Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • indraya-rasipalan

    நவம்பர் 6
    விளம்பி வருடம் – ஐப்பசி 20
    தீபாவளி

    (நீராட நல்ல நேரம் அதிகாலை 5:00 – 5:30 மணி)
    06-நவ-2018 செவ்வாய்
    கரிநாள்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : சதுர்த்தசி இ 10.51
    நட்சத்திரம் : சித்திரை இ 8.46
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி,ரேவதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நிம்மதி
    ரிஷபம் – நட்பு
    மிதுனம் – சுகம்
    கடனம் – ஆதாயம்
    சிம்மம் – தாமதம்
    கன்னி – விருப்பம்
    துலாம் – தடங்கல்
    விருச்சிகம் – சாந்தம்
    தனுசு – வெற்றி
    மகரம் – நன்மை
    கும்பம் – புகழ்
    மீனம் – பக்தி

  • lakshmi-kubera-poojai

    லட்சுமி குபேர பூஜையை, தீபாவளி அன்றோ அல்லது அதற்கு மறுநாளோ செய்ய வேண்டும். லட்சுமி குபேர பூஜை செய்தால் அளவற்ற செல்வமும், கல்வி அறிவும் கிடைக்கும். குபேரன், மிகச் சிறந்த சிவபக்தர். அமைதியான குணம் கொண்டவர். “ஏழ்மையான ஒருவன் பணக்காரனாக வேண்டு மென்றால், சாந்த குணம் தேவை.

    அவன் மற்ற பணக்காரர்களைப் பார்த்து ஏங்கக் கூடாது. அதற்குப் பதிலாக, பணக்காரர்களின் பின்னணியில் எந்த அளவுக்கு உழைப்பு இருக்கிறது என்று பார்க்க வேண்டும்” என்பதே குபேர தத்துவம். குபேரனுக்கு மொத்தம் 2 மனைவிகள்…

    ஒருத்தி பெயர் சங்க நிதி, மற்றொருத்தி பெயர் பதுமநிதி. இதில், சங்கநிதியின் கையில் எப்போதும் வலம்புரிச் சங்கு இருக்கும். செல்வச் செழிப்பைக் குறிக்கும் அடையாளம்தான் வலம்புரிச்சங்கு. பதும நிதி, தன் கையில் தாமரை வைத்திருப்பாள்.

    தாமரை, கல்வி அறிவைக் குறிப்பதாகும். இவர்கள் இருவரிடமும் தான், தன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் குபேரன் கொடுத்து வைத்துள்ளார். எனவே நீங்கள் குபேரனை வழிபடும் போது, சங்க நிதியையும் பதும நிதியையும் மறக்காமல் வழிபட வேண்டும்.

    தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.

    சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும்.

    பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.

  • dewali-salt-vanginal-adristam

    தீபாவளியன்று பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. எண்ணெய்-லட்சுமி; சிகைக்காய் – சரஸ்வதி; சந்தனம் – பூமாதேவி; குங்குமம் – கௌரி; தண்ணீர் – கங்கை; இனிப்புப் பலகாரம் – அமிர்தம்; நெருப்புப் பொறி – ஜீவாத்மா; புத்தாடை – மகாவிஷ்ணு

    தீபாவளியன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டமாகக் கருதப்படுகிறது. உப்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதிகம்.

    பசுவும் கன்றும் :
    புத்தாடைகள் அணிந்து கிருஷ்ணரையும் லட்சுமியையும் வழிபட வேண்டும். தீபாவளித் திருநாள் என்பது பூமாதேவியின் அம்சமான சத்யபாமா தன் மகன் நரகாசுரனை கொன்ற தினமாக கொண்டாடப்படுகிறது.

    தன் மகனைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக பசுவையும் கன்றையும் சேர்த்து சத்யபாமா பூஜித்தாக வரலாறு. நாமும் அவ்வாறு பசுவையும் கன்றையும் பூஜித்தால் நம் குழந்தைகள் நற்குணம் கொண்டவர்களாக வளர்வார்கள்.

  • deepavali-oil-thayarippu-murai

    தீபாவளிக்கு முதல் நாள் இரவு நல்லெண்ணெயில் மிளகாய், மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் தட்டிப்போட்டு காய்ச்சி தயார் செய்து கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலை தலை உடல் எல்லாம் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

    மிளகாய் வாயுவை அடக்கும். மிளகு, சீரகம் ஜீரணத்துக்கு உதவும் இஞ்சி பித்தத்தை தணிக்கும். மஞ்சள் குளிர்ச்சியை தரும். தலையில் எண்ணெய்யை அழுந்த தேய்த்து சீயக்காய் தேய்த்து குளிப்பது உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சி தரும்.

    அதிகாலை நீராட வேண்டும் என்பதால் அன்று வெந்நீரில் நீராட வேண்டும். ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் நீராடினால் கூடுதல் சிறப்பு.

    கங்கா ஸ்நானம் :
    தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்றும் சொல்வார்கள். இதற்கு கங்கா ஸ்நானம் என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா?

    அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால், நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை. கிருஷ்ணன், நரகாசுரனை அழித்த நாளே தீபாவளி. அன்று, சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்துக்கும், கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின் படி, அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும், கங்கை நீராகவே பாவிக்கப்படும்.

    இதனால் தான், தீபாவளி அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் என்று சொல்கிறார்கள்.

    ஏன் அதிகாலை ?
    எப்போதும் சூரிய உதயத்திற்கு பின்னர் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள் ஆனால் தீபாவளியன்று மட்டும் சூரிய உதயத்திற்கு முன்னரே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது ஏன் தெரியுமா?

    பூமாதேவி தனது மகனான நரகாசுரனைக் கண்டு கொள்ளாமல், அவன் போக்கில் விட்டதால்தான், அவன் கொடுமைக்காரனாக மாறி, பலரையும் துன்புறுத்தி அதில் இன்பம் கொண்டு மகிழ்ந்தான் என்று நினைத்தார். இனிமேல் தங்கள் பிள்ளைகளை அவர்கள் விருப்பம் போல் நடக்கவிட்டு, தவறு செய்வதற்கு யாரும் காரணமாகி விடக்கூடாது என்று கருதினார்.

    எனவே, ஏதாவது வித்தியாசமாகச் செய்தால்தான், நரகாசுரனைப் பற்றி மக்கள் நினைப்பார்கள். அவனைப் போல நம் பிள்ளைகளையும் அதிகமாகச் செல்லம் கொடுத்து கெடுத்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்கள் என நினைத்தார்.

    எனவே, சூரியன் உதயமாவதற்கு ஒரு முகூர்த்த நேரத்தில் கங்கா குளியல் செய்திட வேண்டும் என்று ஒரு விதிவிலக்கான வரத்தைப் பெற்றார். இதனால், தீபாவளியன்று கங்கா குளியலுக்கான நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ குளிப்பது தவறானதாகக் கருதப்படுகிறது.

    இதோடு நரகாசுரனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நேரம் அதிகாலை என்பதால் தீபாவளி திருநாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம் என்றும் சொல்லப்படுவதுண்டு.

  • ennayil-maha-lakshmi

    தீபாவளியன்று எண்ணெயில் லட்சுமி தேவியும் தண்ணீரில் கங்கா தேவியும் உறைகின்றனர். இதற்கு விஷ்ணு புராணத்தில் ஒரு வரலாறும் உண்டு. நரகாசுரனுடன் விஷ்ணு போரில் இருந்தசமயம் அரக்கர்கள் லட்சுமி தேவியைக் கவர்ந்து செல்ல முயன்றனர்.

    உடனே தேவி பகவான் போர் முடிந்து திரும்பும் வரை எரிந்து கொண்டிருந்த ஒரு தீபத்தில் மறைந்து விட்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.

    இந்தப் புண்ணிய தினத்தில் தான் பாற்கடலில் தோன்றிய திருமகளை நாராயணன் திருமணம் செய்து கொண்டார். அப்போது தேவர்களுடன் யமதர்மராஜனும் பணிந்து போற்றினார்.

    இதை கண்ட லட்சுமி, யமனிடம் இப்பண்டிகையை முறையாக கடைப் பிடிப்பவர்களது வீட்டில் என் உத்தரவு இன்றி நீ பிரவேசிக்கக்கூடாது என்று உத்தரவிட்டாள். லட்சுமி தேவியின் அந்த உத்தரவை யமதர்மராஜனும் ஏற்றுக்கொண்டார்.

     

  • diwali-oil-bath

    தீபாவளி தினத்தில், எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்தால் புண்ணியம் உண்டாகும் என்பது ஐதீகம். அன்றைய தினத்தில், எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் ஒன்று சேர்வதால், எண்ணெய் குளியல் செய்பவர்க்கு கங்கை யில் மூழ்கிக் குளித்த புனிதப்பயன் கிட்டும்.

    கங்கா ஸ்நான தத்துவம்…
    தீபாவளியன்று புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்கா ஸ்நானம். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால், நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை.

    கிருஷ்ணன், நரகாசுரனை அழித்த நாளே தீபாவளி. அன்று, சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்துக்கும், கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின் படி, அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும், கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால் தான், தீபாவளி அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் ஆச்சா என்று சொல்கிறார்கள்.

    அதிர்ஷ்டம் தரும் உப்பு
    தீபாவளியன்று பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. எண்ணெய் லட்சுமி; சீயக்காய் சரஸ்வதி; சந் தனம் பூமாதேவி; குங்குமம் கவுரி; தண்ணீர் கங்கை, இனிப்பு பலகாரம் அமிர்தம்; நெருப்பு பொறி ஜீவாத்மா; புத்தாடை மகாவிஷ்ணு; லேகியம் தன்வந்தரி. தீபாவளியன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. உப்பில் மகாலட்சுமி வாசம் செய் கிறார் என்பது ஐதீகம்.

  • monday-silver-adristam-kuviyum

    திங்கட்கிழமை அன்று முடிந்தவர்கள் வெள்ளி வாங்கவும். குறைந்தபட்சம் 1 கிராம் காயினாவது வாங்கி வைப்பது அதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.

    நாளை வடமாநிலங்களில் தீபாவளிக்கு முதல் நாள் தந்தாரேஸ் எனப்படும் லக்ஷ்மிக்கான நாளாகும். தந்தாரேஸ் என்றால் தன திரயோதசி என்பதாகும்.

    சுக்கிர ஹோரையில் வாங்குவது இன்னும் சிறப்பானதாகும்.

    சுக்கிர ஹோரை நேரங்கள்:
    காலை 11.00 – 12.00 மணி வரை
    மாலை 6.00 – 7.00 மணி வரை

    குறிப்பு:
    இந்த நேரத்திற்கு ராகு காலம் – எமகண்டம் தோஷம் கிடையாது.

    பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
    +91 7845 11 9542
    EmaiL: ramjothidar@gmail.com

  • indraya-rasi-palan

    நவம்பர் 5
    விளம்பி வருடம் – ஐப்பசி 19
    05-நவ-2018 திங்கள்
    சுபமுகூர்த்த நாள்(காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : திரையோதசி
    திதி நேரம் : திரையோதசி இ 11.54
    நட்சத்திரம் : அஸ்தம் இ 9.10
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – அமைதி
    ரிஷபம் – சிரமம்
    மிதுனம் – பாசம்
    கடனம் – நற்செயல்
    சிம்மம் – பாராட்டு
    கன்னி – வெற்றி
    துலாம் – கவனம்
    விருச்சிகம் – ஆர்வம்
    தனுசு – சுகம்
    மகரம் – நலம்
    கும்பம் – பிரயாணம்
    மீனம் – சாந்தம்

  • samanrgal-deepavali

    தீபாவளிப் பண்டிகை சமணர்களுக்கும் உரித்தானது. சமண மதத்தின் கடைசி (24-ஆவது) தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் மோட்சம் அடைந்த நாள் தீபாவளி (கி.மு. 567) என்பதால், இந்நாளை சமணர்கள் பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.

    பழமையான சமண இலக்கியமான ‘கல்பசூத்திரம்’ என்ற பிராகிருத மொழியில் எழுதப்பட்ட நூலில் தீப வழிபாடு குறித்த செய்தி வருகிறது. இதை எழுதியவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சார்யார் பத்ரபாகு என்ற சமண முனிவர்.

    ‘மகாவீரர் என்ற தீப ஒளி மறைந்துவிட்டதால் தீப விளக்கை ஏற்றி வைப்போம் என்று, காசி, கோசல மக்களும், பதினாறு கண அரச மக்களும் தங்கள் வீடுகளின் முன்பு தீபம் ஏற்றி வைத்தனர்’ என்று எழுதி இருக்கிறார் பத்ரபாகு.

    இலக்கியத்தில் ‘தீபாவளி’ என்ற சொல் முதன்முதலாகப் பிரயோகிக்கப்படுவது, கி.பி. ஆறாம் நூற்றாண்டில் ஆச்சார்ய ஜினசேன முனிவரால் இயற்றப்பட்ட ‘ஹரிவம்ச புராணம்’ என்ற சமண இலக்கியத்தில் தான். அதில் வரும் ‘தீபாவளி காயா’ என்ற வார்த்தையின் பொருள் “ஞான ஒளி உடலைவிட்டு நீங்குகிறது” என்பதே. இதிலிருந்து உருவானதே தீபாவளி என்ற வார்த்தை என்று சமண இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    மாமன்னர் அசோகர் புத்த மதத்தைத் தழுவிய நாள் என்பதால், பெüத்த மதத்தினரும் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

  • dewali-history

    தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந்நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

    கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

    இலங்கையை ஆண்ட ராவணன் சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால் ராமன் ராவணனை எதிர்த்துப் போராடி ராவணனை அழித்து விட்டு சீதையை மீட்டு கொண்டு தனது தம்பியான லட்சுமணனுடன் அயோத்திக்கு செல்லும் போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

    சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு “அர்த்தநாரீஸ்வரர்” ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.