Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • indraya-rasi-palangal

    டிசம்பர் 1
    விளம்பி வருடம் – கார்த்திகை 15
    01-டிச-2018 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : நவமி
    திதி நேரம் : நவமி மா 5.53
    நட்சத்திரம் : பூரம் கா 7.21
    யோகம் : சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம் : சதயம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – தனம்
    ரிஷபம் – மேன்மை
    மிதுனம் – சாந்தம்
    கடனம் – நலம்
    சிம்மம் – ஓய்வு
    கன்னி – நன்மை
    துலாம் – இன்பம்
    விருச்சிகம் – மறதி
    தனுசு – நிம்மதி
    மகரம் – ஜெயம்
    கும்பம் – அமைதி
    மீனம் – முயற்சி

  • thirumana-varam-tharum-melai-thirumanancheri

    நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் வட்டத்தில், மயிலாடுதுறை குத்தாலம் வழித் தடத்தில், குத்தாலத்தில் இருந்து அஞ்சலாறு வழியே மேலைத் திருமணஞ்சேரி செல்லலாம். புகழ்பெற்ற திருமணஞ்சேரி கோவிலுக்கு மேற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது எதிர்கொள்பாடி எனும் மேலைத் திருமணஞ்சேரி.

    திருமணஞ்சேரியில் பார்வதியை மணம் புரிய வந்த மாப்பிள்ளை சிவபெருமானை, எதிர் கொண்டு அழைத்த தலம், இந்திரன் மற்றும் ஐராவதம் பெற்ற சாபத்தை நீக்கிய திருக்கோவில், பெண்களுக்கு நல்ல வரன் அமைய உதவும் தலம், மணமக்களின் பிணக்கு தீர்க்கும் திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, எதிர்கொள்பாடி என்னும் மேலைத் திருமணஞ்சேரி திருத்தலம்.

    இந்த ஆலயத்தின் புராண வரலாறு, இத்தலத்தைச் சுற்றியுள்ள தலங்களையொட்டி அமைந்துள்ளது. சிவபெருமானின் சாபத்தால் பசுவாக மாறிய அன்னை பார்வதி, தேரழுந்தூரில் ஈசனை வழிபட்டாள். பிறகு திருக்கோழம்பத்திற்கு வந்து வழிபாடு செய்தாள். அப்போது பசுவின் குளம்படி சிவலிங்கத் திருமேனியில் பட்டு வடு ஏற்பட்டது. தொடர்ந்து திருவாடுதுறையில் அன்னையின் சாபம் நீங்கியது.

    இதையடுத்து அத்தலத்திலேயே பரத்வாஜ முனிவர் நடத்திய யாகத்தில் குழந்தையாக தோன்றி அன்னை வளர்ந்து வந்தாள். அன்னையானவள் பருவம் அடைந்ததும், திருமணஞ் சேரியில் திருமணம் புரிய வந்த மாப்பிள்ளை சிவபெருமானை, மாமனாரான பரத்வாஜ மகரிஷி எதிர்கொண்டு வரவேற்ற தலம், எதிர்கொள்பாடி என்று பெயர்பெற்றது. திருமண வேள்வி நிகழ்ந்த தலம் திருவேள்விக்குடி. திருமணம் நடந்த தலம் திருமணஞ்சேரி என புராணம் கூறுகிறது.

    இந்திரன் சாபம் :

    காசியில் சிவதரிசனம் முடிந்து திரும்பிய துர்வாச முனிவர், எதிரே இந்திரனும், ஐராவதமும் வருவதைக் கண்டான். அப்போது தன்னிடம் இருந்த இறைவனை பூஜித்த மலர் மாலையை, இந்திரனுக்கு பரிசளித்தார், துர்வாச முனிவர். அதனைப் பெற்றுக்கொண்ட இந்திரன், அதை அலட்சியமாக தான் பவனி வந்த ஐராவதம் யானையின் தலை மீது வைத்தான். மலரில் வண்டுகள் மொய்த்ததால், ஐராவதம் அம்மலரை வீசி கீழே தள்ளியது. இதனால் கோபம் கொண்ட முனிவர், இந்திரனுக்கு நோய் பீடிக்கவும், ஐராவதம் காட்டு யானையாகவும் மாற சாபமிட்டார்.

    இதனால் மனம் வருந்திய இருவரும் பல்வேறு சிவாலயங்களைத் தரிசித்துவிட்டு இறுதியாக எதிர்கொள்பாடி திருத்தலத்திற்கு வந்தனர். இங்கே காட்டு யானை தீர்த்தம் உருவாக்கிட, இந்திரனும் யானையும் சேர்ந்து ஈசனை வழிபட்டனர். இதையடுத்து இந்திரனின் சாபம் நீங்கியது. காட்டுயானை மீண்டும் ஐராவதமாக மாறியது. அதன் காரணமாக இத்தல இறைவன் ஐராவதத்தின் பெயரைத் தாங்கி ‘ஐராவதீஸ்வரர்’ ஆனார்.

    ஐராவதீஸ்வரர், மலர்குழல் நாயகி

    ஆலய அமைப்பு :

    இக்கோவிலை மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கருங்கல்லால் கட்டியவர், கீரனூர் கிழவன் அரசுக் குடியான் திருநீலகண்ட சேரமான் சோழன் ஆவார். மூன்று நிலை ராஜகோபுரம் அமைத்தவர் தொண்டை மண்டலத்து குன்றத்தூர் நாராயண முதலியார் மகன் வயிர முதலியார் ஆவார்.

    மேற்கு நோக்கிய மூன்றுநிலை ராஜகோபுரத்தை இங்கு தரிசிக்கலாம். ஆலயத்தின் உள்ளே கொடிமர விநாயகர், பலிபீடம், நந்தி, நேர்எதிரே ஐராவதீஸ்வரர் சதுரவடிவ ஆவுடையாரில் மேற்கு முகமாய் காட்சி அருளுகின்றார். இவருக்கு மத்யானேஸ்வரர் என்ற திருப்பெயரும் உள்ளது.

    நந்தியின் இடதுபுறம் கஜலட்சுமி வீற்றிருக்கிறார். அவருக்கு அருகில் அன்னை மலர்க் குழல்நாயகி தெற்கு முகமாய் காட்சி தருகிறார். இந்த அன்னை யானவள், சுகந்த குந்தளாம்பிகை, பெருங் கருணை பிராட்டியார் எனப் பலவாறு போற்றப்படுகின்றாள். இது தவிர வழித் துணை விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலசரஸ்வதி, தாமரை பீடத்தில் துர்க்கை, சண்டிகேஸ் வரர், சொர்ண பைரவர் திருமேனிகளும் உள்ளன. இந்த ஆலயத்தின் தல விருட்சம் பன்னீர் மரமாகும்.

    தலச்சிறப்பு :

    இத்தலம், பெண்ணைப் பெற்றவருக்கு, நல்ல வரன் கிடைக்க வரம் தந்துதவும் திருத்தலமாக விளங்குகிறது. அதே போல, மணமக்கள் பிணக்கு தீர்க்கும் திருக்கோவிலாகவும், பதவியை இழந்தவர்களுக்கு மீண்டும் பதவியைப் பெற உதவும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது. காவிரியின் வடகரைத் தலங்களில் 24-வது தலமாக இந்தக் கோவில் போற்றப்படுகிறது. ஆலயத்தின் தலத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

    சித்திரையில் இந்திர விழா, கார்த்திகை சோமவாரங்கள், மார்கழி திருவாதிரை, மாசியில் மகா சிவராத்திரி, திருக்கல்யாணம் மற்றும் அனைத்து பிரதோஷங்களும் இந்த ஆலயத்தில் வெகு சிறப்பாக நடத்தப்படுகின்றன. கி.பி. 1879-ம் ஆண்டு அருணாசலம் பிள்ளை குமாரர்கள், இந்த ஆலயத்திற்கு 35 ஏக்கர் நிலங்களை எழுதி வைத்து குடமுழுக்கு நடத்தி வைத்துள்ளனர். அது முதல் ஆறு தலைமுறைகளாக இன்றும் அந்த பரம்பரையைச் சேர்ந்தவர்களே அறங் காவலர்களாக இருந்து வருகின்றனர்.

    இந்த ஆலயத்தில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம்.

    மணமக்களின் பிணக்கு தீர்க்கும் திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, எதிர்கொள்பாடி என்னும் மேலைத் திருமணஞ்சேரி திருத்தலம்.

    திருமண வரம் தரும் மேலைத் திருமணஞ்சேரி திருத்தலம்
    ‘தந்தையாரும் தவ்வை யாரும் எட்டனைச் சார்வாகார்
    வந்து நம்மோ டுள்ள ளாவிவான நெறிகாட்டுஞ்
    சிந்தையீரே நெஞ்சீனிரே திகழ்மதி யஞ்சூடும்

    எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்ப தடைவோமே’

    -சுந்தரர் பாடிய தேவாரம்

  • sabarimalai-18-padigalin-sirappu

    சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனுக்கு உகந்த மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது, 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்பன் சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர். சபரிமலையில் உள்ள 18 படிகளுக்கும் ஓர் அர்த்தம் உள்ளது. அந்த படிகள் ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் குறிக்கும்.

    முதல் படி கண்களை குறிக்கும். இது நல்லதை மட்டுமே பார்க்க வேண்டும்.

    இரண்டாம் படி மூக்கை குறிக்கும். சுத்தமான காற்றை மட்டும் சுவாசிக்க வேண்டும்.

    மூன்றாம் படி காதுகளை குறிக்கும். நல்ல வார்த்தைகளைக் கேட்க வேண்டும்.

    நான்காம் படி வாயைக் குறிக்கும். நல்ல சொற்களைப் பேச வேண்டும்.

    ஐந்தாம் படி உணர்வை குறிக்கும். எப்போதும் மணி மாலையை மட்டுமே தொட வேண்டும்.

    ஆறில் இருந்து பதிமூன்று வரை உள்ள எட்டு படிகளும் அஷ்டரகஸ் என்பதைக் குறிக்கும். இது காமம், குரோதம், பேரார்வம், மோகம், போட்டி, பொறாமை, தற்பெருமை ஆகியவற்றைக் குறிப்பதாகும்.

    பதினான்காம் படி சாத்வீகம் என்பதையும், பதினைந்தாம் படி ராஜஸம் என்பதையும், பதினாறாம் படி தாமஸம் என்பதையும் குறிக்கும். இம்மூன்றும் மூன்று குணங்கள் ஆகும். சோம்பலை விட்டு விட்டு, ஒருவர் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கக்கூடியது இந்த மூன்று படிகள்.

    பதினேழாம் படி வித்யா என்பதைக் குறிக்கும். வித்யா என்றால் அறிவு ஆகும்.

    பதினெட்டாம் படி அவித்யா என்பதைக் குறிக்கும். மோட்சத்தைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கும்.

  • thunbam-pookkum-durgai-mandiram

    தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் துன்பத்திலிருந்து விடுபடலாம்.

    துன்பம் போக்கும் துர்க்கையம்மன் மந்திரம்
    ஸ்ரீ சிவகாமி சங்கரி தேவி
    துர்க்கா தேவி சரணம்!
    ஞான சக்தி சுந்தரி தேவி சரணம்

    சிவப் பிரியாயை தேவி சரணம் சரணம்
    இந்திரா தேவி மோஹினி சரணம்
    மஹேந்திர ஜால மத்யஸ்த்தாயை
    கமலாதேவி சரணம் சரணம்
    பக்த ஜனப்பிரியாயை மோஹினி சரணம்
    புவனேசுவரியே மாலினி தேவி சரணம்
    மதனுல்லாஸ் மோஹினி சரணம் சரணம்
    மஹாலஷ்மி சாவித்ரி தேவி சரணம்
    மஹாபைரவ மோஹினி தேவி சரணம்
    ருத்ராதேவி ஆதிசக்தி தேவி சரணம்
    பங்கஜவல்லி துர்க்காதேவி சரணம் சரணம்!!

  • thiruchendur-subramaniya-swamy-koil-undiyal-kanikkai

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவம்பர் மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 9 லட்சத்து 273 ரூபாய் வருமானம் வந்துள்ளது.

    திருச்செந்தூர் 2018 நவம்பர் 29 ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதந்தோறும் இறுதியில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.

    நவம்பர் மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நேற்றுமுன்தினம் நடந்தது. கோயில் இணை ஆணையர் பாரதி தலைமையில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், நாகர்கோவில் உதவி ஆணையர் ரத்தினவேல், கோயில் உதவி ஆணையர் செல்வராஜ், முதுநிலை கணக்கு அலுவலர் மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் கோயில் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் 200 உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.

    இதில் நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.2 கோடியே 48 ஆயிரத்து 386ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.70 ஆயிரத்து 723ம், கோசாலை உண்டியல்களில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 605ம், கோயில் அன்னதானம் உண்டியலில் ரூ.6 லட்சத்து 51 ஆயிரத்து 783ம், சிவன் கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.8 ஆயிரத்து 776ம் வசூலானது.

    மொத்தம் உண்டியல்கள் மூலம் ரூ.2 கோடியே 9 லட்சத்து 273 கிடைத்தது. இதில் தங்கம் ஆயிரத்து 557 கிராம், வெள்ளி 19 ஆயிரத்து 298 கிராம், பித்தளை 24 ஆயிரத்து 360 கிராமும் கிடைத்தது.

  • indraya-rasi-palan

    நவம்பர் 30
    விளம்பி வருடம் – கார்த்திகை 14
    30-நவ-2018 வெள்ளி
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : அஷ்டமி இ 7.55
    நட்சத்திரம் : மகம் கா 8.43
    யோகம் : மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – உற்சாகம்
    ரிஷபம் – விவேகம்
    மிதுனம் – நன்மை
    கடனம் – ஆதரவு
    சிம்மம் – சாந்தம்
    கன்னி – பணிவு
    துலாம் – நற்செயல்
    விருச்சிகம் – கவலை
    தனுசு – மேன்மை
    மகரம் – சுகம்
    கும்பம் – வரவு
    மீனம் – எதிர்ப்பு

  • indraya-rasi-palan

    நவம்பர் 29
    விளம்பி வருடம் – கார்த்திகை 13
    29-நவ-2018 வியாழன்
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : சப்தமி
    திதி நேரம் : சப்தமி இ 10.07
    நட்சத்திரம் : ஆயில்யம் கா 10.22
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவோணம்
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – மகிழ்ச்சி
    ரிஷபம் – தாமதம்
    மிதுனம் – சுகம்
    கடனம் – வரவு
    சிம்மம் – சிக்கல்
    கன்னி – முயற்சி
    துலாம் – எதிர்ப்பு
    விருச்சிகம் – வெற்றி
    தனுசு – ஆதரவு
    மகரம் – பாராட்டு
    கும்பம் – சாந்தம்
    மீனம் – தடங்கல்

  • thiruvanikka-temple-kumbabishegam

    திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம் டிச. 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

    திருவானைக்கா கோயில் மகா கும்பாபிஷேகம் நடத்த இந்து சம்ய அறநிலையத் துறையினர் தீர்மானிக்கப்பட்டு, சுமார் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் உள்ளது.

    பரிவார விமானங்கள், பரிவார மூர்த்திகள் மற்றும் உற்ஸவ மூர்த்திகளுக்கு டிச. 9 ஆம் தேதி முதற்கட்டமாகவும், சுவாமி, அம்மன் சன்னதி கோபுர விமானங்களுக்கு டிச. 12 ஆம் தேதி 2 ஆம் கட்டமாகவும் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, 13 ஆம் தேதி முதல் மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது. எனவே, அனைத்து சன்னதிகளுக்கும் மருந்து சாற்றும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோயில் உதவி ஆணையர் கோ.ஜெயப்பிரியா மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

  • indraya-naal-eppadi

    நவம்பர் 28
    விளம்பி வருடம் – கார்த்திகை 12
    28-நவ-2018 புதன்
    சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் : சஷ்டி இ 12.27
    நட்சத்திரம் : பூசம் ம 12.10
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூராடம்,உத்திராடம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வெற்றி
    ரிஷபம் – நன்மை
    மிதுனம் – லாபம்
    கடனம் – செலவு
    சிம்மம் – வரவு
    கன்னி – சுகம்
    துலாம் – சுபம்
    விருச்சிகம் – பெருமை
    தனுசு – மேன்மை
    மகரம் – நலம்
    கும்பம் – நட்பு
    மீனம் – சாந்தம்

  • ezhumalayani-alangarikum-abaranangal

    பெருமாளின் திருமேனி தாங்கி நிற்கும் பெரும் பாக்கியமடைந்த ஆபரணங்களைப் பற்றிய பதிவு இது. நிமிட நேரமே தரிசனம் என்றாலும் கண்கள், மனம் நிறைந்த அற்புத தரிசனத்தில் நாம் சில நேரம் கவனிக்கத் தவறிய ஆபரணங்கள் குறித்தும் இந்தப் பதிவில் அறிந்துகொள்ளலாம்.

    தங்க பத்ம பீடம் (திருவடியின் கீழ் இருக்கும்)

    தங்கத்திலான திருப்பாதங்கள்

    சிறு கஜ்ஜினுபுராலு : திருப்பாதங்கள் மேலே அணியும் ஆபரணம்.

    பாகடாலு : கால்களில் அணியும் ஆபரணம்.

    காஞ்சி குணம்: அரைஞாண் கயிறு

    நாகா வேஸ்பண உதரபந்தம் – மத்தியாபரணம்

    சிறுகண்டல தசாவதார ரசனா – தசாவதாரம் , ஸ்ரீ பூ தேவி தாயார் , எம்பெருமான், 18 மூர்த்திகள் சேர்ந்த அரைஞாண்கயிறு.

    சிறிய கழுத்து மாலை

    பெரிய கழுத்து மாலை – எம்பெருமான் வக்ஷஸ் தலம் வரை அணிவிக்கப்படும் மாலை.

    தங்க புலி நக மாலை – திருமார்பில் அணியப்படும்.

    ஐந்து வரிசை கோபு ஹாரம் – தொப்புள் கொடி பகுதியில் அணியப்படும்.

    தங்க யக்னோ பவீதம்- பூ நூல் – ஆறு வரிசை கொண்ட வைரத்தினாலான பூ நூல்.

    சாதாரண பூணூல்.

    துளசி இதழ் மாலை- கடிஹஸ்த மாலை . 108 இலைகள் கொண்ட மாலை.

    சதுர்புஜ லட்சுமி மாலை.(108 லட்சுமி அச்சு கொண்ட மாலை)

    108 அஷ்டோத்தர சத நாம மாலை.

    சஹஸ்ர நாம மாலை – 1000 காசுகளுடைய ஐந்து வடம் மாலை.

    சூர்ய கடாரி – தங்க வாள் இடுப்பு பகுதியில் அணியும் ஆபரணம்.

    வைகுண்ட ஹஸ்தம்- வலது கை

    கடி ஹஸ்தம் – இடது கை

    கடியாலம்- கங்கணம் (வளையல்)

    நாகாபரணம்

    பூஜ கீர்த்திகள்

    கர்ணபத்திரம்- (காதுகளில் அணியும் ஆபரணம்)

    சங்கு சக்ரம் – பின்னிரு கைகளில்

    கிரீடம் (தலைக்கு)

    ஓம் நமோ வெங்கடேசாய நம