Category: பரிகாரங்கள்

பரிகாரங்கள்

  • புது வீடு கட்டியும் நிம்மதி இல்லையா?…. வாஸ்து தோஷம் நீக்கும் தெய்வ வழிபாடு

    புது வீடு கட்டி முடித்ததில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டின் வாயிலாக சரி செய்யலாம்.

    வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.

     பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.

    ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.

    திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.

    தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.

    காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.
     

  • தன்வந்திரி பீடத்தில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமம்

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வாஸ்து நாளை முன்னிட்டு இன்று 28.10.2019 திங்கள்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும், அஷ்டதிக் பாலகர் பூஜையும், ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

    இந்த யாக பூஜைகளில் நெய், தேன், பால், தாமரை புஷ்பங்கள், பல வர்ண புஷ்பங்கள், மிளகாய் வற்றல், நவதானியங்கள், மூலிகைகள், நவசமித்துகள், பழங்கள், நிவேதன பொருட்கள் போன்றவை சமர்ப்பிக்கபட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற திரவியங்களால் ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார்.

     இன்று குரு பெயர்ச்சி மஹா யாகம்

    குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருப்பெயர்ச்சி யாகமும் சிறப்பு ஆராதனையும் :

    குரு பகவான் விருட்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறதை முன்னிட்டு இன்று 29.10.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை குரு பெயர்ச்சி மஹா யாகமும், பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது. இதில் ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் குரு திசை, குரு புக்தி நடக்கும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். 

  • ஆலங்குடியில் குருபெயா்ச்சி லட்சார்சனை விழா 

    குருபரிகார ஸ்தலமான ஆலங்குடியில் குருபெயா்ச்சி லட்சார்சனை விழா தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலையில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. 

    மூலவா் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டது.அலங்கரிக்கப்பட்ட உற்சவ தெட்சிணாமூா்த்தி தனிசன்னதியில் எழுந்தருள அங்கு ஜோதிராமலிங்க சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களைச் சொல்லி லட்சார்ச்சனையை நடத்தி வைத்தனா்.

    ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரா்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொண்டனா். லட்சார்ச்சனை தொடக்க விழாவில் அறநிலைய உதவி ஆணையா் மற்றும் திருக்கோயில் செயல் அலுவலா் பி.தமிழ்செல்வி உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். 

    இந்த முதல் கட்ட லட்சார்ச்சனை வரும் 27 ம்தேதி வரை நடைபெறும் .மீண்டும் குருபெயா்ச்சிக்குப்பின் அக்டோபா் 31ம்தேதி தொடங்கி நவம்பா் 7ம்தேதி முடியவும் இரண்டாவது கட்டமாகவும் நடைபெறும். 

    நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயில் உள்ளது. திஞானசம்மந்தரால் பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருபெயா்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

     இவ்வாண்டும் குருபகவான் வரும் அக்டோபா் 29ம் தேதி செவ்வாய்க்கிழமை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்கிறார். இதனை முன்னிட்டு அன்றைய தினம் இக்கோயிலில் குருபெயா்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறவுள்ளது.
     

  • கிரக பெயர்ச்சிகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்க…. 

    கிரக பெயர்ச்சிகளால் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருப்பதற்காக இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் மந்திரங்களை தினமும் பாராயணம் செய்யலாம்.

    அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயனமர்காத்மகதயா
    த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனி நாயகதயா
    த்ருதீயா தே த்ருஷ்டிர் – தரதலித ஹேமாம்புஜ – ருசி:
    ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ நிசயோ – ரந்தரசரீம்

    'தேவீ, உன்னுடைய வலக் கண் சூரியனைப் போன்று திகழ்ந்து பகலை ஏற்படுத்துகிறது; உன்னுடைய இடக் கண் சந்திரனைப் போன்று திகழ்ந்து இரவை உண்டாக்குகிறது; இரண்டுக்கும் மத்தியில் அமைந்திருக்கும் மூன்றாவது கண்ணோ, அப்போதுதான் சிறிதே மலர்ந்த பொற்றாமரை மலரைப் போல் திகழ்ந்து, இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட சந்தியா காலத்தை உணர்த்துகிறது.

    இரவும், பகலும், இரண்டுக்கு இடைப்பட்ட சந்தியா காலமும் உன்னுடைய கண்களில் இருந்துதான் உண்டாகிறது. எனவே தேவீ, நீயே காலங்களைப் படைப்பவளாக இருப்பதுடன், காலங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருக்கிறாய் என்பதுதான் இந்த ஸ்தோத்திரத்தின் சாரம்.

    சௌந்தர்யலஹரியின் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்ய இயலாதவர்கள், சீர்காழி தலத்தில் அவதரித்து, அம்பிகையினால் ஞானப் பால் புகட்டப்பெற்ற திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் முழுவதையுமோ அல்லது இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஒரு பாடலை மட்டுமோ பாராயணம் செய்யலாம்.
     

  • சகல திருமண தோஷம் நீங்க….. 

    துளசி கல்யாணம் செய்தால் திருமணம் நடைபெறும்.

    ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் நடைபெறும்.

    சென்னை – திருவேற்காட்டில் கருமாரியம்மனை தரிசிக்கும் பெண்களுக்கு திருமண பாக்கியம் கூடி வருகிறது.

    வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கடலை எண்ணை நீங்கலாக பிற பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி மஞ்சள் பொடி அபிஷேகமும், பால் அபிஷேகமும் செய்தால் திருமணம் நடைபெறும்.

    நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் அடிப்பிரதட்சணம் செய்யுங்கள். ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள்.

    கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களும் நீங்கி திருமணம் கூடி வருகிறது.

    முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வந்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் நிச்சயமாகும்.

    வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றினால் திருமணம் கை கூடும்.

    புன்னை மரத்தை சுற்றி வணங்கி வந்தால் திருமணம் நடைபெறும்.

    ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட்டால் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்.

  • தன்வந்திரி பீடத்தில் பாதாள சொர்ண சனீஸ்வர்ருக்கு புஷ்பாஞ்சலி…

    உலக மக்கள் நோயின்றி ஆரோக்யத்துடன் வாழ, நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு பிரத்யோகமான முறையில் வாலாஜாபேட்டையில் ஆலயம் அமைத்து அவருடன் 77 பரிவார மூர்த்திகளையும் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் நலனே குறிக்கோலாக கொண்டு தினசரி யாகங்கள், விசேஷ பூஜைகள் என்ற முறையில் மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார் இப்பீடத்தின் ஸ்தாபகரும் பீடாதிபதியுமான ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

    ஒவ்வொரு தேவைக்கும் ஒரு கடவுள் என்ற முறையில், அக்கடவுள்களை பிரதிஷ்டை செய்து அதற்குரிய ஹோமங்கள் இங்கே சிறப்பாக நடைபெற்று வருகிறது. உண்டியல், தனி நபர் அர்ச்சனை என்று இல்லாமல் உலக நலனுக்காக கூட்டு பிரார்த்தனையும், சிறப்பு ஹோமங்களுமே இங்கு பிரதானமாகும். தன்னுடைய தாய்க்கு ஏற்பட்ட கொடிய நோய் வேருயாருக்கும் வரக்கூடாது என்ற முறையில் இந்த ஆரோக்ய பீடத்தை நிறுவி, பெற்றோருக்கும் ஆலயம் அமைத்து வழிபட்டு வருகிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். மேலும் தேச நலம் தேக நலம் என்ற முறையிலும், தேக நலமே தேச நலம் என்ற முறையிலும் பாரத மாதாவிற்கு ஆலயம் அமைத்துள்ளார்.

    பாதாள சொர்ண சனீஸ்வரர் :

    கடந்த 15 ஆண்டுகளாக மாதத்தின் முதல் சனிக்கிழமையில் சனி சாந்தி ஹோமம் நடைபெற்று, காலசக்கிரத்தில் அமைந்துள்ள வன்னி விருட்சத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இத்தகைய பீடத்தில் சுகபிரம்மரிஷியின் ஓலைச்சுவடியில் தெரிவித்த பிரகாரம், நவக்கிரகங்களில் நீதிபதியாக உள்ள சனி பகவானுக்கு ஒரு ஆலயம் அமைக்க ஸ்வாமிகள் முன்வந்து ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வர்ருக்கும் ஆலயம் அமைத்து விசேஷ பூஜைகள் செய்து வருகிறார்.

    சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். பிரபஞ்சத்தையை ஆட்டிப்படைக்கும் ஒரு மாபெரும் கிரகம் தான் சனீஸ்வரர். தவறு செய்பவர்களை தண்டிப்பதையும், தர்மம் செய்பவர்களை காப்பதும் இவருடைய முக்கிய பணியாகும். ராஜாங்க பதவிகளில் அமர வைப்பவரும், மரணத்தை மாற்றுபவரும் இவரே. ஆயுள் தோஷத்தை நீக்கி ஆரோக்யத்தை அளிப்பவரும் சனி பகவானே. அவரவர் பாப புண்ணியங்களுக்கேற்ப பலா பலன்களை அள்ளிதருபவரும் இவரே. இவருக்கு மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சனீஸ்வரருக்கு உலகில் எங்கும் இல்லாதவாறு முதன்முறையாக சொர்ணத்தில் விக்ரகம் அமைத்து, 20×27 என்ற நீள அகலத்தில், 13 படிகள் கொண்டு பாதாளத்தில் பிரத்யோக மண்டபம் அமைத்து பக்தர்கள் வலம் வரும் வகையில் அமைக்கப்பட்டு, உலகில் முதல் சொர்ண சனீஸ்வர பகவான் ஆலயமாக திகழ்ந்து வருகிறது என்பது நம் பாரத நாட்டிற்கு பெருமை சேர்க்க கூடியதாகும்.

    பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு புஷ்பாஞ்சலி :

    ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம சனி, அர்தாஷ்டம சனி, ஜென்ம சனி, பாத சனி போன்ற சனிக்கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், சனி பகவானால் மக்களுக்கு ஏற்படும் பயங்கள் நீங்கி சுபிக்ஷங்கள் பெற மேற்கண்ட பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞப்படி வருகிற 19.10.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை விசேஷ பூஜைகளும் புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

     

  • குல தெய்வ வழிபாடு அவசியம் ஏன்?

    குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.  குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் தங்களின் முன்னோர்கள் எந்த நாளில் வழிபாடு செய்தார்களோ அதே நாளில் வழிபாடு செய்வது நன்று.  உதாரணமாக நம் முன்னோர்கள் வெள்ளிக்கிழமை குலதெய்வ வழிபாடு செய்திருப்பார்கள்.  

    ஆனால் நாமோ வெள்ளிக்கிழமை செய்யாமல் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்பதால் அந்த நாளில் வழிபாட்டினை மாற்றி வைத்துக்கொள்வது மிகவும் தவறு.

    குலதெய்வ வழிபாடு புதிதாக செய்ய தொடங்குபவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் வழிபாடு செய்து வருவது நல்லது.  ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரை காலை சூரிய உதயம் ஆன நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை இருக்கும்.  

    அத்தகைய நேரத்தில் குலதெய்வ வழிபாடு செய்து வருவது மிகுந்த நற்பலன்களை கொடுக்கும்.  காலையில் செல்ல இயலாதவர்கள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் வழிபாடு செய்யலாம்.  இந்த நேரம் அவரவர் இருப்பிடத்தின் சூரிய உதய நேரத்தினைப் அனுசரித்து மாறுபடும்.
     

  • ராகு தோஷம் நீங்க எளிய பரிகாரம்

    ராகுவின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தை வழி சொத்துக்கள் கைகூடி வரும், இல்லாவிட்டால் இழுபறியாகும். கல்யாண மாலை கழுத்தில் விழுவதில் தாமதம், குழந்தை பாக்கியம் கிட்டுவதில் தடை, புகழுக்கு களங்கம் ஏற்படுவது, சட்டத்தினால் தண்டிக்கப்படுவது, தொழிலில் எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இட மாற்றம், வீண் பழி சுமத்தல், குடும்பப் பிரிவு இப்படிப்பட்ட பொதுவான பிரச்சினைகள் வரும். இத்தகைய ராகு தோஷத்தில் இருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன. ராகுவுக்கு தனியாக ஓரை காலம் இல்லை. 

    அதனால் சனிக்கிழமை காலை 6.15 முதல் 6.45-க்கு 5 அகல் தீபத்தை வீட்டு பூஜை அறையில் ஏற்றி வையுங்கள். தினமும் துர்க்கை காயத்ரியைச் சொல்லுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை 5 அகலில் நெய் தீபம் ஏற்றி கும்பிடுங்கள். எலுமிச்சை தீபம் கூடாது. 3 பழத்தை துர்க்கையிடம் வைத்து வழிபட்டு திரும்ப வாங்கி குடும்பத்துடன் சாறு பிழிந்து குடியுங்கள். வருடத்தில் ஒரு முறையாவது, பட்டீஸ்வரம் சென்று அங்குள்ள துர்க்கையையும், திருநாகேஸ்வரம் சென்று ராகுவையும் தரிசித்து விட்டு வாருங்கள்.

    முடிந்த போதெல்லாம் பக்தர்களுக்கு உளுந்துசாதம் விநியோகியுங்கள். பசுவுக்கு கடலைப் பொட்டு அல்லது வேறு ஏதாவது தீவனம் வாங்கிக் கொடுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று துர்க்கை, ராகு சன்னதியில் வழிபாடு செய்யுங்கள். சிறியதொரு கருங்கல்லை உங்கள் கைவசம் வைத்திருப்பது ராகு தோஷ நிவர்த்திக்கான மிக எளிய வழி.
     

  • வாஸ்து தோஷம் நீங்க தெய்வ வழிபாடு

    புது வீடு கட்டி முடித்ததில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டின் வாயிலாக சரி செய்யலாம்.

    வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.

     
    பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.

    ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.

    திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.

    தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.

    காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.
     

  • காமாக்ஷியின் கருணை பெற்றேன்….வாழ்வில் நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் சந்தித்த ஒருவரின் நன்றிக் கடிதம்

    பிரபல பிரசன்ன ஜோதிடர் டாக்டர். கீது வாட்ஸ் அவர்களால் வாழ்வில் நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் சந்தித்த ஒருவரின் நன்றிக் கடிதம்..

    மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு, 

    முரளிதரன் எழுதிக் கொள்வது… வணக்கம், எங்களுடைய ஒரே மகனை மிகவும் சிரமப்பட்டு விஷ்வல் கம்யூனிகேஷன் படிப்பு படிக்க வைத்தோம். நல்லா படித்துக் கொண்டிருந்த எனது மகன் சில கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் பாதை மாறிப் போய்விட்டான். இந்த நிலையில்தான் நான் தங்களை சந்தித்தேன்.

    நீங்கள் ஜாதகத்தை பார்த்துவிட்டு என்னிடம் ஒரு கேள்வியை கேட்டீர்கள். நீங்கள் ஏதேனும் தெய்வத்திற்கு வேண்டுதல் பாக்கி இருக்கிறதா என்று கேட்டீர்கள். அதுவும் (பல வருடங்களுக்கு முன்) நீங்கள் கேட்கும்போது எனக்கு  நினைவுக்கு வரவில்லை. 1 வாரம் கழித்து உங்களை போனில் தொடர்பு கொண்டு நான் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை கூறினேன்.

    எங்கள் சொந்த ஊர் மதுரை. நான் ரொம்ப நாட்களாக வேலை கிடைக்காமல் இருந்த போது, வேலை கிடைத்தால் மீனாட்சி அம்மனுக்கு என்னுடைய ஒரு மாத சம்பளம் காணிக்கையாக செலுத்துவதாக வேண்டினேன். நீங்கள் உடனே அந்த காணிக்கையை செலுத்திவிட்டு என்னை வந்து சந்திக்குமாறு கூறினீர்கள். அப்போது என்னுடைய சம்பளம் ரூ.150/- மட்டும். இன்று என்னுடைய சம்பளம் ரூ.15,000/-. இதை நான் உங்களிடம் கேட்கும் போது 21 வருடங்களுக்கு முன் வேண்டிக் கொண்டதை வட்டியும், முதலுமாக செலுத்த வேண்டும் என்று மிகவும் திட்டவட்டமாகக் கூறினீர்கள். நானும் 2 மாதங்கள் கழித்து செலுத்திவிட்டேன்.

    என்ன ஆச்சர்யம், இந்த காணிக்கையை செலுத்துவதற்கு முன்பே என் மகனிடம் நல்ல மாற்றங்களை பார்த்தேன். இன்று என் பையன் வடநாட்டில் தனியார் தொலைக்காட்சியில் நல்ல பதவியில் இருக்கிறார். என்னுடைய மகனின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த தங்களுக்கும், நீங்கள் வணங்கும் காமாட்சிக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மீனாட்சிக்கு நான் வேண்டிக்கொண்டதை காமாட்சி நினைவுபடுத்தி என்னுடைய இன்னல்களை போக்கி வைத்தார்.

    நன்றி…

    இப்படிக்கு முரளிதரன்.

    பிரசன்ன ஜோதிடர் டாக்டர். கீது வாட்ஸ் அவர்களை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

    Dr. Geetu Watts (Prasanna Jodhidar)

    9-A, துளசி கார்டன், (Near Golden Flats Signal)

    சந்தான சீனிவாச பெருமாள் கோவில் தெரு,

    முகப்பேர் மேற்கு, சென்னை – 600 037

    போன் – 98845 12895 / 98848 80257