Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • வில்வ நாயகனுக்கு வில்வாஷ்டகம்!

    சிவபெருமானை வழிபடுவதற்கு, வில்வத்துக்கு இணையான அர்ச்சனை இல்லை. வில்வாஷ்டகத்துக்கு இணையான பாராயணம் இல்லை என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் சிவனடியார்கள்.

    குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் சீரும் சிறப்புமாக வளர்வார்கள். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். தேகத்திலும் உள்ளத்திலும் ஆரோக்கியமும் தெளிவும் குடிகொள்ளும். துர்சக்திகள் அண்டாமல் காத்தருள்வார் சிவனார்!

    த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுதம்

    த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

    த்ரிசா கைஃ பில்வபத்ரைச்ச அச்சித்ரைஃ கோமலை ஸுபை:

    தவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம்

    கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய:

    காம்சனம் க்ஷீலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம்

    காசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம்

    ப்ரயாகே மாதவம் த்ரூஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம்

    இம்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஷ்வரா

    நிக்தம் ஹௌஷ்யாமி தேவே ஏக வில்வம் சிவார்ப்பணம்

    ராமலிம்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்றுதம் ததா

    தடாகானிச ஸம்தானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

    அகம்ட பில்வபத்ரம் ச ஆயுதம் சிவபூஜனம்

    க்றுதம் னாம ஸஹஸ்ரேண ஏக வில்வம் சிவார்ப்பணம்

    உமயா ஸஹதேவேச நந்தி வாஹனமேவ ச

    பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

    ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தசகூபயோ:

    யஜ்னகோடி ஸஹஸ்ரஸ்ச ஏக வில்வம் சிவார்ப்பணம்

    தம்தி கோடி ஸஹஸ்ரேஷு அஸ்வமேத சதக்ரதௌ

    கோடிகன்யா மஹாதானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

    பில்வாணாம் தர்சனம் புண்யம் ஸ்பர்சனம் பாபனாசனம்

    அகோர பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

    ஸஹஸ்ரவேத பாடேஷு ப்ரஹ்மஸ்தாபன முச்யதே

    அனேகவ்ரத கோடீனாம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

    அன்னதான ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோப நயனம் ததா

    அனேக ஜன்மபாபானி ஏக வில்வம் சிவார்ப்பணம்

    பில்வஸ்தோத்ரமிதம் புண்யம் ய படேத் சிவ ஸன்னிதௌ

    சிவலோக மவாப்னோதி சிவேன சஹ மொததே

    இதை, சிவராத்திரி நாளில் சொல்லுங்கள். மற்ற நாட்களிலும் சொல்லலாம். வேண்டியதையெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் பரமேஸ்வரன்!

  • சகல செல்வங்களும் பெற கிருத்திகை வழிபாடு

    பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.

    அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள். தண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள் முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம் தியானம் கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும்.

    இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவுண்ண வேண்டும். ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும். கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும்.

    மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும். கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள் என்பது கருத்து. இவ்வளவு பெருமை வாய்ந்தது கிருத்திகா நட்சத்திரம்.

  • கிருபானந்த சுவாமிகள் அருளும் உடலைப் போற்றும் முறைகள்

    அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, கிழுக்கு முகமாக அமர்ந்து ஆண்டவனை வணங்க வேண்டும்.

    பின்னர் சிறிது தூரம் மலஜல நிவர்த்தி செய்ய வேண்டும்.

    மலச்சிக்கல் உள்ளதாயின் எழுந்தவுடன் தண்ணீர் அல்லது வெந்நீர் பருகி, பின் சிறிது நேரம் உலாவினால் மல நிவர்த்தியாகும்.

    ஆலம் அல்லது வேலம் குச்சியில் பல் துலக்க வேண்டும்.

    தினமும் நீராட வேண்டும்.

    உடலழுக்கைக் களைய நீராடுகையில் “நீரளித்த பெருமானே! உள்ளத்தின் அழுக்கைக் கழுவ உம் தியானத்தை என்றும் அருள்க”என வேண்டிக் கொண்டே நீராடுதல் நல்லது.

    தலைக்கு குளித்தலே நலம். தலையை நீக்கி நீராடக் கூடாது. காலையில் நீராடுதல் நல்லது.

    துவைத்த உலர்ந்த ஆடையால் துவட்டிக் கொள்ள வேண்டும்.

    கடவுள் வழிபாடு முடித்தபின் சிற்றுண்டி அருந்தி, தொழிலில் ஈடுபட வேண்டும்.

    உணவருந்தும் போது அவசரமில்லாது, நிதானமாக நன்கு நொறுங்கத் திண்ண வேண்டும்.

  • குரங்கணி முத்துமாலையம்மன் கோவில் உற்சவம்

    தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். ராவணன் சீதாதேவியை கடத்திச் சென்றபோது, சீதா தேவி ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள். புஷ்பக விமானத்தில் இருந்து வீசப்பட்ட முத்து மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. தரையில் விழுந்த முத்துமாலை ஜோதியாக ஒளி வீசியது. அப்போது அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர், முத்து மாலையின் ஒளி வீச்சை காண முடியாமல் கண்கள் கூச, அருகில் கிடந்த மண் சட்டியை எடுத்து அந்த முத்துமாலையை மூடினார் முத்துமாலை கிடந்த இடமானதால் இங்கு சீதா தேவி தங்கி இருப்பதாக நினைத்து அதற்கு முத்துமாலை அம்மன் என பெயரிட்டப்பட்டதாக இத்தல வரலாறு கூறப்பட்டுவருகிறது.

    முத்துமாலையம்மன் சன்னிதியின் இடப்புறமும், வலப்புறமும் பரிவார மூர்த்திகளின் சன்னிதிகள் புடை சூழ அமைந்திருக்கின்றன. இதில் அம்மனுக்கு இடப்புறம் நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களின் கோபுரத்துடன் கூடிய சன்னிதி உள்ளது. முப்பிடாதி அம்மன், சப்த கன்னிகைகள், பார்வதி அம்மன், பிரம்ம சக்தி, மாரியம்மன், சந்தன மாரியம்மன், பைரவர், வீர பத்திரர் முதலியோருக்கு இங்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. மேலும் விநாயகர், காசிநாதர், விசாலாட்சி, நவக்கிரகங்கள் ஆகியோர் இங்கு அருள்பாலிக்க, மூலவராக முத்துமாலை அம்மன் கிழக்கு முகமாக அமர்ந்தபடி அருள்பாலிக்கிறாள்.

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா மிகச் சிறப்புவாய்ந்து. அதன்படி ஆனிமாத திங்கட்கிழமையான இன்று (09-07-2018)குரங்கணி முத்துமாலை அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைப்பெறயிருக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் அம்மன் உற்வலத்திற்கு ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு குரங்கணி அம்மன் அருளைப் பெறவிருக்கிறார்கள்.

  • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவிலில், ஆண்டுதோறும் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஜேஷ்டாபிஷேகம் கடந்த 27-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான நேற்று கருட மண்டபதிலிருந்து தங்கக்குடம் எடுத்துச் செல்லப்பட்டு, காவிரியிலிருந்து திருமஞ்சனம் எடுத்து, யானை ஆண்டாள் மீது வைத்து ஊர்வலமாகத் தாயார் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது.  பின்னர் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி தாயார் சன்னதியில் நேற்று முழுவதும் மூலவர் சேவை நடைபெறவில்லை.இன்று தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தாயார் சன்னதியின் மூலஸ்தானத்திற்கு தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது. தொடர்ந்து மதியம் 1 மணியளவில் தாயாருக்கு மங்களஆரத்தியும், மாலை 3.30 மணிக்கு மேல் மூலவர் சேவையும் நடைபெறவுள்ளது.

  • திருப்பதியில் 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 10ம்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இதனால் அன்று 6 மணி நேர தரிசனம் நிறுத்தப்படுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய தினங்களுக்கு முன் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் கோயில் தூய்மை பணி நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி ஏழுமலையான் கோயிலில் வரும் 17ம்தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதனால் வரும் 10ம்தேதி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட உள்ளது. அன்று காலை 6 மணி முதல் சுமார் 5 மணி நேரத்திற்கு கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளும் சுத்தம் செய்யப்பட உள்ளது. பின்னர் கஸ்தூரி மஞ்சள், கிச்சலிக்கட்டை, திரிசூணம் உட்பட பல்வேறு மூலிகைகளால் தயார் செய்யப்பட்ட கலவை கோயில் சுவற்றில் தெளிக்கப்படுகிறது.

    இதனால் அன்று சுமார் 6 மணி நேரத்துக்கு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 12 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேகம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்டு 16 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி ஆகஸ்டு 11-ந் தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. அதனை தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடைபெறும். 150-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்கள் வேதமந்திரங்கள் முழங்க இந்த பூஜைகளை நடத்துகின்றனர். கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த பூஜைகள் நடத்தப்படுகிறது.

    இதனையொட்டி ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மூலவரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அன்றைய நாட்கள் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனமும் ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகள் முடிந்த பின்னர் 16-ந் தேதி காலை 10.16 மணியளவில் துலா லக்னத்தில் மூலவர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.

    அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கிறது. இந்த தகவலை தேவஸ்தான துணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜூ தெரிவித்தார்.

  • அன்னம் அருளும் அன்னப்பூரணி அம்மன்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சத்திரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது 1500 ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோவில், இக்கோவிலின் சிறப்பு அம்சமாக அன்னப்பூரணி அம்மன் சன்னதியுள்ளது. சிவனுக்கே அன்னத்தை வழங்கிய இந்த அம்மன் தெற்கு பக்கம் பார்த்தவாறு காட்சியளிக்கிறார். இத்தகைய சிறப்பம்சம்முள்ள காட்சியை காசியில் மட்டுமே காண முடியும். தமிழகத்தில் இப்படியொரு சன்னதி அமைப்பு வேறெந்த திருத்தலத்திற்கும் இல்லை என்று இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

    மேலும் காசி விஸ்வநாதர் எதிரில் அமைக்கப்பட்டுள்ள நந்தி சிலையானது, அன்னப்பூரணி அம்மனை பார்த்தவாறு அமையப்பட்டிருக்கும். அதே போன்ற அமைப்பு இத்திருத்தலத்திலும் காணப்படுகிறது. இத்திருத்தலத்திற்கு வந்த அன்னபூரணியை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் உணவு பிரச்சனை வராது என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.

  • குரு தோஷம் நீக்கும் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள்

    தன் மகன் கசனுக்காக நலம் வழங்கும் நாராயணரை நோக்கி குரு பகவான், தவம் செய்த சறப்பு மிக்க தலம் தான் சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலாகும். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறையில் அமைந்துள்ளது இக்கோவில், சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருத்தலத்தில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள். இக்கோவில் வரலாறானது குரு பகவான் தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் தவம் மேற்கொண்டு வந்தார் அப்போது குருவின் தவத்தால் மகிழ்ந்த பெருமாள் சித்திர வேலைப்பாடுகளுடன் அமைந்த தேரில் வந்து குரு பகவானுக்கு காட்சியளித்து அவர் மகனை மீட்டுத் தந்தார். இதனால் இத்திருத்தலத்தின் எழுந்தருளிய பெருமாள், சித்திர ரத வல்லப பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள பெருமாள் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக வீற்று பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதனால் இக்கோவிலில் அவருக்கு அபிஷேகம் கிடையாது. இந்ததிருத்தலத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.

    மூலவரான சித்திர ரத வல்லப பெருமாள் சுமார்10 அடி உயரத்தில் கம்பீரமாக ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார். இப்பெருமாளை வணங்கினால் குருபகவானின் அருள் தானே வந்தடையும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை மேலும் குழந்தை பாக்கியமும், சகல நன்மைகளையும் கிடைக்கப்பெறும் என்றும் நம்புகின்றனர். இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் நாச்சியார்களுடன் உற்சவ மூர்த்தியாக வீற்றிருக்கிறார்.

    குரு பகவானே இங்கு வந்து தவம் செய்த தலம் என்பதனால், குருதோஷம் உள்ளவர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்து வழிபட்டு பரிகாரம் மேற்கொண்டால் தோஷம் நிவர்த்தியாகி பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். குருவிற்கு நன்மையளித்த பெருமாளே இங்கு கோவில் கொண்டுள்ளதால், அப்பெருமாளை வணங்கினாலே குரு பகவானின் அனுக்கிரகம் கிடைக்கப்பெறும் என்பது இத்திருத்தலத்திற்கு நாடி வரும் பக்தர்களின் நம்பிக்கை.

  • கண் நோய்களை தீர்க்கும் சேலம் கோட்டை மாரியம்மன்

    சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாங்கனி நகரத்தில் கோயில் கொண்டுள்ளாள் கோட்டை மாரியம்மன். சேலத்திலுள்ள எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் கோட்டை பெரிய மாரியம்மன் என்று பெயர் வந்துள்ளது. இத்திருத்தலத்தின் வரலாறானது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் சேரநாட்டைச் சேர்ந்த சிற்றரசர்கள் சேலத்தில் கோட்டை அமைத்து ஆண்டு வந்தனர்.  அப்போது அவர்கள் தங்களுக்கு காவல் தெய்வமான மாரியம்மனுக்கும் மற்றும் பெருமாளுக்கும் கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். ஆனால் தற்போது அந்த கோட்டையில்லை. கோட்டை இருந்ததற்கு அடையாளமாக கோட்டை மேடு என்ற இடம் மட்டும் இங்குள்ளது.

    இங்கு மூலவராக காட்சியளிக்கும் மாரியம்மன் நான்கு கரங்களுடன் அழகு திருமேனியுடன் கம்பீரமாக விளங்குகிறார். வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி, இடது மேற்கரத்தில் அங்குசமும் அமுத சின்னமும் ஏந்தியவளாய் காட்சியளிக்கிறாள். மேலும் இத்திருக்கோயில் முன் மண்டபம், வெளிமண்டபம், பலிபீடம், வெள்ளிபிரகார மண்டபம், கிளி மண்டபம், வசந்த மண்டபம், கருங்கல்லால் அமைக்கப்பட்ட ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.மேலும் இக்கோவிலில் அம்மை நோய் கண்ட பக்தர்கள் அம்மனை வேண்டி புனித நீர் வாங்கி தம் மீது தெளித்து நோய் நீங்க பெறுவதாக நம்புகிறார்கள்.மேலும் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்வதும் வழக்கமாக உள்ளது. மேலும் இக்கோவில் திருவிழாவின்போது பூச்சாடுதல் விழா நடைப்பெறும் அவ்விழாவில் இக்கோவிலிருந்து பூக்களை எடுத்துச் சென்று சேலத்தில் ஏனைய ஏழு மாரியம்மன் கோவில்களுக்கு பூச்சாட்டி அபிஷேகத்தை பக்தர்கள் செய்துவருகிறார்கள்.