Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • indraya-rasi-palangal

    நவம்பர் 18
    விளம்பி வருடம் – கார்த்திகை 2
    18-நவ-2018 ஞாயிறு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : ஏகாதசி
    திதி நேரம் : தசமி கா 11.51
    நட்சத்திரம் : பூரட்டாதி ம 3.36
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஜெயம்
    ரிஷபம் – கவலை
    மிதுனம் – உழைப்பு
    கடனம் – ஊக்கம்
    சிம்மம் – பேராசை
    கன்னி – சோதனை
    துலாம் – ஏமாற்றம்
    விருச்சிகம் – தொல்லை
    தனுசு – உற்சாகம்
    மகரம் – சிந்தனை
    கும்பம் – பொறுமை
    மீனம் – செலவு

  • somavara-viradham-kadaipidipadhu-en

    கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விழா கடைப்பிடிக்கப்படும். ‘சோமன்’ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும். அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு.

    சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது.

    கார்த்திகை மாத முதல் சோம வாரத்தில் இருந்து சோம வார விரதத்தை தொடங்குதல் வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிக்கலாம்.

    கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றுதான் சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    சோமவாரம் என்பது வார நாட்களில் திங்கட்கிழமையைக் குறிப்பது. சந்திரன் கடைபிடித்து மேன்மை பெற்ற விரதம் ஆதலால் கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் இவ்விரதத்தை கடைபிடிப்பார்கள்.

    சோம வார விரத மகிமைகள்:

    தட்சாதிபதியின் புதல்வியர்களான 27 நட்சத்திரப் பெண்களையும் மணந்து கொண்ட சோமன் என்னும் சந்திரன். அவர்களுள் – ரோகினியை மட்டுமே மிகப்பற்றுதல் கொண்டிருந்தான். இதுகண்டு மற்றவர்கள் தங்கள் தந்தையிடம் முறையிட்டார்கள்.

    தட்சாதிபதியும் சந்திரனை அழைத்து புத்திமதிகள் கூறினார். ஆனால் சந்திரன் அவரது அறிவுரைகளை ஏற்காததால் அவர் சந்திரனை கடுமையாக சபித்துவிட்டார். இதனால் பெரும் வருத்த முற்ற சந்திரன் முனிவர்களின் ஆலோசனைப்படி சிவபெருமானைக் குறித்து சோமவார விரதத்தை கடைப்பிடித்துத்தான் சிவனுக்கு மிகவும் பிரியமுள்ளவன் ஆனான். கார்த்திகை மாத சோம வாரத்தில்தான், சந்திரனை காக்கும்பொருட்டு சிவன் தன் தலை முடியில் அமர்த்தி கொண்டார். அப்படியமர்ந்து கொண்ட சந்திரன் சிவபெருமானிடம் ஒரு வேண்டுதலை வைத்தான்.

    ‘இறைவா! சோம வாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருப்பவர்களுக்கு நற்கதியைக் கொடுக்க வேண்டும்’ என்று வரம் கேட்டான். அவ்வாறு வரம் அளித்து அருளினார் ஈசன். இந்த சோமவார விரத்தத்தின் பலனால் சந்திரன் பிறைமுடியாய் ஈசனின் தலையில் அமரும் பாக்கியம் பெற்றான் என புராணங்கள் போற்றுகின்றன.

    இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அவ்வாறு இருக்க முடியாதவர்கள் இரவில் பால், பழம் மட்டும் உண்ணலாம். அதுவும் செய்ய இயலாதவர்கள் மதியத்திற்கு பின்பு உணவருந்தலாம். அல்லது இரவில் சாப்பிடலாம். ஆனால் அந்த நாளில் ஒரு வேளையேனும் உணவருந்தாமல் இருப்பது நன்மை பயக்கும்.

    இவ்வாறு விரதத்தை மேற்கொண்டு வந்தால், ஒருவர் தன் வாழ்வில் செய்த பாவங்கள் அகலும், நோய் நொடிகள் அண்டாது என்று கூறப்படுகிறது. இந்த விரதத்தை பக்தர்கள் தங்களின் வசதிக்கேற்ப, வாழ்நாள் முழுவதுமாகவே அல்லது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கோ கடைப்பிடித்து நலம் பெறலாம்.

  • karthigai-soma-vara-viradham

    சோமாவார விரதம் என்பது கார்த்திகை திங்கள் கிழமைகளில் சிவபெருமானை நினைத்து கடைப்பிடிக்கும் விரத முறையாகும்.

    தனது மனைவியர்களிடம் பராபட்சமற்ற அன்பு காட்ட தவறிய சந்திரனை தட்சன் ஒளி இழக்குமாறு சபித்தான். ஒளி இழந்த சந்திரன் சோமாவார விரதமுறையைப் பின்பற்றி இறைவனின் திருவருளால் தேய்ந்து வளரும் நிலையைப் பெற்றான்.

    மேலும் பிறைச்சந்திரனாக சிவபெருமானின் திருமுடியை அலங்கரிக்கும் பாக்கியத்தையும் கார்த்திகை சோமாவாரத்தில் பெற்றான். சந்திரனை சூடிய சிவபெருமான் சந்திரசேகரன் என்று அழைக்கப்படுகிறார்.

    இவ்விரத முறையில் பகலில் உண்ணாமல் காலை மற்றும் மாலையில் சிவாலயம் சென்று வழிபட்டு இரவில் உண்ண வேண்டும். இவ்விரத முறையைப் பின்பற்றுவதால் திருமணம் ஆகாதவர்கள் நல்ல வாழ்க்கைத் துணையோடு வளமான வாழ்வு பெறுவர்.

    திருமணம் ஆனவர்கள் நல்ல வாழ்க்கை கிடைக்கப் பெறுவர். இவ்விரத முறையில் கணவன் மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது சிறப்பான பலனைத் தரும்.

  • karthigai-madha-sirappugal

    கார்த்திகை மாத சிறப்புக்கள் பல உள்ளன. கார்த்திகை மாதம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான்.

    ஐப்பசி கார்த்திகை அடைமழை என்பது பழமொழி. கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம் ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.

    கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

    இம்மாதத்தில் திருமணங்கள் அதிகம் நடத்தப்பெறுவதால் இது திருமண மாதம் என்று சிறப்பிக்கப்படுகிறது.

    திருமால் துளசியை இம்மாத வளர்பிறை துவாதசியில் திருமணம் செய்து கொண்டார். எனவே இம்மாதம் முழுவதும் துளசித் தளங்களால் அர்ச்சனை செய்தால் ஒவ்வொரு துளசித் தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்.

    கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமாவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், முடவன் முழுக்கு, கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, ப்ரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி போன்ற வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

  • viradham-thodangiya-iyappa-bakthrgal

    தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் இன்று மாலை போட்டு தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.

    கார்த்திகை மாதம் இன்று பிறந்து விட்டது. இதையடுத்து தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர். கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரத்தைத் தொடங்குவது வழக்கம்.

    ஒரு மண்டலமான, 48 நாட்களுக்கு விரதம் இருந்து மலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிப்பார்கள் பக்தர்கள். கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி நவம்பர் 16ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நேற்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து தங்களது விரதத்தைத் தொடங்கினர். நேற்று மாதப் பிறப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்கினர். ஆங்காங்கு உள்ள ஐயப்பன் கோவில்களிலும், பிற கோவில்களிலும் மாலை அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சென்னையில் மகாலிங்கபுரத்தில் ஐயப்பன் கோவிலில் இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து மாலை அணிந்து கொண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து ஒவ்வொரு பக்தரும் மாலை அணிந்து கொண்டனர். அவர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். சிறார்கள் முதல் வயதான பெண்கள் வரை பலரும் மாலை போட்டுக் கொண்டனர்.

  • mandala-poojaikaga-sabari-nadai-thirappu

    சபரிமலை,மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை திறக்கப்பட்டுள்ளது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில், ஒரு மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டு காலமாக சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்து வரும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார்.

    அதை தொடர்ந்து கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள சபரிமலை – வாசுதேவன் நம்பூதிரி, மாளிகைப்புறம் -நாராயணன் நம்பூதிரி இருமுடி கட்டு ஏந்தி கோயில் முன்புறம் வந்தார். புதிய மேல்சாந்திகளுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி ஐயப்பன் மூலமந்திரம் சொல்லிக் கொடுத்து கோயிலுக்கு அழைத்து சென்றார். இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

    இன்ற அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்ததை அடுத்து இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி பிரசாதம் வழங்கியதும், நெய் அபிஷேகம் தொடங்கியது. . இன்றிலிருந்து தொடர்ச்சியாக 41 நாட்களும் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடைபெறும். டிசம்பர் 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெறும்.

    மண்டல காலத்தில் வரும் பக்தர்களை வரவேற்க சன்னிதானம் தயாராகி விட்டது. பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு வசதி விரிவு படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கும் அறைகளையும் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியும். கடந்த 15 நாட்களாக அப்பம் – அரவணை தயாரித்து ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது. 50 லட்சம் டின் அரவணை ஸ்டாக்செய்யப்பட்டுள்ளது. பாட்டில் குடிநீர் தடை செய்யப்பட்டுள்ளதால் ஆங்காங்கே பாதுகாக்கப்பட்ட குடிநீர் பிளான்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

  • indraya-rasi-palangal

    நவம்பர் 17
    சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிதல்
    விளம்பி வருடம் – கார்த்திகை 1
    17-நவ-2018 சனி
    கரிநாள்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : தசமி
    திதி நேரம் : நவமி கா 10.21
    நட்சத்திரம் : சதயம் ம 1.39
    யோகம் : அமிர்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை
    ரிஷபம் – அனுகூலம்
    மிதுனம் – பொறுமை
    கடனம் – போட்டி
    சிம்மம் – விருத்தி
    கன்னி – வரவு
    துலாம் – தேர்ச்சி
    விருச்சிகம் – சிக்கல்
    தனுசு – இரக்கம்
    மகரம் – சாந்தம்
    கும்பம் – ஜெயம்
    மீனம் – ஆதாயம்

  • malai-anibavargal-solla-vendiya-slogam

    மாலை அணிபவர்கள் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்

    இதம் ஆஜ்யம், கமமண்டல
    கால மகரகால பரஹமசியவ்ர
    தேன ஹரிஹர புத்ர தர்ம
    சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி

    பொருள்:

    ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் சுவாமிமார்களான நாங்கள் அறிந்தும் அறியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து, பதினெட்டுப் படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.

  • sabari-malaiku-malai-aniyum-murai

    கார்த்திகை மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். கார்த்திகை மாதம் மாலை அணிந்து, மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சந்நதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.

    எவ்வாறு மாலை அணிய வேண்டும்?

    கார்த்திகை மாதம் முதல் தேதியன்று மாலை அணிய வேண்டும். அன்று நாள், கிழமை பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் கடைபிடிக்க வேண்டும். விரதத்தைத் தொடங்குவதற்கு முன், 54 அல்லது 108 மணிகள் உள்ள துளசி மணிமாலையை ஏதேனும் ஒரு கோவிலில், குரு சுவாமியின் திருக்கரங்களால் அணிந்து கொள்ள வேண்டும்.

    குரு சுவாமி இல்லாத பட்சத்தில் கோவிலுக்குச் சென்று அர்ச்சகரை குருவாக ஏற்று மாலை அணிந்து கொள்ளலாம் அல்லது வீட்டிலேயே பூஜை செய்து தாயின் கரத்தால் மாலை அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்த பக்தர்கள் ஐயப்பமார்கள் என்றே அழைக்கப்படுவார்கள்.

    மாலை அணிந்தபின் என்ன செய்ய வேண்டும்?

    மாலை அணிந்தபின் கடுமையான பிரம்மசர்ய விரதத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம், விரத நாட்களில் புறத்தூய்மை அவசியம். அதனால் தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி, ஐயப்பனைத் தொழுது ஐயப்பன் பாடல்களை பாடலாம். நாள்தோறும் ஆலயம் சென்று இறைவனை தொழுது, பஜனை வழிபாடு செய்ய வேண்டும். ஐயப்பனை நினைத்து விரதத்தை மேற்கொண்டால் சகல துன்பங்களையும் நீக்கி நம்மை காத்தருள்வார்.

  • karthigai-deepam-etrinal-kidikum-palangal

    கார்த்திகை மாதம் மற்ற தமிழ் மாதங்களைவிட மிக, மிக புனிதமானது. முறைப்படி மனதை ஒரு முகப்படுத்தி வழிபட்டால் அளவிடற்குரிய பலன்களை கார்த்திகை மாதத்தில் பெறலாம். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். தினமும் அதிகாலை பிரம்ம கூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும். மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும். திருமண தடை விலகும்.

    வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம்.

    அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணைய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும். மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும். குழந்தைபாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.

    விளக்கில் எண்ணை விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.
    தீபம் ஏற்ற தூய்மைமான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது.
    அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

    விநாயக பெருமானுக்கு7 தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளுக்கு 6 தீபம், நாக அம்மனுக்கு 4 தீபம், சிவனுக்கு 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்- சிங்கம்- நந்தி முன்பாக, பிள்ளையார்-பெருச்சாளி முன்பாக, பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்-மயில் முன்பாக ஏற்ற வேண்டும். தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

    காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

    முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2-வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3-வது மேற்கு நோக்கி இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2-வது வடக்கே உள்ள திரியையும், 3-வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும். ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில் – தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி – எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.