Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • தோஷங்களை நீக்கும் மயில் இறகு…..

    முருகப்பெருமானின் வாகனம் மயில் என்பதால், அதன் இறகு மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இந்த மயில் இறகு நமக்கு ஏற்படும் பலவித தோஷங்களில் இருந்து நம்மை விலகுகிறதாம். சரி, அவற்றை எந்த இடத்தில் வைத்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

    சனி தோஷம் நீங்க….
    மூன்று மயில் இறகை ஒன்றாக இணைத்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்குமாம்.

    வாஸ்து தோஷம் நீங்க…
    வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க 8 மயில் இறகை ஒன்றாக சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, அதை பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வாஸ்துவினால் ஏற்பட்ட தோஷம் நீங்குமாம்.

    செல்வம் அதிகரிக்க…
    நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் மயில் இறகு ஒன்றை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யும்.

    எதிர்மறை ஆற்றல் நீங்க…
    மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.

    உற்பத்தி மேம்பட….
    ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.

    ஒற்றுமை ஓங்க…
    திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்னைகள் நீங்கி, அன்யோன்யம் அதிகரிக்கும்.

  • சுவாமிமலை முருகனின் வைரவேல் தரிசனம்

    முருகப்பெருமானின் நான்காம் படை வீடான சுவாமிமலை தருத்தலம் கும்பகோணத்திற்கு மேற்கே 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது,இத்திருத்தலத்தில் முக்கிய நிகழ்வான இன்று முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்திருத்தலத்தின் வரலறானாது ஒரு முறை முருகப்பெருமான் பிரணவ பொருளின் விளக்கத்தை பிரம்மனிடம் கேட்க அவர் பதில் கூற இயலாமல் திகைத்தார். எனவே, முருகப்பெருமான் பிரம்மனை சிறையில் அடைத்து தானே படைக்கும் தொழிலை மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியை கேட்டறிந்த சிவப்பெருமான் முருகனிடம் சென்று பிரம்மனை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி பிரம்மனை விடுவித்த முருகனை சிவப்பெருமான் அழைத்து அந்த பிரணவ மந்திரத்தின் பொருளை தனக்கு உபேதேசிக்குமாறு கேட்டுக்கொண்டார், பின் முருகன் சிவபெருமான் மடியில் அமர்ந்து அவர் காதில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை அளிக்கிறார். தகப்பனுக்கே உபதேசம்  செய்த காரணத்தினால் முருகன் இங்கே தகப்பன்சாமியாகிறார். இந்த தகப்பன்சாமி வாழ்கின்ற காரணத்தினால் இம்மலைக்கு சுவாமிமலை என்று பெயர் வந்ததாக புராண வரலாறு கூறுகிறது.

    இத்திருத்தலத்தின்  கருவறையில் முருகப்பெருமான் ஆறடி உயரத்தில் வலக்கரத்தில் தந்தம் பற்றியும். இடக்கரத்தை தொடைமீது அமர்த்தியும் கருணைப் பொழியும் திருமுகத்துடன் குருவாய் காட்சியளிக்கிறார். மேலும் இத்தருத்தலம் தமிழ் வருடங்கள் அறுபதை குறிக்கும் வகையில் அறுபது படிகள் கொண்டு அமைந்துள்ளது. கல்வியும் ஞானத்தையும் வேண்டும் பக்தர்களுக்கு சுவாமிமலை முருகப்பெருமான் அருளை வாரி வழங்குகிறார். அத்துணை சிற்ப்புமிக்க இத்திருத்தலத்தில் முக்கிய நிகழ்வான இன்று முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேலுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். முருகப்பெருமானின் இத்தரிசனத்தை காண எண்ணிலடங்கா பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள்.

     

  • சந்திர கிரகணம் – திருப்பதி கோவில் நடை 12 மணிநேரம் மூடப்படுகிறது

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 27-ந் தேதியன்று, திருப்பதி கோவில் நடை 12 மணிநேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஜூன் 27-ந் தேதி இரவு 11.54 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.49 மணிவரை முழுசந்திர கிரகணம் நிகழ உள்ளது. வழக்கமாக கிரகண காலங்களில் கிரகணம் தொடங்குவதற்கு 6 மணிநேரத்திற்கு முன் திருப்பதி கோவில் மூடப்படுவது வழக்கம்.

    அதன்படி 27-ந் தேதி மாலை 5 மணிக்கு திருப்பதி கோவில் நடை சாத்தப்பட உள்ளது. 28 ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுத்தி, புண்யாவசனம் செய்த பின் சுப்ரபாத சேவை நடைபெறும். அன்று காலை 7 மணிமுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    இதையொட்டி 27 ஆம் தேதி கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 27-ந் தேதி இரவு பவுர்ணமி கருட சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூலை 28-ந் தேதி அதிகாலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கொலு, பஞ்சாஞ்கம் படித்தல் உள்ளிட்டவை ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்பட உள்ளது.

  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் திருமஞ்சன சேவை

    திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவிலில் இன்று நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை மற்றும் ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இக்கோவிலில் எம்பெருமான் மகாபாராதப் போரின்போது  பார்த்தனுக்கு தேரோட்டிய சாரதி வடிவில் காட்சி அளிக்கிறார். மேலும் இத்திருக்கோயில் 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. இக்கோவிலில் திருமாலின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்களான  நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர் ஆகியோர் காட்சிதருகிறார்கள்.மேலும் இக்கோவிலில் வேதவள்ளி தாயார், ரங்கநாதர், ராமர், கஜேந்திர வரதராஜ சுவாமி, நரசிம்ம, ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. கோவில் கருவறையில் மூலவர் வேங்கட கிருஷ்ணர் தவிர ருக்மிணி பிராட்டி, பலராமன், சத்யகி, அனிருத்தன், பிரத்யும்னன் என்று குடும்ப சமேதகராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்கள். இக்கோவிலின் மூலவரான பார்த்தசாரதியின் விக்கிரகத்தை அகத்திய மாமுனிவர் பிரதிஷ்டை செய்ததாக கருதப்படுகிறது.

    மேலும் இத்திருதலத்தில் மூலவர் பார்த்தசாரதிக்கு நேர் பின்புறமாக யோக நரசிம்மராக சிங்கப் பெருமாள் காட்சியளிக்கிறார். இவருடைய சந்நிதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப்பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடுமென்பது பக்தர்களின் நம்பிக்கை. அத்திரி முனிவருக்கும் காட்சி தந்த கோலத்தில் இருப்பதால் இவரைத் தெள்ளிய நரசிம்ம சுவாமி என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை மற்றும் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமானின் அருளைப் பெற்று வருகின்றனர்.

     

  • ஜெனகை மாரியம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்

    வைகையாற்றின் கீழ்கரையில் அமைந்துள்ள சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் குடிகொண்டிருக்கும் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவ சேவை இன்று நடைபெறுகிறது.சோழவந்தானில் புண்ணியதலமாக கருதப்படும் இக்கோவிலில் நடத்தப்படும் அணைத்து பூஜைகளிலும் வெற்றிலை முதன்மை பொருளாக கருதப்படுகிறது. மேலும், இத்திருத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈர ஆடையோடு அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொள்பவருக்கு  அம்பாள் அணைத்து சௌபாக்கியங்களையும் வழங்கி அருள் பாலிக்கிறார்.

    மேலும் இக்கோவிலில் தரப்படும் தீர்த்தமானது, மஞ்சள், வேப்பிலை மருத்துவ குணமும் அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும். அத்தீர்த்தம் தீராத வியாதகிளையும் தீர்கிறது என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.இத்தகைய சிறப்புகள் மிக்க இத்திருக்கோவிலில் இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், ஊஞ்சல் உற்சவ சேவையும் நடைபெற உள்ளது. இதில் எண்ணற்ற பக்தர்கள் கலந்து கொண்டு ஜெனகை மாரியம்மனை தரிசிக்கவிருக்கிறார்கள்.

  • திருச்சானூர் சுந்தரராஜ சுவாமி கோவிலில் அவதார உற்சவம்

    திருச்சானூர்  பத்மாவதி தாயார் கோவிலில் சுந்தராஜா சுவாமி அவதார உற்சவத்தையொட்டி பெரிய சேஷ வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் ஓட்டியுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுந்தரராஜ சுவாமி கோவிலில் அவதார உற்சவம் இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று இரவு சுந்தராஜா சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பெரிய சேஷ வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். புராண கதையின் படி முகலாயர்கள் காலத்தில் மதுரையில் உள்ள அழகிரி பெருமாள் கோவிலை இடிக்க முயன்றனர்.அப்போது  அங்குள்ள அர்ச்சகர்கள் சுந்தர்ராஜ சுவாமியை திருச்சானூருக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் 1902 ஆம் ஆண்டு மகந்துகள் காலத்தில் தேவஸ்தான நிர்வாகம் இருந்தபொழுது திருச்சானூரில் சுந்தராஜ சுவாமிக்கு  கோவில் கட்டப்பட்டப்பட்டு அதில் மூலவர் சிலை அமைக்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு உற்சவங்கள் நடத்தப்பட்டு வந்தது. சுந்தராஜ சுவாமி உற்சவர் சிலை மதுரையிலிருந்து ஆனி மாதம் கொண்டு வரப்பட்டதால் உத்திராடம் நட்சத்திரத்தில் முடியும் விதமாக சுந்தராஜ சுவாமி அவதார உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.  அதன்படி இன்று தொடங்கிய சுந்தராஜா சுவாமி  உற்சவம் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.

  • பார்த்தன்பள்ளி பெருமாள் கோயிலில் பிரமோற்சவம்

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே பார்த்தன்பள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ளது பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படும் இக்கோவில், திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் ஒன்றாக போற்றப்டுகிறது.பார்த்தனுக்காக (அர்ஜுனன்) உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியென்று பெயர்பெற்றது. இத்திருதலத்தில்  பார்த்தசாரதி பெருமாளும், செங்கமலவள்ளி தாயார் சன்னதிகளும், கருடன், அர்ஜுனன், அனுமார் உபசன்னதிகளும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

    இக்கோயிலில், பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடைபெறுவது வழக்கம். முக்கிய நிகழ்வாக ஆடி, அமாவாசை திருவிழாவும், திருக்கார்த்திகை திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. இத்திருதலத்தில் ஆனி மாத பிரமோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவையொட்டி பார்த்தசாரதி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்பு வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் ,பெருமாளுக்கு சேவை சாத்துமுறையும், திருமஞ்சனம் சாத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்று பக்தர்களை பரவசப்படுத்தியது.  பிரமோற்சவத்தை முன்னிட்டு தொடர்ந்து 10 நாட்களுக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் பெருமாளை தரிசித்து திருவிழாவை சிறப்பிக்கயிருக்கிறார்கள்.

  • கடையம் வந்தால் கவலை தீரும்!

    கடையத்துக்கு வந்தால் கவலைகள் பறந்தோடும் என்பார்கள். கடையத்தில்தான், வில்வங்களில் ஈடுபாடும் ஆசையும் கொண்ட வில்வவனேஸ்வரர் குடிகொண்டிருக்கிறார்.

    திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது கடையம் . அழகிய கிராமத்தில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் வில்வ வன நாதர். இங்கே அம்பாளின் திருநாமம் ஸ்ரீநித்ய கல்யாணி அம்பாள்.

    அற்புதமான ஆலயம். புராதனமான திருத்தலம். ஒருகாலத்தில் வில்வ வனமாக இருந்த இந்தத் தலத்தில் கோயில் கொண்டதால், சிவபெருமானுக்கு வில்வம் சார்த்தி வேண்டிக் கொண்டால் நம்மையும் நம் வாழ்வையும் சிவனார் பார்த்துக் கொள்வார்.

    கைப்பிடி வில்வம் எடுத்து வந்து சிவனாருக்கு சார்த்தினாலே போதும்… நம் கவலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்கிறார்கள் பக்தர்கள்.

    கடையம் குறித்தும் அந்தத் தலம் குறித்தும் ஸ்தல புராணம் தெரிவிக்கும் இன்னொரு சிறப்பம்சம் என்ன தெரியுமா?

    சிற்றாறு உற்பத்தியாகும் குற்றாலத்துக்கும் தாமிரபரணி உற்பத்தியாகும் பாண தீர்த்தத்துக்கும் நடுவே, அகத்திய முனிவர் இன்றைக்கும் தவமிருக்கும் இடம் என்று போற்றப்படும் தலத்தில் அமைந்துள்ள ஆலயம் என்று கடையம் வில்வவன நாதரைப் போற்றுகிறார்கள் பக்தர்கள்.

    அம்பாள் மட்டும் என்ன? நித்ய கல்யாணி. தன்னை நாடி வந்து, சந்நிதியில் கண்ணீருடன் நிற்கும் பெண்களின் துயர் துடைப்பதே தன் பணி என்பதாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் தேவி. அம்பாளுக்கு புடவை சார்த்தி, குங்கும அர்ச்சனை செய்து மனதார வேண்டிக் கொண்டால் போதும்… மணமாலை தந்து, மாங்கல்யம் காப்பாள் அம்பிகை என்கின்றனர் பக்தர்கள்.

    சக்தி குறித்து இன்னொரு சிறப்பையும் வியப்பையும் சொல்லவேண்டும்.

    இங்கே, ஸ்ரீதுர்கையாகவும் ஸ்ரீலக்ஷ்மியாகவும் ஸ்ரீசரஸ்வதி யாகவும் உமையவள் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே, பெண்கள் எந்தக் குறைகளுடன் வந்தாலும், அவர்களின் குறைகளை தாயுள்ளத்துடன் உடனே போக்கி அருள்வாள் ஸ்ரீநித்யகல்யாணி அம்பிகை என்பது ஐதீகம்!

    ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி’ எனப் பாடினாரே மகாகவி பாரதி. அந்தத் தலம் இது என்று சொல்வார்கள்.

    கடையம் வில்வவன நாதரை கண்ணாரத் தரிசியுங்கள். நம் சாபமெல்லாம் நீங்கும். பாவமெல்லாம் விலகும். தடைகள் அனைத்தும் தகர்த்து, நல்ல நல்ல சத்விஷயங்கள் நமக்குக் கிடைக்கச் செய்வார் சிவனார்!

  • காக்கும் கணபதியின் பரிகார தலங்கள்?

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சந்நதி செல்லும் வழியில் ஒரு தூணியில் ‘விநாயக தாரணி’ எனப்படும் பெண்வடிவ விநாயகியை பார்க்கலாம். இவருக்கு ‘சந்தனக்காப்பு’ அலங்காரம் செய்து வணங்கினால் பெண்களுக்கு திருமண தோஷம் விலகும்.

    சென்னை சவுகார்பேட்டையிலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள ‘சகோதர விநாயகரை’ வணங்கினால் பிரிந்திருக்கும் சகோதரர்கள் ஒன்று கூடுவார்கள்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள கீழ ஆவணிமூல வீதி பைரவர் கோயிலுள்ள ‘சோம சூரிய கணபதி’யை அமாவாசை நாளில் வேண்டிக்கொள்ள கிரக, நாக தோஷம் விலகும்.

    திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் போல திருத்துறைப்பூண்டி அருகில் இடும்பாவனம் சற்குணநாதர் கோயிலிலும் கடற்நுறையாலான வெள்ளை விநாயகர் அருள்கிறார். இவருக்கு பால், பன்னீர் அபிஷேகங்கள் செய்து வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்கும்.

    கும்பகோணம் அருகிலுள்ள கொட்டையூர் கோடி விநாயகரை வழிபட்டு பின் மற்ற தெய்வங்களை வழிபட்டால் கோடி செல்வங்கள் பெறலாம் என்பது ஐதீகம்.

    ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை கோயிலின் கொடிமரம் அருகே தெற்கு நோக்கி அமைந்துள்ள ‘கண் கொடுத்த விநாயகரை’ அங்குள்ள புஷ்கரணியில் 48 நாட்கள் நீராடி வணங்கிவர கண்பார்வை கோளாறு குணமாகுமாம்.

    காரைக்குடி அருகே உள்ள மாத்தூரிலும், சிவகங்கை மாவட்டம் பி.அழகாபுரியிலும் ‘கலங்காத கண்ட விநாயகர்’ கோயில்கள் உள்ளது. கடன் பிரச்னையால் வாடுபவர்கள் இவர்களிடம் முறையிட கடன் பிரச்னை தீரும்.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயிலுள்ள விநாயகரை ‘புரமோஷன் விநாயகர்’ என்கிறார்கள். இவருக்கு அறுகம்புல் மாலை சாத்தி வேண்டினால் பணி உயர்வு கிடைக்குமாம்.

    கோவை மாவட்டம் நெகமம் அருகிலுள்ள தேவனாம்பாளையத்தில் உள்ள அமணீஸ் வரர் கோயிலுள்ள அம்பாள் பாதத்தின் கீழ் உள்ள சதுர் விநாயகர்களை வணங்கினால் தாய், பிள்ளைகளுக்கு இடையேயான மனக்கசப்பு தீரும்.

    தேனி மாவட்டம் கம்பம் அருகிலுள்ள சுருளி மலை அருவியின் அடிவாரத்திலுள்ள பூத நாராயண பெருமாள் கோயிலில் தனிச்சந்நதியில் ‘கால் நடைகளைக் காக்கும் கணபதி’ உள்ளார். பால் சுரப்பதில் குறைபாடு இருந்தாலோ இவரை வேண்டிக்கொள்ள குணமாகும்.

    சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுள்ள ‘மும்முடி விநாயகரை’ வேண்டிக்கொள்ள முன்னோர்கள் ஆத்ம சாந்தி அடையும். நினைத்த பேறுகளையும் அடையலாம்.

    உடுமலைப்பேட்டையிலுள்ள பிரசன்ன விநாயகர் கோயிலில் உள்ள மேற்கூரையில் 12 ராசிகளைக் குறிக்கும் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் நின்று விநாயகரை வணங்கினால் அவரவர் ராசியில் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

    வேலூர் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயிலில் மூலஸ்தானத்தில் சுயம்பு மூர்த்தியாக 11 விநாயகர்கள் தன் அருகிலேயே கொடிமரமும் கொண்டு அருள்பாலிக்கிறார்கள். திருமணத்தடை மற்றும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்து தீபம் ஏற்றி வழிபட நல்ல பலன் கிடைக்கும்.

    பொள்ளாச்சி அருகிலுள்ள குமாரலிங்கம் தத்தாத்ரேயர் சுவாமி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை ஜெகந்நாதப் பெருமாள் கோயில்களில் விநாயகர் வயிற்றில் ராகு, கேது எனும் பாம்புகள் பின்னியுள்ள நிலையில் இருப்பார்கள். இவர்களை வணங்கினால் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இன்னல்கள் தீரும் என்பது ஐதீகம்.

    விநாயகரின் நர்த்தனக் கோலம் மிகவும் அபூர்வமான ஒன்று. இப்படிப்பட்ட கோலத்தை திருப்பூர் அருகிலுள்ள ஊத்துக்குளி பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோயிலில் காணலாம். இவரை வழிபட்டு இனிப்பு நைவேத்யம் படைத்தால் இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

  • கொக்கென்று நினைத்தாயோ, கொங்கணவா,…..

    எல்லோரும் மகாபாரதம் படிக்கிறார்கள். ஆனால், வெறும் கதை சுவாரஸ்யம் தான் அனுபவிக்கிறார்களே ஒழிய உயிரையே “சுளீர்’ என்று சாட்டை சொடுக்கித் தாக்கும் பகுதிகளை உணர்வதில்லை.

    கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’. ஓர் கண்ணோட்டம்…..

    ஆயிரம் கீதைக்குச்சமமாகும் வரிகள்……

    தெரிந்த கதை என்றாலும், கொஞ்சம் தெரியாத உண்மை உள்ளது. கவுசிகன் என்ற வேதியர் காட்டில் கடுந்தவம் செய்கிறார். நெடுநாள் செய்த தவம் பலித்துக் கண் விழித்தார்.

    அப்போது மரத்திலிருந்த கொக்கு அவர் தலையில் எச்சமிட்டது. கோபம் பொங்க கொக்கைப் பார்த்தார். கொக்கு பற்றி எரிந்து நெருப்பால் செத்தது. ஆஹா! நம் தவம் சித்தியாகி விட்டது’ என்கிற வெற்றிக் களிப்புடன் ஊருக்குள் போனார்.

    அவர் வயிற்றில் பசி நெருப்பு பற்றி எரிந்தது. ஒரு பெண்ணிடம் பிட்சை கேட்டார். அவள் “திண்ணையில் உட்காருங்கள் சுவாமி! உணவு கொண்டு வருகிறேன்’ என்று சொல்லி விட்டு அவசரமாக உள்ளே ஓடினாள். அதற்குள் எதிர்பாராத விதமாகக் கணவன் வந்து விட்டதால் அவனுக்குரிய பணிவிடைகளைச் செய்ய வேண்டி வந்தது.

    அன்புடன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து விட்டு பின்னர் திண்ணையில் பசியுடன் காத்திருக்கும் ரிஷியின் நினைவு வந்து, உணவுடன் வாசலுக்கு ஓடிவந்தாள். கவுசிகனுக்கோ கோபமான கோபம். கடுங்கோபத்துடன் தம் தபோ வலிமை தெரியட்டும் என்ற நினைப்பில் எரித்து விடும் எண்ணத்தில் அந்தப் பெண்ணை நோக்கினார்.

    அவளோ அலட்சியமாகச் சிரித்தபடி “என்ன.. சாமியாரே! என்னை என்ன கொக்கு என்று நினைத்துவிட்டீரா? உம் கோபத்தில் எரிந்து போவதற்கு?’ என்று கேலி பேசினாள். கவுசிகன் நடுங்கி ஒடுங்கிப் போய் விட்டார். அவள் மேலும் சொன்னாள்.

    “நான் குடும்பப் பெண். என் கடவுள் என் கணவர் தான். அவருக்கான பணிவிடைகளைச் செய்தபின் தான், கடமைகளை முடித்தபின் தான், வேறு எதிலும் நான் ஈடுபட முடியும். நீர் பெரிய தபஸ்வியாக இருக்கலாம்.. ஆனால், குடும்பப் பெண் குடும்பக் கடமைகளைவிட்டு விட்டு சாமியாருக்குப் பணி விடை செய்ய வேண்டுமா என்ன?

    கடமைகள் முடிந்த பிறகு வேண்டுமானால் செய்ய முடியும்’ என்றாள். இன்று எத்தனை பெண்கள் இந்த உண்மைகளைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதே என் வருத்தம். வீட்டில் குழந்தைகள், தாய், தகப்பன், மாமன், மாமி, கணவன் யாரையும் கவனிக்காது வீட்டில் போட்டது போட்டபடி போட்டுவிட்டு ஆஸ்ரமங்களில் போய் கூட்டிப் பெருக்கி பூக்கட்டி, அந்தச் சாமியார் பின்னாலும், இந்தச் சாமியார் பின்னாலும் அலைந்து, பக்திப் பயிர் வளர்ப்பது சகிக்கக் கூடியதா என்ன?

    கடமைகளைச் செய்வது தான் உண்மையான வழிபாடு என்றும் சாமியாரை விடு.. மாமியாரை மதி’ என்று கன்னத்தில் அறைகிற மாதிரி சொல்லவில்லையா இந்த மகாபாரதக் கதை! கவுசிகனுக்குப் பெண் எரியாதது ஆச்சரியம். அதைவிட தான் காட்டில் கொக்கை எரித்தது எப்படித் தெரிந்தது என்று பெரும் ஆச்சரியம்!

    காட்டில் தவம் செய்கிறவன் பெறும் ஸித்தியை, வீட்டில் கடமை ஆற்றும் பெண்ணும் பெற்று விடுகிறாள் என்பதே அந்தப் பெண்ணின் பதில். அவள் மேலும் சொன்னாள், நீர் வேதங்களைக்கற்றும் தவம் புரிந்தும் தர்மம் இன்னது என்று கற்று அறிந்தவர் தானே ஆனல் உமக்கு எது தர்மம் என்று தெரியவில்லை ஆகையால் மிதிலைக்குப்போய் அங்கு தர்மவியாதர் என்ற உத்தமரிடம் தர்மத்தை அறிந்து கொள்ளும், என்று அனுப்பி வைத்தாள்.

    மிதிலை வந்து தர்ம வியாதரைத் தேடிய போது கவுசிகனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், தர்ம வியாதன் ஒரு கசாப்புக் கடைக்காரர். இறைச்சி வணிகர். கவுசிகன் அருவருப்பை மறைத்துக் கொண்டு அவர்முன்போய் நின்றதும், முனிவரே.. உம்மை அந்தக் கற்பரசி அனுப்பி வைத்தாளா?” என்று கேட்டதும் அவர் மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    கொஞ்சம் பொறுங்கள்.. மீதமான இறைச்சி யையும் விற்றுவிட்டு வருகிறேன்” என்று சொல்லி கவுசிகனை உட்கார வைத்தார். பின்னர் வீடு போனதும், தம் தாய் தந்தையருக்குச் சகல பணி விடைகளையும் செய்து அவர்கள் சந்தோஷமடையும்படி, கடமைகளாற்றிவிட்டு வந்து கவுசிகனிடம் பேசத் தொடங்கினார்.

    வேதியரே! என் தொழில் கண்டு நீர் வெறுப்படைந்தீர். இது வழிவழியாக வந்த தொழில். நான் உயிர்களைக் கொல்வதில்லை. மற்றவர்களால் மரணமடைந்த விலங்குகளின் புலாலை ஈஸ்வர அர்ப்பணமாக விற்கிறேன்.

    இல்லறத்தானுக்குரிய உபவாசம், அளவான பிரம்மச்சர்யம் மேற்கொள்கிறேன். மனத்தாலும் எவருக்கும் தீங்கு செய்யேன். எனக்குத் தீங்கு செய்தவருக்கும் நான் தீங்கிழைப்பதில்லை. அறிந்தும் அறியாதும் செய்த சகல பாவங்களுக்காகவும் கடவுளிடம் நாள்தோறும் மன்னிப்பு கேட்பேன்,” என்று தர்மத்தை விளக்கினார்.

    எல்லாவற்றிற்கும் மேலாக, “”இதோ உள்ள என் தாய் தந்தையர் எனக்குக் கண்கண்ட கடவுள். இவர்கள் தான் என் வேதம். என் யாகம். அவர்கள் முதுமை காரணமாக என்னைச் சிரமப்படுத்தினாலும், இன்னுரை கூறி அவர்களுக்கேற்ற உணவளித்து உபசரிக்கின்றேன். இவர்கள் ஆசியால் எனக்குச் சகலசித்திகளும் உண்டாகிவிட்டன. ஆனால், நீர் பெற்றோரைத் தவிக்க விட்டு விட்டு தவம் செய்யப் போய்விட்டீர். உம் பெற்றோர் குருடர்களாகி தடுமாறி துன்புறுகிறார்கள். அவர்கள் மேலும் தவிக்காதபடி போய் உம் கடமையை ஆற்றுங்கள்,” என்று கூற கவுசிகன் நாணத்துடன் புறப்பட்டார்.