Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • perunkulam-sir-venkatavaana-perumal

    கிரகதோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்குவது வைணவர்களின் நம்பிக்கை. இந்த ஒன்பது நவகிரக ஆலயங்களில் சனி கிரக பரிகாரத் தலமாக இருப்பது பெருங்குளம் ஸ்ரீவேங்கடவாண பெருமாள் ஆலயம் என்னும் மாயக்கூத்தர் கோயில்.

    பெருங்குளம் என மக்கள் வழக்கில் அழைக்கப்படும் இந்த ஊர் இரட்டைத் திருப்பதியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது. பிருகஸ்பதிக்கு காட்சி தந்த பெருமாள் வீற்றிருக்கும் இந்தத் தலத்தின் பெயர் திருக்குளந்தை என இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் பெருமாளின் திருப்பெயர் ஸ்ரீவேங்கடவாண பெருமாள். ஆலய உற்சவரோ அழகிய ஸ்ரீமாயக்கூத்தர். தேவி ஸ்ரீகமலாவதி தாயார். அவர் ஸ்ரீகுழந்தைவல்லித் தாயார் என்றும் அழைக்கப்படுகிறார்.

    பெருங்குளம் கோயில்இந்த ஊரில், வேதவிற்பன்னராக சிறந்து விளங்கிய வேதசாரன் என்பவர், அவரது மனைவி குமுதவதியுடன் வாழ்ந்து வந்தார். எந்நேரமும் பெருங்குளத்து பெருமானை கார்வண்ண வேங்கட வணனை வணங்குவதையே முதன்மையான கடமையாகக் கருதி வாழ்ந்து வந்தார். இதனால் அந்த தம்பதிகளுக்கு அன்னை பத்மாவதியே மகளாக அவதரித்தார்.

    கமலாவதி என்ற பெயரோடு அன்னை வளர்ந்து வந்தார். பெருமாளின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு, பித்தாகி, அந்த திருமாலையே திருமணம் செய்துகொள்ள விரும்பி தவம் புரிந்தாள். அவளின் தவத்துக்கு இரங்கிய மாயக்கூத்தர் தன் கெளஸ்துப மாலையுடன் கமலாவதியை ஆலிங்கனம் செய்துகொண்டு, தை மாதம் சுக்ல பட்ச துவாதசி பூச நட்சத்திர நாளில் கல்யாணம் செய்து கொண்டார்.

    இமயமலையில் தீய குணங்களைக் கொண்ட முனிவன் ஒருவன், 1,000 அழகான பெண்களை திருமணம் செய்துகொண்டால் சாகாவரம் பெறலாம் என்ற நோக்கில் திரிந்துகொண்டு இருந்தான். இப்படி தேடித் தேடி ஒரே சமயத்தில் 998 பெண்களைக் கவர்ந்து சென்றான். அடுத்ததாக வேதசாரனின் மனைவி குமுதவதியை கவர்ந்துகொண்டு சென்றான். இதனால், மனம் நொந்த வேதசாரன் தன் மனைவியை மீட்டுத் தரும்படியாக திருமாலை மனமுருக வேண்டினான். தன் பக்தனின் இன்னலைத் தீர்க்க திருவுள்ளம் கொண்ட பெருமாள், இமயமலைக்குச் சென்றார். தன் துணை இன்றி திருமால் நகரவே முடியாது என்று கருடாழ்வார் ஆணவத்துடன் இருந்தார். அவரின் கர்வத்தை அடக்க நினைத்த திருமால், அவரை தமது கால்களின் இடையில் வைத்துக்கொண்டு, பறந்து சென்றார்.

    தமது பக்தனின் மனைவி குமுதவதியை மீட்டுக்கொண்டு திரும்பினார். தோல்வியடைந்த அந்த முனிவன் சீற்றமாகி, இந்தத் தலத்துக்கு வந்து போர் புரிந்தான். பெருமாளும் அவனை அடக்கி அவனுடைய தலையின் மீது கால் பதித்து, நடனம் ஆடினார். பெருமாளின் திருவடி பட்டதால் அந்த முனிவன் விமோசனம் பெற்று கந்தர்வனாக மாறினான். அற்புத நாட்டியம் ஆடிய பெருமாள், தேவர்களால் மாயக்கூத்த பெருமாள் என்னும் திருப்பெயர் பெற்றார்.

    தம்மை வேண்டும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் இந்த தீனதயாளன், இங்கு சனிபகவானின் அம்சத்தை தன்னுள் தாங்கி அருள்பாலிக்கிறார். இதனால் இங்குள்ள பெருங்குள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சேவித்தால், சனி தோஷங்கள் முற்றிலும் விலகும்; திருமணத்தடை நீங்கும்; பிள்ளை பாக்கியம் உண்டாகும்; பாவங்கள் யாவும் நீங்கி, பிறப்பிலாத பேரின்பத்தோடு பெருமாளின் திருவடியை அடையலாம் என்கிறது திருத்தல புராணம். எனவே வரும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நீங்களும் பெருங்குளப் பெருமாளை தரிசித்து சனிதோஷ நிவர்த்தியைப்பெறலாம்.

  • mutharamman-kovil-soorasamharam

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் வெகுவிமர்சையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு அணிந்து, பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர். முத்தாரம்மன் கோவிலில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    10-ம் திருநாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பு எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

    முதலில் மகிஷாசூரன், அம்மனை சுற்றிவந்து போருக்கு தயாரானான். அவனை சூலாயுதத்தால் அம்மன் வதம் செய்தார். பின்னர் யானையாகவும், சிங்கமாகவும், சேவலாகவும் அடுத்தடுத்து உருமாறி போர் புரிய வந்த மகிஷாசூரனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த பல லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் காளி, ஜெய் காளி’ என்று விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார்.

  • indru-ennda-rasikku-yogam

    அக்டோபர் 20
    விளம்பி வருடம் – ஐப்பசி 3
    20-அக்-2018 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : ஏகாதசி இ 7.44
    நட்சத்திரம் : சதயம் முழுவதும் 0.00
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சாந்தம்
    ரிஷபம் – சுகம்
    மிதுனம் – கோபம்
    கடனம் – நிறைவு
    சிம்மம் – பிரீதி
    கன்னி – நன்மை
    துலாம் – உறுதி
    விருச்சிகம் – செலவு
    தனுசு – பெருமை
    மகரம் – இன்பம்
    கும்பம் – தனம்
    மீனம் – தடங்கல்

  • vetrikalai-alli-tharum-vijaya-thasami

    வெற்றியைக் கொண்டாடும் விழாவே விஜயதசமி. ஒன்பது நாட்கள் அசுரசக்திகளை எதிர்த்து போர் புரிந்து சம்ஹரித்த ஆதிபராசக்தி, பத்தாவது நாளான தசமியன்று சாந்தமடைந்தாள். தேவியின் வெற்றியை தேவர்கள் கூடி இந்த தசமி நாளில் கொண்டாடி மகிழ்ந்தார்கள். கலைமகளும், திருமகளும், மலைமகளும் இணைந்த சக்தியை இந்த நாளில் வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

    குழந்தைகள் படிப்பு தொடங்கும் நிகழ்ச்சியும் ஏடு தொடங்குதல் என்ற பெயரில் நடைபெறும். மேலும் புதிய தொழில் தொடங்குவது, புதிய முயற்சிகளை மேற்கொள்வது எல்லாமே இந்த விஜயதசமி நாளில் நடைபெறும். எல்லா சிவாலயங்களிலும் வன்னிமர வேட்டை எனும் பாரிவேட்டை நிகழ்வும் இரவில் நடக்கும். உலகமே கண்டு வியக்கும் மைசூரு தசரா பண்டிகையும் இந்த விஜய தசமி நன்னாளில் தான் கொண்டாடப்படுகிறது.

    ராவணனை ராமபிரான் வெற்றிகொண்ட திருநாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அஞ்ஞாத வாசம் முடித்த பாண்டவர்கள் தங்களது ஆயுதங்களைப்பெற்று அம்பிகையின் அருளைப் பெற்ற சுப நாளும் இதுவே. பண்டாசுரனை அழிக்கத் தொடங்கிய போரில், அம்பிகை அவனை சம்ஹரிக்க முடியாமல் ஈசனை எண்ணி வேண்டினாள். ஈசனும் அம்பிகையை ஆசிர்வதித்து உதவினார். அதன்படி அசுரனை எதிர்த்த அம்பிகையின் சினம் தாங்காமல் பண்டாசுரன் வன்னி மரத்தில் ஒளிந்தான். இதைக்கண்டு கொண்ட அம்பிகை வன்னி மரத்தை வெட்டி, பண்டாசுரனை வதம் செய்தாள். இதுவே வன்னிமர வேட்டை என இன்றும் கொண்டாடப்படுகிறது. அற்புதங்கள் பல கொண்ட இந்த விஜயதசமி நன்னாளில் எல்லாம் வல்ல ஆதிபராசக்தியை வணங்கி நலங்கள் யாவும் பெறுவோம்.

  • vijaya-thasami-kollu-edukka-nalla-neram

    அக்டோபர் 19
    விளம்பி வருடம் – ஐப்பசி 2
    சுபமுகூர்த்த நாள்
    விஜயதசமி, கொலு எடுக்க, காலை 9:00 – 10:30,
    ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்
    19-அக்-2018 வெள்ளி ஸபர்9
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : தசமி
    திதி நேரம் : தசமி மா 5.54
    நட்சத்திரம் : அவிட்டம் அ.கா 4.03
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூசம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பெருமை
    ரிஷபம் – உயர்வு
    மிதுனம் – இரக்கம்
    கடனம் – பரிவு
    சிம்மம் – சோர்வு
    கன்னி – விவேகம்
    துலாம் – அச்சம்
    விருச்சிகம் – நோய்
    தனுசு – சினம்
    மகரம் – பிரிதி
    கும்பம் – தனம்
    மீனம் – போட்டி

  • vijayadasami-special-ambigai-devotion

    வெற்றித்திருநாளான விஜயதசமியில் அம்பிகையின் முன் அமர்ந்து இந்த வழிபாட்டை படித்தால் மனதில் நினைத்தது இனிதே நிறைவேறும். முயற்சியில் வெற்றி உண்டாகும்.
    *உலகத்தைக் காத்தருளும் அம்பிகையே!
    நீலகண்டரின் கரம் பிடித்தவளே!
    ஆனை முகனின் அன்னையே!
    வேதம் போற்றும் வித்தகியே!
    ஞானச் சுடர்க்கொடியே! மரகத வல்லியே!
    நிலவொளியாய் பிரகாசிப்பவளே!
    கருணை மழையே!
    அம்மா! உன் தாமரைத் திருவடிகளில் சரணடைந்தோம்.

    *மங்களம் நிறைந்தவளே! ஈஸ்வரியே!
    கற்பகம் போல் வாரி வழங்குபவளே!
    மலையத்துவஜன் மகளே!
    அபிராமவல்லியே! ஆனந்தம் அளிப்பவளே!
    ஆதிபராசக்தியே! அங்கயற்கண் அம்மையே!
    திருமாலின் சகோதரியே! மலர் அம்பினைத் தாங்கியவளே!
    ஈசனின் இடம் பாகத்தில் உறைபவளே!
    எங்களின் முயற்சியில் வெற்றியைத் தந்தருள வேண்டும்.

    *புவனம் காக்கும் நாயகியே! நாராயணியே!
    சாம்பவியே! சங்கரியே! சியாமளையே!
    மாலினியே! திரிசூலம் ஏந்திய சூலினியே!
    மதங்க முனிவரின் மகளாக வந்தவளே!
    பிரபஞ்சத்தைப் படைத்தவளே!
    வேதத்தின் உட்பொருளே! வீரத்தின் விளைநிலமே!
    எங்களின் மீது உன் கடைக்கண்ணைக் காட்டியருள வேண்டும்.

    *கடம்பவனமான மதுரையில் மீனாட்சியாக அருள்பவளே!
    காஞ்சியம்பதியில் காமாட்சியாகத் திகழ்பவளே!
    காசியில் உறையும் விசாலாட்சியே! பர்வதராஜனின் புத்திரியே!
    அசுர சக்தியை அழித்து நீதியை நிலைநாட்டுபவளே!
    திக்கற்றவருக்கு துணையாக நிற்பவளே!
    வெற்றி தேவதையே!
    உன் அருளால் இந்த உலக உயிர்கள் எல்லாம் நலமோடு வாழட்டும்.

  • vijayadasami-andru-vazhai-marathai-vettuvadhu-en

    விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை மரத்தை வெட்டுவது கோவில்களில் வழக்கமாக உள்ளது. ஒரு முறை பண்டாசுரனுடன் , பார்வதி தேவி போர் புரிந்தார். பலமுறை போரிட்டும், பார்வதி தேவியால், பண்டாசுரனுனை அழிக்க முடியவில்லை.

    இதையடுத்து பார்வதி தேவி, சிவபெருமானை வேண்டினார். அப்போது சிவபெருமான், விஜயதசமியில் போரிடும்படி கூறினார். அதன்படி பார்வதியும், விஜயதசமி தினம் ஒன்றில் பண்டாசுரனுடன் போரிட்டார். அப்போது போரில் தொல்வியுற்ற பண்டாசுரன், வன்னி மரத்தில் புகுந்து ஒளிந்துகொண்டான்.

    இதனை பார்த்ததும் பார்வதிதேவி, வன்னி மரத்தை வெட்டி, அதில் ஒளிந்திருந்த அசுரனை சம்ஹாரம் செய்தார். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கப்படலாயிற்று. பண்டாசுரனை அழித்த மாலை வேலையில், இதனை நினைவு கூறும் விதமாக வாழை மரத்தை வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

  • saraswathi-poojai-sami-kumbida-nalla-neram

    அக்டோபர் 18
    விளம்பி வருடம் – ஐப்பசி 1
    18-அக்-2018 வியாழன்
    சாமி கும்பிட நல்ல நேரம் :
    காலை 7.30 – 9.00
    காலை 10.30 – 12.00
    மாலை 3.00 – 4.30
    மாலை 6.00 – 7.30
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : நவமி
    திதி நேரம் : நவமி ம 3.52
    நட்சத்திரம் : திருவோணம் இ 1.35
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வரவு
    ரிஷபம் – தாமதம்
    மிதுனம் – செலவு
    கடனம் – நோய்
    சிம்மம் – வெற்றி
    கன்னி – பீடை
    துலாம் – நன்மை
    விருச்சிகம் – அமைதி
    தனுசு – பக்தி
    மகரம் – பயம்
    கும்பம் – கவலை
    மீனம் – மேன்மை

  • kaivi-varam-tharum-koothanoor-saraswathi-devi

    கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் தான் தனிக்கோவில் உள்ளது. ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும், கற்றுணர்ந்த சரஸ்வதி ஒரு முறை தவம் செய்ய நினைத்தார். இதற்காக பூவுலகில் அமைதியும், அழகும், நிறைந்த கூத்தனூரை தேர்ந்தெடுத்தாள். அம்பாளே இங்கு தவம் புரிந்ததால் இந்த ஊர் ‘அம்பாள் புரி’ எனவும் அழைக்கப்படுகிறது.

    கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார்.

    ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.

    சத்தியலோகத்தில் ஒரு முறை சரஸ்வதிக்கும், பிரம்மனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கல்விக்கு அரசியான தன்னால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத்தொழிலால் தான் சத்தியலோகம் பெருமை அடைகிறது என்று பிரம்மனும் வாதிட்டனர். வாதம் முற்றி, ஒருவரையொருவர் சபித்துக்கொண்டனர்.

    இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணிய கீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற பெயரில் மகனாகவும், சிரத்தை என்ற பெயரில் மகளாகவும் பிறந்தனர்.

    அவர்களுக்கு திருமண வயது வந்ததும் பெற்றோர்கள் வரன் தேட தொடங்கினர். அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்கும். இது இயலாத காரியம். பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டி சிவபெருமானை பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி சகோதர நிலையில் உள்ள நீங்கள் திருமணம் செய்து கொள்வது இயலாத காரியம் என்று கூறி, சரஸ்வதியிடம் நீ மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டு பக்தர்களுக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாய் என்று கூறி அருள்பாலித்தார். அதன்படி சரஸ்வதி தேவி, கூத்தனூரில் தனியாக கோவில் கொண்டு, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கல்வி செல்வத்தை வாரி வழங்கி வருகிறார்.

    சரஸ்வதி தேவியை தேடி சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து குப்த கங்கையாக காட்சி அளிக்கிறது.

    குழந்தைகளுக்கு கல்வி தோஷம் போக்கி ஞானப்பால் ஊட்ட, திருவுளம் கொண்ட சரஸ்வதி அமைதியே தவழும் வடிவம் கொண்டாள். வெள்ளை நிற ஆடை தரித்து, வெண் தாமரையில் பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். கீழ் வலது கையில் சின்முத்திரை, கீழே இடது கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கரத்தில் கலசமும் தாங்கி காட்சி தருகிறாள்.

    ஜடாமுடியுடன் கருணை புரியும் விழிகளும், ஞானசஷஸ் என்ற மூன்றாவது திருக்கண்ணும், புன்னகை தவளும் திருவாயுமாக கிழக்கு முகமாக அருளாட்சி புரிகிறாள்.

    சிவன் கோவிலில் மகா துர்க்கையும், பெருமாள் தலத்தில் மகாலட்சுமியும் தனிக்கோவில் கொண்டு, கூடவே சரஸ்வதியும் விளங்குவதால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை.

    கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் வசந்த ராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படும். சாரதா நவராத்திரி 12 நாட்களும், அடுத்த 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். இந்த நாட்களில் சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, மலர் அலங்காரம் என பல்வேறு கோலங்களில் அம்பாள் காட்சி தருவாள். சரஸ்வதி பூஜை அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம்.

    விஜயதசமியன்று காலை ருத்ராபிஷேகம் நடைபெறும். இரவு அன்னவாகனத்தில் அம்பாள் வீதி உலா நடைபெறும். அன்று நூற்றுக்கணக்கான கார், வேன்களுக்கு ஆயுதபூஜை செய்வார்கள்.

  • saraswathi-poojai-kadavulai-vananga-nalla-neram

    கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும். நாளை அக்டோபர் 18 ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

    ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள், புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.

    இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    ஆயுதபூஜைக்கு நாளை

    காலை 7.30 – 9.00

    காலை 10.30 – 12.00

    மாலை 3.00 – 4.30

    மாலை 6.00 – 7.30

    வரை சாமி கும்பிட நல்ல நேரம் உள்ளது.

    இதே போல அக்டோபர் 19ம் தேதி வெள்ளிக்கிழமை விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அன்று ஒரு சிலர் காலையிலும், சிலர் மாலையிலும் அன்னையை வணங்குவார்கள். பிற்பகல் 2.05 மணி முதல் 2.51 மணிவரை சாமி கும்பிட நல்ல நேரமாகும்.