Category: பரிகாரங்கள்

பரிகாரங்கள்

  • நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!

    திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூரில் இருந்து அவினாசி வழியாக கோவை செல்லும் வழியில், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டு வந்தார் என்பது நம்பிக்கை. முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் திருமுருகன்பூண்டி.  இந்தத் தலம், முருகப்பெருமான் விரும்பி வந்து சிவ வழிபாடு செய்த பெருமைக்கு உரியது. மங்களாம்பிகையுடன் மாதவனேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் இத்தலத்துக்கு, இன்னும் பல புராணப் பெருமைகள் உண்டு.

    இத்தலத்தில் முருகநாத சுவாமி சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. சுவாமி, அம்மன் சந்நதிகள் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கோயிலின் நடுவில் சண்முகதீர்த்தம். இடப்புறத்தில் ஞானதீர்த்தம். வலப்புறத்தில் பிரம்ம தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முருகன் வழிபட்டதற்கு அடையாளமாக முருகன் சந்நதியின் கருவறையில் மேற்கு நோக்கியவாறு லிங்கம் உள்ளது. இங்குள்ள முருகனிடம் வேலும் மயிலும் இல்லை.

    அவற்றைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வந்து சிவனை முருகன் வழிபட்டதாக ஐதீகம்.முருகனால் வழிபடப்பட்டதால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முதன்மைக் கடவுளான சிவன் முருகநாதேசுவரர் எனப் பெயர்பெற்றார் என்ற மரபு வரலாறும் வழக்கத்தில் உள்ளது. அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் ஆகியோர் வழிபட்ட தலம். இதற்கு மாதவிவனம் என்றும் பெயர்.

    துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவிமரத்தை இங்கு கொண்டு வந்ததாகவும், அவ்வழியே சுந்தரர் செல்லும்போது, இறைவன் தன் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.கோயில் நுழைவு வாயிலில் பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் சந்நதி உள்ளது. இதைத் தாண்டி உள்ளே சென்றால் வலப்புறம் வேடுவர் உருவமும் சுந்தரர் உருவங்கள் இரண்டு (ஒன்று பறிகொடுத்து முகம் வாடிய நிலையிலும் மற்றொன்று மீண்டும் பெற்ற மகிழ்ச்சி நிலையிலும்) உள்ளன.

    கோயில் பிராகாரத்தில் பைரவர் சந்நதியும் நவக்கிரகங்களும் உள்ளன. இங்குள்ள சண்முகநாதர் சந்நதி சிறப்பானது. ேகாயிலின் ஸ்தலமரம் வில்வம். இத்தலம் பிரம்மகத்தி தோஷம் நீங்கிய தலம். சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்குவந்து நீராடி வழிபடுவதையும், பல நாட்கள் இங்கேயே தங்கியிருப்பதையும் இன்றும் காணலாம். இங்குள்ள பிரம்மதாண்டவ நடராஜர் சந்நதி விசேஷமானது. இக்கோயிலுக்குப் பக்கத்தில் சற்றுத் தொலைவில் மாலாதரன் எனும் வேட மன்னன் வழிபட்ட பைரவர் சந்நதி அமைந்துள்ளது. எங்கும் இல்லாத புதுமையாக இங்கு, கோயிலின் மண்டபத்தின் மேலே பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவனாரின் பிரம்மதாண்டவம் அரங்கேறிய தலமாகவும் இது கருதப்படுகிறது. வெகுநாட்களாக குழந்தை பாக்கியம் கிடைக்காது வருந்திய பாண்டிய மன்னன் ஒருவன், இங்கு வந்து வழிபட்டு குழந்தை வரம் பெற்றான். இதுகுறித்த சிற்பக் காட்சிகளை இங்கு தரிசிக்கலாம். இத்தலத்தைப் புதுப்பித்து வணங்கிய வேடன் ஒருவருக்கும் இங்கு சிலை உள்ளது. லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சூரிய-சந்திரர், பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களையும் இங்கு தரிசிக்கலாம்.

    கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ மாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. 
     

  • கடன் தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்… வழிபாடுகள்!

    பொதுவாக, கடன் ஒருவரது வாழ்க்கையில் வருவதும் போவதுமாக இருக்கும் என்றாலும், சிலர் ஆயுசு முழுக்கக் கடனாளியாகவே இருப்பார்கள். அவர்களின் ஜாதகம் நஷ்ட ஜாதகமாக இருப்பதே அதற்குக் காரணம். அவர்கள் எந்தவித முயற்சியில் இறங்கினாலும் பொருள் நஷ்டத்தால் சிரமப்படுவார்கள்.

    ஒருவரது ஜாதகத்தில் 2 ஆம் வீட்டுக்குரிய தன ஸ்தானாதிபதி மறைந்திருந்தாலோ, 4 ஆம் வீட்டு சுகாதிபதி மற்றும் பாக்கியாதிபதி பலவீனமாகவோ, நீச கதியிலோ, வக்ரகதியிலோ மறைந்திருந்தாலோ அல்லது பாவ கிரகத்துடன் சேர்ந்து பலமிழந்து இருந்தாலோ, இந்த ஜாதக அமைப்புடன் பிறந்த எவர் ஒருவரின் ஜாதகமும் நஷ்ட ஜாதகம்தான்.

    அதேபோல், லக்னாதிபதியும் ராசிநாதனும் வலுவிழந்து, ஆனால் 6-க்கு உரியவன் வலுவாக இருந்தால், சம்பந்தப்பட்ட ஜாதகர் கடைசி வரைக்கும் கடனாளியாகவே இருப்பார்.

    இங்ஙனம் கடன் தோஷ ஜாதக அமைப்பு கொண்ட அன்பர்களுக்கு, பாதிப்புகள் விலகிட தானம்தான் மிகச் சிறந்த பரிகாரம். அது, உணவாகவோ, ஆடையாகவோ அல்லது எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

    ஆசிரியராக இருப்பவர்கள், மற்றவர்களுக்குக் கல்வியை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணத்திலோ தருவது சிறந்த பரிகாரமாகும். நம்மால் முடியும்போதெல்லாம் பசுவுக்கு உணவாக பீட்ரூட், முட்டைகோஸ், கேரட், தண்ணீரில் ஊறவைத்த பச்சரிசி ஆகியவற்றைத் தரலாம்

    வழிபாடுகள் 

    பரிகாரக் கோயில் என்று எடுத்துக்கொண்டால், சம்ஹார தலங்களுக்குச் சென்று வழிபடலாம். குறிப்பாக, சஷ்டி தினங்களில்… திருச்செந்தூருக்குச் சென்று முருகப்பெருமானை வணங்கி வழிபடுவது நல்லது. முடிந்தால், வருடத்துக்கு ஒருமுறை திருச்செந்தூர் சென்று, கந்தனை வழிபடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

    லட்சுமி கடாட்சம் பெருக… 

    கனகதாரா ஸ்தோத்திரம் மகாலட்சுமியின் பெருமையையும் புகழையும் போற்றிச் சொல்லக் கூடிய மகத்துவம் வாய்ந்த ஸ்துதி. ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தை வீட்டிலுள்ள பெண் கள் தினமும் அதிகாலை அல்லது அந்திப்பொழுதில் படித்தாலோ, கேட்டாலோ அந்த வீட்டில் செல்வநிலை பெருகும்.  

    வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் சுக்கிர ஹோரை ஆரம்பிக்கும் நேரத்தில் 1, 9, 12, 108 என்ற எண்ணிக்கையில் வீட்டில் நெய்தீபம் ஏற்றுவது, தீபப் போற்றிப் பாடல்களைப் பாடி வழிபடலாம். இதனால் தனவரவு பெருகும்.

  • இல்லறம் இனிக்க எளிய பரிகாரங்கள்…

    ர் ஆணின் ஜாதகத்தில், லக்னத்தில் இருந்து 7-வது இடம் மனைவி ஸ்தானத்தைக் குறிக்கும். இந்த வீட்டுக்குரிய கிரகம் சிறப்பாக இருக்க வேண்டும். அதோடு, இந்தக் கிரகம் 2, 4, 5, 9 ஆகிய வீடுகளுக்குரிய கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ, அந்தக் கிரகங்களின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தாலோ, திருமணத்துக்குப் பின் வாழ்க்கையில் பெரும் அதிர்ஷ்டம் தரக்கூடிய பெண், இல்வாழ்க்கைத் துணைவியாக அமைவாள்.

    ஆணின் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டுக்குரிய கிரகம் (சப்தமாதிபதி) சுபத் தன்மை பெற்ற குருவின் பார்வை பெறுவது சிறப்பு. அதேபோல் லக்னாதிபதி வலுவடைந்து, 7-ஆம் வீட்டுக்குரிய கிரகமும் பாவக் கிரகங்களின் பார்வையோ, சேர்க்கையோ இல்லாமல் இருந்தால், அழகு, அன்பு, அறிவு, அந்தஸ்து, நற்குணம் கொண்ட மனைவி அமைவாள்.

    அதேநேரம் ஓர் ஆணின் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டுக்குரிய கிரகம் 6, 8 ஆகிய வீடுகள் மற்றும் பாதகாதிபதியுடன் சேர்ந்திருந்தாலோ அல்லது அவர்களின் பார்வை பெற்றாலோ, திருமணத்துக்குப் பிறகு பிரச்னைக்குரிய வாழ்க்கையே அமையும்.

    திருமணத்துக்குப் பிறகு நல்வாழ்க்கை அமைந்து இல்லறம் இனிக்க கீழ்க்காணும் எளிய பரிகாரங்களைச் செய்து பலன் பெறலாம்.

    ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவி செய்யலாம் அல்லது திருமணச் செலவின் குறிப்பிட்ட பகுதியை மனமுவந்து ஏற்பது சிறப்பு. குறிப்பாக, அந்தப் பெண்ணுக்கு மாங்கல்யம் வாங்கித் தருவது நல்லது. அதேபோல் கன்னிப் பெண்களுக்கு வெள்ளியால் ஆன பொருள் தானம் செய்வது சிறப்பாகும்.

    சஷ்டி திதியன்று திருத்தணி சென்று முருகப் பெருமானை வழிபட, அதிர்ஷ்டம் அள்ளித்தரும் பெண் மனைவியாக அமைவாள்.

  • ராகு-கேது தோஷமா? எளிய பரிகாரங்கள்…

    காலப் பிரகாசிகை, சுக்ர நீதி போன்ற பழம்பெரும் நூல்கள் ராகுவும், கேதுவும் ஈடு இணையற்ற வல்லமை பொருந்திய கிரகங்கள் எனக் கூறுகின்றன. ஒருவரின் தாய்வழிப் பாட்டன், பாட்டிக்கு அதிபதியாக ராகு வருகிறார். கேது – தந்தை வழிப் பாட்டன், பாட்டிக்கு அதிபதியாக வருகிறார். ராகு- கேது குறித்து முழுமையாக அறிந்துகொண்டால், தோஷத்துக்கு மட்டுமல்ல; பல தருணங்களில் பூரண சந்தோஷத்துக்கும் இவர்களே காரணமாகத் திகழ்வது புரியும்.

    ராகு தோஷ பாதிப்புகள் மட்டுப்பட, வீட்டிலேயே சனிக்கிழமைகளில் மாலையில் அம்பிகைக்கு ஐந்து தீபங்கள் ஏற்றி வைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபடலாம். திருநாகேஸ்வரம் சென்று வழிபட்டு வரலாம். அதேபோல், பாம்பணையில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளை தரிசித்து வழிபட்டு வருவதாலும் ராகு தோஷப் பாதிப்புகள் விலகும்.

    கேதுபகவானின் திருவருளைப் பெற செவ்வாய்க் கிழமைகளில், கேது பகவான் காயத்ரீ மந்திரம் சொல்லி வழிபடுவது சிறப்பு. பிள்ளையாருக்கு அருகம்புல் மோதகம் சமர்ப்பித்து, நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால், கேது பகவான் மகிழ்வார். ஏழை மாணவர்களின் படிப்புக்கும் சமயச் சொற்பொழிவு முதலான ஆன்மிக காரியங்களுக்கும், கோயில் திருப்பணிகளில் ஈடுபடும் அன்பர்களுக்கும் உதவி செய்வதால் கேதுபகவானின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறலாம்.

    காஞ்சி சித்ரகுப்தரைத் தரிசித்து வருவதும் கேது பகவானுக்கு ப்ரீத்தியானது. கீழப் பெரும்பள்ளம், திருப்பாம்புரம் தலங்களுக்கும் சென்று வழிபடலாம்.
     
    ஓர் ஆணின் ஜாதகத்தில் ஏழாம் வீட்டுக்கு உரிய கிரகம் மறைந்து பலவீனமாகி இருக்க, அந்தக் கிரகத்துடன் 6, 8-ஆம் வீட்டுக்கு உரிய கிரகங்களும், பாதகாதிபதியும் சேர்ந்திருந்தால், அவருக்குத் திருமணம் ஆன நாளில் இருந்தே மனைவியால் மருத்துவச் செலவுகளும், மற்ற செலவுகளும் வந்துகொண்டே இருக்கும்.

    அதேபோல், ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி, ராசிநாதனுடன் 6-க்கு உரிய கிரகமும் சேர்ந்து, இவர்களுடன் 8-ஆம் வீட்டுக்கு உரிய கிரகமும் சேர்ந்து, இந்தக் கூட்டுக் கிரகங்களை சனி பார்த்து விட்டால், அவருக்கு மருந்தே வாழ்க்கையாகி விடும். அதாவது, அவர் வாழ்நாள் முழுக்க மருந்து, மாத்திரைகளுடனேயே வாழ்வார். பூர்வ புண்யாதி பதியுடன் 6, 8-ஆம் வீட்டுக்கு உரிய கிரகம் சேர்ந்தால் பிள்ளைகளால் மருத்துவச் செலவு ஏற்படும்.

    பொதுவாக, மேஷம் தொடங்கி மீனம் வரையிலான 12 ராசியினருக்குமே நோய்கள் வந்து மருத்துவச் செலவு ஏற்பட்டாலும், மேஷம், ரிஷபம், துலாம், விருச்சிகம் ஆகிய நான்கு ராசியினர் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள்; உடல்ரீதியான பிரச்னைகளைச் சந்திப்பார்கள். ராசிநாதனே இந்த நான்கு ராசிகளுக்கும் 6, 8-ஆம் வீட்டுக்கு அதிபதியாக வருவதால், மற்ற ராசியினரைவிட இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

    இவர்கள் சில பரிகாரங்களைச் செய்தால், நோயற்ற நிம்மதியான வாழ்க்கையைப் பெறலாம்.

    மருத்துவச் செலவு தேவைப்படும் நபர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்யலாம். பழைமையான ஆலயங்களின் தலவிருட்சப் பராமரிப்பில் ஈடுபடலாம். மா, அத்தி உள்ளிட்ட பால் மரக் கன்றுகளை பொது இடங்களில் நட்டுப் பராமரிக்கலாம்.

    தெரிந்தோ தெரியாமலோ யாருடைய சொத்தையோ பணத்தையோ அபகரித்து இருந்தால், அவற்றை நாணயமாகத் திருப்பிக் கொடுத்துவிடுவது நன்று.

    இந்தப் பரிகாரங்களோடு, கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் கோயில்கொண்டுள்ள சரபேஸ்வரரை வழிபட்டு, அவரவர் வயதைக் குறிக்கும் எண்ணிக்கை யில் நெய் தீபம் ஏற்றி வணங்கினால், நோய், கடன், வழக்கு பிரச்னைகளில் இருந்து நிம்மதி கிடைக்கும்.

    – கே.என். கோபால சாஸ்திரி
     

  • செவ்வாய் தோஷம்: பாதிப்புகள் விலக பரிகாரங்கள்!

    பூர்வஜென்ம குற்றம் – குறைகளுக்கு, நிவர்த்தி தேடினால் தோஷங்களின் பாதிப்பு குறையும். அவ்வகையில், வாழ்வில் பலரும் சந்திக்கும் தோஷங்கள், பாதிப்புகள், அவற்றுக்குக் காரணமான கிரக நிலைகள், எளிய பரிகாரங்கள் இங்கே… 

    தோஷங்களில் அதிக பயத்துக்கும் பாதிப்புக்கும் ஆளாக்குவது, செவ்வாய் தோஷம்தான். பிறக்கும்போது லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் அமைந்திருக்கும். அப்படி அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும்.

    சில தருணங்களில் இந்த தோஷம் வலு குன்றியதாகவும் திகழும். செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலோ, குருவோடு சேர்ந்து நீச கதியில் நின்றாலோ, வர்க்கோத்தமம் பெற்றிருந்தாலோ (உங்கள் ஜாதக ராசி கட்டத்திலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருப்பது) செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறையும்.

    செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷத்தைச் சேர்ப்பதுதான் நல்லது என்பதே எனது கருத்து. ஏனெனில், உணர்ச்சிக்குரியதே செவ்வாய் கிரகம். உடல் மற்றும் மன உணர்வுகளைச் சமமாக இருவரும் வெளிப்படுத்தும்போது, கணவன்-மனைவிக்குள் வீண் பிரச்னைகள் எழாது.

    பரிகாரங்கள் என்னென்ன?

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் புளி சாதம், புளிச்ச கீரையை உணவில் குறைவாகச் சேர்ப்பது நல்லது. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் செவ்வாய் ஆதிக்கமுள்ள நிலம், சகோதரர்கள் முதலான விஷயங்களில் நேர்மறையான அணுகுமுறையை வைத்துக்கொண்டால், செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையும்.

    பூர்வீகச் சொத்துப் பிரிவினையில் சகோதர- சகோதரிகள், பெற்றோரின் மனத் தாங்கலுக்கு ஆளாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முதன் முதலாக வாங்கும் சொத்தை நிலமாக வாங்காமல், கட்டப்பட்ட கட்டடமாக வாங்குவது சிறப்பு. ஊர் எல்லையில் கோயில்கொண்டிருக்கும் காவல் தெய்வங்களுக்குச் செம்பருத்திமற்றும் விருட்சிப்பூ சாற்றி வணங்குங்கள். வீட்டில் வில்வம், வன்னி மரக்கன்றுகள் நட்டுப் பராமரியுங்கள்.

    தொடர்ந்து 6 செவ்வாய்க் கிழமைகள் வீட்டில் ஷட்கோணம் வரைந்து, அதில் ஆறெழுத்து மந்திரத்தை எழுதிவைத்து, 6 நெய் தீபங்கள் ஏற்றிவைத்து குமார ஸ்தவம், சண்முகக் கவசம் படித்து வழிபடலாம். அப்போது வெல்லம் கலந்த தினைமாவு நைவேத்தியம் செய்து, முல்லைமலர், செவ்வரளி அல்லது செம்பருத்தி சமர்ப்பித்து முருகனை வணங்கிட, செவ்வாய் தோஷ பாதிப்புகள் விலகும்.

    – கே.என். கோபால சாஸ்திரி
     

  • பகைவரை வெல்ல காயத்ரி மந்திரம்….

    ஜ்வாலாமாலினி
    (பகைவரை வெல்ல)
     
    ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே
    மஹா ஜ்வாலாயை தீமஹி
    தன்னோ நித்ய ப்ரசோதயாத்
     
    ஜேஷ்டலக்ஷ்மி
    (மந்திர சக்தி பெற)
     
    ஓம் ரக்த ஜேஷ்டாயை வித்மஹே
    நீலஜேஷ்டாயை தீமஹி
    தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
     
    துவரிதா
     
    ஓம் த்வரிதாயை வித்மஹே
    மஹாநித்யாய தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்
     
    தாராதேவி
     
    ஓம் தாராயை ச வித்மஹே
    மனோக்ரஹாயை தீமஹி
    தன்னோ தேவீ ப்ரசோதயாத்
     
    திரிபுரசுந்தரி
     
    ஓம் ஐம் திரிருபுரதேவ்யை வித்மஹே
    க்ளீம் காமேஸ்வர்யை தீமஹி
    சௌஹ் தன்னோ க்ளின்னே ப்ரசோதயாத்
     
    ஓம் ஹைம் திரிபுரதேவி வித்மஹே
    க்ளீம் காமேஸ்வரீ தீமஹி
    சௌஹ் தன்னோ க்ளின்வியை ப்ரசோதயாத்
     
    மஹா திரிபுரசுந்தரி
     
    ஓம் ஹைம் திரிபுராதேவி வித்மஹே
    சௌஹ் சக்தீஸ்வரி ச தீமஹி
    தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் வாக்பவேஸ்வரி வித்மஹே
    காமேஸ்வரி ச தீமஹி
    தன்னோ சக்திஹ் ப்ரசோதயாத்
     
    ஓம் க்ளீம் திரிபுராதேவி வித்மஹே
    காமேஸ்வரி ச தீமஹி
    தன்னோ க்ளிண்ணெ ப்ரசோதயாத்
     

  • தைப்பூச திருவிழா… பழனி முருகப்பெருமான் திருக்கல்யாணம்…

    பழனி தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான முத்துகுமாரசுவாமி  ,வள்ளி ,தெய்வானை திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.  

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசப் பெருவிழா கடந்த ஜன.19 ல் திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.  10 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி வெள்ளிக் காமதேனு, வெள்ளியானை, வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு இரதவீதி உலா எழுந்தருளினார். வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.  

    பொற்சுண்ணம் இடித்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பிரதாய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தம்பதி சமேதர் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சோடஷ அபிஷேகமும், தொடர்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது. தொடர்ந்து தம்பதி சமேதர் முத்துக்குமாரசாமி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய வெள்ளித்தேரில் ஏற்றம் செய்யப்பட்டு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு இரத வீதிகளிலும் ஆடி அசைந்து உலா வந்தது.

    நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து பரவசமடைந்து அரோகரா கோஷம் எழுப்பினர். நாளை மாலை தேரடியில் 4.30 மணிக்கு தைப்பூசத் திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக வரும் ஜன.28 அன்று தெப்பத்தேர் உலா மற்றும் திருக்கொடி இறக்கம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள்,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அனுமனுக்கு வெண்ணெய் சாற்றப்படுவது ஏன்?

    அனுமன் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமன் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஏனெனில், அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார். வியாகரணம் என்றால் இலக்கணம். அனுமனின் குருவை நமது குருவாக மதித்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டில் திரும்பிய இடமெல்லாம் விநாயகர் கோயில் இருப்பதை போல், மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் கேரளா முதல் மகாராஷ்டிரம் வரை ஆஞ்சநேயருக்கு தனி கோயில்கள் அதிகம். பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.

    வெண்ணெய் சாத்துவது ஏன்:
     ராமசேவைக்காக தன் உடம்பைப் புண்ணாக்கிக் கொண்டவர் அனுமன். போர்க்களத்தில் அவர் பட்ட காயம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரைக் கட்டிப் போட்டு தெருத்தெருவாக இழுத்துச் சென்றார்கள். காயத்தின் வேதனை குறைய குளிர்ந்த பொருள் பூசுவது இயல்பு தானே! அதனால் தான், அனுமனுக்கு வெண்ணெய் சாத்தும் வழக்கம் ஏற்பட்டது. உலகியல் ரீதியாக இப்படி ஒரு கருத்து சொல்லப்பட்டாலும், ஆன்மிகக் கருத்து வேறு மாதிரியானது. வெண்ணெய் வெண்மை நிறமுடையது. வெள்ளை உள்ளமுள்ள பக்தர்களை அனுமனே தன்னுடன் சேர்த்து அருள் செய்கிறான் என்பதன் அடையாளமாக வெண்ணெய் சாத்தப்படுகிறது.

    கெட்டுப்போகாத வெண்ணெய்: திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் அனந்த பத்மநாபன் சந்நிதி முன்புறமுள்ள ஆஞ்சநேயருக்கு முக்கியமான வழிபாடு வெண்ணெய் சாத்துவது ஆகும். இந்த வெண்ணெய் எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவது இல்லை. எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை.

     

     

    குங்குமப் பொட்டு: வாலில் குங்குமம் வைத்து வழிபடுவதின் தாத்பர்யம் என்னவென்றால், அனுமாருக்கு வாலில் தான் சக்தி அதிகம். பக்தி சிரத்தையுடன் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இடுப்பில் வால் தோன்றும் திருவிடத்தில் இருந்து தினமும் சந்தனம் சாத்தி குங்குமத் திலகம் வைத்துக் கொண்டு வரவேண்டும். வாலின் நுனியை அடைந்ததும், கலைத்துவிட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுபதினத்தில், எம்பெருமானுக்கு வடைமாலை சாத்தி, உப்பிலியப்பனுக்கு நிவேதிப்பது போல் உப்பில்லா திருவமுது நிவேதிக்க வேண்டும்.காரியம் சித்தியாகும் வரை இவ்வண்ணம் பொட்டு வைத்துக் கொண்டே வர வேண்டும்.

     ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.

    ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும்.

    திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழனன்று வெற்றிலை மாலை, துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சாத்தலாம். அனுமன் ஜெயந்தியன்று வாயுபுத்திரர் அனுமனை நினைத்து வழிபடலாம்.

  • வேப்பிலை மீது 2 மண் விளக்கு… பறந்து போகும் குடும்ப பிரச்சனை..!

    வேப்பிலை மீது 2 மண் விளக்கு… பறந்து போகும் குடும்ப பிரச்சனை..!

    யாருக்கு தான் பிரச்சனை இல்லை. வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? பிரச்சனை இல்லாத வாழ்க்கை  சுவாரஸ்யமாகவும் இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம் 

    உதாரணத்திற்கு குடும்பத்தில் அண்ணன் – தம்பி பிரச்சனை,அக்கா தங்கை பிரச்சனை, சொத்து பிரச்சனை, பண பிரச்சனை … இவை அனைத்தயும் தீர்த்து வைக்க முடியும். 

    ஆனால்  எப்போதுமே….. வீட்டில் பிரச்சனை வந்துக்கொண்டே இருந்தால் என்ன  செய்வது ? மன நிம்மதி  இருக்காது. உடல் ஆரோக்கியம் சீர்கெடும், எந்த வேலையிலும் நாட்டம் இருக்காது. இப்படியான நிலையில், குடும்பத்தில் அமைதி  நிலவவும், சண்டை சச்சரவுகள் இல்லாத வாழ்கை வாழவும், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள்  உதிக்கவும் மிக சிறப்பான வழிமுறை ஒன்று உள்ளது.

    வழிமுறை 

    தினமும் மாலை நேரத்தில் வேப்பிலை மீது இரண்டு அகல் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறந்தது. அதாவது, நம் வீட்டு வாசலில் சதுர வடிவில் மஞ்சளால் கோலமிட்டு… அதன் மீது வேப்பிலையை பரப்பி, அதன் மீது  2 அகல் விளக்குகளில் மஞ்சள் திரியிட்டு விளக்கேற்றி வந்தால், திருஷ்டி படாது. எதிரிகள் நம்மை விட்டு  விலகுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். இவ்வாறு ஏற்றப்படும் விளக்கு குறிப்பாக கிழக்கு அல்லது  வடக்கு நோக்கி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நம்பிக்கையுடன் பூஜை செய்தால் குறைகளை தீர்க்கும் ஸ்ரீ ராகவேந்திரர்…..

    மகான் ஸ்ரீ ராகவேந்திரருக்கான விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும். முதல் வியாழக்கிழமை காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்து, தூய ஆடை அணிந்து கொண்டு அவரவர் விருப்பப்படி நெற்றியில் திருநீறு அல்லது சந்தனம், திருநாமம் அணியவேண்டும்.

    பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம், மலர் சூட வேண்டும். நிவேத்தியமாக வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலியவைகளை படத்தின் முன்வைத்த பின் பூஜையைத் தொடரலாம். 

    பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு சந்தனம், குங்குமம், துளசி மாலை சாத்தவேண்டும். அதேபோல குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இடவேண்டும். பூஜையின்போது ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்து பூஜிக்க வேண்டும்.

    மகான் படத்திற்கு தீப, தூபம் காட்டி தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி தளங்களை வைத்துக் கொண்டு எழுந்து நின்று

    பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய
    சத்ய தர்ம ரதாயச
    பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம்
    ஸ்ரீ காம தேநுவே

    என்று சொல்லிக்கொண்டே படத்தையும் விளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும். 

    இதுபோல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின் ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யவேண்டும்.

    ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும். அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, பூஜைக்கு வேண்டிய வெற்றிலைப் பாக்கு, பழம், மணமிக்க மலர்கள், தூப தீபங்கள் ஆகியவைகள் தேவை.

    ஸ்ரீராகவேந்திரரை வழிபடும் வியாழக்கிழமையில் பகலில் திரவ பதார்த்தங்கள் அருந்தலாம். இரவில் சிறிதளவு பால் அன்னம் சாப்பிடலாம். இதுபோல் விரதம் கடைப்பிடித்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கும்.