Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • விளக்கு ஏற்றும் முறை

    ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.
    இரு முகம் ஏற்றினால் – குடும்ப ஒற்றுமை கிட்டும்.
    முன்று முகம் ஏற்றினால்- புத்திரதோஷம் நீங்கும்.
    நான்கு முகம் ஏற்றினால் – பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும்.
    ஐந்து முகம் ஏற்றினால் – சகலநன்மையும், ஐஸ்வர்யம் பெருகும்.

    விளக்கேற்றும் திசை
    கிழக்கு – துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
    மேற்கு – கடன், தோஷம் நீங்கும்
    வடக்கு – திருமணத்தடை அகலும்
    தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)

    எண்ணெயின் பலன்
    தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
    நெய் – செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
    நல்லெண்ணெய் – ஆரோக்கியம் அதிகரிக்கும்
    தேங்காய் எண்ணெய் – வசீகரம் கூடும்
    இலுப்பை எண்ணெய் – சகல காரிய வெற்றி
    விளக்கெண்ணெய் – புகழ் தரும்
    ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ) – அம்மன் அருள்
    வேப்பெண்ணை – கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்
    ஆமணக்கு எண்ணை – அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது
    கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது.
    மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.

    எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்
    விநாயகர் – தேங்காய் எண்ணெய்
    மகாலட்சுமி – பசுநெய்
    குலதெய்வம் – வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
    பைரவர் – நல்லெண்ணெய்
    அம்மன் – விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய்
    பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் – நல்லெண்ணெய் திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள் திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்.

    திரிகளும்,பயன்களும்
    குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
    பருத்திப் பஞ்சு – குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
    வாழைத் தண்டின் நார் – முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
    தாமரைத்தண்டு நூல் – முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
    வெள்ளை எருக்கம்பட்டை – செல்வம் பெருகும்.
    புதிய மஞ்சள் துணி – நோய்கள் குணமாகும்.
    புதிய சிவப்பு வண்ண துணி – குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
    புதிய வெள்ளை துணி திரி – அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். (துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.)

  • வலம்புரிச்சங்கு பூஜையும், பலன்களும்..

    * வீட்டில் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் வலம்புரி சங்கானது, குபேரனது அருளை பெற்றுத் தருவதோடு, மகாலட்சுமியின் நித்திய வாசத்தையும் அருளக்கூடியது.

    * வலம்புரி சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்வது, சகல தோஷ நிவாரணம் ஆகும். வலம்புரி தீர்த்தம் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்தாலும் கடும் தோஷங்கள் விலகும்.

    * கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று இறைவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்படும். அப்போது 108 சங்கு அபிஷேக பூஜைக்கு நடுவில் வலம்புரிச்சங்கு உருவத்தில் குபேரன் எழுந்தருளுவதாக ஐதீகம்.

    * கண்களுக்கு புலப்படாத வாஸ்து தோஷம் இருக்கும் வீட்டில், துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில் வீடுகளில் தெளித்து வந்தால் நன்மை உண்டாகும்.

    * ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள், செவ்வாய் தோறும் வலம்புரி சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்து வந்தால் திருமண பாக்கியம் கைகூடும்.

    * கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வலம்புரி சங்குக்கு, பவுர்ணமி தோறும் குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பு. 16 எண்ணிக்கையில் வலம்புரி சங்கு கோலமிட்டு, நடுவில் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்வது நல்லது.

    * சுத்தமாகவும், கச்சிதமாகவும் பூஜிக்கப்படும் வலம்புரி சங்கு உள்ள வீட்டிற்கு, பில்லி சூனிய பாதிப்புகள் நெருங்காது.

    * வீட்டில் உள்ள பூஜை அறையில், சிறு தட்டில் பச்சரிசி, அதில் சங்கை வைத்து, பூ சூட்டி பொட்டு வைத்து வணங்கி வந்தால் உணவு பஞ்சம் இருக்காது.

  • திருப்பதியில் ஆகஸ்ட் மாத தரிசன டிக்கெட் ஒதுக்கீடு

    திருப்பதி ஏழுமலையானை விரைவாக தரிசிக்க விரைவு தரிசன டிக்கெட்டுகளின் ஆகஸ்ட் மாத ஒதுக்கீட்டை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் இந்த டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    தேவஸ்தானம் 90 நாள்களுக்கு முன் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.

    அதன்படி வரும் ஆகஸ்ட் மாத முன்பதிவிற்கான விரைவு தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்டது.
    ஆகஸ்ட் மாதம் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • சங்கடம் தீர சஷ்டியில் வேலனை வணங்குங்கள்

    முருகப்பெருமானுக்கு உரிய சஷ்டியில் விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவார்கள் பக்தர்கள். அதேபோல் செவ்வாயிலும் வெள்ளிக்கிழமையிலும் கந்த வழிபாடு கவலைகள் தீர்க்கும் மாமருந்து என்று போற்றுகின்றனர்.

    சஷ்டி நாளில் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். கந்தவேலனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். முடிந்தால், சர்க்கரைப் பொங்கலோ எலுமிச்சை சாதமோ நைவேத்தியம் செய்து, வேலவனை வழிபடுங்கள். முந்தைய வினைகளையெல்லாம் தீர்த்து வைப்பான்.

    சங்கடங்களையெல்லாம் காணடித்து, சந்தோஷத்தைப் பெருக்கி அருள்வான் சக்திகுமரன்!
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

  • தோஷம் விலக்கும் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள்!

    நவக்கிரகங்கள், தம்பதியுடன் காட்சி தருவதும் அவர்களை விளக்கேற்றி வழிபடுவதும் நமக்கு இன்னும் இன்னும் சக்தியைத் தரும். இந்த வழிபாடு தோஷங்கள் அனைத்தையும் போக்கி விடும்.

    எப்போதெல்லாம் ஆலயங்களுக்குச் செல்கிறோமோ, அப்போதெல்லாம் தவறாமல் நவக்கிரகங்களைச் சுற்றி வந்து பிரார்த்தனை செய்வது மிகவும் அவசியம். அதேபோல், நவக்கிரகங்களை தீபமேற்றி வணங்குவதும் வழிபடுவதும், பிரார்த்தனை செய்வதும் நம் தோஷம் நீக்கி, நம்மை சந்தோஷத்துடனும் நிம்மதியாகவும் வாழ வைக்கும் !

    பொதுவாக, நவக்கிரகங்கள் சேர்ந்து காட்சி தருவதே வழக்கம். சில ஆலயங்களில், சனீஸ்வரர் தனிச்சந்நிதியில் அருள்பாலிப்பார். இது காணக் கிடைக்காத ஒன்றாகவே சொல்வார்கள். நவக்கிரக ஸ்தலங்களில் அந்தந்த கிரகங்களுக்கு உரிய கோயிலில், தனிச்சந்தியில் கிரக பகவான்கள் எழுந்தருளிக் காட்சி தருவார்கள்.

    அதேபோல், நவக்கிரகங்கள் தம்பதி சமேதராக காட்சி தருவது வெகு அபூர்வம். சில ஆலயங்களில் மட்டுமே இப்படியான தரிசனம் கிடைக்கும். தம்பதியாக உள்ள நவக்கிரகங்களைச் சுற்றி வந்து, விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த புண்ணியமும் பலன்களும் தந்தருளும் என்பது உறுதி!

    திருச்சி உறையூரில் உள்ள குங்குமவல்லி அம்பாள் சமேத தான் தோன்றீஸ்வரர் கோயிலில் தம்பதி சமேதராக இருக்கும் நவக்கிரகங்களை தரிசிக்கலாம். நம் சந்ததியை ஓஹோவென சிறக்கச் செய்யும் நவக்கிரக வழிபாட்டை மறக்காமல் செய்யுங்கள். தம்பதியுடன் உள்ள நவக்கிரகங்களை மனதார வழிபட்டு, பிரார்த்தனை செய்யுங்கள். தோஷங்கள் விலகும். சந்தோஷம் பெருகும்!

  • திருப்பதியில் கங்கையம்மன் திருவிழா கோலாகலம்…..

    திருப்பதியில் கங்கையம்மன் திருவிழா பறைசாட்டும் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது.

    திருப்பதி நகரில் உள்ளது புகழ்பெற்ற தாத்தய்ய குண்டா கங்கையம்மன் கோயில். இந்த கோயிலில் பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத கடைசி நாளில் கங்கையம்மன் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா பறைசாட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, இக்கோயிலில் படிபூஜை நடத்தப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறு உள்ளது. இதையடுத்து, தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக, இன்று முதல் மே 14-ம் தேதி வரை தினமும் பக்தர்கள் பல்வேறு வேடங்களிட்டு அம்மனை தரிசிப்பர். பின்னர், 15-ம் தேதி, கங்கையம்மன் திருவிழா சிறப்பாக நடைபெறும். அன்றை தினம், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அம்மனுக்கு பட்டுப்புடவை, நகைகள், மஞ்சள், குங்குமம், வளையல் போன்றவை சீர்வரிசையாக வழங்கப்படும். இந்த நாளில், பக்தர்கள் அதிகாலை முதலே அம்மனுக்கு கூழ் வார்த்தும், படையல் படைத்தும் நேர்த்திக் கடன் செலுத்துவர். பின்னர் மறுநாள் அதிகாலையில், அம்மன் விஸ்வரூப தரிசனம் நடத்தப்படும். இந்தத் திருவிழாவை ஒட்டி, அம்மனை தரசிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • முருகனின் 16 வகை கோலங்கள்

    1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.

    2.கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.

    3. ஆறுமுக தேவசேனாபதி : இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.

    4. சுப்பிரமணியர் : இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.

    5. கஜவாகனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.

    6.சரவணபவர் : தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

    7. கார்த்திகேயர் : இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.

    8. குமாரசாமி : இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.

    9. சண்முகர் : இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.

    10. தாரகாரி : ஹதாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.

    11. சேனானி : இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.

    12. பிரம்மசாஸ்தா : இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.

    13. வள்ளிகல்யாணசுந்தரர் : இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.

    14. பாலசுவாமி : இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.

    15. சிரவுபஞ்சபேதனர் : இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.

    16. சிகிவாகனர் : மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.

  • தீபம் ஏற்றும் முறையும் பலனும்

    ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.

    எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

    கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

    கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு. வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமயலறை, துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.

    தீபம் ஏற்றும் நேரம் தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்). காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும்.

    முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.

  • வரதராஜ பெருமாள் கோயிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தவாரி

    நெல்லையில் இருக்கும் வரதராஜ பெருமாள் கோவிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி ஆற்றில் நேற்று தீர்த்தவாரி நடந்தது.
    மிகவும் பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலையில் பெருமாள், தாயார் வீதி உலா நடந்து வந்தது.
    10-ம் நாள் நிகழ்ச்சியாக தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பகல் 12.30 மணி அளவில் தீர்த்தவாரி கட்டிடத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
    வரதராஜ பெருமாள் கோவிலின் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த மண்டபம் சரியாக பராமரிக்கப்படாததால் நீண்ட காலமாக தீர்த்தவாரி நடைபெறாமல் இருந்தது.
    70 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நேற்று தீர்த்தவாரி நடந்தது. இரவு வெள்ளி பல்லக்கில் பெருமாள் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • முருகபெருமான் திருத்தல சுவாரஸ்யங்கள்

    அதிசய நாவல் மரம்
    சோலைமலை முருகன் கோவிலுக்கு ஸ்தல விருட்சமாக விளங்குவது நாவல் மரம். இந்த அதிசய நாவல் மரம் மிகவும் வரலாற்று சிறப்பு மிக்கது. ஔவைக்கு முருகன் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்ட அதிசய நாவல் மரம் இன்றும் இந்த கோவில் அருகிலேயே உள்ளது. இந்த நாவல் மரம் ஐப்பசி மாதம் பழம் பழுக்கும் தன்மை உள்ளது. மற்ற நாவல் மரங்கள் எல்லாம் ஆடி மாதம் பழுக்கும் தன்மை கொண்டது என்பார்கள்.

    உப்பு, புளி, காரம் இல்லாத நைவேத்தியம்!
    திருச்செந்தூரில் மூலவர் துறவுக் கோலத்தில் இருப்பதால் அவருக்குப் படைக்கப்படும் உணவில் உப்பு, புளி, காரம் சேர்க்கப்படுவதில்லை. பெரும்பாலும் சர்க்கரைப் பொங்கலே இடம் பெறுகிறது. ஆறுமுகப்பெருமான் இல்லறக் கோலத்தில் இருப்பதால் ஆறுமுக அர்ச்சனை முடிந்தபின் பால்பாயாசம், தேங்காய் சோறு, புளியோதரை, வெண்பொங்கல், சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம் ஆகிய ஆறுவகை நிவேதம் படைக்கப்படுகிறது.

    மூன்று முறை சூரசம்ஹாரம்
    முருகப்பெருமான் கோவில் கொண்டு உள்ள எல்லா புண்ணிய தலங்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் திருப்பரங்குன்றத்தில் அருள் ஆட்சி புரியும் சுப்பிரமணிய சுவாமிக்கு மட்டும் ஆண்டுக்கு ‘‘மூன்று’’ முறை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இங்கு ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவின் போதும், தைமாதம் தெப்பத்திருவிழாவின் போதும், பங்குனி மாதம் பெரு விழாவின் போதும் சூரசம்ஹார விழா நடைபெற்று வருகிறது. இந்தத் தலத்தின் மூலவரான முருகன் தேவசேனாபதிக்கு கீழே ஆடு, மயில், யானை, சேவல் ஆகிய 4 வாகனங்கள் இருப்பதைக் காணலாம்.

    கிளி வாகனத்தில் முருகப்பெருமான்!
    சிதம்பரம், இரத்தினகிரி, வேலூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், பிராணமலை, செட்டிகுளம் ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களில் யானை வாகனத்தில் முருகன் காட்சி தருகிறார். அதேபோல், திருப்போரூர் கோவிலில் வலம் வரும் போது ஆட்டு வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனத்துடன் கூடிய முருகனை தரிசிக்கலாம்.

    முருகன் கோயில் படிக்கட்டுகள்
    60 தமிழ் வருடங்களை நினைவு கூறுமுகமாக 60 படிகளை கொண்டது சுவாமி மலை. 365 நாட்களை நினைவு படுத்தும் விதமாக 365 படிகளை கொண்டது திருத்தணி.

    படி பாயசம்
    தென்காசி அருகே ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் படிபாயாசம் நிவேதனம் செய்வார்கள். 1 படி முதல் 12 படி வரையில் அரிசி பாயாசம் செய்து குழந்தைகளுக்கு வழங்குவர்.

    சுருட்டு நிவேதனம்
    விராலிமலையில் இரவு பூஜையின் போது முருகனுக்கு சுருட்டு நிவேதனம் செய்யப்படுகிறது. இங்கு அருளும் முருகனின் மூன்று முகங்களை நேரடியாகவும், மற்ற மூன்று முகங்களை கண்ணா டியிலும் தரிசிக்காலம்.

    சங்கு சக்கரத்துடன் முருகப்பெருமான்
    அரிசிக் கரைப்புதூர் முருகன் மகாவிஷ்ணுவைப் போல் சங்குக் கரங்களுடன் காட்சி தருகிறார். அதேபோல், இலஞ்சி திருக்கோயிலின் நுழைவு வாயிலில் பத்து தலைகளுடன் முருகன் அமர்ந்துள்ள திருக்காட்சியைக் காணலாம்.