Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • thiruchenduril-november-13-soora-samharam

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, வருகிற நவம்பர் 13 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டதில்மிகவும் பிரசித்தி பெற்றதிருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் நவம்பர் மாதத்தில்சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. சுமார் 10 நாட்களுக்கு மேல் நடக்கும் இவ்விழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் கூட்டம் அலைபோதும்.

    முக்கியமாக சூரசம்ஹாசம் நடைபெறும் நவம்பர் 13ஆம் தேதிஅன்று அம்மாவட்டத்திற்குஒவ்வொரு வருடமும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, வருகிற நவம்பர்13ஆம் தேதிதூத்துக்குடி மாவட்டத்திற்குஉள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்சந்தீப்நந்தூரிஉத்தரவிட்டுள்ளார்.

  • sabari-malai-munpadhivu-seyya-mundhungal

    சபரிமலை ஐயப்பன் கோவில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறையை கேரள போலீஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். வரும் 16-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், தரிசனத்துக்கான தேதி மற்றும் நேரத்தை ஆன்லைன் மூலம் பதிவுசெய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மகர விளக்கு பூஜைக்காக வரும் 16-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள கேரள போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதன்படி, 4 கட்டங்களாக கமாண்டோக்கள், பெண் காவலர்கள் உள்ளிட்ட 24,000-க்கும் மேற்பட்டோரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நிலக்கல் முதல் சன்னிதானம் வரை குறைந்தபட்சம் 5,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த குறைந்தபட்சம் 100 போலீஸாரையாவது அனுப்புமாறு தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கேரள போலீஸார் கடிதம் எழுதியுள்ளனர்.

    இதேபோல, தரிசனத்துக்கு ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. www.sabarimalaq.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இதேபோல, நிலக்கல் பகுதியிலிருந்து பம்பை-க்கு பேருந்து சேவைக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக வலைதளத்தில் லாக்கின் செய்து தங்களது பெயர், வயது, முகவரி ஆகிய தகவல்களுடன் புகைப்படத்தையும் சேர்க்க வேண்டும்.

    ஒருவர் அதிகபட்சம் 10 டிக்கெட்டுகளை முன்பதிவுசெய்ய முடியும். டிக்கெட்டை பிரின்ட் அவுட் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேரள போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். முன்பதிவு செய்யும் பேருந்து டிக்கெட்டுகள், பம்பையிலிருந்து நிலக்கல் திரும்பி வருவதற்கு 48 மணிநேரத்துக்கு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வாகனங்கள், நிலக்கல் பகுதிவரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், பக்தர்கள் கேஎஸ்ஆர்டிசி பேருந்து மூலம் பம்பை-க்கு செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • thirumalaiyil-plastic-ban

    திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த அக்டோபர் 2ம் தேதி, ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது திருப்பதியின் திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்ப்டுவதாக தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமலையில் வரும் நவம்பர் 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்கிறது. உத்தரவை மீறுவோருக்கு ரூ. 5000 முதல் ரூ. 25,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.

    திருமலையில் இயங்கும் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் உரிமும் ரத்து செய்யப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் தேவஸ்தானத்தில் இந்த முடிவுக்கு பக்தர்கள், கடை உரிமையாளர்கல் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • indraya-rasi-palangal

    அக்டோபர் 31
    விளம்பி வருடம் – ஐப்பசி 14
    31-அக்-2018 புதன்
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : சப்தமி ம 12.10
    நட்சத்திரம் : பூசம் இ 3.47
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூராடம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – முயற்சி
    ரிஷபம் – சுகம்
    மிதுனம் – நட்பு
    கடனம் – மறதி
    சிம்மம் – நிம்மதி
    கன்னி – சாதனை
    துலாம் – ஆர்வம்
    விருச்சிகம் – லாபம்
    தனுசு – பொறுமை
    மகரம் – வீம்பு
    கும்பம் – ஆக்கம்
    மீனம் – ஆதாயம்

  • pirindirukkum-thambadiyar-ondru-sera-sri-vanjiyam

    மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள “ஸ்ரீவாஞ்சியம்”.

    காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும்.

    இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழி பட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும்.

    ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.

     

  • koyilukkul-irukkum-shakthi

    சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும் போதே , உங்கள் உள்ளுணர்வு அந்தகோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம ,கர்ம வினைகள் நிச்சயம் அகலும்.

    எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும், கலக்கம் வேண்டாம். அதே நேரத்தில் , உங்களால் மிகத் திருப்தியாக பூஜை , அபிசேகம், அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று கூட மனக்கலக்கம் வேண்டாம்.ஒரு அர்ச்சனை கூட செய்ய வேண்டாம்.. ஒரே ஒரு விஷயம் மட்டும் தவறாமல் செய்யுங்கள்…

    மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்த படியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ – அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் – ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து ,மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். முடிந்தால் மனதுக்குள் – ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ஜெபிக்கலாம், அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம். ஸ்ரீ ருத்ரம் ஜெபிக்கலாம்.

    சில சமயங்களில் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் , குறைந்த பட்சம் 12 நிமிடங்களாவது , அமர்ந்து வாருங்கள். இறைவனின் சிருஷ்டியில் எல்லா நாளும், நேரமும் புனிதமானதே. ஒரு சில மணித்துளிகள் மட்டும் , பலப் பல காரணங்களால் – மிக சக்திவாய்ந்த தருணங்கள் ஆகி விடுகின்றன.

  • vinayagarai-vaithu-vananga-vendiya-disai

    அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் முதன்மையாக இருக்கும் விநாயகரை நாம் மங்கலகரமான விழாக்களின் போது பெரும்பாலும் வீட்டில் ஹால் அல்லது பூஜை அறையில் வைத்து தான் வணாங்குவோம்.

    விநாயகரை வாஸ்து சாஸ்திரத்தின்படி வைத்து வணங்கினால் அவரின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும். விநாயகரின் தும்பிக்கையானது எப்போதும் இடதுபுறமுள்ள அவரின் தாயார் கௌரியை பார்த்த வண்ணமே இருக்க வேண்டும்.

    விநாயகரின் பின்புறமானது வீட்டின் எந்த ஒரு அறையினையும் பார்த்தப்படி இருக்கக்கூடாது. ஏனெனில் அவரின் பின்புறம் வறுமையினை குறிக்கும் என்பதால் வீட்டின் வெளிப்புறத்தினை பார்த்தப்படி தான் இருக்க வேண்டும்.

    தென்புற திசையில் விநாயகரை வைத்து வணங்க கூடாது. கிழக்கு அல்லது மேற்கு புறமாக தான் வைத்து வணங்கவேண்டும். கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவரை நோக்கி விநாயகரை வைக்கக்கூடாது. அதே போன்று அந்த சுவரில் சாய்த்தும் வைக்கக்கூடாது.

    உலோகத்தில் செய்யப்பட்ட விநாயகர் என்றால் கிழக்கு அல்லது மேற்கு திசையினை பார்த்து வைத்து வணங்கவேண்டும். வடகிழக்கு மூலையில் வைத்து வணங்குவது இன்னும் சிறப்பான பலனை தரும்.

    வீட்டிற்குள்ளாக மாடிப்படி இருந்தால் அதற்கு அடியில் விநாயகரை வைக்கக்கூடாது. ஏனெனில் மாடிப்படிகளில் ஏறி நடப்பது அவரின் தலை மீது ஏறி நடப்பதை போன்றதாகும். இது துரதிர்ஷ்டத்தினை ஏற்படுத்தும்.

  • kumari-venkatachalapathy-koil

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஐந்தரை ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.24 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டப்பட்டு வருகிறது.

    வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது தவிர கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்கு பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. தற்போது கோயில் கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்பணிகளை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை பொறியாளர் சந்திரசேகர ரெட்டி தலைமையில் பொறியியல் துறை தலைமை அதிகாரி மற்றும் ஆலோசகர் கொண்டலராவ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை பொறியாளர் சந்திரசேகர ரெட்டி கூறியதாவது….

    இந்தியா முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 6 இடங்களில் கோயில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 22.5 கோடி மதிப்பீட்டில் கோயில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் வரும் டிசம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் என்று நடத்துவது என்பதை தேவஸ்தானம் முடிவு செய்யும். கோயிலுக்கு வருவதற்கு இணைப்பு சாலை பணிகள் தற்போது நடந்து வருகிறது என்றார்.

  • indraya-rasi-palan

    அக்டோபர் 30
    விளம்பி வருடம் – ஐப்பசி 13
    30-அக்-2018 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் : சஷ்டி ம 2.29
    நட்சத்திரம் : திருவாதிரை கா 6.58
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மூலம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – லாபம்
    ரிஷபம் – ஆதரவு
    மிதுனம் – சாந்தம்
    கடனம் – பொறுமை
    சிம்மம் – வீம்பு
    கன்னி – நற்செயல்
    துலாம் – திறமை
    விருச்சிகம் – சாதனை
    தனுசு – உற்சாகம்
    மகரம் – சந்தேகம்
    கும்பம் – ஆதாயம்
    மீனம் – பாராட்டு

  • palani-murugan-koil-kandasasti

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 8-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது. 7 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் போது, தினசரி சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    6-ம் திருநாளான நவம்பர் 13-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்றைய தினம் மதியம் 3 மணிக்கு மேல் மலைக்கொழுந்து அம்மனிடம் விசேஷ பூஜைக்கு பின்பு வேல் வாங்கும் நிகழ்ச்சியும், பின்னர் சின்னக்குமாரர், வில்-அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட அயுதங்களுடன் வீரபாகு, நவவீரர்களுடன் சேர்ந்து போருக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    அதன் பின்னர் மலைக் கோவிலில் நடை அடைக்கப்படும். தொடர்ந்து சின்னக்குமாரர், தங்க சப்பரத்தில் எழுந்தருளி பாதவிநாயகர் கோவில் வந்து அடைதல் நிகழ்ச்சியும், பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் பாதவிநாயகர் கோவில் வந்தடையும் நிகழ்ச்சியும் நடைபெறும். அதனை தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலில் குழந்தை வேலாயுத சுவாமியிடம் சக்திவேல் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்படும். பின்னர் சக்திவேல் பாதவிநாயகர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு பெரிய தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரரிடம் வைத்து தீபாராதனை நடத்தப்பட்டு போருக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும்.

    மாலை 6 மணிக்கு மேல் அடிவாரம் வடக்கு கிரிவீதியில் யானைமுக சூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோப சூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறும். முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் இந்திர விமானத்தில் எழுந்தருளலும், சின்னக்குமாரர் சந்திப்பும், தீபாராதனையும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழாவும் இரவு 9 மணிக்கு மேல் மலைக்கோவில் சம்ரோஜனை பூஜைக்கு பின்பு ராக்கால பூஜையும் நடைபெறும்.

    விழாவின் 7-ம் திருநாளான வருகிற 14-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் இணை ஆனையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.