Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ராமேஸ்வரம் கோயிலில் புதிய தீர்த்தங்கள்

    ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தீர்த்தங்கள் இடமாற்றம் செய்ய ஆறு புதிய தீர்த்த கிணறுகள் ஆகஸ்ட் மாதத்தில் பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.

    ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோயிலுக்குள் மகாலெட்சுமி, சாவித்திரி, காயத்தி, சரஸ்வதி, சங்கு, சக்கரம் என ஆறு தீர்த்தங்கள் குறுகிய பாதையில் உள்ளதால் பக்தர்கள் நீராடுவதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

    இக்கூட்ட நெரிலை தவிர்க்க 6 தீர்த்த கிணறுகளை மூடிவிட்டு இதற்கு பதிலாக கோயில் 2-ம் பிரகாரம் வடக்கில் ரூ.29 லட்சம் செலவில் கடந்தாண்டு 28-ல் பூமி பூஜையுடன் கிணறு தோண்டும் பணி துவங்கியது.

    தற்போது தீர்த்த கிணறுகள் கட்டுமான பணி நிறைவடைந்துள்ளது. இதனைப் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆய்வு செய்த பின் ஆகஸ்ட்டில் பிரதிஷ்டை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • தண்ணீரில் மூழ்கியிருக்கும் குகைக் கோயில்

    300 அடி நீளமுள்ள ஒரு மலைக் குகையில் உள்ள கோயிலைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்படி ஒரு கோயில், கர்நாடகாவில் உள்ளது. அந்தக் கோயிலின் பெயர் ஜர்னி நரசிம்மர் குகைக் கோயில். இந்தக் கோயில் மார்பளவு தண்ணீரில் சூழ்ந்திருப்பது இன்னொரு சிறப்பு.
    கர்நாடகாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ளது பிதர் நகரம். இந்த நகரிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்தக் கோயில். மனிசூல என்ற சிறிய மலைத்தொடரில் ஜர்னி நரசிம்மர் குகைக் கோயில் அமைந்திருக்கிறது. குன்றுகள், மலைகள் மீது அமைந்திருக்கும் மற்ற கோயில்களுக்குச் செல்வதைப் போல இந்தக் கோயிலுக்கு சென்றுவிட முடியாது.

    300 அடி நீளமுள்ள குகையைத் தாண்டி சென்றால்தான் நரசிம்மரை வழிபட முடியும். இது வெறும் குகை மட்டுமல்ல, எப்பொதும் நீரால் சூழந்திருக்கும் குகை. கோடை காலத்தில்கூட 4 அடி முதல் 5 அடி வரை குகையில் நீர் நிறைந்திருக்கும். குகைக்குள் சென்றால், மார்பளவு முதல் கழுத்துவரை தண்ணீர் இருக்கும். தண்ணீரில் நடந்தபடியே சென்றால்தான், கோயிலுக்கு செல்ல முடியும்.

    குகையின் இறுதியில் நரசிம்மரும் சிவலிங்கமும் பக்தர்களுக்குக் காட்சித் தருகிறார்கள். நரசிம்மரும் மார்பளவு தண்ணீரில் மூழ்கிதான் காட்சியளிக்கிறார். இங்கே நரசிம்மர் சுயம்புவாகத் தோன்றியதாக தல புராணம் கூறுகிறது. நரசிம்ம பெருமான் இரண்யகசிபுவை பிரகலாதனுக்காக வதம் செய்தபின்னர் ஜலாசுரன் என்ற அசுரனை இந்தக் குகையில் வதம் செய்தார் என்றும் இறுதியில் அசுரன் நீராக மாறி நரசிம்மரின் பாதத்தில் சரணடைந்ததாகவும் தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இந்தக் குகைக் கோயிலில் குறிப்பிடும்படியான இன்னொரு விஷயம் என்னவென்றால், குகையில் உள்ள நீர் எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, இந்தத் தண்ணீரை அதிசய நீராகப் பார்க்கிறார்கள். குகையில் நிற்கும் தண்ணீரில் பல மூலிகைகள் கலந்திருப்பதால், இதில் நடத்து சென்று நரசிம்மரை வழிப்பட்டால் பலவிதமான நோய்கள் குணமாகும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதனாலேயே இந்தக் குகைக் கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணம் உள்ளது.
    சற்று கடினமான பாதைதான் இது. ஆனால், கஷ்டப்பட்டு பாதையைக் கடந்து சென்றால், ஜர்னி நரசிம்மரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்தக் குகைக் கோயிலுக்கு சென்றுவர ஏதுவாக குகையின் மேற்பரப்பில் விளக்குகளைகளையும் கைப்பிடிகளையும் பொருத்தியுள்ளனர்.

  • அதிசயங்கள் நிறைந்த விருபாட்சர் கோயில்

    இந்தியாவில் பல முக்கிய திருத்தலங்களில் பலவிதமான அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில், நிழல்படாத கோயில் கோபுரத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால், இந்தத் திருக்கோயிலின் கோபுர நிழலானது தலைகீழாக விழுகின்றதாம்… என்னே ஆச்சரியம்! விடை தெரியாத மர்மமாகத் தான் உள்ளது.

    கர்நாடக மாநிலத்தின், பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனுமிடத்தில் தான் உள்ளது இந்தப் பிரம்மாண்டமான விருபாட்சர் கோயில். விஜயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில், பெங்களூரிலிருந்து 350 கி.மீ., தொலைவில் உள்ள இக்கோயில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது.

    விருபாட்சருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகம். ஆனால், கர்ப்பக்கிரகத்தில் உள்ள சிவன் சிலையோ 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அதனால், இந்தக் கோயில் கட்டி எழுப்பிய பிறகு ஆண்ட மன்னர்கள் கோயிலை இன்னும் பிரம்மாண்டப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    ஏழாம் நூற்றாண்டில் இருந்தே ஹம்பி நகரத்தில் பல படையெடுப்புகள் நடத்தப்பட்டதால் பல வரலாற்றுப் பொக்கிஷங்கள் காணாமல் போய்விட்டதாம். இந்தக் கோயில் பல ஆண்டுகளாக விஜயநகர பேரரசால் பராமரிக்கப்பட்டதாம். இந்தியாவின் பழமையான கோயிலும் இதுதான்.

     கோயிலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கோபுரம் ரங்க மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இது 160 அடி உயரத்தைக் கொண்டது. 1565-ல் இந்த நகரம் முழுவதும் அழிந்தபோது கூட, இந்தக் கோயில் அழியாமல் இருந்ததோடு, கோயிலில் நடைபெறும் வழிபாடுகளும், ஆராதனைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

    ரங்க மண்டபத்தைச் சுற்றி சிறு சிறு கோயில்கள், தூண் மண்டபங்கள் என அனைத்து அம்சங்களும் அழகாக எழுப்பப்பட்டுள்ளது. கோயிலின் மத்தியில் இருக்கும் ரங்க மண்டபத்தின் கோபுர நிழலான ஒரு அறையில் தலைகீழாக தெரிகிறது. இதுதான் இந்தக் கோயிலின் உச்சக்கட்ட சிறப்பு. இதற்கான அறிவியல் ஆராய்ச்சிகள் பலகாலமாக நடப்பட்டு ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டது. கோயிலின் கோபுரத்திற்கும் நிழல் விழும் தூண் மண்டப அறைக்கும் இடையே ஒரு துவாரம் இருப்பதால் அந்தத் துவாரம் வழியாக வரும் பிம்பம் தலைகீழான பிரதிபலிப்பை தருகிறது. இப்படியொரு விளக்கம் ஒரு சில அறிஞர்களால் கொடுக்கப்பட்டாலும், அந்தத் துவாரம் கோபுரத்தின் பிம்பம் செல்லும் வழியில் இல்லை என்று வேறுசில அறிஞர்களால் சொல்லப்பட்டது.

    அதனால், கோபுரத்தின் நிழலானது தலைகீழாக விழுவதற்கான காரணம் என்ன என்பது விடை தெரியாத மர்மமாகத்தான் உள்ளது. இந்தியாவின் மர்மமான கோயிகளில் ஒன்றான இந்த விருபாட்சர் கோயிலின் கோபுர நிழல் தலைகீழாக விழுவதைப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தக் கோயிலில் குவிந்து வருகின்றனர். அதோடு, கோயிலின் வடிவமைப்பு ராமாயணம், மகாபாரதத்தைச் சித்தரிக்கும் சிற்பங்கள் கல்வெட்டுக்கள் கோயிலின் கலைநயத்தை பார்த்து வியப்புடன் செல்கின்றனர். இந்தக் கோயில் இந்திய கலாசார பண்பாட்டுக்கு எடுக்காட்டு என யுனெஸ்கோவால் புகழாரம் சூட்டப்பட்டது.

    பல இடிபாடுகளுக்குக்கிடையே சிக்கி தற்போது அழகாகக் காட்சியளித்து வரும் இந்த விருபாட்சர் கோயிலில் டிசம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், வருடாந்திர ரத திருவிழா பிப்ரவரி மாதத்தில் இங்குச் சிறப்பாக நடத்தப்படுகிறது.

  • ஆண்டாள் கோயிலில் திருஆனி சுவாதி உற்சவ விழா

    திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருஆனி சுவாதி உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று முதல் வரும் 25ம் தேதி வரை பல்வேறு அலங்காரங்களில் பெரியாழ்வார் காட்சி அளிப்பார். மேலும், வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறும்.

    ஆண்டுதோறும் ஜூன் மாதம் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வாருக்கு திருஆனி சுவாதி உற்சவ விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு திருஆனி சுவாதி உற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, கொடியேற்ற விழாவை முன்னிட்டு ‘கொடிபட்டம்’ மாடவீதிகளின் வழியாக மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. பின்னர் கொடிமரம் அருகே கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி நாகராஜ் மற்றும் கோயில் ஊழியர்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பெரியாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

  • திருச்சானூரில் தெப்போற்சவ விழா பணிகள் தீவிரம்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் ஜூன் 23-ஆம் தேதி முதல் வருடாந்திர தெப்போற்சவம் தொடங்க உள்ளது. அதற்கான சுவரொட்டியை தேவஸ்தானம் புதன்கிழமை வெளியிட்டது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, வரும் ஜூன் 23 முதல் 27-ஆம் தேதி வரை திருச்சானூரில் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற உள்ளது. அதன்படி தொடர்ந்து 5 நாள்கள் பத்மாவதி தாயார் கோயிலில் தெப்போற்சவம் நடைபெற உள்ளது. அதற்கான சுவரொட்டி மற்றும் கையடக்கப் பிரதிகளை தேவஸ்தான அதிகாரிகள் புதன்கிழமை வெளியிட்டனர்.

    தெப்போற்சவ நாள்களில் தினந்தோறும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரை திருச்சானூரில் உள்ள திருக்குளத்தில் ஏற்படுத்தப்படும் தெப்பத்தில் உற்சவ மூர்த்திகள் வலம் வர உள்ளனர். மேலும் ஜூன் 26-ஆம் தேதி பத்மாவதி தாயார் யானை வாகனத்திலும், 27-ஆம் தேதி கருட வாகனத்திலும் மாடவீதியில் வலம் வர உள்ளனர். அதற்காக திருச்சானூரில் உள்ள பத்மசரோவரம் திருக்குளத்தில் உள்ள பழைய நீர் அகற்றப்பட்டு, திருக்குளத்தை சுத்தம் செய்து, புதிய நீர் நிரப்பும் பணிகள் தொடங்கி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • முருகன் 108 போற்றி…

    1. ஓம் ஆறுமுகனே போற்றி
    2. ஓம் ஆண்டியே போற்றி
    3. ஓம் அரன்மகனே போற்றி
    4. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி
    5. ஓம் அழகா போற்றி
    6. ஓம் அபயா போற்றி
    7. ஓம் ஆதிமூலமே போற்றி
    8. ஓம் ஆவினன் குடியோய் போற்றி
    9. ஓம் இறைவனே போற்றி
    10. ஓம் இளையவனே போற்றி
    11. ஓம் இடும்பனை வென்றவா போற்றி
    12. ஓம் இடர் களைவோனே போற்றி
    13. ஓம் ஈசன் மைந்தா போற்றி
    14. ஓம் ஈராறு கண்ணனே போற்றி
    15. ஓம் உமையவள் மகனே போற்றி
    16. ஓம் உலக நாயகனே போற்றி
    17. ஓம் ஐயனே போற்றி
    88. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
    19. ஓம் ஐயப்பன் தம்பியே போற்றி
    20. ஓம் ஒப்பிலாதவனே போற்றி
    21. ஓம் ஒங்காரனே போற்றி
    22. ஓம் ஓதுவார்க்கினியவனே போற்றி
    23. ஓம் அவ்வைக்கு அருளியவனே போற்றி
    24. ஓம் கருணாகரரே போற்றி
    25. ஓம் கதிர்வேலவனே போற்றி
    26. ஓம் கந்தனே போற்றி
    27. ஓம் கடம்பனே போற்றி
    28. ஓம் கவசப்பிரியனே போற்றி
    29. ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
    30. ஓம் கிரிராஜனே போற்றி
    31. ஓம் கிருபாநிதியே போற்றி
    32. ஓம் குகனே போற்றி
    33. ஓம் குமரனே போற்றி
    34. ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
    35. ஓம் குறத்தி நாதனே போற்றி
    36. ஓம் குணக்கடலே போற்றி
    37. ஓம் குருபரனே போற்றி
    38. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
    39. ஓம் சஷ்டி நாயகனே போற்றி
    40. ஓம் சரவணபவனே போற்றி
    41. ஓம் சரணாகதியே போற்றி
    42. ஓம் சத்ரு சங்காரனே போற்றி
    43. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
    44. ஓம் சிக்கல்பதியே போற்றி
    45. ஓம் சிங்காரனே போற்றி
    46. ஓம் சுப்பிரமணியனே போற்றி
    47. ஓம் சரபூபதியே போற்றி
    48. ஓம் சுந்தரனே போற்றி
    49. ஓம் சுகுமாரனே போற்றி
    50. ஓம் சுவாமிநாதனே போற்றி
    51. ஓம் சுகம் தருபவனே போற்றி
    52. ஓம் சூழ் ஒளியே போற்றி
    53. ஓம் சூரசம்ஹாரனே போற்றி
    54. ஓம் செல்வனே போற்றி
    55. ஓம் செந்தூர் காவலனே போற்றி
    56. ஓம் சேவல் கொடியோனே போற்றி
    57. ஓம் சேவகனே போற்றி
    58. ஓம் சேனாபதியே போற்றி
    59. ஓம் சேனைத்தலைவனே போற்றி
    60. ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி
    61. ஓம் சோலையப்பனே போற்றி
    62. ஓம் ஞானியே போற்றி
    63. ஓம் ஞாயிறே போற்றி
    64. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
    65. ஓம் ஞான உபதேசியே போற்றி
    66. ஓம் தணிகாசலனே போற்றி
    67. ஓம் தயாபரனே போற்றி
    68. ஓம் தண்டாயுதாபாணியே போற்றி
    69. ஓம் தகப்பன் சுவாமியே போற்றி
    70. ஓம் திருவே போற்றி
    71. ஓம் திங்களே போற்றி
    72. ஓம் திருவருளே போற்றி
    73. ஓம் திருமலை நாதனே போற்றி
    74. ஓம் தினைப்புனம் புகுந்தோய் போற்றி
    75. ஓம் துணைவா போற்றி
    76. ஓம் துரந்தரா போற்றி
    77. ஓம் தென்பரங்குன்றனே போற்றி
    78. ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
    79. ஓம் தேவாதி தேவனே போற்றி
    80. ஓம் தேவை அருள்வாய் போற்றி
    81. ஓம் தேரேறி வருவோய் போற்றி
    82. ஓம் தேசத் தெய்வமே போற்றி
    83. ஓம் நாதனே போற்றி
    84. ஓம் நிலமனே போற்றி
    85. ஓம் நீறணிந்தவனே போற்றி
    86. ஓம் பரபிரம்மமே போற்றி
    87. ஓம் பழனியாண்டவனே போற்றி
    88. ஓம் பாலகுமரனே போற்றி
    89. ஓம் பன்னிரு கையனே போற்றி
    90. ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
    91. ஓம் பிரணவமே போற்றி
    92. ஓம் போகர் நாதனே போற்றி
    93. ஓம் போற்றப்படுவோனே போற்றி
    94. ஓம் மறைநாயகனே போற்றி
    95. ஓம் மயில் வாகனனே போற்றி
    96. ஓம் மகா சேனனே போற்றி
    97. ஓம் மருத மலையானே போற்றி
    98. ஓம் மால் மருகனே போற்றி
    99. ஓம் மாவித்தையே போற்றி
    100. ஓம் முருகனே போற்றி
    101. ஓம் யோக சித்தியே போற்றி
    102. ஓம் வயலூரானே போற்றி
    103. ஓம் வள்ளி நாயகனே போற்றி
    104. ஓம் விராலிமலையானே போற்றி
    105. ஓம் விநாயகன் சோதரனே போற்றி
    106. ஓம் வினைகளைக் களைவாய் போற்றி
    107. வேலவனே போற்றி
    108. ஓம் வேத முதல்வனே போற்றி போற்றி

  • திருச்செந்தூர் முருகன் ஜூன் 23-இல் ஆனி வருஷாபிஷேகம்

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இம்மாதம் 23ஆம் தேதி ஆனி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான வருஷாபிஷேகம் இம்மாதம் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், பின்னர் கும்பங்கள் வைக்கப்பட்டு யாக பூஜை ஆகியவை நடைபெறுகின்றன. தொடர்ந்து, காலை 8.30 – 9 மணிக்குள் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

  • குமரி திருப்பதி கோயிலுக்கு விரைவில் மகா கும்பாபிஷேகம்

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ரூ. 24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் திருமலை திருப்பதி கோயில் மகா கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 24 கோடி மதிப்பீட்டில் திருமலை திருப்பதி கோயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகளை சென்னை ஆலோசனை மையக்குழுவை சேர்ந்தவர்கள் பார்வையிட்டுள்ளனர். இதுவரை நடந்துள்ள கட்டுமானப் பணியின் நிலவரம், தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள் போன்ற முழுவிவரங்களை அவர்கள் கேட்டறிந்தனர்.

    மேலும், தற்போது நடந்துள்ள பணிகள் தவிர சேர்க்க வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு விரைவில் சுபமுகூர்த்த தினம் பார்க்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அவர்கள் கூறி இருக்கின்றனர்.

    அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடந்த பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மகாகும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதல்வர், ஆந்திர முதல்வர், தமிழக ஆளுனர், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் திருப்பதி கோயில் மீது பற்றுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

  • திருப்பதியில் அன்னதானம் செய்ய தயாரா? இதோ அறிமுகமாகிறது புதிய திட்டம்!

    திருப்பதியில் அன்னதான செலவை பக்தர்கள் ஏற்கும் புதிய திட்டத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருக்கிறது.
    திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நடைபெற்ற தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் அன்னதான திட்டத்தில், ஒரு நாள் அல்லது ஒரு வேளை அன்னதானம் வழங்கலாம்.

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் 1983 முதல் பக்தர்களுக்கு இலவச அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தும் பணத்தில் கிடைக்கும் வங்கி வட்டியில் அன்னதான திட்டம் செயல்பட தொடங்கியது. முதலில் 2,000 பக்தர்களுக்கு மட்டுமே அன்னதானம் செய்யப்பட்டது.

    இத்திட்டத்திற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால், தற்போது இரு வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருமலை மட்டுமல்லாது, திருப்பதி ரயில் நிலையம், பஸ் நிலையம், சத்திரங்கள், திருச்சானூர் போன்ற அனைத்து இடங்களிலும் இரு வேளைகளிலும் தேவஸ்தானத்தினர் இலவச அன்னதான திட்டத்தை விஸ்தரித்துள்ளனர்.

    திருமலையில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 85 ஆயிரம் பக்தர்கள் வரை இலவசமாக உணவு உண்டு வருகின்றனர். திருமலையில் மாத்ரு ஸ்ரீ தரிகொண்டா வேங்கமாம்பாள் அன்ன பிரசாத சத்திரத்தில் இத்திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. காலை 11 மணி முதல் மதிய உணவும், மாலை 5 மணி முதல் இரவு உணவும் பரிமாறப்பட்டு வருகிறது.

    அன்னதான திட்டத்திற்காக திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒரு நாளைக்கு ரூ. 26 லட்சம் செலவாகிறது. இத்திட்டத்திற்கு பல பக்தர்கள் தாங்களாகவே முன் வந்து நன்கொடை வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், ஸ்ரீவாரி அன்னபிரசாத திட்டத்திற்கு நன்கொடை வழங்கும் பக்தர்கள் இனி ஒரு நாளுக்கு உண்டான செலவை ஏற்றுக்கொள்ளும் புதிய திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஒரு நாளைக்கு ரூ. 26 லட்சம் நன்கொடையாக அளித்தால், அவர்களது பெயரில் அன்றைய தினம் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் செய்யப்படும். அவர்களது பெயரும் டிஜிட்டல் போர்டில் வைக்கப்படும்.

    காலை சிற்றுண்டிக்கு ரூ. 6 லட்சம், மதிய உணவிற்கு ரூ. 10 லட்சம், இரவு உணவிற்கு ரூ. 10 லட்சம் என தனித்தனியாக கூட இத்திட்டத்திற்கு நன்கொடை வழங்கலாம். இதற்கு வரி விலக்கும் உண்டு என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்து இருக்கிறது.

  • நாகதோஷ நிவர்த்திக்கு அருள்மிகு குக்கி சுப்ரமணியசுவாமி

    குக்கி சுப்ரமணியசுவாமி கோயில் கர்நாடக மாநிலத்தின், மங்களூர் அருகே உள்ள தட்சின கர்நாடக மாவட்டத்தில், சுல்லியா வட்டத்தில், குக்கி சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த குமார மலையைப் பாதுகாக்கும் விதமாக இதன் அருகே ஆறு தலை பாம்பு வடிவத்தில், சேஷமலை அமைந்துள்ளது.

    இங்குள்ள மக்கள் இக்கோயிலை குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில் என்று அழைக்கின்றனர். இக்கோயிலின் மூலவரான முருகனை அனைத்து நாகர்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.

    குக்கி சுப்ரமணியசுவாமி கோயில் செல்வதற்கு முன், கோயிலுக்கு அருகில் ஓடும் குமாரதாரா எனும் நதியில் புனித நீராடிவிட்டு குக்கி சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

    புராணக்கதைப்படி, சுப்பிரமணியசுவாமி, தாருகாசூரன், சூரபதுமன் மற்றும் மற்ற கொடிய அசுரர்களைப் போரில் வென்று கொன்ற பின்பு, சுப்பிரமணியசுவாமி, தன் அண்ணன் பிள்ளையாருடன், இக்குமாரமலையில் தங்கினார்கள்.

    அப்போது இந்திரனின் மகளான தேவசேனாவையை, சுப்பிரமணிய சுவாமி மணந்தார். இத்திருமணம், குமாரமலையில் நடந்தது. அன்று முதல் தேவசேனா உடனாய சுப்பிரமணியசுவாமி இங்கு எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.

    இந்த கோயிலில் கோயிலில் நடைபெறும் சர்ப்ப சம்கார பூசை எனும் நாக தோச நிவர்த்தி பரிகார பூசை சிறப்பான பூசையாகும். மேலும் அஸ்லேஷா நட்சத்திர நாளில் செய்யப்படும் நாகதோச நிவர்த்தி பரிகார பூசை சிறப்பாக நடைபெறுகிறது.