Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • வாகன யோகம் தரும் கோவை ஈச்சனாரி விநாயகர்!

    கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 9 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஈச்சனாரி விநாயகர் கோவில். இக்கோவிலில் வீற்றிருக்கும் விநாயகர் குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றமும் நல்ல உத்தியோகமும் கிடைக்கப்பெற செய்து அருள்பாலிக்கிறார். இத்திருத்தல வரலாறானது மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்து, தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட்டார், பின்னர் பேரூர் எடுத்துச் செல்ல முயன்றும் இயலாமல் போய் விட்டது. காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் அருள் வாக்குப்படி இச்சிலை இங்கு பிரதிஷ்டைசெய்யப்பட்டது. விநாயகர் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ் பெற்று விளங்குகிறது

    மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரம், மாடங்கள் மற்றும் பெரிய மண்டபங்கள் இத்திருத்தலத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இந்த கோவிலில் 27 நட்சத் திரங்களுக்கும் மலர் அலங்காரங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு விதமாக அலங்கரிக்கப்பட்டு, அஸ்வினி முதல் ரேவதி வரையிலும், 27 வித மலர் அலங்கார அழகு செய்யப்பட்டு பூஜை நடத்துவது மிகவும் சிறப்பானதாகும்.இந்த கோவிலுக்கு இது பிரசித்தமானதாகும்.

    மேலும் வாகன பூஜைக்கு பெயர்பெற்ற தலமாக இக்கோவில் விளங்குகிறது. கோவை நகர மக்கள் புதிய வாகனம் வாங்கி இங்கு வழிபடுவது அன்றாட நிகழ்வாக நடந்துகொண்டிருக்கிறது. மேலும் வாகன யோகம் தரும் கடவுளாகவும் இக்கோவில் விநாயகர் போற்றப்படுகிறார். இத்திருத்தலத்தில் பக்தர்கள் நேர்த்தி கடனாக, பால் அபிஷேகம் செய்தல், பால் கொழுக்கட்டை படைத்தல், சிதறு தேங்காய் உடைத்தல், சதுர்த்தி விரதம் பூணுதல், அருகம்புல் மாலை சாத்துதல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவைகளால் நிறைவு செய்கின்றனர்.

  • நோய் தீர்க்கும் கிரகங்கள்!

    நோய் விரைவில் குணமாக மருத்துவத்தொடு தொடர்புடைய கீழ்க்கண்ட கிரகங்கள் வலுவாக ஜாதகத்தில் அமைந்திருக்கவேண்டும்.

    ஆரோக்கியத்திற்குரிய கிரகம் சூரியன். சூரியனை ஆத்ம காரகன் என ஜோதிடம் போற்றுகிறது. ஆரோக்கியத்திற்கு ஆதித்தனை வணங்கு என்பது ஜோதிடப் பழமொழி.

    இரத்தம், அறுவைச் சிகிச்சை இவற்றிற்கு காரகத்துவம் பெற்ற செவ்வாய்.

    மருத்துவம் மற்றும் மருந்துக்களுக்கு காரக கிரகமான புதன். மேலும் பொதுவாகவே கல்விக்கு காரகனான புதனை வித்யாகாரகன் என போற்றுகிறது பாரம்பரிய ஜோதிடம். ஜோதிடத்திற்க்கும் புதன் காரகன் என்பது குறிப்பிடத்தக்கது

    கேதுவை மருத்துவ கிரகம் என்று சாஸ்திரம் சொல்கிறது. கேது மணி, மந்திர ஔஷதங்களுக்கு காரக கிரகமாகும்.

    ராகு மேற்கண்ட மருத்துவக் கிரகங்களுடன் தொடர்புகொள்ளும்போது அத்துறையில் தீவிரமான ஈடுபாடுகொள்ள வைக்கிறது.ராகு மறைந்து இருக்கின்ற பொருள், உள் விஷயங்கள் மற்றும் விஷம், ரசாயனம் ஆகியவற்றை குறிக்கின்ற கிரகம்.

    மருந்து, மாத்திரைகள், விஷம் சம்பந்தப்பட்டவைதான். ஒரு ரசாயனம் மருந்து மற்றொரு ரசாயனத்துடன் சேரும்போது அது நோய் தீர்க்கும் மருந்தாகிறது. நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு மருந்தும் விஷத்தன்மையுடையதுதான். அதனால்தான் அந்த மருந்து அளவு மீறிப்போகும்போது வேறு விதமான உப, துணை நோய்களை ஏற்படுத்துகிறது.

    ஆகையால்தான் நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு-கேது மருத்துவத்திற்கும், ரசாயனத்திற்கும், வேதிப்பொருள்களுக்கும் உரிமை உடையவர்களாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

  • வழக்குகளைத் தீர்த்து வைக்கும் தண்டுமாரியம்மன்!

    கோயம்புத்தூர் கோட்டையிலே காவல் தெய்வமாக மக்களை காத்து நிற்கிறாள் கோவை தண்டுமாரியம்மன். கோவை மாநகர் அவிநாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் கோயம்புத்தூர் கோட்டையிலே வேப்ப மரம், தொரட்டி மரத்தின் நிழலிலே வடக்கு நோக்கி தண்டு மாரியம்மன் அருள்பாலிக்கிறார்.

    இத்தலவரலாறானது கொங்கு நாட்டு கோட்டைகளில் முக்கியமானதாக விளங்கிய கோயம்புத்தூர் கோட்டை 1768 லிருந்து 1791 ஆம் ஆண்டு வரை மூன்று தடவை முற்றுகையிடப்பட்டது. ஆங்கிலேயரை எதிர்க்க மைசூரில் இருந்து வந்த திப்பு சுல்தான் படைகள் கோட்டையில் முகாமிட்டிருந்தன. அப்போது அப்படையில் அம்மனின் தீவிர பக்தரான ஒருவர் கனிவில் வந்த அம்மன், வேப்பமரங்களுக்கும் காட்டுக்கொடிகளுக்கும் இடையே இருக்கும் நீர்ச்சுனைக்கு அருகில் தான் இருப்பதாக கூறி, தன்னை அங்கேயே வழிபடும்படி அம்மன் கட்டளையிட்டாள். அக்கட்டளையையேற்ற வீரர் தன்னுடன் மற்ற படை வீரர்களை சேர்த்து ஒரு சிறிய மேடை போல அமைத்து அம்மனை வழிபட்டதாக இக்கோயில் வரலாறு கூறுகிறது. தண்டு” என்றால் “படை வீரர்கள் தங்கும் கூடாரம்” என்பது பொருள். அங்கு கிடைத்த அம்மன் என்பதால் இந்த அம்மன் “தண்டுமாரியம்மன்” என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். மேலும் இத்திருக்கோயிலில் மூலவராக அம்மன் அருள்பாலிக்கிறார். இக்கோவில் சன்னதிக்கு மேல்புறமிருக்கும் அரசமரத்தின் கீழ் கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார். மேலும் முன் மண்டபத்தில் அஷ்ட லட்சுமியின் திருஉருவங்கள் உள்ளன. இக்கோவிலின் தல விருட்சமாக தொரட்டி மரம் அமைந்துள்ளது.

    கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அம்மன் கோவில்களில் முதன் முறையாக அம்மனின் உற்சவ மூர்த்தியை தங்க ரதத்தில் வைத்து பவனி வந்த சிறப்பும் இத்திருத்தலத்திற்கு உண்டு. மேலும் இக்கோவிலில் குடிகொண்டிருக்கும் அம்மன் தீராத நோய் தீர்ப்பதில் வல்லவளாக விளங்குகிறாள். செவ்வாய்க்கிழமைகள் ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி 9 வாரம் வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். முடிவுக்கு வராத வழக்குகள் மற்றும் மனவேற்றுமையால் பிரிந்து சென்ற தம்பதிகளை இணைத்திடும் சக்தியாக, இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் தண்டு மாரியம்மன் வணங்கப்படுகிறாள்.

  • குழந்தை பாக்கியம் அருளும் சிறுவாச்சூர் மதுரகாளி..!

    திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரில் இருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மன் திருக்கோயில். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே திறக்கப்படும் வித்தியாசமான இத்திருக்கோயில் ஆதிசங்கரர் வழிபட்ட புண்ணியத் தலமாக போற்றப்படுகிறது. மேலும் இங்கு பிள்ளை வரம் வேண்டும் பக்தர்களுக்கு மலடு நீக்கி மகப்பேறு அளிக்கும் பராசக்தியாகவும், பில்லி சூனியம் போக்கும் அன்னையாகவும் மதுரகாளியம்மன் அருள்பாலித்து வருகிறாள்.

    மதுரகாளி அம்மனின் தலவரலாறனது. கண்ணகி தனது கணவனுக்கு ஏற்பட்ட அநீதியை கண்டு பொறுக்காமல் மதுரையை எரித்தாள்.அதன் பின் மன அமைதியின்றி திரிந்த கண்ணகி திருவாச்சூர் வந்து அமைதிக்காக இத்தலம் விரும்பி அமர்ந்தாள் என கூறப்படுகிறது.இத் திருக்கோயிலில் வெள்ளி மற்றும் திங்கள் இந்த இரு தினங்களைத் தவிர திருவிழா நாட்கள் முக்கிய விசேஷ நாட்களில் கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. மற்ற நாட்களில் மதுரகாளியம்மன் செல்லியம்மனுடன் அருகிலுள்ள பெரியசாமி மலையில் தங்குவதாக கூறுகிறார்கள்.

    மதுரை காளியம்மன் என்ற பெயரே நாளடைவில் மருவி மதுர காளியம்மன் என்று அழைக்கப்படுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். மேலும் இத்திருத்தலத்தில் தினமும் காலை 8 மணிக்கு அம்மன் சன்னதி திறக்கப்பட்டு 11 மணிக்கு அபிஷேகங்கள் நடைபெற்று, பிறகு தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. உச்சி காலத்தில் மகா தீப ஆராதனை நடக்கிறது இந்த நேரத்தில் அம்மனை வணங்குவோருக்கு அம்மனின் முழு அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வரும் அமாவாசைக்குப் பிறகு முதல் செவ்வாய்கிழமை பூச்சொரிதல் விழாவும் அதற்கெடுத்த செவ்வாய்கிழமை காப்பு கட்டிப் பெருந்திருவிழாவும் நடத்தப்பபடுகிறது. மேலும் ஆடி18- ஆம் நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

  • வெற்றிகளைத் தரும் 108 அனுமன் போற்றி!

    அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற சனிக்கிழமைகளில் ஜெபிக்க வேண்டிய 108 அனுமன் போற்றி…        

    ஓம் அனுமனே போற்றி
    ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி

    ஓம் அறக்காவலனே போற்றி
    ஓம் அவதார புருஷனே போற்றி 

    ஓம் அறிஞனே போற்றி
    ஓம் அடக்கவடிவே போற்றி
    ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
    ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
    ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
    ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
    ஓம் ஆனந்த வடிவே போற்றி
    ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
    ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
    ஓம் இசை ஞானியே போற்றி
    ஓம் இறை வடிவே போற்றி
    ஓம் ஒப்பிலானே போற்றி
    ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
    ஓம் கதாயுதனே போற்றி
    ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
    ஓம் களங்கமிலாதவனே போற்றி
    ஓம் கர்மயோகியே போற்றி
    ஓம் கட்டறுப்பவனே போற்றி
    ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
    ஓம் கடல் தாவியவனே போற்றி
    ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
    ஓம் கீதாபாஷ்யனே போற்றி
    ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
    ஓம் கூப்பிய கரனே போற்றி
    ஓம் குறுகி நீண்டவனே போற்றி
    ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி

    ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
    ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
    ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
    ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
    ஓம் சீதாராம சேவகனே போற்றி
    ஓம் சூராதி சூரனே போற்றி
    ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
    ஓம் சொல்லின் செல்வனே போற்றி
    ஓம் சூரியனின் சீடனே போற்றி
    ஓம் சோர்வில்லாதவனே போற்றி
    ஓம் சோக நாசகனே போற்றி
    ஓம் தவயோகியே போற்றி
    ஓம் தத்துவஞானியே போற்றி
    ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
    ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
    ஓம் தீதழிப்பவனே போற்றி
    ஓம் தீயும் சுடானே போற்றி
    ஓம் நரஹரியானவனே போற்றி
    ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
    ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
    ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
    ஓம் பண்டிதனே போற்றி
    ஓம் பஞ்சமுகனே போற்றி
    ஓம் பக்தி வடிவனே போற்றி
    ஓம் பக்த ரட்சகனே போற்றி
    ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
    ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
    ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
    ஓம் பயம் அறியாதவனே போற்றி
    ஓம் பகையை அழிப்பவனே போற்றி
    ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
    ஓம் பிரம்மச்சாரியே போற்றி
    ஓம் பீம சோதரனே போற்றி
    ஓம் புலனை வென்றவனே போற்றி
    ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
    ஓம் புண்ணியனே போற்றி
    ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
    ஓம் மதி மந்திரியே போற்றி
    ஓம் மனோவேகனே போற்றி
    ஓம் மாவீரனே போற்றி
    ஓம் மாருதியே போற்றி
    ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
    ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
    ஓம் மூலநட்சத்திரனே போற்றி
    ஓம் மூப்பில்லாதவனே போற்றி
    ஓம் ராமதாசனே போற்றி
    ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
    ஓம் ராமதூதனே போற்றி
    ஓம் ராம சோதரனே போற்றி
    ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி

    ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
    ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
    ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
    ஓம் ராமாயண நாயகனே போற்றி
    ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
    ஓம் ராகவன் கண்மணியே போற்றி
    ஓம் ருத்ர வடிவனே போற்றி
    ஓம் லட்சியப் புருஷனே போற்றி
    ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
    ஓம் லங்கா தகனனே போற்றி
    ஓம் லங்காவை வென்றவனே போற்றி
    ஓம் வஜ்ர தேகனே போற்றி
    ஓம் வாயுகுமாரனே போற்றி
    ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
    ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
    ஓம் விளையாடும் வானரனே போற்றி
    ஓம் விஸ்வரூபனே போற்றி
    ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
    ஓம் வித்தையருள்பவனே போற்றி
    ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
    ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
    ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
    ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
    ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

  • சங்கரன்கோவில் கோமதியம்மன் இன்று வெள்ளி சப்பரத்தில் வீதி உலா!

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சைவவைணவ தலங்களில் ஒன்றான சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஆடித்தவசு விழா ஒவ்வொரு ஆடி மாதம் தொடங்கி, தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இத்திருவிழா நாட்களில் சுவாமி  அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை நேரங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும் இத்தகைய சிறப்புமிக்க ஆடித்தவசு விழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோமதி அம்பாள் சன்னதிக்கு முன்பு அமைந்துள்ள தங்ககொடிமரத்தில் காலை 8.15 மணிக்கு மேல் வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க வெண்பட்டு கொடியேற்றப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

    கோவிலில் கொடியேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து நாள்தோறும்அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறாள் அதன் தொடர்சியாக இன்று (21.07.2018) கோமதியம்மன் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 25ஆம் தேதி நடைப்பெறவிருக்கிறது ஆடித்தவசு விழா 27ஆம் தேதி முதல் காட்சி மாலை 5 மணிக்கும், இரண்டாம் காட்சி இரவு 9 மணிக்கும் நடைபெறுகிறது இந்த நாட்களில் அம்பாளை தரிசிப்பதற்காக எண்ணற்ற பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகிறார்கள்.

  • துன்பம் விலக்கும் அம்பிகை ஸ்துதி….

    துன்பம் விலகி நன்மைகள் உண்டாக்கும் அபிராமி அம்பிகை ஸ்துதியை. செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இந்த ஸ்துதியை சொல்லி வந்தால் வாழ்வில் சகல செல்வங்களும் வந்த சேரும்….

    மங்களம் தரும் அபிராமி அம்பிகை ஸ்துதி
    காலையாத கல்வியும் குறையாத
    வயதுமோர் கபடு வாராத நட்பும்
    குன்றாத வளமையுங்குன்றாத இளமையும்
    கழுபிணி யிலாத உடலும்
    சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
    தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும்
    மாறாத வார்த்தையும் தடைகள் வாராத
    கொடையும் தொலையாத நிதியமும்
    கோணாத கோலுமொரு துன்பமில்லாத வாழ்வும்
    துய்யநின் பாதத்தின் அன்பும் உதவிப் பெரிய
    தொண்டரொடு கூட்டு கண்டாய்
    அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
    ஆதிகடவூரின் வாழ்வே அமுதீசர் ஒரு பாகம்
    அகலாத சுகபாணி அருள்வாய் அபிராமியே.

  • ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன்?

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடியில் அம்மனுக்கு கூழ் செய்து வணங்கினால் அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள்.
    சரி ஆடி மாதம் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது வழக்கம், இது ஏன் தெரியுமா?

    தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்கமுடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார். அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார்.

    தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்ப மர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார். ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார்.

    அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக கொடுத்தனர். இதைக் கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார். அப்போது சிவபெருமான், தோன்றி ரேணுகாதேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர்.

  • சிவ அம்சமாக காட்சியளிக்கும் இருக்கன்குடி மாரியம்மன்

    அம்மா….மாரியம்மா…இருக்கன்குடி தாயே!

    என்று ஓங்கி ஒலிக்கும் பக்தர்களின் குரலோசை இத்திருத்தலத்தில் எப்போதும் ரீங்காரமாய் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

    விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது இருக்கன்குடி இங்கு 300 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள். சாணக் கூடைகளுடன் அங்கே ஆற்றில் நீராட வந்தார்கள் அப்பகுதி கிராமப் பெண்கள். கூடைகளைக் கரையோரமாக இறக்கி வைத்துவிட்டு நீராடி முடித்தவர்கள் கூடைகளைத் திரும்பவும் எடுத்துக்கொண்டு கிளம்பியபோது தரையிலிருந்த தனது கூடையை அசைக்க கூட முடியாமல் திணறியபோதே அருள் வந்து ஆட தொடங்கினாள் அந்தப் பெண் நான் தான் மாரி என்றும் அந்த இடத்தில் தான் புதைந்து இருப்பதாகவும். என்னை வெளியே எடுத்து கோயில் கட்டி வழிபட வேண்டும் என்று கூறினாள். மேலும் என்னைத் தேடி வருகிறவர்களுக்கு எதுவும் இல்லையென்று நான் கூறமாட்டேன் என்றும் சத்தியம் செய்து. அந்த கடைக்காரப் பெண் மூலமாக அன்னையே ஆணை பிறப்பிக்க. பிறகு எழந்ததுதான் இந்த திருக்கோயில்

    இத்திருக்கோயிலில் மூன்று கால பூஜைகளும் முறையாக நடக்கும் இத்திருக்கோயிலில், பக்தர்களின் வசதிக்காக கருவறை சாத்தப்படாமல் பிரதி செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை திறந்தே வைத்திருக்கிறார்கள்.

    பிள்ளை வரம் வேண்டுவோர், திருமண பாக்கிகயத்துக்காக் காத்திருப்போர், குடும்ப்ப் பிரச்சினைகளால் தொல்லைக்கு ஆளாவேர் என எல்லாப் பிரச்சினைகளுக்குமே தீர்வாயிருக்கும் அன்னைக்கு. பக்தர்கள் நேர்ந்து அக்கினிச்சட்டி எடுப்பவர்கள், ஆயிரங்கண் பானை எடுப்பவர்கள், மாவிளக்கு போட்டு பொங்கல் வைப்பவர்கள், சொந்த பந்தங்களுடன் குடும்பத்துடன் வந்து கிடா வெட்டி மொட்டை அடிப்பவர்கள், என எப்போதுமே இத்திருத்தலத்தில் கூட்டம் நிரம்பி காணப்படும். குறிப்பாக ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கோவிலைச் சுற்றியிருக்கும் அணைத்து கிராம மக்களும் இக்கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து வணங்குவதை காணும் போது சமத்துவம் நிறைந்த கோவிலாக இக்கோவில் காணப்படுகிறது. ஒரு கிராமத்து அளவில் மட்டுமே பேசப்பட்டு வந்த இத்திருக்கோயில் இன்று அகிலம் முழுதும் புகழ் பெற்று அருள்பாலித்து தான் எல்லையை விரிவு படுத்திக்கொண்டே வருகிறாள் இருக்கன்குடி மாரயம்மன்.

  • தொழில் விருத்தியடைய மஹாலக்ஷ்மி மந்திரம்!

    மஹாலக்ஷ்மி அன்னையை மனதில் நினைத்து அனைத்து வெள்ளிகிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் கற்பூரம் ஏலக்காய் கலந்த காய்ச்சிய பால் மற்றும் வெற்றிலைபாக்கு, பாயசம், கற்கண்டு, பழங்கள் போன்றவற்றை அன்னைக்கு படைத்து

    “ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ”

    என்னும் மந்திரத்தை உச்சரித்தால் தொழில் முன்னேற்றம் அடைந்து வளம் பெருகும்.

    இந்த மந்திரத்தின் பொருளானது, “ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள உம்மை வேண்டுகிறேன்” என்பதாகும்.

    இவ்வாறு விளக்கேற்றி தீபத்தை வணங்கி பூஜித்து தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொண்டு. தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை  நெற்றியில் இட்டுக் கொண்டால் சிறந்த பலன்களைத் தரும். மற்ற சாதாரண நாட்களில் தம்மால் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தால் தொழில் முன்னேற்றமடைந்து ஐஸ்வர்யம் பெருகும்.