Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ulagil-ulla-apoorvamana-sila-koilgal

    கோயில்களில் மிகவும் அபூர்மாமாகவும், ஆச்சரியமூட்டும் வகையிலும் இருக்கும், உலகில் உள்ள சில கோயில்களைப் பற்றிப் பார்ப்போம்.

    மரகத புத்தர் கோயில் (Temple of Emerald Buddha) :
    பாங்காக்கில் அமைந்துள்ள இந்த கோயிலை வாட் ப்ரா க்யூ (Wat Phra Kaew) என்றும் சொல்வார்கள். இந்த கோயிலானது அரசர் முதலாம் ராமாவால் தொன்புரியிலிருந்து, பாங்காக்கில் 1785 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோயிலில் உள்ள மரகத புத்தர் சிலையானது தவம் செய்வது போல் இருப்பதோடு, இந்த கோவிலின் சிலைக்கு அருகில் அரசர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.

    ஸ்வேடகோன் பகோடா (Shwedagon Pagoda) :
    புத்தர் கோவிலிலேயே மிகவும் பழமையானதும், வரலாற்றில் முக்கியமானதுமானது என்றால் அது மியான்மரில் இருக்கும் ஸ்வேடகோன் பகோடா தான். இதில் பகோடா என்றாலே கூம்பு கோபுரம் என்று அர்த்தம். இந்த மாதிரியான கூம்பு வடிவ கோபுரம் பெரும்பாலும் பர்மாவில் தான் காணப்படும். இதிலும் இந்த கோவிலில் கூம்பு வடிவ கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டிருப்பதோடு, இரவிலும், பகலிலும் நன்கு மின்னும்.

    தக்த்சாங் மடம் (Taktshang Monastry) :
    பூட்டான் நாட்டில் உள்ள ஒரு புகழ்பெற்ற புத்த மடம் தான் தக்த்சாங் மடம். இது தவம் செய்வதற்கு சிறந்த ஒரு மடம். இந்த மடமானது 1692 இல் கட்டப்பட்டது. இங்கு பத்மசம்பவர் என்னும் இரண்டாம் புத்தர் புலியின் மீது ஏறி வந்ததால், இந்த மடத்திற்கு வந்ததால், இதற்கு இப்பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது.

    தங்க கோயில் (Golden Temple) :
    இந்தியாவில் உள்ள பஞ்சாம் மாநிலத்தில் அமைந்துள்ள கோல்டன் டெம்பிள் எனப்படும் “ஹர்மந்திர்” ஆலயம், மிகவும் புகழ்பெற்ற, பார்வையாளர்களின் ஆவலைத் தூண்டும் ஒரு புனித ஆலயம். இந்த தங்க ஆலயமானது பொன்னால் மின்னுவதோடு, குளத்தின் மையத்தில் அமைந்துள்ளது.

    பிரம்பனன் (Prambanan) :
    இது உலகிலேயே மற்றொரு அழகான புகழ்பெற்ற கோயில். இந்த கோயிலானது முக்கடவுளான சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்காக கட்டப்பட்டுள்ளது. இது தான் இந்தோனேஷியாவிலேயே மிகவும் பெரிய கோயில். இங்கு உள்ள சிலைகள் மற்றும் ஓவியங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் அதிசயமூட்டக்கூடியவை.

    வாட் ராங் குன் (Wat Rong Khun) :
    தாய்லாந்து என்றாலே புத்த கோயில்கள் திரும்பிய இடமெல்லாம் இருக்கும். அத்தகைய கோவில்களில் வாட் ராங் குன் என்னும் புத்த கோயில், வெள்ளை மெசைக் கற்களால் மிகுந்த கலை நயத்துடன், இன்னும் கட்டப்பட்டு வருகிறது.

    போரோபுதூர் (Borobudur) :

    இந்தோனேஷியா தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள போரோபுதூர், மகாயான பௌத்த நினைவுச் சின்னம். இது 2,672 புடைப்புச் சிற்பங்களையும், 504 புத்த சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது ஆறு சதுர வடிவ மேடைகளுடன், மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொண்டது.

    ஸ்ரீரங்கநாதர் ஆலயம் (Sri Ranganathaswamy Temple) :

    உலகிலேயே மிகவும் பெரிய இந்து கோயில் என்றால் அது ஸ்ரீரங்கநாதர் கோவில் தான். இந்த கோவிலின் சிறப்பே கோபுரம் தான். இந்த கோபுரத்தில் உள்ள சிலைகள் அனைத்தும், இந்துமதப் புராணங்களின் படி சித்திகரிக்கப்பட்டது. இந்த பெரிய கோபுரமானது குறைந்தது 200 அடி உயரத்துடன் இருப்பதோடு, 15 கதைகளையும் கொண்டது.

  • kadan-thollai-theerkum-koil

    கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில்அமைந்துள்ளது ” திருச்சேறை உடையார் கோவில் “. இங்கு தனி சந்நதியில் ” ருணவிமோச்சனராய் ” அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன்.

    திருச்சேறை உடையார் கோவிலில் தொடர்ந்து 11திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று “கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே ” என மனம் உருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

    ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள ” ரிண விமோஷன லிங்கேஸ்வரர் “.

    கும்பகோணம் – திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழி படுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.

    இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.

  • kadan-thollai-theerkum-koil

    கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில்அமைந்துள்ளது ” திருச்சேறை உடையார் கோவில் “. இங்கு தனி சந்நதியில் ” ருணவிமோச்சனராய் ” அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன்.

    திருச்சேறை உடையார் கோவிலில் தொடர்ந்து 11திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று “கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே ” என மனம் உருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

    ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள ” ரிண விமோஷன லிங்கேஸ்வரர் “.

    கும்பகோணம் – திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழி படுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.

    இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.

  • thiripranteeswaras-koil-ipasi-thiruvizha-kodiyettram

    பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீசுவரர் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி இருக்கிறது.

    இதையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சுவாமி மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.

    தொடர்ந்து, இன்று காலை கமல வாகனத்தில் சுவாமி – அம்மன் வீதி உலா நடைபெற்றது. 26இல் சிம்ம வாகனத்திலும், 27இல் ரிஷப வாகனத்திலும், 28இல் இந்திர வாகனத்திலும், 29இல் யானை வாகனத்திலும், 30இல் காமதேனு வாகனத்திலும், 31இல் கிளி வாகனத்திலும், நவ. 1ஆம் தேதி பூம்பல்லக்கிலும் சுவாமி-அம்மன் வீதியுலா வருவர்.

    திருவிழாவின் சிகர நிகழ்வாக நவ. 3ஆம் தேதி திருகல்யாணம் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பாளையங்கோட்டை திருச்சிற்றம்பல வழிபாட்டு அறக்கட்டளையினர் செய்துவருகின்றனர்.

  • indru-ungal-rasikku-enna-palan

    அக்டோபர் 25
    விளம்பி வருடம் – ஐப்பசி 8
    25-அக்-2018 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : பிரதமை
    திதி நேரம் : பிரதமை இ 10.34
    நட்சத்திரம் : அசுவினி கா 11.29
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : சித்திரை
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – கவலை
    ரிஷபம் – வரவு
    மிதுனம் – தாமதம்
    கடனம் – பிரீதி
    சிம்மம் – ஆதரவு
    கன்னி – பாசம்
    துலாம் – வெற்றி
    விருச்சிகம் – கவனம்
    தனுசு – இன்பம்
    மகரம் – உயர்வு
    கும்பம் – ஊக்கம்
    மீனம் – பிரயாணம்

  • matravar-etriya-vilakkai-naam-etralama

    பிறர் ஏற்றிய தீபம் என்பதால் அதற்கு ஏதாவது தோஷம் ஏற்படாது. அதுபோல, நாம் தீபம் ஏற்றினால் நமக்கு கிடைக்கவேண்டிய பலன் பிறருக்கும் போய்விடாது.

    சிவன் கோயில் சந்நிதியில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. ஒரு எலி அந்த விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க வாயை வைத்தது.

    எதிர்பாராமல் எலியின் வாய்பட்டு அணைய இருந்த திரியில் சுடர், தூண்டப்பட்டு பிரகாசமாக எரிந்தது.

    இந்நிகழ்ச்சி பெரிய புண்ணியச் செயலாக அமைந்து, மறுபிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தது. சுவாமி சந்நிதியில் விளக்கேற்றுவது தான் முக்கியமே தவிர மற்ற சந்தேகம் எதுவும் வேண்டாம்.

  • ippasi-pournami-sivalayangalil-annabishegam

    அபிஷேகப் பிரியரான சிவபெருமான், அபிஷேக நேரங்களில் பல்வேறு திரவியங்களால் திருமுழுக்காட்டு செய்விக்கப் பெறுகிறார். பின்னரும் லிங்கத் திருமேனியின் மேலே தாரா பாத்திரம் எனப்படும் செம்புப் பாத்திரத்தில் நீர் நிறைத்து, சொட்டு சொட்டாக லிங்கத் திருமேனியின்மீது அபிஷேகிக்கப்படும் தாரை அமைப்பை பல ஆலயங்களிலும் குறிப்பாக வடமாநிலங்களில் நாம் காணமுடியும்.

    இந்த அபிஷேக வரிசையில், ஐப்பசி பௌர்ணமி நாளான இன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்பட்டது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தைக் கொண்டு முழுக்காட்டப்பட்டது. இனிப்பு, காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி, ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களை பரவசத்துக்கு உள்ளாக்கியது. சிவாலயங்களில் கருவறையிலுள்ள சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பின்னர், சமைத்த சுத்த அன்னத்தைக் கொண்டு திருமுழுக்காட்டப்பட்டது.

    லிங்கத் திருமேனி மறையுமளவுக்கு அன்னம் குவிக்கப்பட்டு, இனிப்புகள், பழங்கள் நிவேதனதுக்கு வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில் நடைபெறும் அன்னாபிஷேகப் பெருவிழா தமிழகத்தில் நடைபெறும் ஒரு முக்கிய திருவிழா ஆகும்.

    சுமார் பதின்மூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது. பின்னர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கூடி அன்னாபிஷேகத்தை தரிசித்து மகிழ்ந்தனர்.

    இந்த அன்னாபிஷேக நாளன்று இறைவனைத் தரிசித்து பிரசாதத்தை உட்கொள்வதை பெரும் பேறாக பக்தர்கள் கருதுவதுடன், வரும்காலங்களில் வாழ்வில் பஞ்சமே இராது என்றும் நம்புகின்றனர். அத்துடன் அபிஷேக அன்னத்தை எறும்பு, கால்நடை, பறவை உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் அளிப்பர்.

  • koyilil-udaikum-thengai-azhugi-irundhal

    நமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும்.

    அப்படி இருக்கும் போது, நமது வீட்டில் அல்லது கோவில் பூஜைக்கு பயன்படுத்தும் தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம் உங்களுக்கு தெரியுமா?

    தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்?

    தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன், இரண்டாம் கண் லஷ்மி, மூன்றாம் கண் சிவன் என்று போற்றப் படுகிறது.

    அப்படி இருக்கும் தேங்காயை நாம் பயன்படுத்தும் போது, அது அழுகி இருப்பது, கோணலாக உடைவது, சிதறு தேங்காய் உடைக்கும் போது சுக்கு நூறாக உடைவது, தேங்காயில் பூ வருவது இது போன்ற அனைத்து விஷயத்திற்கும் நன்மை மற்றும் தீமைக்கான சகுனங்கள் உண்டு.

    அந்த வகையில் தேங்காய் உடைக்கும் போது, அது அழுகிய நிலையில் இருந்தால், அவர்களுக்கு அது ஏமாற்றம் மற்றும் கலக்கத்தை கொடுத்து, மனதில் குழப்பத்தை அளிப்பதால், இதை நாம் அபசகுனமாக நினைக்கிறோம் அல்லவா?

    ஆனால், உண்மையில் நாம் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால், அது நல்ல அறிகுறி என்றும். அவர்களை அண்டி இருக்கும் தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகிறது, எனவே இது ஒரு நல்ல அறிகுறி தான் என்று கூறப்படுகிறது.

    தேங்காய் கொப்பரையாக இருந்தால் என்ன அர்த்தம்?

    நாம் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால், அவர்களின் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்று அர்த்தமாகும்.

    தேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம்?

    நாம் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால், அது நமக்கு பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பதை குறிக்கும் ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது.

  • thirumanam-kaikooda-eliya-parigaram

    பல்வேறு காரணங்களால் திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    நல்லெண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் ஆகியவற்றை சமஅளவு கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் இந்த கூட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

    இந்த தீபத்துக்கு புதிய சிவப்பு நிறத்துணியை திரியாக பயன்படுத்த வேண்டும். தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுதல் வேண்டும். அதன்பிறகு 108 அங்காளம்மன் போற்றி சொல்ல லேண்டும்.

    அது முடிந்ததும் அங்காளபரமேசுவரிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இப்படி செய்தால் விரைவில் திருமணம் கைக்கூடும்.

  • indru-yogam-perum-rasigal

    அக்டோபர் 24
    விளம்பி வருடம் – ஐப்பசி 7
    பவுர்ணமி பவுர்ணமி
    சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்
    24-அக்-2018 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் : பவுர்ணமி இ 11.01
    நட்சத்திரம் : ரேவதி கா 10.27
    யோகம் : மரண யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்

    மேஷம் – உயர்வு
    ரிஷபம் – வெற்றி
    மிதுனம் – சுபம்
    கடனம் – செலவு
    சிம்மம் – பிரீதி
    கன்னி – போட்டி
    துலாம் – மேன்மை
    விருச்சிகம் – ஆதரவு
    தனுசு – பயம்
    மகரம் – நலம்
    கும்பம் – அன்பு
    மீனம் – கவலை