Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • indraya-naal-eppadi

    நவம்பர் 2
    விளம்பி வருடம் – ஐப்பசி 16
    02-நவ-2018 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : தசமி
    திதி நேரம் : நவமி கா 7.31
    நட்சத்திரம் : மகம் இ 12.35
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவோணம்,அவிட்டம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சோதனை
    ரிஷபம் – சிந்தனை
    மிதுனம் – துன்பம்
    கடனம் – ஏமாற்றம்
    சிம்மம் – சிரமம்
    கன்னி – நம்பு
    துலாம் – பொறுமை
    விருச்சிகம் – உதவி
    தனுசு – ஊக்கம்
    மகரம் – ஓய்வு
    கும்பம் – சுகம்
    மீனம் – கவனம்

  • mullu-murukku

    முள்ளு முறுக்கு செய்ய என்னென்ன தேவை?

    பச்சரிசி – 3 கப்,
    கடலைப் பருப்பு – 1 கப்,
    பயத்தம் பருப்பு – 1/4 கப்,
    எள் தேய்த்து காய்ந்தது – 1/2 டீஸ்பூன்,
    சீரகம் – 1/2 டீஸ்பூன்,
    கட்டி பெருங்காயம் – சிறிதளவு,
    வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
    உப்பு – தேவைக்கு,
    எண்ணெய் – பொரிப்பதற்கு.

    எப்படிச் செய்வது?

    சுத்தம் செய்து கழுவி காய வைத்த அரிசி, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு மூன்றையும் மெஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் உப்பு, பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.

     
    பிறகு வெண்ணெய், எள், சீரகம், தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும். முள் முறுக்கு அச்சில் தேவையான மாவைப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும்.
     
    பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
    மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து செய்யவும்.
     
  • deepavalikku-vidha-vidhamana-rava-laddu

    ரவா லட்டு செள்ள என்னென்ன தேவை?

    பாம்பே ரவை – 1/2 கிலோ,
    சர்க்கரை – 1/2 கிலோ,
    ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்,
    முந்திரி, திராட்சை – தலா 50 கிராம்,
    நெய் – 1/4 கிலோ அல்லது தேவைக்கு.

    செய்முறை

    ரவையை வெறும் கடாயில் நிறம் மாறாமல் வறுக்கவும். சர்க்கரையை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வறுத்து உடைத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூளுடன் கலக்கவும்.

    இப்போது வறுத்த ரவை, பொடித்த சர்க்கரை, ஏலக்காய் தூள், உடைத்த முந்திரி, திராட்சை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். நெய்யைக் காய்ச்சி அதில் சிறிது, சிறிதாக ஊற்றி உருண்டை உருட்டும் பதத்துக்கு வந்ததும் நெய் ஊற்றுவதை நிறுத்தி விடவும். சூடாக இருக்கும் போதே உருண்டைகளாகப் பிடிக்கவும்.

    ரவையை பொடித்தும் ரவா லாடு செய்யலாம். இத்துடன் சிலர் 1/2 கப் வறுத்துப் பொடித்த பாசிப் பருப்பு தூள் சேர்த்தும் செய்கிறார்கள். சிலர் வறுத்த தேங்காய் சேர்த்தும் செய்வார்கள். ஆனால், உருண்டை பிடிக்க நெய் சூடாக இருக்க வேண்டும்.

  • dewali-spl-wheet-halwa

    கோதுமை அல்வா செய்ய என்னென்ன தேவை?

    சம்பா கோதுமை – 1/4 கிலோ,
    சர்க்கரை – 1/2 கிலோ,
    நெய் – 1/4 கிலோ,
    முந்திரி – 25,
    ஏலக்காய் தூள் – சிறிதளவு,
    ஆரஞ்சு கலர் பவுடர் – சிறிது.

    எப்படிச் செய்வது?

    சம்பா கோதுமையை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து மசிய அரைத்து ஒரு மெல்லிய சுத்தமான துணியில் வடிகட்டி, பால் எடுக்கவும். அந்தப் பாலை 8 மணி நேரம் பாத்திரத்தில் அப்படியே வைத்திருக்கவும்.

    அடியில் கெட்டியாக தங்கி, நீர் மேலே தெளிந்து நிற்கும். அந்த நீரை எடுத்து விடவும். கோதுமைப் பாலில் சர்க்கரை சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கரண்டியில் ஒட்டும் போது கலர் பவுடர் சேர்க்கவும்.

    பின் சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதம் வந்ததும் வறுத்து உடைத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். ருசியான கோதுமை அல்வா ரெடி.

  • suvaiyana-sweet-somas

    சோமாஸ் செய்ய தேவையான பொருட்கள்
    மேல் மாவுக்கு…
    மைதா – 250 கிராம்,
    ரவை – 1/2 கப்,
    நெய் – 1 டீஸ்பூன்.

    பூரணம் செய்ய…

    கசகசா – 1 டேபிள்ஸ்பூன், பொடித்த பொட்டுக் கடலை – 1/2 கப், பொடித்த சர்க்கரை – 1 கப், வறுத்து நறுக்கிய முந்திரி – தேவைக்கு, கொப்பரை தேங்காய் – 1 மூடி (துருவிக் கொள்ளவும்), ஏலக்காய் – தேவைக்கு, எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.

    செய்முறை

    மேல் மாவுக்குக் கொடுத்ததை சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து ஈரத் துணி போட்டு மூடி வைக்கவும். கசகசாவை வறுத்து பொடிக்கவும். அத்துடன் பூரணத்துக்குக் கொடுத்த அனைத்தையும் சேர்த்து பூரணம் தயாரித்துக் கொள்ளவும். பிசைந்து வைத்த மைதா மாவை பூரிகளாக இட்டு, சோமாஸ் அச்சில் வைத்து சோமாஸ் வடிவம் கொடுக்கவும். இதனுடன் தேவையான பூரணத்தை வைத்து மூடி எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

    (அச்சு இல்லாமலும் செய்யலாம். அல்லது பூரியின் மத்தியில் வைத்து மடித்து, சோமாஸ் கட்டரால் ஓரங்களை வெட்டியும் செய்யலாம். இதுதான் பாரம்பரிய சோமாஸ்.

  • deepavali-special-ghee-mysurpa

    தேவையான பொருட்கள்
    கடலை மாவு – 1 கப்,
    சர்க்கரை – 2 கப்,
    நெய் – 3 கப்,
    தண்ணீர் – 1 கப்.

    எப்படிச் செய்வது?

    கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பதத்துக்கு வந்ததும் (ஒரு நூல் கம்பி பதம்) கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும்.

    அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். மாவும் பாகும் நுரைத்துப் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். தட்டை ஆட்டக்கூடாது. அப்படியே செட்டாக விட வேண்டும்.

    அப்போதுதான் சூடான ட்ரெடிஷனல் மைசூர் பாகாக வரும். சிறிது சூடாக இருக்கும்போதே கத்தியால் துண்டுகள் போடவும்.

  • karanam-illamal-kariyam-illai

    நீண்ட நாட்களாக பலர் மனதில் இருந்த கேள்விகளுக்கு பதில்…….

    பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி
    பல்வேறு சேவைகள் புரிந்து இறுதி வரை அவருடனே இருந்தவர் உத்தவர்.

    இவர் தனது வாழ்நாளில், தனக்கென எந்தவிதமான உதவியோ நன்மைகளோ
    வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.
    துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில்,உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், “உத்தவரே,இந்தஅவதாரத்தில் பலர்
    என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.
    ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை.
    ஏதாவது கேளுங்கள்,தருகிறேன்.
    உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்” என்றார்.

    தனக்கென எதையும் கேட்காவிட்டாலும், சிறு வயது முதலே கண்ணனின் செயல்களை உற்று கவனித்து வந்த உத்தவருக்கு,சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த பல கண்ணனின் லீலைகள்,புரியாத புதிராகவே இறுதிவரை இருந்தன.அவற்றுக்கான தனக்கு புரியாத காரண காரியங்களைத்
    தெரிந்து கொள்ள விரும்பினார்.
    “பெருமானே ! நீ வாழச் சொன்ன வழி வேறு; நீ வாழ்ந்து காட்டிய வழி
    வேறு ! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்ற பாத்திரத்தில்,நீ புரிந்த செயல்களில், எனக்குப் புரியாத பல விஷயங்கள் உண்டு.அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக
    இருக்கிறேன்.

    நிறைவேற்றுவாயா ?” என்றார் உத்தவர்.
    உத்தவர் கேட்க ஆரம்பித்தார்:”கண்ணா ! 
    முதலில் எனக்கு ஒருவிளக்கம்வேண்டும்.
    கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.உன்னைஅவர்கள்ஆபத்பாந்தவனாக, கடைசி வரை பரிபூரணமாக நம்பினார்கள்.நடப்பவை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் முன் கூட்டியே நன்கறிந்தஞானியான நீ , உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்தவிளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று, தருமா! வேண்டாம்இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்
    அப்படிச் செய்யவில்லை? போகட்டும்.
    விளையாட ஆரம்பித்ததும்,தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து, வஞ்சகர்களுக்குநீதிபாடம் புகட்டியிருக்கலாம்.

    அதையும் நீ செய்யவில்லை.

    தருமன்
    செல்வத்தை இழந்தான், நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான்.
    சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
    தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள்
    நுழைந்து தடுத்திருக்கலாம்.

    அதையும் நீ செய்யவில்லை.’

    திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். குல தேவதை அவளைப் பணயம் வைத்து ஆடு.இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால்
    விட்டான் – துரியோதனன்.அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால்,
    அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக
    விழும்படி செய்திருக்கலாம்.

    அதையும் நீ செய்யவில்லை.

    மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலைஏற்பட்ட போது தான் சென்று,
    ‘துகில் தந்தேன்,திரௌபதி மானம் காத்தேன்’ ஆடை தந்தேன், என்று ஜம்பமாக மார்தட்டிக் கொண்டாய்.
    மாற்றான் ஒருவன்,குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர் சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய
    மானம் என்ன அவளிடம் இருக்கிறது? அவள் அப்போதே இறந்து விட்டாள் உயிர் மட்டுமே ஊசலாடியது,எதனைக் காத்ததாக எண்ணி நீ பெருமைப்
    படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன் தானே ஆபத்பாந்தவன்?
    ஆபத்தான இது போன்றசமயத்தில் உன் பக்தர்களுக்கு உதவாத, நீ எப்படி ஆபத்பாந்தவன் ?

    நீ செய்தது நியாயமா!தருமமா ?’

    என்று மிகக் கடுமையாக குரலில் குழம்பிய மன நிலையில் கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.இது உத்தவரின் உள்ளக் குமுறல்மட்டுமன்று,மகாபாரதம் படித்த நம் அனைவரின் உள்ளத்திலும் எழும் மனவலியோடு உணர்வு மிகுந்த கேள்விகளே இவை. நமக்காகஇவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர். பகவான் சிரித்தார்.!

    “உத்தவரே ! 
    விவேகம் உள்ளவனே ஜெயிக்க
    வேண்டும் என்பது உலக தர்ம நியதி.
    துரியோதனனுக்கு இருந்தவிவேகம் தருமனுக்கு இல்லை.அதனால்தான் தருமன் தோற்றான்”என்றார் கண்ணன்.
    உத்தவர் ஏதும் புரியாது அதிர்ச்சியுடன் திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தார்.

    “துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது. ஆனால், பணயம் வைக்கஅவனிடம் பணமும், ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. ‘பணயம்”நான் வைக்கிறேன்.
    என் மாமா சகுனி, பகடையை உருட்டிச்
    சூதாடுவார்’ என்றான் துரியோதனன். 
    அது விவேகம். தருமனும்அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு, நானும் பணயம்வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்பகடைக்காயை உருட்டுவான்’ என்று சொல்லியிருக்கலாமே!

    சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள் ?நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான் போடமுடியாதா ? போகட்டும். தருமன் என்னைஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான். என்பதையாவது
    மன்னித்து விடலாம்.ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான்.

    ‘ஐயோ ! விதி வசத்தால் சூதாட
    ஒப்புக் கொண்டேனே !ஆனால், இந்த விஷயம் கண்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே !அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்றுஎன்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு
    அவனே என்னை வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான். நான் அங்கு வரக் கூடாதெனஎன்னிடமே வேண்டிக் கொண்டான்.யாராவது தனது
    பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு வெகு நேரமாக காத்து நின்றேன்.

    பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,
    தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே !
    அண்ணன் ஆணையைநிறைவேற்ற துச்சாதனன் சென்று, திரௌபதியின் சிகையைப்பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா ? இல்லையே!.
    அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து வீண் வாதங்கள்செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கடைசி வரை கூப்பிடவேயில்லை !
    நல்லவேளை.. துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல்,
    ‘ஹரி… ஹரி… அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்றஅப்போது தான் உள்ளே செல்ல எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
    அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன்.
    இந்தச்சம்பவத்தில் என் மீது என்ன தவறு?” என்று பதிலளித்தான் கண்ணன்.

    “அருமையான விளக்கம் கண்ணா !
    அசந்து விட்டேன். ஆனால், ஏமாறவில்லை.உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா ?”என்றார் உத்தவர்.
    “கேள்” என்றான் கண்ணன். “அப்படியானால், கூப்பிட்டால் தான் நீ வருவாயா ? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில், கஷ்டங்களில் உதவ உன் அடியவர்களுக்கு வரமாட்டாயா ?”
    புன்னகைத்தான், கண்ணன்.

    “உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
    கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் ‘சாட்சி பூதம் மட்டுமே,நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே !அது தான் தெய்வ தர்மம்” என்றார். நன்றாயிருக்கிறது கிருஷ்ணா!
    அப்படியானால், நீ அருகில் நின்று,
    நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய்.நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    அப்படித்தானே?”என்றார் உத்தவர்.

    உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நீங்கள் நன்றாக உணர்ந்து பாருங்கள்.நான் சாட்சி பூதமாக உங்கள் அருகில் நிற்பதை
    நீங்கள் மனப்பூர்வமாக உண்மையில் உணரும் போது மட்டும் தான் உங்களால் தவறுகளையோ, தீவினை செயல்
    களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. 
    அதை நீங்கள் மறந்துவிடும் போதுதான்,
    எனக்குத் தெரியாமல் இது அது என ஏதாவது தீவினையை நான் உங்களுள் இருப்பதை மறைத்து எதையாவது செய்து விடலாம் என்று எண்ணி நீங்களாகவே முடிவெடுத்து செய்கிறீர்கள்.பாதிப்புக்கு உள்ளாக்கும்
    சம்பவங்கள் பெரும்பாலும் தவறாக நிகழ்வதும் அப்போதுதான்.
    எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.

    நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட
    நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?” என்றார். ஸ்ரீகிருஷ்ணன்.
    உத்தவர் வாயடைத்து, பக்திப்பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா! ஆகா! எத்தனை உள்ளர்த்தம் வாய்ந்த அருமையான ஆழமான தத்துவம்!

    பகவானைப் பூஜிப்பதும்,

    பிரார்த்தனை செய்வதும்,

    அவனைஉதவிக்கு அழைப்பதும்,

    ஓர் உணர்வுதானே !

    “அவனின்றி ஓர் அணுவும் அசையாது”

    என்ற நம்பிக்கை நமக்கு வரும்போது, அவன் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? 
    அதனை மறந்துவிட்டு எப்படிச்செயலாற்ற முடியும் ?

    இந்த தத்துவத்தை தான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
    அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.

    மொத்தத்தில் இறைவன் நமக்கு உணர்த்துவது யாதெனில் என்னை “சரணாகதி” அடைபவனுக்கு எந்த துன்பமும் இல்லை என்பதுதான்

     

  • dewali-special-adirasam

    தீபாவளி கொண்டாட்டத்தின்போது பட்டாசுக்கு அடுத்து நம் நினைவுக்கு வருவது பலகாரங்கள்தான். தீபாவளி வந்து விட்டால் போதும் வீடுகளில் பலகாரங்கள் செய்து அடுக்கிவிடுவார்கள். பாரம்பரிய மணம் கொண்ட தீபாவளி இனிப்புகளில் முதலிடம் அதிரசத்துக்குத்தான்…. எனவே முதலில் அதிரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்….

    என்னென்ன தேவை?
    பச்சரிசி மாவு – 2 கப்,
    வெல்லம் – 2 கப்,
    தண்ணீர் – 1 கப்,
    எண்ணெய் – தேவைக்கு,
    ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்.

    எப்படிச் செய்வது?

    வெல்லத்தைப் பொடித்து, தண்ணீரில் கரைத்து, கல், மண் போக வடிகட்டி, ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி பாகு காய்ச்சவும். முற்றின கம்பிப் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். உடனே அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக பாகில் கொட்டி கை விடாமல் கிளறவும்.

    ஏலக்காய் தூள் சேர்த்து, கிளறிய மாவை சுத்தமான வெள்ளைத் துணி போட்டு வாயை மூடி கட்டி தட்டாமல் வைக்கவும். மறுநாள் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழை  இலையில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டவும். தட்டியவற்றை எண்ணெயில் போட்டு நன்கு சிவந்தவுடன் எடுத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.

    முக்கிய குறிப்பு
    பச்சை அரிசியை ஊற வைத்து வடித்து, நிழலில் உலர்த்தி, மெஷினில் அரைத்து அதிரசம் செய்தால் மிருதுவாக இருக்கும். அதிரசத்துக்குப் பாகுதான் முக்கியம். ஒரு தட்டில் தண்ணீர் விட்டு 1/4 டீஸ்பூன் பாகை விட்டால் கரையாமல் இருக்க வேண்டும். இதுதான் சரியான பதம்.

  • indraya-rasi-palan

    நவம்பர் 1
    விளம்பி வருடம் – ஐப்பசி 15
    திருநெல்வேலி அம்மன் தேர்
    01-நவ-2018 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : நவமி
    திதி நேரம் : அஷ்டமி கா 8.52
    நட்சத்திரம் : ஆயில்யம் இ 2.10
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திராடம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – உழைப்பு
    ரிஷபம் – ஆர்வம்
    மிதுனம் – சாந்தம்
    கடனம் – சிரமம்
    சிம்மம் – வருத்தம்
    கன்னி – சினம்
    துலாம் – ஓய்வு
    விருச்சிகம் – மறதி
    தனுசு – ஏமாற்றம்
    மகரம் – நலம்
    கும்பம் – கவனம்
    மீனம் – பிரயாணம்

  • pune-pandurangan-temple

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் ஹட்ஷி என்னுமிடத்தில் உள்ளது பாண்டுரங்கன் கோயில். இதன் சிறப்பு, ஒரு குன்றின் மீது கோயில் மனதுக்கும் கண்களுக்கும் இதமான சூழ்நிலையில் அமைந்திருப்பதுதான்.

    இந்த இடம் சத்யசாய் டிரஸ்ட்டினால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கே விநாயகர், பாண்டுரங்கரின் விக்ரகங்களுடன், தியான மண்டபத்தில் ஷீரடி மற்றும் புட்டபர்த்தி பாபாவின் படங்களும் உள்ளன. குன்றின் மீதுள்ள கோயிலைச் சுற்றிலும், மலைகள் நிறைந்து மனதுக்கு இதமான அனுபவத்தைத் தருகின்றன.

    புட்டபர்த்தி சாய்பாபா பக்தர் ஒருவர், மலை மேலிருந்த தன் நிலத்தில் இந்தக் கோயில், தியான மண்டபம் மற்றும் பாபா தங்குவதற்கு ஒரு மஹாலையும் கட்டினாராம். கோயிலுக்கு இரு புறமும் பசுமையான புல்வெளி, குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சறுக்கு மரம் என பூங்கா, தாமரை, நீலோத்பல மலர்களுடன் இரண்டு சிறிய தடாகங்கள், மரத்தாலான நாற்காலிகள் என மிகவும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் பராமரித்து வருகின்றனர்.

    பாபா தங்குவதற்காகக் கட்டப்பட்ட மகால், வருடத்தில் ஒரு முறை மே மாத கடைசி 10 நாட்கள் திறக்கப்பட்டிருக்கும். அந்நாளில் பாபா பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்து பக்திப் பாடல்களைப் பாடுகின்றனர். அப்போது மட்டும் இந்த மகாலைச் சுற்றிப் பார்க்க அனுமதியளிக்கப்படுகிறது. இங்கே பாபா தங்கியிருந்த அறையில் நுழைந்ததும் நிறைந்த மன அமைதியை உணரலாம். இந்த மகாலை பூமியில் சொர்க்கம் என்கிறார்கள். பாண்டுரங்கர் கோயில் கொண்டதால் இந்த இடம் பூலோக வைகுந்தமாகவே மாறியுள்ளது.