Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • தக்கோலம் ஆலமரத்தின் அடி குருபகவான்

    கருவறை கோஷ்டத்தில் தனிக்கோயில் போன்ற அமைப்பிற்குள் குருபகவான் அருள்பாலிக்கிறார். நுணுக்கமான வேலைப்பாடமைந்த அழகிய திருவுரு.

    விழுதுகளோடு கூடிய ஆலமரத்தின் அடியில் குருபகவான் அமர்ந்திருக்கிறார். காற்றடித் தால் ஆல இலைகள் அசையுமோ எனும் அளவுக்கு நிஜ இலைகளைப் போன்றே தோற்றமளிக்கிறது. வழக்கமாக, தட்சிணா மூர்த்தியின் திருவுருவம் யோக நிலையில் இருக்கும். தமது ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருப்பார்.

    ஆனால், இங்கு அமர்ந்த நிலையில் தமது வலக் காலை சற்று வளைத்து கீழே ஊன்றிய நிலையிலும், இடது காலை மடக்கி பீடத்தின் மீதும் வைத்துள்ளார். வலது பின் கையில் அக்க மாலையுடன் அமர்ந்திருக்கும் இந்த அமைப்பை உத்கடி ஆசனம் என்கிறார்கள்.

    சீடர்களை ஆட்கொண்டருளும், கண்டிப் போடு வழிப்படுத்தும் தோற்றம் இது என்றும் விவரிக்கிறார்கள். சென்னை – பூவிருந்தவல்லியிலிருந்து பேரம்பாக்கம் வழியாகவும், அரக்கோணத்திலிருந்தும் இத்தலத்தை அடையலாம். 

  • சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனம் உத்ஸவம் கொடியேற்று விழா

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை ஆனி திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழாக்கள் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா 20 மற்றும் 21ஆம் தேதிகளில் தரிசனம் நடைபெறுகிறது. இதனையொட்டி செவ்வாய் காலை கோயிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்தக் கோயிலில் சித் சபை எதிரே உள்ள கொடிமரத்தில் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து, செவ்வாய்க்கிழமையான இன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் உற்சவ ஆச்சாரியார் து.என்.எஸ்.சந்திரசேகர தீட்சிதர் கொடியை ஏற்றி வைத்தார்.

    இந்த உற்ஸவம் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது. வருகிற 20-ம் தேதி (புதன்கிழமை) தேர்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.

    21-ம் தேதி சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

    22-ம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்ஸவம் முடிவடைகிறது. உற்ஸவ ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்களின் செயலர் ஜெ.ந.நடேஸ்வர தீட்சிதர், துணைச் செயலர் ஜி.பி.மகாதேவ தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர்.

  • திருப்பதி ஏழுமலையான் சிலையின் ரகசியங்கள்

    திருப்பதி ஏழுமலையான் சிலையின் மகிமைகள் பலருக்கும் தெரியாது. பல சுவாரசியங்கள் அடங்கிய திருப்பதி சிலையின் ரகசியங்களை பார்ப்போம்.

    * திருப்பதி ஏழுமலையான் சிலை 250 கோடி வருடம் வயதான “சிலாதோரணம்” என்ற அபூர்வ பாறையால் உருவானதாகும்.

    * திருமலை 3,000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம்.

    * 3,000 அடி உயரத்தில் உள்ள திருமலையில் அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செகிறார்கள் ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.

    * அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

    * பச்சைக்கற்பூரத்தை கருங்கல்லிலோ அதனால் ஆன சிலகளிலோ பூசினால் உடனே வெடித்துவெடும் ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு நாள் முழுவதும் பச்சை கற்பூரம் சாத்தினாலும் ஒன்றும் ஆவதில்லை.

    * எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச் சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை.

    * எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன.

  • கிருத்திகை விரதத்தின் பலன்கள்

    முருகனுக்கு உகந்த விரதங்களுள் கிருத்திகை விரதம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் பக்தர்கள் முருகனை விரதமிருந்து வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    3 விதமான கிருத்திகை விரதங்கள்
    ஆடி கிருத்திகை விரதமிருந்து முருகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் வேண்டுதல்கள் நிறைவேறும். ஆடிக்கிருத்திகை தினத்தன்று முருகன் இருக்கும் எல்லா தலங்களிலும் விசேஷம்தான்.

    பால்காவடிகளும் பன்னீர்காவடிகளும் ஆயிரக்கணக்கில் பவனிவர லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மேல் ஆலயங்களில் கூடும் தினம்.”திருத்தணி முருகனுக்கு அரோஹரா’ என்ற கோஷம் வானைப் பிளக்கும். வள்ளி தெய்வயானையுடன் அபிஷேக அலங்காரங்களுடன் முருகன் அழகனாக காட்சி தரும் நாள்.

    வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப்படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.

    ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.

    தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

    மனத் தூய்மைக்கும், மன ஒருமைக்கும் வழிசெய்யும் விரதங்களைக் கடைப்பிடிப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

  • செல்வ வளம் தரும் திருப்பூந்துருத்தி திருத்தலம்

    திருப்பூந்துருத்தி திருத்தலம் சிறப்பு மிக்க சிவாலயங்களில் ஒன்று. இங்கு புஷ்பவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் சவுந்தர்ய நாயகி. ஐந்து நிலைகளுடன் கிழக்கு பார்த்த ராஜகோபுரம் உள்ளது.
    இந்த ஆலயத்தில் ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் சங்கமித்த நிகழ்வு நடந்திருக்கிறது. ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் எப்படி சாத்தியம்.. அதற்கு ஒரு புராணக் கதை இருக்கிறது.

    ஒருமுறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக்கொண்டிருந்தனர். ‘ஆடி அமாவாசை அன்று, வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிர பரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும்; பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் இது யாரால் சாத்தியமாகும்’ என்ற ஏக்கத்துடன் அவர்களின் பேச்சு இருந்தது.

    அப்போது அங்கிருந்த காசிப முனிவர், ‘ஏன் முடியாது?!. நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்’ என்றார்.

    பின்னர் காசிப முனிவர், ஈசனை வேண்டி தவம் இருந்தார். பல சிவ தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார். அங்கும் ஈசனை வேண்டி தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய ஈசன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராக திருக்காட்சி கொடுத்தார்.

    மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். (அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது). காசிபர் அந்த புனித நீரில் நீராடி, ஈசனையும், அம்பாளையும் அந்த நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன் காரணமாக அவருக்கு ஈசனுடன் ஐக்கியமாகும் முக்திநிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது. காசிப தீர்த்தம் இத்தலத்தில் சோமாஸ்கந்த மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில், தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது.

    இந்தத் தீர்த்தத்தின் அருகில் ஆதி விநாயகர், சம்பந்தர், அப்பர், பரவை மற்றும் சங்கிலி நாச்சியார் சமேத சுந்தரர் ஆகியோர் உள்ளனர். இந்த ஆலயத்தில் அமாவாசை தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. அதிலும் ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்; செல்வ வளம் பெருகும்; தடைகள் அகலும்; தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் காசிப தீர்த்தத்தில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழு பலனும் கிடைக்கும்.

    மேலும் இத்தலத்தை ஆடி அமாவாசை அன்று 18 முறை கிரிவலமாக வந்து ஈசனையும், உமையாளையும் வழிபட்டால், பித்ரு சாபங்கள் தீர்வதுடன், குல தெய்வத்தின் அருளும் பரி பூரணமாய் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

    தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பூந்துருத்தி திருத்தலம்.

  • பிரதோஷ காலத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    பிரதோஷ காலத்தில் உங்கள் ஊர் சிவாலயங்களில் உள்ள நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியைப் படியுங்கள். உங்கள் துன்பங்கள் எல்லாம் பறந்தோடும்.

    பிரதோஷ காலத்தில் நந்திதேவர் முன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
    1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி
    2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி
    3. ஓம் அனுகூலனே போற்றி
    4. ஓம் அருந்துணையே போற்றி
    5. ஓம் அண்ணலே போற்றி
    6. ஓம் அருள்வடிவே போற்றி
    7. ஓம் அனுமன் ஆனவனே போற்றி
    8. ஓம் அரக்கரை அழித்தவனே போற்றி
    9. ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி
    10. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி
    11. ஓம் ஆலயம் முன் இருப்பவனே போற்றி
    12. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
    13. ஓம் ஆதரிப்பவனே போற்றி
    14. ஓம் ஆரூரில் நிற்பவனே போற்றி
    15. ஓம் இனியவனே போற்றி
    16. ஓம் இணையிலானே போற்றி
    17. ஓம் இடப உருவனே போற்றி
    18. ஓம் இமயத்திருப்பவனேபோற்றி
    19. ஓம் இன்னல் தீர்ப்பவனே போற்றி
    20. ஓம் இசையில் மகிழ்பவனே போற்றி
    21. ஓம் ஈர்ப்பவனே போற்றி
    22. ஓம் ஈடில்லாதவனே போற்றி
    23. ஓம் உத்தமனே போற்றி
    24. ஓம் உபகாரனே போற்றி
    25. ஓம் உள்ளம் கவர்வோனே போற்றி
    26. ஓம் உட்கார்ந்திருப்போனே போற்றி
    27. ஓம் எளியவனே போற்றி
    28. ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
    29. ஓம் ஐயனே போற்றி
    30. ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி
    31. ஓம் கனிவுருவே போற்றி
    32. ஓம் களிப்புருவே போற்றி
    33. ஓம் களங்கமிலானே போற்றி
    34. ஓம் கர்வம் குலைப்போனே போற்றி
    35. ஓம் கலைக்களஞ்சியமே போற்றி
    36. ஓம் கயிலைக் காவலனே போற்றி
    37. ஓம் கம்பீர உருவனே போற்றி
    38. ஓம் குணநிதியே போற்றி
    39. ஓம் குருபரனே போற்றி
    40. ஓம் குறை களைவோனே போற்றி
    41. ஓம் கூத்தனோடு உறைபவனே போற்றி
    42. ஓம் கோயில் நாயகனே போற்றி
    43. ஓம் சிவபுரத்தனே போற்றி
    44. ஓம் சிவதூதனே போற்றி
    45. ஓம் சிவனடியானே போற்றி
    46. ஓம் சிவகணத்தலைவனே போற்றி
    47. ஓம் சிவஸ்வரூபனே போற்றி
    48. ஓம் சிவஞான போதகனே போற்றி
    49. ஓம் சிலாதர் மைந்தனே போற்றி
    50. ஓம் சிரஞ்சீவியே போற்றி
    51. ஓம் சுருதிகளைக் காத்தவனே போற்றி
    52. ஓம் சைவம் வளர்ப்பவனே போற்றி
    53. ஓம் சொக்கன் சேவகனே போற்றி
    54. ஒம் சோகம் தீர்ப்பவனே போற்றி
    55. ஓம் ஞானியே போற்றி
    56. ஓம் ஞானோபதேசிகனே போற்றி
    57. ஓம் தருமவிடையே போற்றி
    58. ஓம் தயாபரனே போற்றி
    59. ஓம் தளையறுப்பவனே போற்றி
    60. ஓம் தட்சனை தண்டித்தவனே போற்றி
    61. ஓம் தவசீலனே போற்றி
    62. ஓம் தஞ்சம் அளிப்பவனே போற்றி
    63. ஓம் தீதையழிப்பவனே போற்றி
    64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி
    65. ஓம் தூயோர் மனத்தமர்ந்தாய் போற்றி
    66. ஓம் நந்தியே போற்றி
    67. ஓம் நலமளிப்பவனே போற்றி
    68. ஓம் நமனை வென்றவனே போற்றி
    69. ஓம் நந்தனுக்கு அருளியவனே போற்றி
    70. ஓம் நாடப்படுபவனே போற்றி
    71. ஓம் நாட்டியப்பிரியனே போற்றி
    72. ஓம் நாதனே போற்றி
    73. ஓம் நிமலனே போற்றி
    74. ஓம் நீறணிந்தவனே போற்றி
    75. ஓம் நீதி காப்பவனே போற்றி
    76. ஓம் பராக்கிரமனே போற்றி
    77. ஓம் பக்தியில் ஆழ்ந்தவனே போற்றி
    78. ஓம் பசவேசன் ஆனவனே போற்றி
    79. ஓம் பகை அழிப்பவனே போற்றி
    80. ஓம் பதமளிப்பவனே போற்றி
    81. ஓம் பர்வதமானவனே போற்றி
    82. ஓம் பிரம்பேந்தியவனே போற்றி
    83. ஓம் புண்ணியனே போற்றி
    84. ஓம் புரு÷ஷாத்தமனே போற்றி
    85. ஓம் பெரியவனே போற்றி
    86. ஓம் பெருமையனே போற்றி
    87. ஓம் மஞ்சனே போற்றி
    88. ஓம் மலநாசகனே போற்றி
    89. ஓம் மகிழ்வளிப்பவனே போற்றி
    90. ஓம் மறையே கால்களானவனே போற்றி
    91. ஓம் மால்விடையே போற்றி
    92. ஓம் மகாதேவனே போற்றி
    93. ஓம் முனியவனே போற்றி
    94. ஓம் முற்றும் உணர்ந்தவனே போற்றி
    95. ஓம் யோகியே போற்றி
    96. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி
    97. ஓம் வள்ளலே போற்றி
    98. ஓம் வல்லாளா போற்றி
    99. ஓம் வித்தகனே போற்றி
    100. ஓம் விண்ணோர் திலகமே போற்றி
    101. ஓம் வீர உருவமே போற்றி
    102. ஓம் வீரபத்திரனே போற்றி
    103. ஓம் வெண்ணிற மேனியனே போற்றி
    104. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
    105. ஓம் வீரசைவ நாயகனே போற்றி
    106. ஓம் ஸ்ரீ சைல நாதனே போற்றி
    107. ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி
    108. ஓம் நந்திகேசுவரனே போற்றி போற்றி

  • திருமணதடை நீக்கும் பிரதோஷ விரதம்

    பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி முதல் 6 மணி வரையான காலமாகும்.

    காலையில் எழுந்து நீராடிவிட்டு,சிவன் படத்திற்கு அகல் விளக்கு ஏற்றவேண்டும்.சமயலறையில் இருக்கும் அடுப்பில் அரிசி மாவில் கோலம் இடவேண்டும்.காலையில் இருந்து உணவை தவிர்க்கவேண்டும்.பால் உணவும்(டீ,காபி) சாப்பிடகூடாது.பழங்கள்,இளநீர் சாப்பிடலாம்.சைவ உணவுகளை சமைத்துவிட்டு மாலையில்அருகில் இருக்கும் சிவ தலத்தில் நந்திதேவரையும்,சிவனையும் வழிபடவேண்டும்.

    நம் இல்லத்தில் சாமி படங்களுக்கு சாம்பிராணி போட்டுவிட்டு,மூன்று தலைவாழை இலையில் உணவு பறிமாறி,சிறிது உணவை காகத்திற்கு வைத்துவிட்டு,இரு இலை உணவை இல்லாத்தாளும்,இல்லரசனும் சாப்பிடவேண்டும்,ஒரு இலை உணவை ஏழைகளுக்கோ,சந்நியாசிகளுக்கோ கொடுக்கலாம். இந்த விரதம் கடைபிடிப்பதால் திருமணதடை அகலும்,குழந்தை பேறு கிடைக்கும்.சகல செல்வங்களுடன் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

    அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி முதல் 6 மணி வரையான காலமாகும்.

    காலையில் எழுந்து நீராடிவிட்டு,சிவன் படத்திற்கு அகல் விளக்கு ஏற்றவேண்டும்.சமயலறையில் இருக்கும் அடுப்பில் அரிசி மாவில் கோலம் இடவேண்டும்.காலையில் இருந்து உணவை தவிர்க்கவேண்டும்.பால் உணவும்(டீ,காபி) சாப்பிடகூடாது.பழங்கள்,இளநீர் சாப்பிடலாம்.சைவ உணவுகளை சமைத்துவிட்டு மாலையில்அருகில் இருக்கும் சிவ தலத்தில் நந்திதேவரையும்,சிவனையும் வழிபடவேண்டும்.

    நம் இல்லத்தில் சாமி படங்களுக்கு சாம்பிராணி போட்டுவிட்டு,மூன்று தலைவாழை இலையில் உணவு பறிமாறி,சிறிது உணவை காகத்திற்கு வைத்துவிட்டு,இரு இலை உணவை இல்லாத்தாளும்,இல்லரசனும் சாப்பிடவேண்டும்,ஒரு இலை உணவை ஏழைகளுக்கோ,சந்நியாசிகளுக்கோ கொடுக்கலாம்.

    இந்த விரதம் கடைபிடிப்பதால் திருமணதடை அகலும், குழந்தை பேறு கிடைக்கும். சகல செல்வங்களுடன் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

  • திருப்பதி காணிக்கை தலைமுடி ரூ.10 கோடியே 48 லட்சத்துக்கு ஏலம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.10 கோடியே 48 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பலர் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    பக்தர்களின் காணிக்கை தலைமுடி, வாகனங்கள் மூலம் திருப்பதிக்குக் கொண்டு சென்று, அங்கு சுத்தம் செய்து, நீளம் மற்றும் நிறத்தின் அடிப்படையில் தரம் பிரித்து, ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று இ.டெண்டர் மூலமாக ஏலம் விடப்படுகிறது.

    அதன்படி பக்தர்களின் காணிக்கை தலைமுடி ஏலம் விடப்பட்டது. மொத்தம் 76 ஆயிரத்து 700 கிலோ எடையிலான தலைமுடி ஏலத்தில் வைக்கப்பட்டது. அதில் 8 ஆயிரத்து 200 கிலோ எடையிலான தலைமுடி விற்பனையானது. அதன் மூலம் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.10 கோடியே 48 லட்சம் வருமானம் கிடைத்ததாக திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.

  • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஜூன் 14-ந்தேதி திறப்பு

    ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஜூன் 14-ந் தேதி திறக்கப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை நாட்கள் மட்டுமின்றி ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி அதற்கு முந்தைய நாள் மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி மனு நம்பூதிரி முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் நெய் அபிஷேகம் நடைபெறும். இந்த நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகமும் நடைபெறுகிறது. ஆனி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுவதையொட்டி, தரிசனத்திற்காக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்துள்ளது. அத்துடன் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பத்தினம்திட்டை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க கேரள அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

  • வேதங்களே ஈசனை வணங்கிய தலம்

    வேதங்களே ஈசனை வணங்கிய தலம் வேதாரண்யம். இக்கோயிலின் பிராகாரத் தில் மிகப்பெரிய சரஸ்வதி வீற்றிருக்கிறாள். கரங்களில் வீணையில்லை; மாறாக சுவடிகள் உண்டு. இத்தலத்து நாயகியான உமையம் மையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதால், தான் வீணை யில்லாது அமர்ந்திருக்கிறாள். அதனாலேயே இத்தலத்து அம்பாளின் திருப்பெயர் யாழைப் பழித்த மொழியம்மை.

    ஸ்ரீராமர், ஸ்ரீபிரம்மா, விஸ்வாமித்திரர், அகத்தியர் முதலானோர் வழிபட்டு வரம் பெற்ற திருத்தலம், வேதாரண்யம். ஸ்ரீசரஸ்வதிதேவி வீணையின்றிக் காட்சி தரும் ஆலயம். ஸ்ரீநடராஜ பெருமானின் 16 சபைகளில் இந்தத் தலமும் ஒன்று. சப்தவிடங்கத் தலங்களில், இந்த ஆலயத்தை புவனவிடங்கத் தலம் என்று போற்றுவார்கள்.

    அவ்வளவுதானா? திரிசங்கு சொர்க்கத்தைப் பெற்ற தலம். சேர, சோழ, பாண்டியர்களும் வழிபட்ட பூமி. புனித நதியாம் கங்கை, இங்கே உள்ள மணிகர்ணிகையில் நீராடி இன்னும் புனிதம் பெற்ற தலம். தேவார மூவரும் பாடிய ஆலயம் எனப் பல பெருமைகள் கொண்டது வேதாரண்யம்!

    இத்தனைப் பெருமைகளுக்கும் சிகரம் வைத்தது போல், வேதங்கள் நான்கும் ஆரண்யங்களாக, அதாவது வனங்களாக, காடுகளாக இருந்து சிவ வழிபாடு செய்த ஒப்பற்ற தலம் என்பதால், வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் இந்தத் தலத்துக்குப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!

    வேதாரண்யம் எனும் புண்ணியத் தலத்துக்கு இன்னொரு பெருமையும் உண்டு. கோயில் சந்நிதியில் உள்ள தீபத்தை, இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாக விளக்கில் ஓடி, அறியாமல் தூண்டியதாலேயே ஒரு எலி, மறுபிறப்பில் மூவுலகையே ஆளும் மகாபலிச் சக்கரவர்த்தியான தலமும் இதுவே!

    நாகப்பட்டினத்திலிருந்து 45 கி.மீ., திருத்துறைப் பூண்டியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.