Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • indru-suba-mhoortha-naal

    அக்டோபர் 28
    விளம்பி வருடம் – ஐப்பசி 11
    28-அக்-2018 ஞாயிறு
    வாஸ்து நாள்(காலை 7.44 – 8.20)
    சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : சதுர்த்தி மா 6.38
    நட்சத்திரம் : ரோகிணி கா 9.31
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அனுஷம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – இன்சொல்
    ரிஷபம் – வெற்றி
    மிதுனம் – பக்தி
    கடனம் – ஓய்வு
    சிம்மம் – முயற்சி
    கன்னி – சந்தேகம்
    துலாம் – ஊக்கம்
    விருச்சிகம் – பாசம்
    தனுசு – ஆக்கம்
    மகரம் – தனம்
    கும்பம் – குழப்பம்
    மீனம் – நன்மை

  • thiruvanaika-koil-palalayam

    திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, பாலாலயம் நடைபெற்றது.

    திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுமார் ரூ.5 கோடியில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, கோயில் கோபுரங்கள் புணரமைப்புப் பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது. 95 சதவீதப் பணிகள் முடிவுற்ற நிலையில் 2 கட்டமாக கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

    அதனைத் தொடர்ந்து, கோயிலில் உள்ள பரிவார தேவதைகளுக்கு வெளி நடராஜர் சன்னதியில் முதல் கால பாலாலயம் நடைபெற்றது. அக்டோபர் 28 ஆம் தேதி இரண்டாம் கால பாலாலயம் நடை பெறுகிறது. இதையடுத்து, முதல்கட்டமாக பரிவார தேவதைகளுக்கான மகா கும்பாபிஷேகம் டிச.9ஆம் தேதியும், சுவாமி, அம்மனுக்கு 2ஆம் கட்டமாக டிச.12ஆம் தேதி நடைபெறுகிறது.

     

  • indraya-rasi-palan

    அக்டோபர் 27
    விளம்பி வருடம் – ஐப்பசி 10
    27-அக்-2018 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : திரிதியை
    திதி நேரம் : திரிதியை இ 8.19
    நட்சத்திரம் : கார்த்திகை கா 10.22
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : விசாகம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வெற்றி
    ரிஷபம் – பயம்
    மிதுனம் – கவலை
    கடனம் – ஆதாயம்
    சிம்மம் – பீடை
    கன்னி – மகிழ்ச்சி
    துலாம் – நன்மை
    விருச்சிகம் – அமைதி
    தனுசு – தாமதம்
    மகரம் – நோய்
    கும்பம் – புகழ்
    மீனம் – தடங்கல்

  • mana-nooi-agatrum-thiruvidai-maruthur

    சிவ பெருமான் தன்னைதானே பூஜித்து,வழிபட்ட லிங்கமானதால் இவர் “மகாலிங்கமானார்”. இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர்.

    மன நோய் கொண்டுள்ளோர், இத்திருக்கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார்10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம்.

    புற்றுநோய் தீர்க்கும் ” திருந்து தேவன் குடி அருமருந்தம்மை :

    கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் ” திருந்துதேவன்குடியின் ” நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்து அம்மை. இங்கு,அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய்,பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி.

    அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம்,வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

  • perumal-sayana-thalangal

    மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் அவசியம் தரிசிக்கவேண்டும்.

    அனைத்து தலங்களையும் தரிசிக்க முடியாவிட்டாலும் தங்களால் எத்தனை முடியுமோ அத்தனை தலங்களை தரிசிக்கவேண்டும்.

    ஸ்ரீரங்கம் – வீர சயனம்
    மகாபலிபுரம் – தல சயனம்
    திருமயம் – போக சயனம்
    திருக்கோஷ்டியூர் – பால சயனம்
    கும்பகோணம் – உத்தான சயனம்
    திருவனந்தபுரம் – அனந்த சயனம்
    திருமோகூர் – பிரார்த்தனா சயனம்
    திருப்புல்லாணி – தர்ப்ப சயனம்
    திருச்சித்திரக்கூடம் – போக சயனம்
    திருநீர்மலை – மாணிக்க சயனம்
    ஸ்ரீவில்லிபுத்தூர் – வடபத்திர சயனம்

    திருமாலின் சயனங்கள் 10 வகைப்படும். அவைகள்:

    1. ஜல சயனம்
    2. தல சயனம்
    3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
    4. உத்தியோக சயனம்
    5. வீர சயனம்
    6. போக சயனம்
    7. தர்ப்ப சயனம்
    8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
    9. மாணிக்க சயனம்
    10. உத்தான சயனம்

  • thirupathyil-plastic-ban

    திருப்பதி திருமலையில், நவம்பர் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதிக்க உள்ளது.

    திருமலை திருப்பதிக்குத் தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் பல மாநிலங்களிலிருந்தும் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களுக்காக சுவாமி தரிசனம், தங்குவதற்கு அறை வசதி, உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஆகியவற்றுக்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பான முறையில் பல ஏற்பாடுகளைச் செய்து தருகிறது.

    அரசு விடுமுறை நாள்கள், பிரம்மோற்சவம் போன்ற விழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடுகின்றனர். இதனால் அங்கு டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றன. அவற்றை அப்புறப்படுத்துவதிலும் சிரமங்கள் உள்ளன. மேலும் சுற்றுசூழலுக்கும் அவை தீங்கு விளைவிக்கின்றன.

    எனவே, 50 மைக்ரானுக்கும் கீழ் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், 2 லிட்டருக்கும் குறைவான குடிநீர் பாட்டில்கள், தேனீர், காபி அருந்த பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் பூச்சு கொண்ட பேப்பர் கப்புகள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து திருமலையில் உள்ள உணவகம் மற்றும் கடை உரிமையாளர்களிடம் தேவஸ்தான அதிகாரிகள் கலந்துரையாடினர். அதில் திருமலையில் கற்கண்டு, பேரீச்சம்பழம், கடவுள் படங்கள், பைகள் உள்ளிட்டவை பிளாஸ்டிக் கவர்கள் சுற்றி விற்பனை செய்யப்படுகிறது. இனி அவற்றை தவிர்க்க வேண்டும்.

    திருமலையில் உள்ள உணவகங்களிலும் தேநீர், காபி, பால் அருந்துவதற்கு பிளாஸ்டிக்கினால் ஆன கப்புகள், கவர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது என்று அதிகாரிகள் அவர்களிடையே அறிவுறுத்தினர். திருமலைக்கு வரும் பக்தர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சுற்றுசூழல் மாசுபாட்டைத் தவிர்ப்பதுடன், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • sri-sankara-rameswarar-koil-ippasi

    தூத்துக்குடி சிவன் கோயிலான ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. ஆலய பட்டாச்சாரியார் செல்வம் பட்டர் தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து, அம்பாள் – சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், இரவில் பித்தளை சப்பரத்தில் அம்பாள் வீதியுலா உள்ளிட்டவை நடைபெற்றன. திருவிழாவையொட்டி நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், வீதியுலா நடைபெறுகிறது.
    9ஆம் திருநாளான நவ. 2ஆம் தேதி காலை 9 மணிக்கு ஸ்ரீ பாகம்பிரியாள் அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெறுகிறது. 4 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பாகம்பிரியாள் – சங்கரராமேஸ்வரர் திருக்கல்யாணமும், இரவு 9.30 மணிக்கு சுவாமி – அம்பாள் பட்டணப் பிரவேசமும் நடைபெறுகிறது.

  • sri-rangathil-vaikunda-egadasi-pandhakal

    வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பந்தல்கால் நடப்பட்டது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 7-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 8-ந் தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது. 17-ந் தேதி மோகினி அலங்காரமும், 18-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பும் நடைபெறுகிறது.

    24-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 25-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 27-ந்தேதி தீர்த்தவாரியும், 28-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

    இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேள, நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானை ஆண்டாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் நின்றபடி மரியாதை செலுத்தியது. தொடர்ந்து முகூர்த்த பந்தல்காலில் புனிதநீர் ஊற்றி, சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பந்தல்காலை கோவில் பணியாளர்கள் நட்டனர்.

  • indru-magizhci-adayum-rasigal

    அக்டோபர் 26
    விளம்பி வருடம் – ஐப்பசி 9
    கார்த்திகை
    26-அக்-2018 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : துவிதியை
    திதி நேரம் : துவிதியை இ 9.40
    நட்சத்திரம் : பரணி கா 10.51
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : சுவாதி
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நட்பு
    ரிஷபம் – நலம்
    மிதுனம் – நன்மை
    கடனம் – லாபம்
    சிம்மம் – செலவு
    கன்னி – அன்பு
    துலாம் – தடங்கல்
    விருச்சிகம் – மகிழ்ச்சி
    தனுசு – ஆதாயம்
    மகரம் – சிக்கல்
    கும்பம் – தாமதம்
    மீனம் – நோய்

  • thirupathy-sirappu-darisana-murayil-mattram

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 65 வயது நிரம்பிய முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் குன்றியோர் ஆகியோருக்கு சிறப்பு தரிசன முறையை தேவஸ்தானம் அமல்படுத்தி வருகிறது.

    அதன்படி, வாரம்தோறும் புதன்கிழமைகளில் காலை 10 மணிக்கு 700 பேர், மதியம் 3 மணிக்கு 700 பேர் என 1,400 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. அதே போல் வெள்ளிக்கிழமைகளில் மாலை 3 மணிக்கு 700 பேர் இந்த சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்

    இதற்காக திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா அருங்காட்சியகத்திற்கு எதிரே 7 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

    இந்த நிலையில் புதன்கிழமைகளில் காலை 10 மணிக்கு செல்லும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு இன்று அறிவித்தார்.

    மாற்று நடவடிக்கையாக புதன்கிழமைகளில் மதியம் 3 மணிக்கு 700 பேருக்கு பதிலாக 1000 பக்தர்கள் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.

    மேலும் திருமலையில் பக்தர்களின் கூட்டம் குறைவாக இருக்கும் நாட்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் 4000 பேர் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

    அதன்படி மாத்தின் 2 நாட்களில் காலை 10 மணிக்கு 1000 பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர் மற்றும் மதியம் 3 மணிக்கு 1000 பேர் என்கிற முறையில் இந்த சிறப்பு தரிசனம் நடைபெறும் என்றார்.

    எனவே கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படாமல் இருக்க முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஸ்ரீநிவாச ராஜு கேட்டுக்கொண்டார்.