Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • thangathai-prasadamaga-vazhangum-koil

    கோயிலில் தரிசனம் முடிந்த பின் பிரசாதமாக பொங்கல், புளியோதரை, பூ, பழம், விபூதி, குங்குமம் போன்றவற்றை பிரசாதமாக வழங்குவதை பார்த்து இருப்போம். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில், பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளியை பிரசாதமாக வழங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர்.

    என்ன ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா…!

    ஆம், மத்தியப் பிரதேச மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது ரத்லம் என்று அழைக்கப்படும் ரத்னபுரி நகரம். இங்குள்ள மகாலட்சுமி கோயிலில்தான் தங்கத்தை பிரசாதமாக வழங்குகின்றனர்.

    ஏழை எளியவர்களின் வறுமையைப் போக்கும் எண்ணத்தில் அமைக்கப்பட்ட இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம் செலுத்துவது இல்லை. வேண்டுதல் நிறைவேறி நேர்த்திக் கடன் செலுத்தும் அனைவரும், தங்களால் இயன்ற அளவுக்கு தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

    இப்படி, ஆண்டு முழுவதும் பக்தர்கள் செலுத்தும் தங்கம் மற்றும் வெள்ளி மலை போல் குவித்து வைக்கப்பட்டிருக்கும். பொதுவாக, அனைத்து கோயில்களிலும் சேரும் பணம், தங்கம், வெள்ளி போன்றவற்றை திருப்பணிக்காக பயன்படுத்துவது வழக்கம். ஆனால் இந்தக் கோயிலில் காணிக்கையாக கிடைத்த தங்கம் மற்றும் வெள்ளியை, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.

    இந்த நிகழ்ச்சி, ஆண்டுதோறும் தீபாவளித் திருநாள் அன்று நடக்கிறது. அன்றைய தினம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பிரசாதமாக வழங்கப்படுகிறது. ‘‘இதை, இறைவனால் தரப்படும் பிரசாதமாக பக்தர்கள் பார்க்கின்றனர். எனவே, இந்தக் கோயிலில் வழங்கப்படும் தங்கத்தை பக்தர்கள் யாரும் விற்பனை செய்வது கிடையாது’’ என்கின்றனர் கோயில் நிர்வாகிகள்.

  • sangadangal-theerkum-sapdha-kanniyar

    தங்கள் குலதெய்வம் எது என்று தெரியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த சப்த கன்னியரை வழிபட்டு பலன் பெறலாம்.

    அன்னை ஆதிபராசக்தியின் அம்சத்தில் இருந்து உருவானவர்கள் ‘சப்தகன்னியர்’. சண்ட, முண்டர்கள் என்னும் இரண்டு அசுரர்களை அழிப்பதற்காக, கர்ப்பத்திலோ, ஆண்-பெண் இணைவிலோ பிறக்காமல், அம்பாளின் சக்திகளாக அவதரித்தவர்களே ‘பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னியர்கள்.

    இவர்களே ‘சப்த கன்னிகள்’, ‘சப்த மாதர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். பலர் தங்கள் குலதெய்வம் எது என்று தெரியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த சப்த கன்னியரை வழிபட்டு பலன் பெறலாம்.

  • kudhu-bagavanuku-parigarangal

    கேது பகவானுக்கு பரிகாரமாக ராமேஸ்வரம் சென்று சாந்தி செய்வது உத்தமம். காஞ்சியில் உள்ள சித்ரகுப்தன் கோவில் சென்று வழிபாடு செய்வது உத்தமம்.

    வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை வழிபாடு செய்வது உத்தம பலன்கள் உண்டாகும்.

    கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், முதற்கடவுளான விநாயக பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் இருக்கிறது நாகர்கோவில். இங்குள்ள நாகர் ஸ்தலத்தில் நாக வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. பலரும் சென்று வழிபட்டு பலன் அடைகிறார்கள்.

    அரச மரத்தடியில் நாகர் சிலையை வழிபட்டு, நாகருக்கு பால் ஊற்றி, மரத்தை சுற்றிவரும் பெண்கள் தங்கள் மணாளனுடன் ஒருமித்து வாழவும், மகப்பேறு பெற்று சக்தியின் கருணையையும், அருளையும் பெறுகிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை.

     

  • sri-rangam-koil-vaikunda-egadasi-kodiyetram

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பந்தல் கால் நடும் நிகழ்ச்சி 25-ம் தேதி நடக்கிறது

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் டிசம்பர் மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. 8-ந்தேதி பகல் பத்து விழா தொடங்கி 17-ந்தேதி மோகினி அலங்காரமும், 18-ந்தேதி பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    24-ந்தேதி திருக்கைத் தல சேவை, 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறியும், 27-ந் தேதி தீர்த்தவாரியும், 28-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணிக்குள் திருக்கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்து உள்ளார்.

  • indray-rasi-palangal

    அக்டோபர் 23
    விளம்பி வருடம் – ஐப்பசி 6
    23-அக்-2018 செவ்வாய்
    கரிநாள்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : சதுர்த்தசி இ 10.25
    நட்சத்திரம் : உத்திரட்டாதி கா 9.33
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நட்பு
    ரிஷபம் – பிரீதி
    மிதுனம் – செலவு
    கடனம் – வெற்றி
    சிம்மம் – போட்டி
    கன்னி – அமைதி
    துலாம் – பயம்
    விருச்சிகம் – புகழ்
    தனுசு – கோபம்
    மகரம் – ஆதரவு
    கும்பம் – நிறைவு
    மீனம் – நன்மை

  • indru-prdhosha-naal

    அக்டோபர் 22
    விளம்பி வருடம் – ஐப்பசி 5
    பிரதோஷம்
    22-அக்-2018 திங்கள் ஸபர்12
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : திரையோதசி
    திதி நேரம் : திரையோதசி இ 10.22
    நட்சத்திரம் : பூரட்டாதி கா 8.07
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – லாபம்
    ரிஷபம் – ஆர்வம்
    மிதுனம் – நலம்
    கடனம் – சுகம்
    சிம்மம் – அன்பு
    கன்னி – நன்மை
    துலாம் – முயற்சி
    விருச்சிகம் – மேன்மை
    தனுசு – பொறுமை
    மகரம் – தடங்கல்
    கும்பம் – ஆதரவு
    மீனம் – நஷ்டம்

  • indraya-rasi-palan

    அக்டோபர் 21
    விளம்பி வருடம் – ஐப்பசி 4
    21-அக்-2018 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : துவாதசி
    திதி நேரம் : துவாதசி இ 9.15
    நட்சத்திரம் : சதயம் கா 8.01
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மகம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பிரீதி
    ரிஷபம் – நட்பு
    மிதுனம் – போட்டி
    கடனம் – ஆர்வம்
    சிம்மம் – மேன்மை
    கன்னி – பயம்
    துலாம் – இன்பம்
    விருச்சிகம் – நன்மை
    தனுசு – பெருமை
    மகரம் – நிறைவு
    கும்பம் – வெற்றி
    மீனம் – விவேகம்

  • thozhil-viruthiyaga-anjaneyar-koil

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே கொத்தப்புள்ளி கிராமத்தில் உள்ள கதிர்நரசிங்க பெருமாளை வழிபட்டால், ஜாதக ரீதியாக ஏற்படும் சூரியதிசை தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஆலயத்தில் சக்கரத்தாழ்வார் சன்னிதி உள்ளது. சதுரபலகை வடிவ கல்லில் தேவர்களுடன் சக்கரத்தாழ்வார் இருப்பது சிறப்பாகும்.

    கோர்ட்டு வழக்கு, வாகனத்தினால் வரும் விபத்து ஆகிய வற்றில் இருந்து பக்தர்களை காப்பாற்றுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். சக்கரத்தாழ்வார் சன்னிதியின் பின்புறத்தில் நரசிம்மர் உள்ளார். நரசிம்மரை வழிபட்டால் எதிரியின் பலம் குறையும். செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமைதோறும் மஞ்சள்பொடி, சந்தனம், இளநீர், பால் ஆகியவை மூலம் அபிஷேகம் செய்தால் காரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.

    மூலஸ்தானத்தின் கருவறையில் கமலவல்லி தாயார், லட்சுமி சமேத கதிர்நரசிங்க பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களை தன்வசப்படுத்தி, அவர்கள் கேட்ட வரங்களை பெருமாள் நிறைவேற்றி கொடுக்கிறார். அக்னி மூலைப் பகுதியில் வீரமகா ஆஞ்சநேயர் இருப்பது இங்குதான். பெருமாளை விட 6 மடங்கு பலம் கொண்டவராக ஆஞ்சநேயர் கருதப்படுகிறார். ஆஞ்சநேயரின் உடல்பகுதி கிழக்கு நோக்கியும், தலை வடக்கு நோக்கியும் உள்ளது.

    என்னிடம் வாருங்கள், அனைத்து காரியத்தையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லும் வகையில் வீர நடைபோட்டபடி ஆஞ்ச நேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சனிக்கிழமை தோறும் 9 வாரங்கள், 9 முறை தொடர்ச்சியாக ஆஞ்சநேயரை சுற்றி வலம் வந்தால், தாங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். திருமணமாகாத பெண்கள், ஆஞ்சநேயர் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும்.

    ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடைமாலை, வெண்ணெய் காப்பு, புஷ்ப அலங்காரம், காய்கறி அலங்காரம், பழவகைகள் அலங்காரம் ஆகியவற்றை நேர்த்திக்கடனாக பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். வாகனங்களுடன் கூடிய பைரவர் சன்னிதி இங்கு தான் உள்ளது. தொழில் ரீதியாக வேண்டுதல்களை நிறைவேற்ற பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு காலத்திலும், பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் 12 விளக்குகள் ஏற்றி வழிபடுவது சிறப்பு அம்சமாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு பூசணிக்காய் படைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி வழிபட்டால், அனைத்து தொழில்களும் சிறந்தோங்கும். வாகன விபத்து, நான்கு கால் ஜீவன்களால் ஏற்படும் ஆபத்து ஆகியவை நீங்கும் என்பது பக்தர்களின்நம்பிக்கை.

  • raagu-doshathal-thavippavargal

    தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும்.

    தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

    துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

    ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.

  • chandiranin-sabam-neekiya-siva-peruman

    தட்சனின் மகள்களான 27 பெண்களை சந்திரன் திருமணம் செய்தான். திருமணத்தின் போது, அனைத்து பெண்களிடமும் சமமாக அன்பு செலுத்துவேன் என்று உறுதியளித்த சந்திரன், ரோகிணியிடம் மட்டுமே அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்தான். இதனால் மற்ற பெண்கள் அனைவரும் கலங்கி நின்றனர். இதுபற்றி அறிந்த தட்சன், கோபத்தில் சந்திரனின் அழகு தேய்ந்து போகட்டும் என்று சாபம் கொடுத்தான்.

    சாபத்தின் பிடியில் சிக்கிய சந்திரன், சிவ பெருமானை தஞ்சம் அடைந்தான். இதையடுத்து சந்திரனுக்கு, தனது தலையில் அடைக்கலம் கொடுத்தார் சிவபெருமான். அவர் தன் தலையில் சந்திரனை சூட்டியதும், சந்திரன் வளரத் தொடங்கினான். இப்படி தான் தேய்பிறை- வளர்பிறை உருவானது.

    சந்திரனை, சிவபெருமான் தனது திருமுடியில் அமர்த்தியது ஒரு சோமவார தினத்தில் தான். ‘14 ஆண்டுகள் தொடர்ச்சியாக சோமவாரம் பூஜை செய்யும் கணவன்- மனைவிக்கு முக்தி கிடைக்க வழி செய்ய வேண்டும்’ என்று சந்திரன், ஈசனை வேண்டிக்கொண்டான். அவனது விருப்பத்தை சிவபெருமான் நிறைவேற்றினார். ஆம்.. நாம் தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் சோமவார விரதத்தைக் கடைப்பிடித்தால், இறைவனின் திருப்பாதத்தை அடையலாம்.