Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • indraya-rasi-palan

    நவம்பர் 24
    விளம்பி வருடம் – கார்த்திகை 8
    24-நவ-2018 சனி
    வாஸ்து நாள்(காலை 11.29 – 12.05)
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : துவிதியை
    திதி நேரம் : பிரதமை கா 10.51
    நட்சத்திரம் : ரோகிணி அ.கா 5.36
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : விசாகம்,அனுஷம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – அமைதி
    ரிஷபம் – ஆர்வம்
    மிதுனம் – சுகம்
    கடனம் – சினம்
    சிம்மம் – முயற்சி
    கன்னி – பரிவு
    துலாம் – பாராட்டு
    விருச்சிகம் – சிக்கல்
    தனுசு – வாழ்வு
    மகரம் – பொறுமை
    கும்பம் – அசதி
    மீனம் – புகழ்

  • thiruvannamalai-maha-deepam

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழாவின் உச்சக்கட்டமாக மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

    நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். மாதந்தோறும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் மலையை கிரிவலம் வருகின்றனர்.

    இக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தீப திருவிழா தொடங்கியது முதல் தினமும் காலையிலும் இரவிலும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வந்து அருள்பாலித்தனர்.

    முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அன்று 5 தேர்கள் அடுத்தடுத்து பவனி வந்தன. இந்நிலையில் கார்த்திகை தீப உற்சவத்தின் முக்கிய விழாவான மகாதீப பெருவிழா இன்று மாலை நடைபெற்றது.

    இதையொட்டி இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு 4 மணிக்கு உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து அதிகாலை 4 மணியளவில் சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர அண்ணாமலையார் மலைஉச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது.

    மகாதீபம் ஏற்றுவதற்காக முன்னதாக அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீபதரிசன மண்டபத்தில், சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். மேலும் ஆண்டுக்கு ஒருமுறை சில நொடிகள் மட்டுமே காட்சிதரும் ‘அர்த்தநாரீஸ்வரர்’ ஆனந்த நடனமாடியபடி கோயில் கொடி மரம் முன்பு காட்சியளித்தார்.

    அப்போது தங்க கொடிமரம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அகண்டத்தில் கற்பூர தீபம் ஏற்றியதும், மலை உச்சியில் ‘மகாதீபம்’ ஏற்றப்பட்டது. இன்று ஏற்றப்பட்ட மகா தீபம், தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சிதரும்.

    மகா தீபத்திருவிழாவை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

  • annamalayar-koil-barani-deepam

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
    கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கோயிலின் கருவறை முன்பு பூஜைகளுடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதையடுத்து, இன்று மாலையில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

    திரு கார்த்திக்கை தீப திருவிழா கொண்டாட்டங்களில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு முக்கிய பங்குள்ளது. கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் அண்ணாமலையார் தீபம் ஏற்றப்படுகிறது.

    திரு கார்த்திகை பெருவிழாவின் போது மிகப்பெரிய கொப்பரையில் 24 முழ துணியை திரியாக வைத்து கற்பூர தூள் சேர்த்து சுருட்டப்படும். கொப்பரையில் நெய் வார்த்து இந்த சுடர் எரிக்கப்படுகிறது. இந்த பெருஞ்சுடர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு எரியும். 60 கி.மீட்டர் தூரம் வரை இந்த சுடர் ஒளி தெளிவாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தீபம் ஏற்றும் போது, வெப்பத்தால் கொப்பரை சேதமடையாமல் இருக்க, மேல்பாகம் 3.75 அடி, கீழ்பாகம், 2.75 அடி சுற்றளவு கொண்டவாறு, 150 கிலோ எடையில், 20 வளைய இரும்பு ராடுடன் கூடிய, செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், கொப்பரையை மலை உச்சிக்கு எடுத்துச் செல்ல வசதியாக, மேல் பாகம் மற்றும் கீழ் பாகத்தில்,தலா, நான்கு வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை புதுப்பிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

  • indraya-naal-eppadi

    நவம்பர் 23
    விளம்பி வருடம் – கார்த்திகை 7
    திருக்கார்த்திகை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை முருகன் தேர்
    23-நவ-2018 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : பிரதமை
    திதி நேரம் : பவுர்ணமி ம 12.12
    நட்சத்திரம் : கார்த்திகை மா 6.24
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : சுவாதி,விசாகம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – மகிழ்ச்சி
    ரிஷபம் – லாபம்
    மிதுனம் – யோகம்
    கடனம் – இன்பம்
    சிம்மம் – சிரத்தை
    கன்னி – ஜெயம்
    துலாம் – நன்மை
    விருச்சிகம் – செலவு
    தனுசு – பகை
    மகரம் – கீர்த்தி
    கும்பம் – தெளிவு
    மீனம் – அமைதி

  • agni-deivaman-annamalayar

    மனித வாழ்வுக்கு மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்கும் தேவையானது ஐம்பூதங்கள் எனப்படும் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் பூமி ஆகியவை. இவற்றை இயற்கை தெய்வங்கள் என்று கூறினால் மிகையில்லை. இந்த இயற்கையைக் குறிப்பிடும் வண்ணம் தெய்வங்கள் திருவுரு எடுத்துக் கொள்கின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    நெருப்பையும் அதன் முக்கியத்துவத்தையும் காட்டுவது திருவண்ணாமலை. ஈசன் இணையடி நீழலே என்றார் திருநாவுக்கரசர். ஈசனின் திருவடிச் சிறப்பைப் போற்றுகிறார் திருமூலர்.

    திருவடி யேசிவ மாவது தேரில்

    திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்

    திருவடி யேசிவ கதியது செப்பில்

    திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே

    என்பது அத்திருமூலர் வாக்கு.

    சிவனின் திருவடிகளே அனைத்துப் பெருமையையும் அளிக்கவல்லது.

    நெருப்பாய் நின்ற ஈசனின் இணையடியானது நிழல் என்கிறார் திருநாவுக்கரசர். நெருப்பு கொதிக்குமே தவிர எப்படி நிழலான தண்மையை அதாவது குளிர்ச்சியைத் தரும்?

    குற்றமில்லாத திருநாவுக்கரசரின் அரிய பதிகம் விளக்குகிறது.

    மாசில் வீணையும் மாலை மதியமும்

    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

    ஈசன் எந்தை இணையடி நீழலே.

     

    வீணையில் விரிசல், உடைப்பு போன்றவை இருந்தால் அதிலிருந்து எழும் இசையானது சுநாதமாக இருக்காது. மாசில் வீணை என்பதற்குக் குற்றமில்லாத வீணையிலிருந்து எழும் இசை என்பது பொருள்.

    மாலை மதியமும் என்பதில் மாலை, நேரத்தையும் மதியம், சந்திரனையும் குறிக்கும். மாலை நேரத்துச் சந்திர ஒளி, மிக மென்மையான குளிர்ச்சியைக் கொடுக்கும். அது உடலுக்கும் மனத்துக்கும் இதமாக இருக்கும். வேனிற் காலத்துத் தென்றல், உடலை தொட்டுத் தொட்டுப் போகும். ஒவ்வொரு முறை தொடும்பொழுதும் அதன் சில்லிப்பு அனுபோகமாக இருக்கும். அவ்வுணர்வு கொழுத்த இள நுங்குகளைச் சுவைத்தால் ஏற்படும் இன்பம்போல இருக்கும். வண்டுகள் மொய்க்கும் தாமரைப் பூக்களைக் கொண்ட பொய்கையிலிருந்து திருக்குளத்திலிருந்து எழும் வாசனை, தரும் இன்பத்தைப் போன்றது, எந்தையாகிய ஈசனின் திருவடி நீழலே என்று முத்தாய்ப்பாய் முடிகிறார் திருநாவுக்கரசர்.

    நெருப்பாய் அடி, முடி காண முடியாத அளவு விஸ்வரூபம் எடுத்த ஈசனது திருவடியானது பக்தர்களுக்குக் குளுமையைத்தான் அளிக்கும் என பலவாறாக அக்குளுமையை விளக்கி, பாடல் மூலம் அறுதியிட்டுக் கூறுகிறார் திருநாவுக்கரசர். அத்திருப்பாடல் திருவண்ணாமலை அண்ணாமலையாருக்குப் பொருந்தும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.

    அதனை நிரூபிப்பதுபோல, திருவண்ணாமலை திருத்தலத்தில், தெய்வங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் எம்பெருமான் விஷ்ணு, சிவனின் அடியைத் தேடிப் போனார். அதனால் போட்டியை முறியடித்து வென்று இன்றும் இந்நிலவுகில் திருத்தலங்களில் நடந்தும், நின்றும், அமர்ந்தும், கிடந்தும் தெய்வத் திருவுருவாய் அருள்பாலிக்கிறார்.

    திவ்ய தம்பதிகள் போலக் காட்சி அளிக்கும் பெரிய மலை அதன் அருகே சின்ன மலை எனத் தோற்றமளிக்கும், திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் பல புண்ணியப் பலன்களை அளிக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. தீபம் மன இருள் நீக்கும். நலம் பல விளைவிக்கும்.

  • pancha-karan-thathuvamum-agal-vilakkum

    “அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது” எனும் வரிகளை ஜோதிடத்தில் பலர் சொல்லக் கேட்டிருப்போம். இவ்வாக்கியத்தின் பொருள், புற உலகில் எது இருக்கின்றதோ அது, அக உலகமாகிய நமது உடலிலும் இருக்கின்றது என்பதே. அதாவது, புற உலகம் என்பது மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களை உள்ளடக்கியதாகும்.

    நாம் அறியகூடிய இந்த பௌதீக பிரபஞ்சம் முழுவதும் பஞ்சபூதங்களின் வெவ்வேறு விகிதாச்சார கலவையால் உருவானது. உதாரணமாக, கல் அல்லது மண் போன்ற ஜடப் பொருள்கள் பஞ்சபூதங்களின் கலவை. சூரியன் உள்ளிட்ட நட்சத்திரங்களும் பூமி போன்ற கிரகங்களும் இந்தப் பஞ்சபூதங்களின் கலவையாக அறிவியல் அறிஞர்களின் விளக்கத்தின்படி உருவாயின.

    மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்சபூதங்கள். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானதுதான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.

    ஐம்பூதங்களில், ஒவ்வொரு பூதமும் இருகூறாக ஆகி, அதில் ஒரு கூறை நிறுத்திக்கொண்டு, மற்றொரு கூறை நான்கு கூறுகள் ஆக்கி, அந்த நான்கும் மற்ற நான்கு பூதங்களுக்குக் கொடுத்தும் வாங்கியும் தம்மில் கலப்பது பஞ்சீகரணம் எனப்படும். ஆகாயம் துவாரமாகி மற்ற பூதங்களுக்கு இடம் கொடுக்கும் இயல்பானது. வாயு சலித்து மற்ற பூதங்களை திரட்டும் இயல்பானது. தேயு சுட்டு ஒன்றாக்கும் இயல்பானது. அப்பு குளிர்வித்து பதம் செய்யும் இயல்பானது. பிருதிவி கடினமாய் ஆக்கும் இயல்பானது.

    எந்தக் கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும் மண்ணினால் செய்யப்பட்ட அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது சிறந்தது. அதற்குக் காரணமும் உண்டு. அதாவது, அகல் விளக்கு ஏழை ஒருவனால் பஞ்சபூதத் தத்துவங்களின் அடிப்படையில் தயார் செய்யப்படுகிறது. அவன் களிமண்ணில் நீரை ஊற்றி, சூரிய ஒளியில் காயவைத்து, காற்றின் உதவி கொண்டு நெருப்பில் இட்டு ஒரு அழகான அகல் விளக்கைச் செய்கிறான்.

    மேலும், அகல் விளக்கை ஏற்றும்போதும் மண்ணை குறிக்கும் அகல் விளக்கில், நீரைக் குறிக்கும் நல்லெண்ணெய் விட்டு, ஸ்வாசம் எனும் வாயுவை குறிக்கும் திரி போட்டு, நெருப்பு தத்துவத்தை குறிக்கும் விதமாக ஏற்றும்போது, வெளிச்சம் எனும் ஆகாயம் உருவாகிறது.

  • agal-vilakkin-navgraha-thathuvam

    பொதுவாக அகல் விளக்கு ஏற்றி வழிபடுகிறோம்… அகல் விளக்கு ஏற்றுவதில் உள்ள நவகிரஹா தத்துவம் உங்களுக்கு தெரியமா?
    அகல் விளக்கு = சூரியன்

    நெய்/எண்ணெய்-திரவம் = சந்திரன்

    திரி = புதன்

    அதில் எரியும் ஜ்வாலை = செவ்வாய்

    இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு

    ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு

    ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = சனி

    வெளிச்சம் பரவுகிறது – இதுஞானம் = கேது

    திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை); அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்

    ஆசைகள் நம்மை அழிக்கிறது ; மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது…
    இதேவே அகல் விளக்கு ஏற்றுவத்தின் நவகிரஹ தத்துவம்.

  • karthigai-deepa-viradhmurai

    திருக்கார்த்திகை தினம் அன்று முருகன், சிவபெருமானை விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். திருக்கார்த்திகையன்று காலையில் குளித்ததும், குலதெய்வத்தை மனதில் நினைத்து பூஜை செய்ய வேண்டும்.

    சிவனுக்கும், முருகனுக்கும் உரிய பாடல்களைப் பாட வேண்டும். அன்று மாலை அண்ணாமலைக்கு அரோகரா, நமசிவாய, சிவாயநம, சரவணபவ ஆகிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.

    மாலை ஆறு மணிக்கு விளக்கேற்ற வேண்டும். ஆறு விளக்குகள் குறையாமல் இருக்க வேண்டும். விநாயகர், முருகன், சிவன் படங்களை வைத்து பழம், வெற்றிலை பாக்கு, பொரி, பிடி கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்யம் செய்ய வேண்டும். தீபாராதனை காட்டி பிரசாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.

    தொடர்ந்து விரதமிருக்க விரும்புபவர்கள் திருக்கார்த்திகையன்று தொடங்கி, அடுத்த திருக்கார்த்திகை வரை அனுஷ்டித்தால் முருகன் அருளால் அனைத்து நலமும் பெறலாம்.

    கோவிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோவிலில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகி விடும். அதனால், திருக்கார்த்திகை அன்று கோவில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பல பெயர்களில் ஏற்றி வைப்பர். கோவில் முன் சொக்கப்பனை கொளுத்துவர். சிவனையும், முருகனையும் அக்னி வடிவமாக வழிபடுவர்.

  • indraya-rasi-palan

    நவம்பர் 22
    விளம்பி வருடம் – கார்த்திகை 6
    பவுர்ணமி
    22-நவ-2018 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : பவுர்ணமி
    திதி நேரம் : சதுர்த்தசி ம 1.08
    நட்சத்திரம் : பரணி மா 6.47
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : சித்திரை,சுவாதி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – கவனம்
    ரிஷபம் – உயர்வு
    மிதுனம் – வெற்றி
    கடனம் – மேன்மை
    சிம்மம் – நன்மை
    கன்னி – பயம்
    துலாம் – பாசம்
    விருச்சிகம் – ஏமாற்றம்
    தனுசு – வரவு
    மகரம் – தடங்கல்
    கும்பம் – ஆக்கம்
    மீனம் – லாபம்

  • indraya-rasi-palangal

    நவம்பர் 21
    விளம்பி வருடம் – கார்த்திகை 5
    21-நவ-2018 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் : திரையோதசி ம 1.27
    நட்சத்திரம் : அசுவினி கா 6.45
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அஸ்தம்,சித்திரை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – விருப்பம்
    ரிஷபம் – நற்செயல்
    மிதுனம் – துணிவு
    கடனம் – பயம்
    சிம்மம் – செலவு
    கன்னி – புகழ்
    துலாம் – ஆதாயம்
    விருச்சிகம் – நஷ்டம்
    தனுசு – துணிச்சல்
    மகரம் – பெருமை
    கும்பம் – பொறுமை
    மீனம் – கவலை