Category: பரிகாரங்கள்

பரிகாரங்கள்

  • சனி தோஷ நிவர்த்தி ஹோமம்…..

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு வருகிற 05.10.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சனிதோஷ நிவர்த்தி ஹோமமும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கு பஞ்ச திரவிய அபிஷேகமும், ஸ்ரீ பாதாள தங்க சனீஸ்வரருக்கு சிறப்பு அர்ச்சனையும் நடைபெற உள்ளது.

    சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவன். நீண்ட ஆயுளுக்கும், மரணத்திற்கும் அதிபதி சனியே. சனி ஜாதகத்தில் அசுபனாக இருந்தால் ஒருவன் எல்லாவித துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். சனி நல்ல பலம் பெற்றிருந்தால் சர்வ நலன்களையும் அடைய வாய்ப்பு உண்டு. சனியைப் போல கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை, என்பது வழக்கு மொழி. சனி என்றாலே நம்மையறியாமல் நமக்கு பயம் ஏற்படுகிறது. சனி ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார். அளவற்ற துன்பங்களுக்கு இவரை காரணம் ஆகிறார். சனி பகவான் நிறைய துன்பங்கள் கொடுத்தாலும் இவர் சிறந்த நீதிமான் ஆவார். அளவற்ற துன்பத்தை அளிப்பது போலவே அளவற்ற நன்மையும் செய்வார். சனீஸ்வர பகவானை வழிபட்டால் செய்வதால், நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் பெற முடியும்.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சனீஸ்ரரை வேண்டி நடைபெறும் ஹோமத்திலும், அபிஷேகத்திலும், விசேஷ பூஜைகளிலும் பங்கேற்று வழிபடுவதின் மூலம் தெய்வீக அருளால், தர்மத்தின் பாதையில் நடக்க முடியும், கடவுளோடு இணைந்த ஒரு வாழ்க்கையை வாழ முடியும், கருணையும், பணிவும் வளரும், எல்லைகளை வகுத்து, அதற்குள் ஒழுக்கமான வாழ்க்கை வாழலாம், நம் பாதையில் வரும் வாய்ப்புகளைப் சரியாக பயன்படுத்தி வெற்றியை அடையலாம், இயல்பாகவும், யதார்த்தமாகவும் இருந்து இலட்சியங்களை அடையலாம், தொழிலில் முன்னேற்றம் பெறலாம், உங்கள் அதிகாரம் மேம்படும், கடமை உணர்வு ஏற்படும், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு வளரும்.

    மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று வாழ்வில் வளம் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை – 632 513.
    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

     

  • மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்…. வீடியோ

    புரட்டாசி சனிக்கிழமை அன்று மஹாளய அமாவாசை திதி வந்தது சிறப்பாக கருதப்படுகிறது. கடந்த 1999ஆம் ஆண்டு சனிக்கிழமை மஹாளய அமாவாசை வந்ததையடுத்து 20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு புரட்டாசி 2 வது  சனிக்கிழமை அன்று அமாவாசை தர்பணம் கொடுப்பது சிறப்பு பெற்றதாக கருதுகிறார்கள்.

    இந்துகளின் புனித நாளான  மஹாளய  அமாவாசையான  இன்று கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த  ஆயிரகனக்கான  இந்துக்கள்  புனித  நீராடி தங்கள்  முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை நடத்தி வணங்கினார்கள்.

    மூன்று ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஏராளமானோர்  தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் குளத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு  ஏராளமானோர்  தங்களது முன்னோர்களுக்கு திதி எனப்படும்  தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர்.

    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில்  மஹாளய அமாவாசை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிக்கிழமை  அன்று  மஹாளய அமாவாசை வருவதால் வீரராகவப் பெருமாளை தரிசிக்க சென்னை காஞ்சிபுரம் வேலூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் குவிந்ததால் திருவள்ளூர் நகரம் நிரம்பி வழிந்தது. 

    மஹாளய அமாவாசையை முன்னிட்டு கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு. மதுரை மாவட்டம் . திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் சரவண பொய்கை தெப்பகுளத்தில் புரட்டாசி மாத மஹாலய அமவாஸையை முன்னிட்டு ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்பணம் எனும் "பித்ரு " சாந்தி செய்து கொண்டனர். 

    திருவொற்றியூரில் மஹாளய அமாவாசை தர்ப்பணம்  செய்வதற்காக கடற்கரையில் ஏராளமானோர் குவிந்து  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பவித்ரா ஜோதி மக்கள் அறக்கட்டளை சார்பில்  இலவசமாக ஆண்டுதோறும்  திருவெற்றியூர் திருச்சினாம் குப்பம்  கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பொதுவாக ஆறுகளிலும் குளங்களிலும் கடற்கரையிலோ தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் சென்னையில் கடற்கரை பகுதியில் தர்ப்பணம் கொடுக்க வசதியில்லாத நிலையில் கோவில்களில் சத்திரங்களில் தர்பணம் கொடுத்து வருகிறார்கள்.


     நம் முன்னோர்களுக்கு அமாவாசையில் தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆன்மா சாந்தி பெற்று முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை    அதிலும் காசியில் ஓடும் நதிக்கரையில் அல்லது ராமேஸ்வரம் கடற்கரையில் திதி கொடுப்பது முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும் இதனைத் தீர்ப்பதற்கு காசிக்கோ ராமேஸ்வரதுக்கோ ஒரு சிலரால் மட்டுமே செல்ல முடியும் என்பதனால் ஏழை எளியவர் வசதி படைத்தவர் யாவரும் ஒரே இடத்தில் இலவசமாக திதி கொடுக்க ஏதுவாக சித்தர்களின் பூமி  என்றழைக்கப்படும்   திருவொற்றியூரில் கடலில் காசி விஸ்வநாதர் கோயில்  மூழ்கிய  இடத்தில் தர்பணம் கொடுப்பது காசியில் தர்பணம் கொடுத்த பலனை தரும் என்பதால்  கடற்கரையில் எள்ளும் தண்ணீரும்  கரைத்து முன்னோர்கள்  ஆசியை பெறுவதற்க்காக  ஏராளமானோர் குவிந்தனர் 

  • குழந்தை இல்லாமல் வேதனைப்படுபவர்களின் குறைகளை தீர்க்க

    ஒருவர் எத்தனைதான் விதவிதமான செல்வங்களைப் பெற்றிருந்தாலும், குழந்தைச் செல்வம் இல்லையென்றால் பிறவிப் பயன் கிட்டுவதில்லை. மாட மாளிகையில் வசித்தாலும் அந்த வீட்டில் மழலை குரல் கேட்பதே பெரிய செல்வமாக இருக்கும். ஆனால் அந்த குழந்தைச் செல்வம் கிட்டாமல் வேதனைப்படுபவர்கள் எத்தனை ஆயிரம் பேர்.

    திருமணமான ஒவ்வொரு தம்பதியும் திருமணம் ஆன நாளில் இருந்து தங்களுக்கு ஒரு வாரிசை எதிர்பார்த்துக் கனவு காண்பது இயற்கையே! அந்தக் கனவு நனவாகி பிள்ளைக் கனியமுது பிறக்கும்போது தாய், தந்தையர் அடையும் மகிழ்ச்சி இமயத்தின் உச்சியை அடைந்ததற்கு சமம் போல் தோன்றும்.

    வேத சாஸ்திரங்களும்,  புத்திர பாக்கியத்தின் பெருமையை எடுத்துச் சொல்கின்றன. மனிதன் தன்னுடைய கர்மவினைகளின் காரணமாகவே பிறக்கிறான். கர்மா தீர ஒரு பிள்ளை வேண்டும் என்று திருமணம் செய்துகொள்கிறான். சாஸ்திரங்களில், ‘பும் நாம நரகாது த்ராயதே இதி புத்ர:’ தன் தகப்பனின் ஆத்மாவை புத் என்ற நரகத்தில் இருந்து காப்பாற்றுகிறான் என்பதால், புத்திரன் என்று கூறுகிறார்கள். 

    ஜாதகத்தில் புத்திரபாவம் என்பது புத்திரன் – ஆண்பிள்ளை என்று குறிப்பிட்டாலும், பிருஹத் ஜாதகம் போன்ற நூல்களில் ஆண், பெண் இரண்டும் வேண்டும் என்கிறது. ஒரு ஜாதகத்தில் 5-ம் பாவமானது பூர்வ புண்ணியம் மற்றும் பிள்ளைச் செல்வம் போன்றவற்றைக் காட்டும் பாவமாகிறது. பூர்வ புண்ணியத்தையும் புத்திரபாக்கியத்தையும் ஒரே இடத்தில் வைத்த மகரிஷிகளின் மகிமை உயர்ந்தது. இத்தகைய சிறப்பு மிகுந்த மழலைச்செல்வம் இல்லாமல் வேதனையடைபவர்கள் குறைகள் முழுமையாக தீர்க்க சித்தர்கள் அருளாசியை பெற்று பலவித யாகங்கள் செய்துள்ளவர்தான் வாசியோகி ஓம் பரமானந்த பாபா.

    இதில் மிக முக்கியமானது சந்தான கோபால ஹோமம். அதாவது கிருஷ்ண பகவானின் குழந்தை வடிவமான சந்தான கோபாலனை திருப்திபடுத்தும் வகையில் நடத்தப்படுகிறது. இந்த ஹோமமானது குழந்தை செல்வத்தை வழங்கி உங்களை ஆசீர்வதிப்பதற்கும், எதிர்பாராத கருச்சிதைவுகளுக்கு ஆளாகதவாறு தாய்மார்களைப் பாதுகாப்பதற்கும், குழந்தையைப் பாதுகாப்பான முறையில் பெற்றெடுப்பதற்கும் நன்மை அளிக்கும் மாபெரும் ஹோமம் ஆகும்.

    இந்த ஹோமத்தை  கோயம்புத்தூரில் C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ) உள்ளது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் பிரமாண்டமாக நடத்தி குழந்தையின்மையால் வேதனைப்பட்டு வந்தவர்களின் குறைகள் தீர்க்க உதவியுள்ளார். இந்த ஹோம வழிபாட்டில், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும். இதனை பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்காக இந்த யாகம் நடத்தப்படுகிறது.

    அதேபோல் தன்னலம் கருதாது பலரது பசியை போக்கும் வகையில் தினமும் இங்கு அன்னதானம் நடக்கிறது. கோடி புண்ணியம் செய்த பலன் அன்னதானத்திற்கு உண்டு என்பதால் அதை தினமும் செய்து வருகிறார் வாசியோகி பரமானந்த பாபா. திருமணத் தடை, வேலை வாய்ப்பில் தடை, தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை, பொருளாதாரம் முன்னேற்றம் இல்லாத நிலை, குழந்தையின்மை பிரச்னை, குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் உயர்வு கிடைக்கிறது.

    யாகங்களின் பலன்கள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கிறது. அனைத்து செல்வங்களும் கிடைக்கிறது. இங்கு மக்கள் நலன் வேண்டியும், சித்தர்கள் அருள் பரிபூரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டியும் பிரதி அமாவாசை மேரு பூஜை, பௌர்ணமி அன்று ராஜராஜேஸ்வரி பூஜை நடக்கிறது. மேலும் ஆண்கள், பெண்களுக்கு வாசி யோக பயிற்சிகள், ஆழ்நிலை தியானங்கள் கற்றுத்தரப்படுகிறது. ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சித்தர்கள் வாக்கின் பிரகாரம் பரிகாரங்கள் செய்து வைக்கிறார். 

    சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம். மேலும் அன்னதானத்திற்கு உதவ நினைப்பவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

    தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.

  • நிகும்பலா யாகத்துடன் சொர்ண கால பைரவர் யாகம்.

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி அமாவாசையை முன்னிட்டு வருகிற 28.09.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை நிகும்பலா யாகத்துடன் சொர்ண கால பைரவர் யாகம் நடைபெற உள்ளது.

    அமாவாசையில் நிகும்பலா யாகம் என்பது பிரத்யங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகம் ஆகும். இந்த யாகத்தில் மிளகாய் ஆகுதியாக கொடுக்கப்படுகிறது. யாகத்தீயில் இடப்படும் மிளாகாய் காட்டம் ஏற்படுத்துவதில்லை என்பது தனி சிறப்பு.

    இந்த யாகத்தில் கலந்து கொண்டால், இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், எதிரிகள் தொல்லை நீங்கும், உத்தியோக உயர்வு கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு உண்டாகும், திருமணம், வியாபாரம் நடக்கும் என்பது நம்பிக்கையாகும்.

    ஹோமத் தீயினால் உருவாகும் புகையானது மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உலக நலன் கருதி ஒவ்வொரு அமாவாசையிலும் சூலினி ப்ரத்யங்கிராதேவியை வணங்கும் வகையில் 'நிகும்பலா யாகம்' என்று சொல்லப்படும் மிளகாய் வற்றல் யாகம் ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் நடைபெறுகிறது.

    மேலும் இதில் சென்னை திருவான்மியூர் குழுவினர் வழங்கும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ தேவி மஹாத்மியம், ஸ்ரீ நாராயணீயம் பாராயணங்கள் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

    இந்த யாகத்திற்கு  புஷ்பங்கள், பழங்கள், மிளகாய் வற்றல், புசணிக்காய், குங்குமம், மஞ்சள், எளுமிச்சம் பழம், உப்பு, மிளகு, மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

  • மன சஞ்சலம் தீர…எளிய பரிகாரம்!

    ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து அல்லது பகை கிரகத்துடன் இருந்தால், மனக்குழப்பம் அதிகம் இருக்கும். அவ்வாறு அமைந்தவர்கள், பௌர்ணமி அன்று சந்திரனை தரிசித்து வணங்கி, ‘ஓம் சந்திராய நமஹ’ என்று ஒன்பது முறை சொல்வது உகந்தது.

    மேலும், சந்திரனுக்குரிய பச்சரிசியில் சாதம் வடித்து, தானும் சாப்பிட்டு, தன்னைச் சார்ந்தவர்களும், தான் வளர்க்கும் விலங்குகளுக்கும் அளித்து சாப்பிட வைப்பது மிகவும் நல்லது. மேலும் இதனைத் திங்கட்கிழமை தோறும் செய்து வந்தால் மேன்மையை பெறலாம்.

    கடக ராசியில் பிறந்தவர்கள், இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள், திங்கட்கிழமை பிறந்தவர்கள் ஆகியோர் முத்து மாலை, மற்றும் முத்து மோதிரம் அணியலாம். இதனால், சந்திர பகவான் முழு அருளும், ஆசியும் கிடைக்கப்பெற்று மனசாந்தி கிடைக்கப்பெறும்!
     

  • ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி மற்றும் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவிக்கு108 கிலோ மஞ்சள் குங்குமம் அபிஷேகம்…. 

    தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி மற்றும் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவிக்கு 108 கிலோ மஞ்சள் குங்குமம் அபிஷேகம் நடைபெற்றது.

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலனுக்காகவும், இயற்கை வளத்திற்காகவும் தேய்பிற அஷ்டமியை முன்னிட்டு நேற்று 21.09.2019 சனிக்கிழமை மற்றும் இன்று 22.09.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ப்ரத்யங்கிரா, துர்கா, பைரவர் யாகங்களுடன் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி, ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி மற்றும் ஸ்ரீ காலபைரவருக்கு 108 கிலோ மஞ்சள்  குங்கும்ம் அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருஷ்டி தோஷங்கள் நிவர்த்தியாகவும், சத்ரு உபாதைகள் அகலவும், குடும்ப நலனுக்காகவும், இயற்கை வளத்திற்காகவும், உலக நலனுக்காகவும், விவச்சாயங்கள் செழிக்கவும், மேலும் பல்வேறு நன்மைகளுக்காக கூட்டு பிராத்தனை செய்தனர். மேலும் இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார், இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
     

  • புரட்டாசியில் கடைப்பிடிக்கும் விரதங்கள்…

    ஸித்தி விநாயக விரதம் – இது புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதத்தை உள்ள சுத்தியோடு கடைப்பிடித்தால் காரிய ஸித்தி உண்டாகும்.

    துர்வாஷ்டமி விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ள குடும்பம் செழிக்கும்.

    மகாலட்சுமி விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

    அமுக்தாபரண விரதம் – புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை(சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் சந்ததி செழிக்கும்.

    ஜேஷ்டா விரதம் – புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதமாகும்.

    சஷ்டி-லலிதா விரதம் – புரட்டாவி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அருளும்.

    கபிலா சஷ்டி விரதம் – புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகள் கிடைக்கும்.

    மகாளயபட்சம் – புரட்டாசி பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாள்களும் மாஹாளயபக்ஷம் ஆகும். இந்தக் காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாகும்.
     

  • வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்

    வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம்.

    நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.

    மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம், சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும். அதை குடிக்க கூடாது.

    காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும்.

    தற்கொலை எண்ணங்கள் மேலும் வாழ பிடிக்காதது போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி அணிய வேண்டியதில்லை.

    வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது.

    காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்.

    இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்.

    வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.

    காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்.

    சமையலறையும், படுக்கையரையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.

    துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்.
     

  • குலதெய்வத்தின் அருள் தரும் புரட்டாசி வழிபாடு…

    தமிழ் மாதங்களில் 6–வது மாதமாக புரட்டாசி வருகிறது. இது கன்னி ராசிக்குரிய மாதமாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது வழக்கம். ‘உப’ என்றால் ‘சமீபம்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் ‘வசிப்பது’ என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    புரட்டாசி மாதம் மகாளய பட்சம் வருகிறது. மகாளய பட்சத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுக் கிறோம். புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வேங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார். ஏழுமலையான் சீனிவாசன் என்ற பெயரில் பூமிக்கு வந்த கதை தெய்வாம்சம் மிக்கது.

    சனிக்கிழமை விரதம்
    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியனவற்றை சேகரித்து வைத்து, ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.

    ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து, மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். 

    அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனை வருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.

    இந்த புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். எந்த விரதமானாலும் பகலில் தூங்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாமிசத்தை விலக்கி பாவம் செய்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து உயிர்களிடத்தும் கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

  • திருமணத் தடைகள் நீக்கும் சுயம்வர கலா பார்வதி ஹோமம்

    திருமணத் தடையால் பெண்களும், ஆண்களும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றனர். பல குடும்பத்தினரும் தங்கள் வீட்டுப் பையனுக்கு மணமகள் தேடித் தேடிச் சலித்துப் போய் விடுகிறார்கள். இதேபோல் பெண் வீட்டினரும் மணமகன் சரியாக அமையாமல் தவிக்கின்றனர்.

    ஒன்று இருந்தால், இன்னொன்று அமையாமல் தொடர்ந்து திருமணத்தில் தடையாகிறது. ஒருவரது ஜாதக ரீதியாக ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் களத்திர தோஷம், சர்ப தோஷம், குரு பலன் இல்லை இதுபோன்ற காரணங்களால் திருமணம் தடை ஏற்படும்.

    ருது தோஷம் என்பது ஒரு பெண் வயதுக்கு வந்த நேரத்தை வைத்து ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருந்தால் திருமணம் செய்ய தாமதம் ஆகும். திருமண வயது வரும் பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உண்டு. 

    இந்த திருமணத் தடைகள் நீங்க சித்தர்களின் மலை என்று அழைக்கப்படும் சுருளி மலையில் ஹோமங்கள் நடத்தியவர்தான் வாசியோகி ஓம் பரமானந்த பாபா. இதில் பெண்களின் திருமணத் தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமமும்,  ஆண்களின் திருமணத் தடை நீங்க ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமமும் நடத்தி அதன் பலன்கள் கிடைக்க செய்துள்ளார்.

    சுருளிமலையில் செய்த யாகங்கள் அனைத்தையும் கோயம்புத்தூரில் C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ) உள்ளது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திலும் நடத்தி உள்ளார். இதனால் இங்கு வந்தாலே தடைகள் நீங்கி பலன் கிடைக்கிறது. திருமணத் தடைகள் விலகி திருமணம் நல்லபடியாக நடக்கிறது என்று பயன் அடைந்தவர்கள் பாராட்டுகின்றனர்.

    திருமணத் தடை மட்டுமின்றி வேலை வாய்ப்பில் தடை, தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை, பொருளாதாரம் முன்னேற்றம் இல்லாத நிலை, குழந்தையின்மை பிரச்னை, குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் உயர்வு கிடைக்கிறது. இங்கு மக்கள் நலன் வேண்டியும், சித்தர்கள் அருள் பரிபூரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டியும் பிரதி அமாவாசை மேரு பூஜை, பௌர்ணமி அன்று ராஜராஜேஸ்வரி பூஜை நடக்கிறது. மேலும் ஆண்கள், பெண்களுக்கு வாசி யோக பயிற்சிகள், ஆழ்நிலை தியானங்கள் கற்றுத்தரப்படுகிறது. ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சித்தர்கள் வாக்கின் பிரகாரம் பரிகாரங்கள் செய்து வைக்கிறார். 

    சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
    தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.