Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • ezhumalayani-alangarikum-abaranangal

    பெருமாளின் திருமேனி தாங்கி நிற்கும் பெரும் பாக்கியமடைந்த ஆபரணங்களைப் பற்றிய பதிவு இது. நிமிட நேரமே தரிசனம் என்றாலும் கண்கள், மனம் நிறைந்த அற்புத தரிசனத்தில் நாம் சில நேரம் கவனிக்கத் தவறிய ஆபரணங்கள் குறித்தும் இந்தப் பதிவில் அறிந்துகொள்ளலாம்.

    தங்க பத்ம பீடம் (திருவடியின் கீழ் இருக்கும்)

    தங்கத்திலான திருப்பாதங்கள்

    சிறு கஜ்ஜினுபுராலு : திருப்பாதங்கள் மேலே அணியும் ஆபரணம்.

    பாகடாலு : கால்களில் அணியும் ஆபரணம்.

    காஞ்சி குணம்: அரைஞாண் கயிறு

    நாகா வேஸ்பண உதரபந்தம் – மத்தியாபரணம்

    சிறுகண்டல தசாவதார ரசனா – தசாவதாரம் , ஸ்ரீ பூ தேவி தாயார் , எம்பெருமான், 18 மூர்த்திகள் சேர்ந்த அரைஞாண்கயிறு.

    சிறிய கழுத்து மாலை

    பெரிய கழுத்து மாலை – எம்பெருமான் வக்ஷஸ் தலம் வரை அணிவிக்கப்படும் மாலை.

    தங்க புலி நக மாலை – திருமார்பில் அணியப்படும்.

    ஐந்து வரிசை கோபு ஹாரம் – தொப்புள் கொடி பகுதியில் அணியப்படும்.

    தங்க யக்னோ பவீதம்- பூ நூல் – ஆறு வரிசை கொண்ட வைரத்தினாலான பூ நூல்.

    சாதாரண பூணூல்.

    துளசி இதழ் மாலை- கடிஹஸ்த மாலை . 108 இலைகள் கொண்ட மாலை.

    சதுர்புஜ லட்சுமி மாலை.(108 லட்சுமி அச்சு கொண்ட மாலை)

    108 அஷ்டோத்தர சத நாம மாலை.

    சஹஸ்ர நாம மாலை – 1000 காசுகளுடைய ஐந்து வடம் மாலை.

    சூர்ய கடாரி – தங்க வாள் இடுப்பு பகுதியில் அணியும் ஆபரணம்.

    வைகுண்ட ஹஸ்தம்- வலது கை

    கடி ஹஸ்தம் – இடது கை

    கடியாலம்- கங்கணம் (வளையல்)

    நாகாபரணம்

    பூஜ கீர்த்திகள்

    கர்ணபத்திரம்- (காதுகளில் அணியும் ஆபரணம்)

    சங்கு சக்ரம் – பின்னிரு கைகளில்

    கிரீடம் (தலைக்கு)

    ஓம் நமோ வெங்கடேசாய நம

  • indraya-rasi-palan

    நவம்பர் 27
    விளம்பி வருடம் – கார்த்திகை 11
    27-நவ-2018 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : பஞ்சமி
    திதி நேரம் : பஞ்சமி இ 2.49
    நட்சத்திரம் : புனர்பூசம் ம 1.37
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மூலம்,பூராடம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – தாமதம்
    ரிஷபம் – ஆதாயம்
    மிதுனம் – சிந்தனை
    கடனம் – உழைப்பு
    சிம்மம் – உதவி
    கன்னி – பேராசை
    துலாம் – திறமை
    விருச்சிகம் – விவேகம்
    தனுசு – களிப்பு
    மகரம் – தொல்லை
    கும்பம் – சாதனை
    மீனம் – விருத்தி

  • manikandan-peyar-vandhadhu-eppadi

    அய்யன் ஐயப்பனின் வளர்ப்புத் தந்தையாகும் பாக்கியம் பெற்றவர் பந்தள மகாராஜா ராஜசேகரன். தனக்கு கிடைத்தது தெய்வக்குழந்தை என்பதை அறியாமல் இருந்த நிலையில், அவதாரத்தின் நோக்கம் வெளியாகி ஐயப்பனை பிரியும் காலமும் வந்தது. கழுத்தில் மணி இருந்த காரணத்தினால் மணிகண்டன் என்ற பெயர் பெற்ற அய்யன்.

    தனது வளர்ப்பு தந்தை பந்தள மகாராஜா ராஜசேகரனிடம், இனி நான் காட்டுக்குள் குடியிருக்க போகிறேன். என்னைக் காணவேண்டுமானால், மலைகளைக் கடந்து வரவேண்டும். அது சாதாரண மலையல்ல. ஏற்ற இறக்கமும், கல்லும் முள்ளும் கொண்டது என்றார். அதை கேட்ட பந்தள மகாராஜா ராஜசேகரன், அய்யனே, உன்னை காண நான் எப்படி வருவேன் என கேட்டார். அதற்கு மணிகண்டன், நீங்கள் என்னை பார்க்க வரும்போது ஒரு கருடன் உங்களுக்கு வழிகாட்டுவான். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்துவிடலாம் என பதில் கொடுத்தார்.

    சபரிமலைக்கு அய்யன் மணிகண்டனை தரிசிக்க பந்தள மகாராஜா ராஜசேகரன் செல்லும்போது, மலையின் ஏற்ற இறக்கங்களில் ஏற முடியாமல் ஆங்காங்கே தவித்து போவார். பயன களைப்பில், அவர், அய்யோ அப்பா என சொன்னதே திரிந்து ஐயப்பன் என்ற செய்தியும் தகவலும் காலம் காலமாக சொல்லப்படுகிறது. ஆனால், ஐயன் என்றால் தலைவன் என்றொரு பொருள். அந்த ஐயனுடன் அப்பனையும் சேர்க்கும் போது, அந்த ஐயனே நமது தந்தை அதாவது ஐயப்பன் என்றானது.

    இன்றைக்கும் மகரஜோதியின் போது அய்யன் ஐயப்பனுக்கு பந்தளம் அரண்மனையிலிருந்து நகைகளை எடுத்துச் செல்லும்போது, நகைப்பெட்டிகளுக்கு பாதுகாப்பாக ஒரு கருடன் வருவது கண்கொள்ள காட்சியகும்.

  • sabari-malai-iyappan-arindhu-kolla-vendiya-thagavalgal

    சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கறுப்பு நிற ஆடை அணிவதற்கும், ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையிட்டுக் கொள்வதற்கும் காரண காரியங்கள் உண்டு. பொதுவாக கறுப்பு ஆடை அணிந்து ஐயப்ப மந்திரங்களை உச்சரித்தால் பலாப்பலன்கள் அதிகம்.

    மனிதனுள் தேவ, அசுர குணங்கள் இரண்டும் கலந்துள்ளன. எதிர்மறையான சிந்தனைகள் மாறி மனசாந்தியும், சமாதானமும் கிடைக்க இறைவனிடம் நம்மை சரணாகதியாக்கி வழிபடுவது நலம் தரும். அப்படி வழிபடும்போது கறுப்பு ஆடை அணிவதும், ருத்ராட்ச மாலை அணிவதும் ஜெபத்தின் சக்தியை அதிகரிக்க செய்யும்.

    சபரிமலை அடைந்து 18 படிகளின் மீதேறி நின்றவுடன் நம் கண்ணில்படும் வேதவாக்கியம் ‘தத்வமசி’. ‘நீயே அது’ என்பதே இதன் பொருள். மூலவராகக் காட்சிதரும் அய்யன் ஐயப்பனும், விரதம் இருந்து சபரிமலை செல்லும் பக்தனும் ஒன்றே என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தமாக சொல்லவே இந்த வாக்கியம் பதினெட்டு படிகள் கடந்தவுடனே பார்வையில் படும்படி பதிக்கப்பட்டுள்ளது.

    மலையாள தேசமான கேரளாவில் கோயில்கள் வழிபடும் முறைகளில் சாஸ்திர சம்பிரதாயங்கள் முறையாக கடைபிடிக்கப்படும். இதன்படி கோயில்களில் பிரகாரத்தை பக்தர்கள் சுற்றி வருவதில் கணக்குகள் உள்ளது. விநாயகர் கோயிலை ஒரு முறையும், சூரியனை இரண்டு முறையும், சிவாலயத்தில் மூன்று முறையும், விஷ்ணு கோயிலில் நான்கு முறையும், முருகனை ஐந்து முறையும், பகவதி அம்மன் கோயிலில் ஐந்து முறையும் வலம் வரவேண்டும். ஐயப்பன் மற்றும் சாஸ்தா கோயில்களில் நான்கு முறை வலம் வர வேண்டும் என்பது சாஸ்திரம்.

    லட்சக்கணக்கான பக்தர் கூட்டம் குவியும் சபரிமலையில் அதுவும் ஐயப்ப சீசனில் இது சாத்தியமில்லை என்றாலும் மாதபூஜைக்கு சபரிமலை மற்று சாஸ்தா கோயில்களுக்கு செல்லும் போது இந்த சாஸ்திரத்தை கடைபிடிப்பது பெரும் பலன்களை தரும்.

  • kumari-thirupathy-kumbabishega-date

    குமரி திருப்பதி கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27-இல் நடத்தப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் கேந்திர நிர்வாகம் நன்கொடையாக வழங்கிய 5.50 ஏக்கர் நிலத்தில் ரூ.22.50 கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கட்டும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கடாசலபதி சன்னிதி, பத்மாவதி தாயார் மற்றும் ஆண்டாள் சன்னிதிகளும், கருட பகவான் சன்னிதியும் அமைக்கப்பட்டுள்ளன.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவம், தேரோட்டம், தெப்பத் திருவிழா போன்ற அனைத்து விழாக்களும், அதே நாளில் அதே நேரத்தில் இங்கு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இக்கோயில், கடற்கரையின் மிக அருகே அமைவது மிகவும் சிறப்பானதாகும். மேலும், இக்கோயிலில் பிரமோற்சவம் நடைபெறும் நாளன்று வெங்கடாசலபதி சுவாமி பாதத்தில் சூரிய ஒளி விழும் விதத்தில் கோயில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜன. 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன்பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • indraya-rasi-palangal

    நவம்பர் 26
    விளம்பி வருடம் – கார்த்திகை 10
    சங்கடஹர சதுர்த்தி
    சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
    26-நவ-2018 திங்கள்
    கரிநாள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : திரிதியை கா 7.15
    நட்சத்திரம் : திருவாதிரை இ 3.10
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : கேட்டை,மூலம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – செலவு
    ரிஷபம் – முயற்சி
    மிதுனம் – புகழ்
    கடனம் – அலைச்சல்
    சிம்மம் – குழப்பம்
    கன்னி – சினம்
    துலாம் – பரிசு
    விருச்சிகம் – சிந்தனை
    தனுசு – கவனம்
    மகரம் – தடங்கல்
    கும்பம் – பக்தி
    மீனம் – ஓய்வு

  • indraya-rasi-palan

    நவம்பர் 25
    விளம்பி வருடம் – கார்த்திகை 9
    25-நவ-2018 ஞாயிறு
    சுபமுகூர்த்த நாள்(காலை 7.30 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : திரிதியை
    திதி நேரம் : துவிதியை கா 9.13
    நட்சத்திரம் : மிருகசீரிடம் மா 4.31
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பயம்
    ரிஷபம் – பொறுமை
    மிதுனம் – நன்மை
    கடனம் – வெற்றி
    சிம்மம் – நலம்
    கன்னி – அமைதி
    துலாம் – நட்பு
    விருச்சிகம் – ஜெயம்
    தனுசு – யோகம்
    மகரம் – சாந்தம்
    கும்பம் – வரவு
    மீனம் – எதிர்ப்பு

  • endha-prchaniakku-endha-koiyilukku-pogalam

    நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.

    சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம் சூலினி,பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர்:

    கடன் தொல்லைகளில் இருந்து விடுபட,வழக்குகளில் வெற்றியடைய, பில்லி,சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்து அருள்பாளிக்கும் ” திருபுவனம் ” சென்று வழி படலாம். இவர் வழிபடுபவரின் அனைத்து சங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி,பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை 11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும்தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளை சிறந்தது.

    அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்:

    அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களை கற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கான அட்சரப்பியாசம் நடைபெறுகிறது.
    குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்து வந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்து பயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும், வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்தபூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.

    தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் திருநல்லம் :

    முக்கண்ணன் ” உமா மகேஸ்வரராய் “மேற்கு நோக்கி வீற்றிருக்க, ” அங்கவள நாயகியாய் ” அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த,திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். ” பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் ” என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், ” ஸ்ரீ வைத்திய நாதர் ” சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம்,திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் – வடமட்டம் பேருந்து வழித் தடத்தில்,
    கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.

    தீரா நோய்கள் தீர்க்கும் “வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் :

    மயிலாடுதுறை – சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் ” வைத்தீஸ்வரன் கோவில் “. செவ்வாய் தோஷம் நீக்கும் ” அங்காரகனுக்குரிய ” திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர்,தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார்.18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் “தன்வந்திரி” இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயு குண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக் கொள்ள நோய்கள் தீருகின்றன.

    செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் “திருவாடுதுறை”:

    கும்பகோணம் – மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ.தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் “திருவாடுதுறை”.

    ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

    சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்:

    மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும்,கலைமகளின் பரிபூரண அருளை பெறவும் வழி பட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் “கூத்தனூர்”.

    நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை – திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.

  • jothidathi-sasti-viradham

    இந்து மதத்தின் பிரிவுகளில் உள்ள ஆறு பெரும் பிரிவு மதங்களில், மிகப் பழைமையானது கௌமாரம். கார்த்திகேயனை வணங்குபவர்கள் கௌமாரம் மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களே முருக பக்தர்கள்! ஒவ்வொரு மாதத்தின் ஆறாம் திதி சஷ்டி. இந்த சஷ்டியும் இந்தக் குமரனுக்கு உரிய நாள். எனவே கௌமாரர்கள் அனைவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள்.

    ஜோதிடத்தில் அழகைக் குறிக்கும் கிரஹம் சுக்கிரன். குழந்தைப் பிறப்பிற்கு தேவையான காமத்திற்கும் சுக்கிலத்திற்கும் அதிபதி சுக்கிரன். சுக்கிரனைக் குறிக்கும் என் ஆறு. தெய்வங்களில் அழகன் எனப்போற்றப்படுபவர் முருகன். முருகனுக்கு ஆறு முகங்கள். முருகனை வளர்த்தவர்கள் ஆறு கார்த்திகை பெண்டீர். முருகனுக்குகந்த திதி ஆறாவது திதியான சஷ்டி. ஆண்மையைக் குறிக்கும் கடவுள்

    முருகப்பெருமான் ஆகும். “சுக்கிற்கு மிஞ்சின மருந்தும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” எனும் சொலவடை உண்டு. மேலும் எண்ணியல் ஜோதிடத்தில் ஆறாம் எண்ணிற்கு அதிபதியாக சுக்கிரனை கூறுவர்.

    ஜாதகத்தில் செவ்வாய் என்பது ஆண்மையையும் வீரியத்தையும் குறிக்கும். சூரியன் ஆன்மா உற்பத்தியாவதை அதாவது கருவளர்ச்சிக்கு தேவையான சீதோஷ்ணத்தை தருவது சூரியன். சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கு மேஷமும் சிம்மமும் மற்றும் அதன் அதிபதிகளான செவ்வாயும் சூரியனும் பலமிழந்துவிடுவார்கள் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

    மேஷம் கால புருஷனுக்கு லக்ன பாவம். செவ்வாயின் மூல த்ரிகோண வீடு. சூரியன் உச்சமாகுமிடம். ஆண்மையைக் குதிரையோடு ஒப்பிடுவது வழக்கம். குதிரையைக் குறிக்கும் அஸ்வினி நக்ஷத்திரம் முதல் நக்ஷத்திரமாக அமைந்திருப்பதும் மேஷத்தில்தான். ஆக ஆண்மைக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பு இப்போது புரிந்திருக்கும். அடுத்தது சிம்ம ராசி. சிம்ம ராசி கால புருஷனுக்கு ஐந்தாமிடம் எனப்படும் புத்திரஸ்தானம் ஆகும். அதற்குரிய கிரகம் சூரியன் ஆகும். இந்த இரண்டு ராசிகளும் கிரஹங்களும் நன்றாக இருந்தால் தான் ஒருவர் தகப்பன் ஆகும் பாக்கியம் ஏற்படும்.

    ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ருண ரோஹ சத்ரு ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகரின் எதிரி எப்படிப்பட்டவர், எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார், ஜாதகர் என்ன காரணங்களுக்காக கடன் வாங்குவார் என்பதை அறியலாம். நோய் தீர்ப்பதில் செவ்வாயும் அதன் அதிபதியான முருக பெருமானும் முக்கியமானவர்கள் ஆகும். முருகனுக்கு செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது, சஷ்டியில் விரதமிருப்பது மற்றும் கிருத்திகை நக்ஷ‌த்திர நாளில் விரதமிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

    கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பாம்பன் குமர குருதாஸ ஸ்வாமிகள் அருளிய “ஓம் ஷண்முக பதயே நமோ நம” எனத் தொடங்கும் குமாரஸ்தவ பாடலைப் படித்தால் நாள் பட்ட தீராத வியாதியும் தீரும். நோய் என்பது தீர்க்கக்கூடியது. ஆனால் பிணி என்பது.தீர்க்க முடியாதது. நோயை மருத்துவர்கள் குணப்படுத்திவிடுவார்கள். பிணியைக் குணப்படுத்துவது சிரமம். பிணி இறையருளால் தான் குணப்படும். வினையும் அப்படித்தான் இறையருளால்தான் தீரும் இங்கே வினை என்பது இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணமாக நம்பப்படும் முற்பிறவியில் நாம் செய்த செயல் ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தைப் பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த கால கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.

    ஜெனன ஜாதகத்திற்கு ஆறாம்வீட்டிற்கு பன்னிரண்டாம் பாவத்தையும் அதன் கிரஹங்களையும் கொண்டு நோய் தீர்க்கும் அமைப்பை அறியலாம். அதேபோல காலபுருஷனுக்கு ஆறாம் வீடான கன்னி ராசிக்கு பன்னிரண்டாம் பாவமான சிம்மம் மற்றும் அதன் திரிகோண ராசிகளான மேஷம், தனுசு ஆகிய ராசிகளும் அதன் அதிபதிளும் நோய் தீர்க்கும் அமைப்பைக் கூறுவார்கள்.

  • vinayakar-sasti-viradham

    விநாயகர் சஷ்டி விரதமுறை விநாயகப் பெருமானை நினைத்து மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதம் கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இவ்விரத முறையில் 21 இழைகளால் ஆன நோன்பு கயிற்றினை ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்கின்றனர். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டும், கடைசி நாள் முழுமையாக உபவாசம் மேற்கொள்கின்றனர்.

    இவ்விரத முறையினை மேற்கொள்வதால் சிறந்த வாழ்க்கைத் துணை, புத்திசாலியான புத்திரர்கள் கிடைப்பர். வாழ்வின் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். எடுத்த நல்ல காரியங்கள் வெற்றியாகும்.