்டால் நாக தோஷங்களும், பிற தோஷங்களும் விலகும். இதற்கு நிகராக இரு தேவியருக்கு இடையில் எழுந்தருளிய முருகனை வழிபடலாம். பக்தர்கள் மகப்பேற்றை வேண்டினால் முந்தி வந்து அருள் புரிபவன் முருகன். அவனே குழந்தையாக வடிவெடுத்து வருவான் என்றும் நம்புகின்றனர்.
     

  • நாக தோஷம் நீங்க செய்யும் கருடன் வழிபாடு!!

    கருடனுக்கு கருடாழ்வார் என்று சிறப்பு தருகிறது புராணங்கள். இந்த கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்த்தால் குறிப்பிட்ட பலன்களை பெறலாம்.

    திருமாலின் வாகனமாக இருப்பவர் கருடன். பறவைகளின் அரசானாக விளங்கும் கருடன், மங்கள வடிவமாக கருதப்படுகிறார். அமிர்தத்தை தேவ லோகத்தில்  இருந்து கொண்டு வந்த பெருமை இவரை சாரும். கோவிலிலும், வீட்டிலும் கருடனை தினம்தோறும் வணங்குவதன் மூலம் நாக தோஷம் நீங்கும். தோல் வியாதிகள் குணமடையும். திருமணமான பெண்களுக்கு அறிவும், ஆற்றலும் நிறைந்த குழந்தை பிறக்கும். தீராத நோய்கள் தீரும்.
     
    பெருமாள் கோவில்களுக்கு செல்வோர் கருடனை வழிபட்ட பின்னரே மூலவரை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கும்போது கருடன் வந்து வட்டமிட்டால் மட்டுமே அந்த கும்பாபிஷேகம் முழுமை அடைகிறது.
     
    நாட்களும் பலன்களும்:
     
    ஞாயிறு: நோய் நீங்கும். திங்கள்: குடும்பம் செழிக்கும். செவ்வாய்: உடல் பலம் கூடும். புதன்: எதிரிகளின் தொல்லை நீங்கும். வியாழன்: நீண்ட ஆயுளை  பெறலாம். வெள்ளி: லட்சுமி கடாட்சம் உண்டாகும். சனி: மோட்சம் கிடைக்கும்.
     

  • ராகு தோஷத்தால் தவிப்பவர்கள் செய்ய வேண்டிய பொதுவான பரிகார வழிபாடு….

    தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும்.

    தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

    துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

    ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.

  • குருவால் ஏற்படும் பாக்கியங்கள்

    பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள் குரு பலத்தால் பெறக் கூடியதாகும்.

    ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால் அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.

    ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என பொருள்.

    அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில் புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.

  • குரு பகவானின் பயோடேட்டா

    சொந்த வீடு – தனுசு, மீனம்
    உச்சராசி – கடகம்
    நீச்சராசி – மகரம்
    திசை – வடக்கு
    அதிதேவதை – பிரம்மா
    நிறம் – மஞ்சள்
    வாகனம் – யானை
    தானியம் – கொண்டைக்கடலை
    மலர் – வெண்முல்லை
    வஸ்திரம் – மஞ்சள்நிற ஆடை
    ரத்தினம் – புஷ்பராகம்
    நிவேதனம் – கடலைப்பொடி சாதம்
    உலோகம் – தங்கம்
    இனம் – ஆண்
    உறுப்பு – தசை
    நட்புகிரகம் – சூரியன், சந்திரன், செவ்வாய்
    பகைகிரகம் – புதன், சுக்கிரன்
    மனைவி – தாரை
    பிள்ளைகள் – பரத்வாஜர், கசன்
    பிரதானதலங்கள் – ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்
    தகுதி -தேவகுரு

  • பகையை விலக்கும்…செவ்வாய் மந்திரம்!

    நவக்கிரகங்களில் மூன்றாவது உள்ள கிரகம் செவ்வாய். இந்த கிரகத்திற்கு அங்காரகன், சக்திதரன், குமரன், மகாகாயன், மங்கலன், தனப்ரதன் உள்பட பல பெயர்கள் உள்ளன. அங்காரகம் என்றால் நெருப்பு என்று பொருள். இந்த கிரகத்தின் அதிதேவதை சுப்பிரமணியர். உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. செவ்வாய் ஏழு கதிர்களைக் கொண்டதாக உள்ளது. 

    செவ்வாய்க்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை உஷ்ணம், அக்ருமுகம், வியாலம், துதிரானம், நிஸ்தரிசனம் ஆகியவையாகும். முக்கோண மண்டபத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய், ரத்தத்திற்குக் காரகன். உயர்ந்த சக்தியை கையில் வைத்துக் கொண்டு மங்கலத்தைச் செய்பவன்.

    செவ்வாய் கிரகம் ஒரு ராசியில் 1½ மாத காலம் சஞ்சாரம் செய்கிறது. செவ்வாய் கிரகத்தின் உலோகம் தாமிரமாகும். தேசத்தைப் பரிபாலனம் செய்வோருக்கும், தன்மானத்துடன் வாழ்வோருக்கும், நால்வகைப் படைகளை முன்னின்று இயக்குவோருக்கும் மூல பலமாக விளங்குவது இந்த செவ்வாய்க்கிரகம்தான். ஆண், பெண் ஜாதகங்களில் செவ்வாய், ஜென்ம லக்னத்தில் இருந்தாலோ, சந்திர லக்னத்தில் இருந்தாலோ, சுக்ரன் இருக்கும் இடத்தில் இருந்தாலோ, இரண்டாம் இடத்தில் இருந்தாலோ, அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் என்று பொருள்.

    ஆலயத்திற்குச் சென்று நவக்கிரகங்களில் உள்ள செவ்வாய் கிரகத்தை வழிபடும் போது, அதற்காக காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.

    செவ்வாய் காயத்ரி மந்திரம் :

    ‘ஓம் வீரத்வஜாய வித்மஹே
    விக்ன ஹஸ்தாய தீமஹி
    தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்’

    வீரத்திற்கு அதிபதியான செவ்வாய் தேவனை அறிந்துகொள்வோம். தடைகளை அகற்றும் கரங்கள் கொண்ட அவனை நோக்கி தியானம் செய்வோம். பலம் பொருந்திய அவன் நம்மை காத்து அருள்புரிவான் என்பது இதன் பொருள். இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து, அங்காரகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் மங்கலம் உண்டாகும். உள்ளம் தூய்மை பெறும். உடல் உறுதியாகும். மனம் திடமாகும், வீரம் அதிகரிக்கும், பகை விலகும் என்பது நம்பிக்கை. 

  • எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட…கருட பஞ்சமி விரதம்!

    ஆண்டு தோறும் ஆடி அமாவாசைக்குப் பிறகு வளர்பிறை பஞ்சமி திதி அன்று கடைபிடிக்கப்படும் முக்கியமான விரதம் கருடபஞ்சமி விரதமாகும்.கருடனை நினைத்து திருமணமான பெண்கள் விரதம் இருந்தால் நாக தோஷம் நீங்குவதோடு, கருடனைப் போல புத்திமானாகவும், வீரனாகவும் பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது ஐதீகம். கருடன், மகா பலம் உடையவர். அழகான முகம், உறுதியான நகங்களை உடையவர். கூர்மையான கண்கள், பருத்த கழுத்து, குட்டையான கால்கள் மற்றும் பெரிய தலையையும் பெற்றவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் ஸ்தலங்களில் ‘பெரிய திருவடி” என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.

    மேலும் கருட பகவான் விபத்து நோய் நீக்கும் மருத்துவராகவும், பஞ்ச பக்ஷியின் ராஜாவாகவும் திகழும் ஸ்ரீ கருட பகவானை விரதமிருந்து வணங்கினால் பாவங்கள், நோய்கள் அகலும், குடும்ப நலம், தைரியம் ஏற்படும், எதிரிகள் தொல்லை அகலும், நீண்ட ஆயுள், பணவரவு, ஸர்ப்ப தோஷம், ராகு கேது திசா புக்திகளால், ஏற்படும் துன்பங்கள், விபத்து, மரண பயங்கள், புத்தி பேதலிப்புகள் சர்ம வியாதிகள்- ஆறாத புண்கள்- கட்டிகள், இரத்த புற்று நோய், எலும்பு புற்று நோய், போன்ற பலவிதமான புற்று நோய்கள், பித்ரு, பிரம்ம ஹத்தி தோஷங்கள், பரம்பரை பரம்பரையாக வரும் பூர்வ தோஷங்கள், கால சர்ப தோஷங்கள், பில்லி, சூன்யம், ஏவல், சத்ரு தொல்லைகள், தீராதநோய் போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கி சுபிட்சம் பெருகும்

  • பிள்ளைகள் கல்வியில் சிறக்க…சாரதா தேவி மந்திரம்!

    குழந்தைகள் கல்வியில் பிரச்சினையே ஞாபக சக்தியின்மைதான். இதற்குப் பலவகைப் பயிற்சிகள் இருந்தாலும், இறையுணர்வும் மிகவும் முக்கியம். ஞாபகசக்தி அதிகமாக சரஸ்வதி துதி மந்திரத்தைப் படிக்க வேண்டும்.

    ஸ்ரீ வித்யா ரூபிணி சரஸ்வதி!

    சகலகலாவல்லி சாரபிம்பாதரி!

    சாரதாதேவி சாஸ்திரவல்லி!

    வீணா புஸ்தகராணி வாணி!

    கமலபாணி வாக்தேவி வரநாயகி!

    புஸ்தகஹஸ்தே நமோஸ்துதே!

    மந்திரத்திற்கான பொருளை அறியலாம். கல்வி என்ற செல்வத்தின் வடிவமான சரஸ்வதியே! சகல கலைகளுக்கும் தலைவியே! பால் போன்ற வெண்ணிற ஆடை அணிந்த மாசற்றவளே! ‘சாரதை’ என்னும் வீணையை ஏந்தியவளே! சாஸ்திரங்களுக்கு அரசியே! இசைக்கும், இனிய நூல்களுக்கும், பாட்டுக்கும் தலைவியே! வெள்ளைத் தாமரையில் அமர்ந்தவளே! நல்ல சொற்களுக்குரியவளே! விரும்பிய வரங்களைக் கொடுப்பவளே! புத்தகத்தைக் கையில் உடையவளே, நல்லறிவு தருபவளே! உன்னை வணங்கி போற்றுகின்றேன்.